அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

சனி, 16 ஆகஸ்ட், 2014

"சட்டமன்றத்தை அரசியல் மேடையாக ஆக்கி விட்டார்கள்" - மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றத் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.

அன்பு உறவுகளுக்கு..!

"சட்டமன்றத்தை அரசியல் மேடையாக ஆக்கி விட்டார்கள்"

துக்ளக் வாசகர்களுக்கு பேட்டி 


- மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றத் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர், ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் என்கிற பின்னணி எல்லாம் இருந்தாலும், ஜவாஹிருல்லா அடிப்படையில் ஒரு பேராசிரியர் என்பது அவர் பேச்சைத் துவக்கும்போதே தெரிகிறது. வாசகர்கள் வந்து அறிமுகமானதும் பேசிக்கொண்டிருந்த சின்ன ஹால், ஒரு கல்லூரி வகுப்பறையைப் போல மாறுகிறது. நேர்த்தியான பேராசிரியராக கச்சிதமாக பதில்கள் வருகின்றன அவரிடமிருந்து.

ஐ.சி.எஃப். ஊழியரான அயன்புரம் த.சத்திய நாராயணன், மருந்துப் பிரதிநிதியான பி. வெங்கடேஷ்வரன், தனியார் கல்லூரியில் பணியாற்றுகிறவரான பி. அப்துல் ரஹீம், மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றுகிற ஜே. முகம்மது சமீம், கோவையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் பி.சுந்தரம், தனியார்துறையில் பயிற்சியாளராக இருக்கும் ஏ. அப்துல் ரசாக் என்று ஆறு வாசகர்கள்.

கும்பகோணத்தில் தனியார் பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியான வழக்கில், சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு பற்றிய தன்னுடைய கருத்துடன் உரையாடலைத் துவக்குகிறார் ஜவாஹிருல்லா.

"கும்பகோணத்தில் உள்ள பள்ளியில் பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த தீ விபத்து தமிழகத்தையே அதிரவைத்த ஒரு துக்கமான நிகழ்வு. அதில் 94 மாணவ, மாணவிகள் கோரமாக எரிந்து சாம்பலானார்கள். தஞ்சை நீதிமன்றம் கடந்த வாரத்தில் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதில் பள்ளி உரிமையாளருக்கும், மற்றவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தப் பள்ளிக்கு அனுமதி வழங்கிய கல்வி அதிகாரிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் - அந்தப் பள்ளி பாதுகாப்பற்ற நிலையில் இயங்க அனுமதித்தவர்கள் இதே கல்வித்துறை அதிகாரிகள்தான். அவர்கள் அவ்வப்போது தங்களுடைய கடமையைச் சரிவரச் செய்திருந்தால் இப்படியொரு கோர விபத்தே நடந்திருக்காது. தமிழக அரசு இந்த வழக்கில் மேல் முறையீடு செய்து, அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில் உயிரிழந்த மாணவர்களுக்குக் கூடுதலான இழப்பீட்டைப் பெற்றுத்தர வேண்டும். இந்தச் சம்பவம் நடந்த பிறகு தமிழகம் முழுக்க பல பள்ளிகளில் கண்காணிப்பு நெறிமுறைகள் கடுமையாக்கப்பட்டன. அவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அரசுக்கு இதில் பொறுப்பே இல்லை என்று சொல்லிவிட முடியாது."

அப்துல் ரசாக்: இதில் சிலரைத் தண்டித்து அதிகாரிகளைத் தண்டிக்காமல் விட்டது - ஊற்றுக்கண்ணை அடைக்காமல் விட்டதைப் போலிருக்கிறதே?

ஜவாஹிருல்லா: உண்மைதான். அதிகாரிகள்தான் இந்த விதமான அலட்சியங்கள் நீடித்து கொடூரமான நிகழ்வுகள் நடக்கக் காரணமாக இருக்கிறார்கள். நம் நாட்டில் பெரும்பாலும் இப்படித்தான் நடக்கிறது.

வெங்கடேஷ்வரன்: தமிழகச் சட்டமன்றத்தில் பேச்சுரிமை பாதிக்கப்பட்டிருப்பதாக நீங்கள் கூட சட்டமன்றத்தை விட்டு வெளியேறி வந்து சொல்லியிருக்கிறீர்கள். முதல்வரைப் பாராட்டிப் பேசும்போது மட்டும்தான் நீங்கள் எல்லாம் பேச முடிகிறது. எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைவதற்கான ஒரு நிர்பந்தத்தை ஆளும்கட்சியே தனது நெருக்கடிகளால் உருவாக்குகிறதா?

