அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

வியாழன், 12 டிசம்பர், 2013

ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்:

தமுமுக இணைந்து நடத்திய வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தமுமுக வரவேற்பு!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

“ சமூகத்தின் கட்டுக்கோப்பையும், கலாச்சாரத்தையும் கெடுக்கும் விதமாக சமூகத்தில் ஊடுருவி ருந்த ஓரின சேர்க்கை என்ற விரும்பத்தகாத, மக்கள் வெறுக்கும் செயலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பதுடன் அது தண்டனைக்குரிய கொடும் குற்றம் என அறிவித்துள்ளதையும் வரவேற்கிறோம்.

இந்தியாவில் ஓரின சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் என 2004 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பு 2009ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதில் ஓரின சேர்க்கை சட்ட விரோதமாகாது; அதற்கு தடை விதிக்கும் 377வது சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கியது. இது நாடெங்கும் பெரும் கொந்தளிப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

இந்த தீர்ப்பினை தடை செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமும் தன்னை இணைத்துக் கொண்டு வழக்கினை சந்தித்தது. இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதித்து ஓரின சேர்க்கை ஒரு கிரிமினல் குற்றம்; தண்டனைக்குரியது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, நீதிபதி முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.

சரியான காலகட்டத்தில் வழங்கப்பட்ட சரியான தீர்ப்பு என வரவேற்கும் அதே நேரத்தில் ஓரின சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து உரிய சட்ட திருத்தம் கொண்டு வரலாம் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனை ஒட்டுமொத்த இந்திய சமூகமும் ஏற்றுக்கொள்ளாது.

எனவே ஓரின சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். தண்டனை வழங்கும் 377வது பிரிவை எந்நிலையிலும் ரத்து செய்துவிடக்கூடாது எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன்,
(ஜே.எஸ். ரிபாயீ)


ஞாயிறு, 8 டிசம்பர், 2013

இழிவைத் தரும் முகஸ்துதி ((உண்மை முஸ்லிம் முகஸ்துதியிலிருந்து முற்றிலும் விலகியிருப்பார். ஏனெனில், அவை நற்கூலியை அழித்து நற்செயல்களை வீணாக்கிவிடும்.))

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இழிவைத் தரும் முகஸ்துதி


உண்மை முஸ்லிம் முகஸ்துதியிலிருந்து முற்றிலும் விலகியிருப்பார். ஏனெனில், அவை நற்கூலியை அழித்து நற்செயல்களை வீணாக்கிவிடும். மகத்தான இரட்சகனின் முன்னிலையில் நிற்கும் மறுமை நாளில் இழிவை தேடித்தரும். இத்தூய மார்க்கத்தின் அடிப்படைகளில் தலையாயது, மனிதனின் சொல்லும் செயலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக மனத் தூய்மையுடன் அமைந்திருக்க வேண்டும் என்பதாகும்.

ஜின்களையும் மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 52:56)

எந்த வணக்கமும் அல்லாஹ்வின் திருப்தியை நாடி செய்யப்பட்டால் மட்டுமே அங்கீகரிக்கப்படும்.


(எனினும் அவர்களுக்கோ) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி (மற்ற மார்க்கங்களைப்) புறக்கணித்து அல்லாஹ் ஒருவனையே வணங்கி தொழுகையையும் கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறேயன்றி (வேறெதுவும் இத்தூதர் மூலம்) ஏவப்படவில்லை. இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கமாகும். (அல்குர்ஆன் 98:5)


தங்களது பொருளை ஏழைகளுக்கு செலவு செய்யும்போது அதை சொல்லிக் காண்பித்து ஏழைகளின் கண்ணியத்தை காயப்படுத்துபவர்களை அல்லாஹ் வன்மையாகக் கண்டிக்கிறான். முகஸ்துதி கலந்துவிட்டால் அவ்வணக்கம் வீணாகிவிடும்.


