அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

புதன், 26 மார்ச், 2014

எழுச்சியை நோக்கி மயிலாடுதுறை!

எழுச்சியை நோக்கி மயிலாடுதுறை!

மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக மயிலாடுதுறையில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அண்ணன் ஹைதர் அலி அவர்களுக்கு வாக்கு கேட்டு திமுகவின் பொருளாளர் சகோதரர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று தொகுதிக்கு வருகை தந்து பெரும் எழுச்சியை ஏற்படுத்திச் சென்றிருக்கிறார்.



மதியம் 4.30 மணிக்கு பாபநாசத்திலும், தொடர்ந்து கும்பகோணம், குத்தாலம், மயிலாடுதுறை, செம்பனார்கோயில் என மக்கள் வெள்ளத்தில் வேட்பாளருடன் பரப்புரை நிகழ்த்தினார்.

இறுதியாக, சீர்காழியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்றினார்.

அவரது உரை வீச்சு முன்பை விட மெருகேறியுள்ளது. தங்கள் ஆட்சியின் கடந்த கால சாதனைகளை, அதிமுகவின் தவறுகளை புள்ளி விவரங்களுடன் அம்பலப்படுத்தினார்.

பதட்டமின்றி, சரளமாக, ஆணித்தரமாக அவர் பேசியது அனைவரையும் ஈர்த்தது.

சமீபத்தில் திருச்சி திமுக மாநாட்டில் அவர் பேசிய உரைதான், அவரது புதிய பயணத்தின் எழுச்சியாக அமைந்தது.

அதற்கு அடுத்த ஒரு எழுச்சிமிக்க உரையாக அண்ணன் ஹைதர் அலிக்காக அவர் வாக்கு சேகரித்து பேசிய உரை அமைந்திருந்ததாகக் கருதுகிறேன்.

இந்த அரை நாள் நிகழ்ச்சி, இங்கே முகாமிட்டு பணியாற்றி வரும் எனக்கும், பேராசிரியருக்கும், அப்துல் சமது, உமர், ராவுத்தர்ஷா, அமீன், சர்வத்கான், சரவண பாண்டியன் உள்ளிட்ட அனைவருக்கும் மனதிருப்தியை தந்துள்ளது.

ஏற்கனவே 2009 நாடாளுமன்றத் தேர்தலில், மமக இத்தொகுதியில் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களை நிறுத்தி களமாடியது. அப்போது கட்சி, இத்தொகுதி முழுக்க அறிமுகமானது.

அது இப்போது களத்தில் மிகவும் உதவியாக இருக்கிறது. ஜமாத்துகள், சிறுபான்மையினரைத் தாண்டி அனைத்துத் தரப்பு மக்களும் அங்கீகரிக்கும் கட்சியாக மீண்டும் மீண்டும் மமக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமாகும்.

மதச்சார்பற்ற நம் நாட்டில், சிறுபான்மையினர் ஒரு அரசியல் கட்சியை வளர்த்தெடுக்கும் போது, அது பெரும்பான்மை மக்களின் நல்லெண்ணங்களையும் பெற்றுத்தான் வளர முடியும். வளர வேண்டும். அப்போது தான் நல்லிணக்கத்துடனும், புரிதலுடனும் கூடிய அரசியல் வெற்றியைப் பெற முடியும்.

அத்தகைய வெற்றியை மயிலாடுதுறை தொகுதியில் பெறும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. (இறைவன் நாடினால்...)






வியாழன், 13 மார்ச், 2014

வெற்றி என்னும் சிகரத்தை தொட, எல்லோரும் இணைந்துஓடுவோம்.! நமது வேட்பாளர் அண்ணன் ஹைதர் அலி அவர்களைநாடாளுமன்றத்துக்கு அனுப்புவோம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


மமக பொதுச்செயளாலர் எம்.தமிமுன் அன்சாரி அழைக்கின்றார்
களமாட புறப்படுங்கள்!
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே, ஏக இறைவனின் சாந்தியும்சமாதானமும் உரித்தாகட்டுமாக!...
நேற்றே ஒரு கடிதம் வரைய வேண்டுமென நினைத்தேன்.
செயற்குழுவும்; அதைத் தொடர்ந்து தலைமையகத்திற்கு கூட்டணிகட்சி வேட்பாளர்களின் வருகைகளும்; தொடர்ந்து மக்கள் உரிமைபணிகளும்; கூடுதலாக குவைத்திலிருந்து திரும்பிய நிலையில்ஓய்வெடுக்காத அலுப்பும்; என்னை அழுத்தியதாலும், இன்றுகாலையிலிருந்து இரவு 09:30 வரை உயர்நிலைக்குழு கூட்டம்நடந்ததாலும் தாமதமாக முகநூல் வாசகர்களை சந்திக்கிறேன்.