ஜவாஹிருல்லா: சட்டமன்றம் சராசரியாக அறுபது நாட்கள்தான் நடைபெறுகிறது. அதில்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய பிரச்சனைகளை எழுப்புவதற்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். இப்போது சட்டமன்றத்தில் அப்படி நடப்பதில்லை. இன்றைக்குக்கூட தமிழகத்தில் உள்ள மீனவர்களின் பிரச்சனையை எழுப்ப முயற்சித்தோம். என்னுடைய தொகுதி சார்ந்த பிரச்சனையும் கூட. இது தொடர்பாக பல கடிதங்களை பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எழுதியிருக்கிறார். அப்படியிருந்தும் இன்று காலையில் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் முதல்வரைப் பற்றி மிக மோசமான அவதூறை வெளியிட்டிருக்கிறார்கள். இத்தகைய அவதூறை மிகவும் கண்டிக்கிறோம்.

இன்றைக்கு தமிழக மீனவர் பிரச்சனையை ஜீரோ நேரத்தில் பேச முயற்சித்தபோது அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அதனால் நானும், எங்கள் கட்சியின் இன்னொரு எம்.எல்.ஏ.வான அஸ்லம் பாஷாவும் வெளிநடப்பு செய்தோம். இப்படி எங்களுடைய உரிமைகள் மறுக்கப்படும்போது எதிர்க்கட்சியினர் ஒன்று சேர்ந்து பல பிரச்சனைகளை எழுப்பியிருக்கிறோம். தி.மு.க. உறுப்பினர்களை இந்தக் கூட்டத் தொடர் முழுக்கப் பங்கேற்க முடியாமல் நீக்கியபோது, அதை எதிர்த்து இங்குள்ள அனைத்துக் கட்சிகளும் குரல் எழுப்பினோம். முதல்வரைப் பாராட்டுவதற்கு என்றால் இங்கு நேரம் ஒதுக்கித் தரப்படுகிறது. ஆனால், தமிழக மக்களின் பிரச்சனைகளை நாங்கள் எழுப்ப முயற்சிக்கிற போது அதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இப்படி அரசு செயல்படுகிற போது நீங்கள் சொல்கிற மாதிரி எதிர்க்கட்சிகளிடையே கூட்டணி வரத்தான் செய்யும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகளை ஆளும்கட்சி பெற்றதை வைத்து மட்டும் தங்களுக்குச் செல்வாக்கு பலமாக இருப்பதாகக் கணக்கிடுகிறார்கள். இதற்கு முன் எத்தனை தடவை அ.தி.மு.க. தோற்றிருக்கிறது என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள அவர்கள் தவறி விடுகிறார்கள். ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜம். எதிர்க்கட்சிகள் செயல்படுவதற்கான தளம் இல்லாதபோது, அவை ஒன்றிணைவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகி விடுகின்றன என்பதும் உண்மை.

பி.சுந்தரம்: பொதுவாக கடந்த மூன்றாண்டுகளில் அ.தி.மு.க. அரசு என்ன செய்திருக்கிறது? இனி என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

ஜவாஹிருல்லா: இந்த அரசு அமைந்த பிறகு சில நல்ல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். உதாரணமாக, தாய்த் திட்டம் என்கிற பெயரில் வருவாய்த் துறையின் திட்டத்தைச் சொல்ல வேண்டும். சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் குறைந்த விலையில் உணவகங்களைத் திறந்திருக்கிறார்கள். இதுவும் வரவேற்கத்தக்க அம்சம். கடந்த சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பல அறிவிப்புகளைச் செய்திருக்கிறார் தமிழக முதல்வர். ஆனால் அந்தத் திட்டங்கள் எந்த அளவுக்கு நடைமுறைக்கு வந்திருக்கின்றன என்று பார்த்தால், முப்பது சதவிகிதம் கூட நிறைவேற்றப்படவில்லை. இதுதான் இங்குள்ள நடைமுறை. சில அறிவிப்புகள் இன்னும் அறிவிப்புகளாகவே நிற்கின்றன. இதைப் பற்றியெல்லாம் சட்டமன்றத்தில் கேள்விகள் கேட்டால் அவைக் குறிப்பிலிருந்து அவை நீக்கப்படுகின்றன.