விசுவாசிகளே! நீங்கள் உங்களுடைய தர்மத்தை (ப்பெற்றவனுக்கு) இகழ்ச்சியையும், துன்பத்தையும் (செய்வது) கொண்டு (அதன் பலனை) வீணாக்கிவிடாதீர்கள். அவ்வாறு (செய்பவன்) அல்லாஹ்வையும் கடைசி நாளையும் விசுவாசம் கொள்ளாது (தான் தர்மவான் என்பதைப் பிற) மனிதர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு தன் பொருளை செலவு செய்து (வீணாக்கி) விட்டவனுக்கு ஒப்பாவான். அவனுடைய உதாரணம்;ஒரு வழுக்கைப் பாறையை ஒத்திருக்கின்றது. அதன்மீது மண் படிந்தது. எனினும் ஒரு பெரும் மழை பொழிந்து அதை (க் கழுவி) வெறும் பாறையாக்கிவிட்டது. (இவ்வாறே அவன் செய்த தானத்தை அவனுடைய பெருமை அழித்துவிடும்). ஆகவே, அவர்கள் (தானம்) செய்ததிலிருந்து யாதொரு பலனையும் (மறுமையில்) அடைய மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:264)


ஏழைகளுக்கு தான் செய்த உபகாரத்தை சொல்லிக் காட்டுவது, அந்த தர்மத்தின் நற்பலன்களை வழுக்குப் பாறையில் ஒட்டியிருந்த மணலை பெரும் மழை அடித்துச் சென்று விடுவதுபோல அழித்து விடுகிறது. புகழுக்காக தர்மம் செய்பவர் அல்லாஹ்வின் நேர்வழிக்குத் தகுதியற்றவர், அவர் நிராகரிப்பாளர்களுடன் இணைக்கப்பட்டு விடுவார் என்பதை இந்த வசனத்தின் பிற்பகுதி சுட்டிக் காட்டுகிறது.

”மேலும் அல்லாஹ் (தன்னை) நிராகரிக்கும் ஜனங்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான்.”முகஸ்துதிக்காரர்கள், மனிதர்கள் தங்களைப் புகழவேண்டும் என்பதற்காக நல் அமல்களைச் செய்வார்கள். மகத்தான இரட்சகனின் திருப்பொருத்தத்தை நாடமாட்டார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான்…
அவர்கள் தொழுகையில் நின்றாலோ சோம்பேறிகளாக நின்று மனிதர்களுக்குக் காண்பிக்(க விரும்பு)கின்றார்கள். அவர்கள் வெகு சொற்பமாகவே அன்றி அல்லாஹ்வை தியானிப்பதில்லை. (அல்குர்ஆன்

அவர்கள் தொழுகையில் நின்றாலோ சோம்பேறிகளாக நின்று மனிதர்களுக்குக் காண்பிக்(க விரும்பு)கின்றார்கள். அவர்கள் வெகு சொற்பமாகவே அன்றி அல்லாஹ்வை தியானிப்பதில்லை. (அல்குர்ஆன் 4:142)

அவர்கள் அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்கிதன் காரணமாக அவர்களது அமல்கள் மறுக்கப்படும். தனது திருப்தியை நாடி, தூயமனதுடன் செய்யப்படும் அமல்களை மட்டுமே அல்லாஹ் ஒப்புக் கொள்கிறான்.


அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்: அல்லாஹ் கூறுகிறான், ”நான் இணைவைப்பவர்களின் இணையை விட்டும் தேவையற்றவன். ஒருவன் ஏதேனும் அமல் செய்து என்னுடன் மற்றெவரையும் கூட்டாக்கினால் நான் அவனை அவனது இணைவைக்கும் செயலுடன் விட்டு விடுகிறேன்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

தூய இதயத்துடன் வருவது தவிர வேறெந்த செல்வமும் மக்களும் பலனளிக்காத அந்நாளில் முகஸ்துதிக்காரர்கள் சந்திக்கும் இழிவையும் வேதனையையும் நபி (ஸல்) அவர்கள் விவரித்துக் கூறினார்கள்:

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன். ”மறுமை நாளில் முதன் முதலாக தீர்ப்பளிக்கப் படுபவர்களில் ஒருவன் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்ட தியாகி. அவன் கொண்டு வரப்பட்டு அவனுக்கு உலகில் அருளப்பட்ட அருட்கொடைகள் எடுத்துரைக்கப்படும். அவன் ஒப்புக் கொள்வான். அவனிடம் அதைக் கொண்டு என்ன அமல்களைச் செய்தாய் என்று கேட்கப்படும்.”அவன் உனக்காக போர் செய்து ஷஹீதாக்கப்பட்டேன்”என்று கூறுவான். அல்லாஹ் ”நீ பொய் சொல்கிறாய். நீ வீரன் என்று புகழப்படுவதற்காக போர் செய்தாய். அவ்வாறு உலகில் சொல்லப்பட்டு விட்டது” என்று கூறிவிடுவான். பிறகு, முகம் குப்புற இழுத்துச் சென்று நரகில் வீசுமாறு உத்தரவிடப்படும்.

மற்றொரு மனிதன் கல்வியைக் கற்று பிறருக்கு கற்றுக் கொடுத்தான். குர்ஆனை ஓதியிருந்தான். அவன் கொண்டுவரப்பட்டு அல்லாஹ்வின் நிஃமத்துகள் நினைவூட்டப்படும். அதை ஒப்புக் கொள்வான். அல்லாஹ் ”அதன்மூலம் என்ன அமல்களைச் செய்தாய்?” என்று கேட்பான். அவன் ”நான் கல்வியை கற்று பிறருக்குக் கற்றுக் கொடுத்தேன். உன் திருப்திக்காகவே குர்ஆனை ஓதினேன்” என்று கூறுவான். அதற்கு அல்லாஹ் ”நீ பொய் சொல்கிறாய். நீ ஆலிம் என்று புகழப்படுவதற்காக கல்வி கற்றாய்,காரி என்று புகழப்படுவதற்காக குர்ஆனை ஓதினாய்,அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது” என்று சொல்வான். பிறகு அவனை முகம்குப்புற நரகில் வீசி எறியுமாறு உத்தரவிடப்படும்.


இன்னொரு மனிதன், அல்லாஹ் அவனுக்கு உலகில் பல்வேறு அருட்கொடைகளை வழங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தியிருந்தான். அவனைக் கொண்டு வரப்படும். அவனுக்கு அல்லாஹ்வின் நிஃமத்துகள் நினைவூட்டப்படும். அவன் ஒப்புக் கொள்வான். அவனிடம் ”அதைக்கொண்டு என்ன அமல்களைச் செய்தாய்?” என்று கேட்கப்படும். அவன் ”எந்த வழிகளில் செலவு செய்வது உனக்குப் பிரியமானதோ அந்த அனைத்து வழிகளிலும் நான் செலவு செய்தேன்” என்று கூறுவான். ”அல்லாஹ் நீ பொய் சொல்கிறாய், நீ கொடைவள்ளல் என புகழப்படுவதற்காக செய்தாய்,அவ்வாறு உலகில் சொல்லப்பட்டுவிட்டது” என்று கூறுவான். பிறகு அவனை முகம்குப்புற இழுத்துச்சென்று நரகில் வீசுமாறு உத்தரவிடப்படும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

இந்த நபிமொழி தர்மம், வீரம், ஞானம் போன்ற நல் அமல்களில் தீய எண்ணங்களைக் கலந்து விடுவதால் ஏற்படும் விளைவுகளை சுட்டிக் காட்டுகிறது. தீய எண்ணத்துடன் அமல் செய்வதால் மகத்தான அந்நாளில் அகில உலக மக்களுக்கு முன்னால் அகிலங்களின் இரட்சகனால் கடும் தண்டனை வழங்கப்படுவது எவ்வளவு பெரிய இழிவு? அவர்கள் செய்த அமல்கள் தூய எண்ணத்துடன் அமைந்திருந்தால் எத்தகு நன்மைகளைப் பெற்று சுவனத்தில் நுழைவிக்கப்படுவர்களோ! அந்த அனைத்து நன்மைகளும் உரியப்பட்டு மாபெரும் இழிவும்,கேவலமும் சூழ்ந்த நிலையில் முகங்குப்புற நரகில் வீசி எறியப்படுவ தென்பது ஈடுசெய்யவே இயலாத மகத்தான இழப்பல்லவா?