நேற்று நடைபெற்ற மமகவின் செயற்குழுவில் மயிலாடுதுறைநாடாளுமன்ற தொகுதியின் மமகவின் வேட்பாளராக அருமைஅண்ணன் S.ஹைதர் அலி அவர்களை வேட்பாளராகஉயர்நிலைக்குழுவும், நிர்வாக குழுவும் முடிவு செய்து, அதைசெயற்குழுவில் அருமை தலைவர் J.S.ரிஃபாயி அண்ணன்முன்மொழிய, அதை நான் வழிமொழிய உற்சாக முழக்கங்களுடன்அனைவரும் அங்கீகரித்தனர்.
நேற்று மாலையிலிருந்து நமது அலுவலகத்திற்கு கூட்டணிகட்சிகளின் வேட்பாளர்கள் A.K.S.விஜயன், T.R.பாலு, A.ராசா, T.K.S.இளங்கோவன், சகோ.அப்துல் ரஹ்மான்,டாக்டர்.கிருஷ்ணசாமி என பலரும் வருகை தந்து வாழ்த்துக்களைபரிமாறிக் கொள்ளும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. நாமும்கலைஞர் இல்லம், முஸ்லிம்லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள்அலுவலகங்களுக்கு சென்று வாழ்த்துக்களைபரிமாறிக்கொண்டோம்.
இன்று நடைபெற்ற உயர்நிலைக்குழுவில், மயிலாடுதுறையில்தேர்தலை எப்படி எதிர்கொள்வது? அண்ணன் ஹைதர் அலிஅவர்களுக்கான பரப்புரைகளை எவ்வாறு முன்னெடுப்பது?தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கூட்டணி கட்சிவேட்பாளர்களுக்கு எப்படியெல்லாம் உழைப்பது? என்பது குறித்துவிரிவான ஆய்வுகளை நடத்தினோம்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் நாங்கள் பெருங்கொண்டதிட்டமிடல்களுடன் மயிலாடுதுறையில் முகாமிட உள்ளோம்!போர் வீரர்களைப் போல சுழன்று வாக்குகளை சேகரிக்கஉள்ளோம்.
அங்கே நமது குடும்ப உறுப்பினர் ஒருவர் வேட்பாளராக இருக்கிறார்என்ற உணர்வோடு உழைக்க புறப்படுகிறோம். “நீ எதைவிரும்புகிறாயோ அதையே உன் சகோதரனுக்கும் விரும்பு” என்றநபிமொழியை நெஞ்சில் ஏந்தி உழைக்க அனைவரையும்அழைக்கிறோம்!
மயிலாடுதுறையில் வெற்றிகளை குவிப்பது மட்டுமே எங்களதுஇலக்காகும்.எனவே அனைவரும் எங்களது வெற்றிக்காக பிராத்தியுங்கள்.வெளிநாடுகளில் வாழும் சகோதரர்கள் தாயகத்தில் இருக்கும்உங்கள் குடும்பத்தார்களிடம் வாக்களிக்க பரப்புரை செய்யுங்கள்.



தேர்தல் பணிக்கு பெருமளவில் நன்கொடைகளை வாரிவழங்குங்கள். இது தொடர்பாக பொருளாளர் அண்ணன்ரஹ்மத்துல்லாஹ் (9444978779) அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.
வெற்றி என்னும் சிகரத்தை தொட, எல்லோரும் இணைந்துஓடுவோம்.! நமது வேட்பாளர் அண்ணன் ஹைதர் அலி அவர்களைநாடாளுமன்றத்துக்கு அனுப்புவோம்.
சமூக நீதி, சமூக நல்லிணக்கம், சமத்துவ ஜனநாயகம் என்ற நமதுகொள்கைகளை உயர்த்தி பிடிப்போம். மனிதநேய மக்கள் கட்சியின்சேவை அரசியலை வலுப்படுத்த அருமைச் சொந்தங்களே...களமாட புறப்படுங்கள்!

அன்புடன்

தமிமுன் அன்சாரி, பொதுச்செயலாளர் மமக.