முகம்மது சமீம்: சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்வது ஜனநாயக ரீதியான உரிமை. அப்படி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யும் போது அமைச்சர் ஒருவரே ‘ஓடுகாலிகள்’ என்று பேசுவதும், அத்தகையப் பேச்சுகள் அனுமதிக்கப்படுவதும் எதைக் காட்டுகிறது?

ஜவாஹிருல்லா: நீங்கள் கேட்டிருப்பது நல்ல கேள்வி. சட்டமன்றத்தில் நாங்கள் பேசும்போது பொய் என்கிற வார்த்தையைக் கூட நாங்கள் பேசக்கூடாது. காரணம் - பொய் என்கிற வார்த்தை நாடாளுமன்ற முறைமைக்கு முரண்பாடான சொல் என்று சொல்லப்பட்டு அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும். இதனால்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும்போது ‘உண்மைக்கு மாறாகப் பேசியிருக்கிறார்’ என்றுதான் குறிப்பிட்டுப் பேசுவார்கள். மௌலிவாக்கத்தில் கட்டிட விபத்து நிகழ்ந்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எல்லாம் சேர்ந்து அதுகுறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தோம். அப்போது அதை அனுமதிக்காத நிலையில்தான் தி.மு.க. உள்ளிட்ட பல எதிர்க்கட்சியினர் சேர்ந்து வெளிநடப்பு செய்தோம். அப்போதுதான் வெளிநடப்பு செய்தவர்களைக் குறித்து ‘ஓடுகாலிகள்’ என்ற சொல்லை அமைச்சர் வைத்தியலிங்கம் பயன்படுத்தினார். அகராதியில் அதன் அர்த்தத்தை எடுத்துப் பார்த்தால் அது மிக மோசமான சொல். அதுதான் நாடாளுமன்ற விதிகளுக்குப் புறம்பான ஒரு சொல். அதை அவைக்குறிப்பிலிருந்து அன்றைக்கு நீக்கவில்லை. எதிர்க்கட்சிகள் இங்கு குறைகளைச் சுட்டிக்காட்டுவதற்கான வாய்ப்பு இல்லாமல், தி.மு.க.வையும், தே.மு.தி.க.வையும் தாக்கிப் பேசுவது என்று சட்டமன்றத்தை அரசியல் மேடையாக ஆக்கிவிட்டார்கள். இது வருந்தத்தக்கது.

த. சத்திய நாராயணன்: அ.தி.மு.க.வும் சரி, தி.மு.க.வும் சரி, இரண்டு கட்சிகளுமே நோன்பு விருந்தில் கலந்து கொள்கிறார்கள். சிறுபான்மை சமூகத்திற்கு அதிக நன்மைகளைச் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். உங்களுடைய பார்வையில் எந்த இயக்கம் முஸ்லிம்களுக்கு அதிக நன்மை செய்திருப்பதாக நினைக்கிறீர்கள்?

ஜவாஹிருல்லா: 1995லிருந்தே முஸ்லிம்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்திப் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். மாநாட்டை நடத்தியிருக்கிறோம். அப்போது அதில் வந்து கலந்துகொண்டவர் அ.தி.மு.க. தலைவரான ஜெயலலிதா. அதற்குப் பிறகு அவர் ஆட்சிக்கு வந்த போதும் அவர் அதை நிறைவேற்றவில்லை. அதன்பிறகு தி.மு.க. 2006ல் ஆட்சிக்கு வந்த பின் 2007ல் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இது தி.மு.க. செய்த மிக முக்கியமான பணி. தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்திற்கு ஒரு அந்தஸ்தும் தி.மு.க. ஆட்சியில்தான் கிடைத்தது. சிறுபான்மை மக்களுக்கான மேம்பாட்டுக் கழகமும், உருது அகாடமியும் தி.மு.க. ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டது.
அ.தி.மு.க. எதுவும் செய்யவில்லை என்று நான் சொல்ல மாட்டேன். இதை நான் ஒப்பீட்டளவில் சொல்கிறேன். தமிழகத்தில் சிறுபான்மையினருக்கான மொழிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்று சமச்சீர் கல்விக்கான ஆணையம் வலியுறுத்துகிறது. ஆனால், தி.மு.க. ஆட்சி, தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பிலிருந்து தமிழ்தான் படிக்க வேண்டும் என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தது. எங்களுக்குத் தமிழை ஒரு பாடமாகக் கற்பதில் எந்த மறுப்பும் இல்லை. ஆனால், கூடுதலாக சிறுபான்மை மொழிகளையும் கற்க ஒரு வாய்ப்பைத் தரவேண்டும் என்றுதான் கேட்கிறோம். இதை நாங்களும், சிறுபான்மை மொழியினரும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். இதை இரண்டு கட்சிகளும் இதுவரை செவிசாய்க்கவில்லை.