மார்க்கச் சட்டங்களை அறிந்த பேணுதலுள்ள முஸ்லிம் தனது அனைத்து செயலிலும் முகஸ்துதியிலிருந்து விலகி, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே இலட்சியமாகக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”எவர் பெருமைக்காக அமல் செய்கிறாரோ அல்லாஹ் அவரை மறுமையில் இழிவுபடுத்துவான். எவர் முகஸ்துதிக்காக அமல் செய்வாரோ மறுமை நாளில் அல்லாஹ் அவரது குற்றங்களை பகிரங்கப்படுத்துவான்.” (ஸஹீஹுல் புகாரி)

நன்றி :- readislam (Anñisa | முஸ்லிம் பெண்கள்)

சனி, 7 டிசம்பர், 2013

டிசம்பர் 6 மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் மகத்தான வெற்றி பெற்றது...அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது.!!!

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

அஸ்ஸலாமு அலைக்கும் 

டிசம்பர் 6 மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் மகத்தான வெற்றி பெற்றது.

கடுமையான காவல்துறை கெடுபிடிகளுக்கு மத்தியில், விளம்பரங்கள் அனைத்தும் காவல்துறையால் கிழிக்கப்பட்டு மறைக்கப்பட்டு, விளம்பரங்கள் செய்த தொண்டர்கள் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்ட நிலையிலும்,



டிசம்பர் 6க்கு முன்னாள் போலீஸ் கெடுபிடிகளை எதிர்த்து ஆங்காங்கே சிறுசிறு போராட்டங்களையும் தமுமுகவினர் செய்துவந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று நடந்த ஆர்ப்பாட்டங்கள் 

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மாபெரும் வெற்றி கண்டது. 




தடையை மீறி நடத்தப்பட்ட இடங்களில் மக்கள் கைதாகி மண்டபங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுதலையாகி வருகிறார்கள்.

போராட்டங்களை முறியடித்துவிடலாம் என்று அதிகார வர்க்கம் கணக்குப் போட்டது. போராட்டங்கள் வெற்றியடைய வேண்டும் என்பது இறைவனின் விருப்பமாக ஆகிவிட்டது.


இரவு பகலாக உழைத்த தொண்டர்களுக்கும், ஒருங்கிணைப்புக்காக அயராது பாடுபட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கும், போராட்டக் களங்களிலே கண்டன உரையாற்றிய நிர்வாகிகளுக்கும், பேச்சாளர்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக என்று பிரார்த்திக்கிறோம்.- தமுமுக தலைமையகம்


அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது.!!!



அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது.!!!


إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّي

(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது)உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. (திருக்குர்ஆன்.1:5-7)


வியாழன், 5 டிசம்பர், 2013

அல்கோபர் கிளை களந்தாய்வுக் கூட்டம் ((வியாழன், 5 டிசம்பர், 2013))

வியாழன், 5 டிசம்பர், 2013

அல்கோபர் கிளை களந்தாய்வுக் கூட்டம்




அஸ்ஸலாமு அலைக்கும்

"இந்தியாவின் கருப்பு நாளாம் டிசம்பர் 6ன் துயரத்தை நெஞ்சிலும்
அடுத்த வருடத்திற்குள்ளாவது நீதி கிடைத்துவிடுமா"

...என்ற ஏக்கத்துடன் அல்கோபர் கிளை களந்தாய்வுக் கூட்டம்

கிளைத் தலைவர் சகோ.இஸ்மாயில் தலைமையில் நடந்தது.




இக்கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, மற்றும்
"தொடர் மருத்துவ முகாம்கள்"
நடத்துவது சமந்தமாக ஆலோசனைகள் செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் கிளைச் செயலாளர் சகோ.ஹஜாபஷிர்,
உறுப்பினர் கார்டு பொருப்பாளர் சகோ.நிஜாம்,
துணைச் செயலாளர் சகோ. பைசர்,
மக்கள் தொடர்பாளர்கள்
சகோ.ஹாஷிம் சேட்
மற்றும் சகோ.அப்துல் அஜீஸ்.
சிறப்பு அழைப்பாளர்களாக
மண்டல மருத்துவ அணிச் செயலாள் சகோ.யூனுஸ்
மற்றும் விவகாரத்துரைச் செயலாளர்
            சகோ. சீனிமுஹம்மது.
மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள் மற்றும் முடிவுகள்:-
1. டிசம்பர் 6 போராட்டம் வெற்றி பெற தாயகத்தில் இருக்கும் நம் சொந்தங்களை கலந்து கொள்ளச் சொல்வது.
2. உடல்நலக் குறைவால் வாடும் அப்பாவி சிறைவாசிகளுக்கு பிணை வழங்க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
3. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நம்மால் முடிந்த உதவிகளை தலைமைக்குச் செய்ய வேண்டும்.
4. இந்த மாதம் அல்கோபர் தமுமுக கிளை சார்பாக மருத்துவ முகாம் நடத்துவது.
5. உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க பகுதிவாரியாக உள்ள நிர்வாகிகளை ஊக்குவிக்க வேண்டும்.
 தகவல்:-
மக்கள் தொடர்பாளர்கள்
சகோ.ஹாஷிம் சேட்
சகோ.அப்துல் அஜீஸ்
{{-நன்றி உதவிய வலைதளம்-}}
http://mugavai-tmmk-dawah.blogspot.com/2013/12/blog-post_5.html
--

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّي
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது)உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. (திருக்குர்ஆன்.1:5-7)

T M M K AL-KHOBAR. K.S.A I visit : www.tmmk.info


புதன், 4 டிசம்பர், 2013

உறவுகளே எழுவீர்...டிசம்பர் 6 களம் அழைக்கிறது...{{-தலைவர், தமுமுக - Js Rifayee }}

டிசம்பர் 6 களம் அழைக்கிறது...

உறவுகளே எழுவீர்...

பேரன்புக்குரிய சகோதரர்களே...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

இக்கடிதம் உங்கள் அனைவரையும் பூரண சுகத்தோடும், கொள்கை சிந்தனையோடும் சந்திக்கட்டுமாக!

நீங்கள் யாவரும் டிசம்பர் 6 போராட்டக் களத்தை வலிமைப்படுத்துவதற்காக, களத்தில் தீவிரமாய் பணியாற்றிக் கொண்டிருப்பீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.



1995ல் இப்பேரியக்கம் தொடங்கப்பட்ட போது இடஒதுக்கீடும், பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் நீதி பெறுவதும் அதன் இருபெரும் கொள்கைகளாக அறிவிக்கப்பட்டது.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு, எதிர்ப்பை எவ்வாறு வெளிப்படுத்துவது; தொடர்ச்சியாக மக்களை எப்படி திரட்டுவது & என்றெல்லாம் இச்சமூகத்திற்கு யாரும் வகுப்பெடுக்கவில்லை. போராட்டக் களங்கள் முறைப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில், 1995ல் சமுதாய அக்கறைக் கொண்ட தமுமுக உருவானது. சமுதாய ஆர்வலர்களால் புனரமைப்பு செய்யப்பட்ட தமுமுக, பாப்ரி மஸ்ஜித் மீட்பு போராட்டத்தைக் கையிலெடுத்தது.