முகம்மது சமீம்: இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தைகள் நடந்தும் இதுவரை தாக்குதல்கள் நீடிக்கின்றன. மீனவர்களைச் சிறைப் பிடிப்பது நடக்கிறது. இதற்கான நிரந்தரத் தீர்வாக எதை நீங்கள் சொல்ல முடியும்? உங்கள் தொகுதிக்குள் ராமேஸ்வரமும் இருப்பதால் இதைக் கேட்கிறேன்.

ஜவாஹிருல்லா: இதை இரண்டு பார்வையில் பார்க்க வேண்டியிருக்கிறது. பல நாடுகளில் கடல் எல்லைகள் இருக்கின்றன. அங்கும் மீனவர்கள் எல்லை தாண்டுவது நடக்கிறது. அவர்கள் கைது செய்யப்படுவதும் நடக்கிறது. ஆனால், அங்கெல்லாம் நடைபெறாத கொடூரம் இங்கு நடக்கிறது. இந்திய - இலங்கைக்கு இடையில் உள்ள பாக் நீரிணைப்புப் பகுதியில் மட்டும் இதுவரை 2011 வரை தமிழக மீனவர்கள் 500 பேர் வரை பலியாகியிருக்கிறார்கள். இரண்டாயிரம் பேர் வரை தாக்கப்பட்டு ஊனம் அடைந்திருக்கிறார்கள். உலகில் எந்தவொரு நாட்டிலும் இப்படிப்பட்ட கொடுமை நடந்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் குஜராத்துக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில்கூட கடல் எல்லையில் இதே மாதிரியான பிரச்சனை இருக்கிறது. பாகிஸ்தான் நமக்குப் பகை நாடு. இருந்தாலும் அவர்கள் இதுவரை நம்முடைய இந்திய மீனவர்களைத் தாக்கியதாக, சுட்டுக் கொன்றதாக எந்த ஒரு நிகழ்வும் நடக்கவில்லை.

சென்ற ஜனவரி மாதம் பா.ஜ.க. சார்பில் ‘கடல் தாமரை’ என்கிற பெயரில் தமிழக மீனவர்களுக்கு ஆதரவான போராட்டம் நடத்தப்பட்டது. அதில் இன்றைய வெளிவிவகாரத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் கலந்துகொண்டு பேசியபோது, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கு என்று தனி அமைச்சகமே உருவாக்குவோம்’ என்றார். இன்றைக்கு உள்ள நிலைமை என்னவென்றால், இப்போது 93 மீனவர்கள் கைதாகி இலங்கைச் சிறையில் இருக்கிறார்கள். விசைப் படகுகளும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

மோடி பிரதமராகப் பதவி ஏற்றபோது, பாகிஸ்தான் சிறையில் இருக்கும் மீனவர்களை விடுவிப்பதாக அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீஃப் சொன்னார். அதன்படியே அங்குள்ள மீனவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். அதே சமயம் இலங்கை அதிபர் ராஜபக்ஷவும் அதே உறுதிமொழியைக் கொடுத்தபோது இலங்கைச் சிறையில் இந்திய மீனவர்கள் ஐந்து பேர் இருந்தார்கள். அடுத்து இதுவரை பலர் கைதான நிலையில் இன்றுவரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை. அந்த நாட்டைத்தான் நாம் நட்பு நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். என்னுடைய தொகுதியில் உள்ள தங்கச்சி மடத்தில், மோடி - ராஜபக்ஷ சந்திப்பின் போது இலங்கை அதிபர் கொடுத்த உறுதிமொழியைக் கேட்டு பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினார்கள். ஆனால் இதுவரை விமோசனமில்லை.
காங்கிரஸ் அரசுக்கு இந்தப் பிரச்சனையில் என்ன மனநிலை இருந்ததோ, அதே மனநிலைதான் தற்போதிருக்கிற பா.ஜ.க. அரசுக்கும் இருக்கிறது. அடிப்படையான இந்தப் பிரச்சனை தீர்க்கப்படாதபோது நாம் எப்படி தீர்வைப் பற்றி இந்த நிலையில் பேச முடியும்? 