சகோதரர்களே... டிசம்பர் 6க்கான போராட்டக் களங்களை 19 வருடங்களாக நாம் முன்னெடுத்து வருகிறோம்.பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டு 22 வருடங்கள் ஆகும் நிலையில், 1995 தொடங்கி 19வருடங்களாக இப்போராட்டத்தை உயிர்துடிப்போடு வைத்திருக்கிறோம் எனில் இதை சாதனையாக சொல்வது என்பதைவிட; சமுதாயக் கடமையாகக் கருதி சொல்கிறோம் என்பதுதான் உண்மை! என்பதுதான் உண்மை!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இப்போராட்டம் மறக்கப்பட்டிருக்கிறது. முன்னெடுத்து நடத்துவதற்கு இயக்கங்கள் இல்லை. ஆற்றல்மிகு தலைவர்கள் இல்லை.

முஸ்லிம்களின் மேம்பாட்டில் முன்னோடி மாநிலமாக கருதப்படும் கேரளாவிலும் இதே நிலைதான் எனும்போது, தமுமுகவின் மகத்தான தியாகங்களை; டிசம்பர் 6 போராட்டக் களங்களை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது. இன்னும் தெளிவாகச் சொல்வதெனில், இந்திய முஸ்லிம்களுக்கே வழிகாட்டும் பேரியக்கமாக தமுமுக செயல்படுகிறது என்பதுதான் யதார்த்தமாகும். அல்ஹம்துலில்லாஹ்..

• 1995ல் கடையடைப்பு மற்றும் சாலை மறியல்
• 1996ல் கவர்னர் மாளிகை முற்றுகை
• 1997ல் சென்னையில் தடையை மீறி பேரணி
• 1998ல் முதல்வர் வீடு முற்றுகை

என முதல் நான்காண்டு காலங்களில் நாம் நடத்திய டிசம்பர் 6 போராட்டக் களங்கள் யாவும் நெருப்பில் நடைப்பயணம் நடத்திய நாட்களாகும்.
அப்போது நாம் இதுபோன்ற வலுவான & விரிவான & உள்கட்டமைப்பையும், மக்கள் செல்வாக்கையும்,அரசியல் & அதிகார முக்கியத்துவத்தையும் பெற்றிருக்கவில்லை.

ஈமானிய உறுதியும், ஏற்றுக்கொண்ட கொள்கை உணர்வும்தான் எல்லோரையும் இயக்கியது.

1995ல் நாம் நடத்திய கடை அடைப்புக்கு பரவலாக ஆதரவு கிடைத்தது முதல் வெற்றியாக அமைந்தது.அப்போது சென்னையில் சாலை மறியல் செய்து சில நூறு பேர்கள் மட்டுமே கைதானோம்.

1996ல் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்ட போது அது சில ஆயிரமாக உயர்ந்தது.

1997ல் சென்னையில் பேரணியை அறிவித்த போது அது பல்லாயிரமாக மாறியது.

1998ல் மதுரையில் பேரணி என அறிவிக்கப்பட்டு, அதற்கும் தடை விழுந்தபோது அப்போராட்டக் களம் சென்னையில் முதல்வர் வீடு முற்றுகையாக மாற்றப்பட்ட போது; அது அதிவீரியமாக அமைந்தது.

முதல் நான்கு ஆண்டுகளில் கடும் அடக்குமுறைகளை முறியடித்து; நமது சகோதரர்கள் சிறைகளுக்கு அஞ்சாமல் களமாடி; சொந்தப் பணத்தை செலவு செய்து; சொல்ல முடியாத சோதனைகளை சந்தித்து;டிசம்பர் 6 போராட்டக் களங்கள் வெற்றிகொள்ளப்பட்டன.

சிறைவாசம் என்றால் காலையில் கைதாகி மாலையில் விடுதலையாகும், திருமண மண்டபத்தில் வைக்கப்படும் ஒருநாள் கைதல்ல! டிசம்பர் 6க்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை கைதுகள் தொடங்கிவிடும்.அலை, அலையாய் நமது மக்கள் கைது செய்யப்பட்டு சென்னை, வேலூர்,கடலூர், திருச்சி, மதுரை, கோவை, சேலம், நெல்லை போன்ற மத்திய சிறைச்சாலைகளில் பூட்டப்பட்டார்கள்.

குடும்பத்தினர் பதற; குழந்தைகள் அழுக; வருவார்களா?மாட்டார்களா? என ஊரார் கேட்க; நமது சகோதரர்கள் களங்களில் பங்கேற்க முடியவில்லையே என வருத்தத்தில்; அதேநேரம் சிறைகளில் செயற்குழுவை நடத்திய திருப்தியில், சிறை மீண்டு வருவார்கள்! அது தமுமுகவின் பொற்காலம்!

அன்று நமது உறவுகள் செய்த தியாகங்கள்தான் இன்றும் டிசம்பர் 6 களத்தை உயிர்துடிப்போடு வைத்திருக்கின்றன.இந்தியாவே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நாம் நடத்தும் போராட்டங்களை திரும்பிப் பார்க்கிறது.
ஆம்! தியாகங்கள் வீண்போகாது! உழைக்காமல் எதுவும் கிடைக்காது!
நாம் உளத்தூய்மையோடு செயல்படும் போது இறைவன் அதற்கு அங்கீகாரம் வழங்குகிறான்.

அன்றைய நமது தியாகங்கள் இன்றைய வரலாறுகளாகும்! சகோதரர்களே... நாம் புதிய தியாகங்களுக்கும் தயாரானால்தான், புதிய வரலாறுகளைப் படைக்க முடியும்!

எதிர்வரும் டிசம்பர் 6, 2013ல் ‘மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை’ நடத்துகிறோம்.

• பாபரி மஸ்ஜித் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் விரைந்து முடிக்க வேண்டும்.
• பாபரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• பாபர் மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆகிய முப்பெரும் கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்திட உங்கள் அனைவருடன் ஒத்துழைப்பும் & உழைப்பும் மேலும், மேலும் தீவிரமாக்கப்பட வேண்டும்.

இது வருடாந்திர சடங்கல்ல; நீதியைப் பெறுவதற்கான நீண்ட ஆயத்தப் பணிகள் என்பதை மறவாதீர்!

ஜனநாயகத்தில் மக்களைத் திரட்டினால்தான் உரிமைகளைப் பெற முடியும்!
டிசம்பர் 6 போராட்டக் களத்தில், பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்குப் பின்னால் பிறந்த இளைஞர்களும்,மாணவர்களும் அதிகமாகப் பங்கேற்கத் தொடங்கியிருப்பது போராட்டக் களம் ‘அடுத்த தலைமுறை’யின் கைகளுக்கு மாறிவிட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது!

இவ்வருடமும் பெண்கள், குழந்தைகளோடு களத்துக்கு வர ஏற்பாடு செய்யுங்கள்!
இவ்வருடமும் நீதிக்கு வலுசேர்க்க; நம் குரலுக்கு பலம் சேர்க்க; பல்வேறு சமுதாயத் தலைவர்களுடன்,தோழமை இயக்க முன்னோடிகள்; அறிவுஜீவிகள் என பலரும் மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் நடைபெறும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க உள்ளார்கள்!

சகோதரர்களே... மக்களை வீடு, வீடாகச் சென்று சந்தித்து அவர்களை களத்துக்கு அழைத்துவர உழையுங்கள். நமது ரணம் ஆறவில்லை; 

போராட்டக் குணம் மாறவில்லை என்பதை மீண்டும் இவ்வருட டிசம்பர் 6 போராட்டத்திலும் நிரூபிப்போம்!

மீண்டும் சந்திப்போம். 

இன்ஷாஅல்லாஹ்!
அன்புடன்

சமுதாய ஊழியன் ஜே.எஸ்.ரிபாயீ,
தலைவர், தமுமுக

Js Rifayee-- 



இடித்தோர் எண்ணம் கருக...!

இடிகளே திரண்டு வருக....!!

கத்தியின்றி, ரத்தமின்றி 

ஓர் யுத்தக்களம் !

புறப்படு சகோதரா!  

புறப்படு உன் இறை 

இல்லத்தை மீட்கும் வரை ஓயாதே....!!