கடலில் மீன்வளம் உள்ள பகுதியை நீண்டகாலக் குத்தகைக்கு எடுக்க வேண்டும். அதனால் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க முடியும். இதே மாதிரியான மீன்வளம் நிறைந்திருந்த குமரி மாவட்டத்தை அடுத்துள்ள கடல் பகுதியை இலங்கை அரசு கேட்டபோது, அதை இந்திய அரசு கொடுத்திருக்கிறது. அதேமாதிரி தமிழக மீனவர்கள் விஷயத்திலும் ஏன் கடைப்பிடிக்கக் கூடாது என்பதுதான் எங்களுடைய கேள்வி.

அப்துல் ரசாக்: சென்ற ஆண்டு நீங்கள் மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தித் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தை நடத்தினீர்கள். தமிழகச் சிறைகளில் நீண்ட காலமாக இருக்கும் முஸ்லிம் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தீர்கள். அந்தக் கோரிக்கைகள் இப்போது எந்த நிலையில் இருக்கின்றன?

ஜவாஹிருல்லா: முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்பது அதில் ஒரு கோரிக்கை. அதை இப்போதும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். சட்டமன்றத்தில் மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. பீமாராவும், எங்கள் கட்சி எம்.எல்.ஏ. அஸ்லம் பாஷாவும் இப்பிரச்சனையை எழுப்பினார்கள். இதையடுத்து தமிழகச் சிறைகளில் நீண்ட காலமாக வைக்கப்பட்டிருக்கும் சிறைக்கைதிகளை ஜாதி, மதம் பார்க்காமல் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துக் கொண்டிருக்கிறோம். அதைப் போல திருமணப் பதிவுச் சட்டத்திலும் ஒரு திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பதையும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்.

(அடுத்த இதழில் தொடரும்)
ஒருங்கிணைப்பும், தொகுப்பும்: மணா


துக்ளக் வாசகர்களுக்கு பேட்டி 2 ம் பாகம்

துக்ளக் வாசகர்களின் கேள்விகளுக்கு நான் அளித்த பதில்களின் இரண்டாம் பகுதி தற்போது விற்பனையில் உள்ள துக்ளக் (20.8.2014) இதழில் பிரசுரமாகியுள்ளது. 
ஒத்து மொத்த சமுகத்தையே குற்றம் சாட்டுவது நியாயமல்ல

த. சத்திய நாராயணன்: சமீபத்தில் தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் பெயர் பொறித்த டி-சர்ட்களோடு சில இஸ்லாமிய இளைஞர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எங்கோ உள்ள அமைப்புக்கு தமிழகத்தில் இம்மாதிரியான ரியாக்ஷன் இருப்பது குறித்து நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இதை எந்த அளவில் ஆதரிக்க முடியும்?

ஜவாஹிருல்லா: நான் இது பற்றி விசாரித்தேன். தொண்டி பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களில் சிலர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் பெயர் பொறிக்கப்பட்ட டிசர்ட்களை அணிந்து, புகைப்படம் எடுத்து அவர்களே அதை இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அமைப்பு கேரளம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த நர்ஸ்களைப் பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்ததற்கு நன்றி செலுத்துகிற மாதிரி இதைச் செய்திருக்கிறார்கள். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை அத்துடன் அவர்களுக்கு உண்மையிலேயே அந்த அமைப்புடன் தொடர்பு இருந்தால் இப்படித் தங்களை இணைய தளங்களில் பகிரங்கப் படுத்தியிருப்பார்களா? இது ஆர்வக் கோளாறில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு டிசர்ட் அணிந்ததை வைத்து நாம் தவறான முடிவுக்கு வந்துவிட முடியாது.

முகநூலில் இந்தப் புகைப்படங்கள் வெளிவந்த போது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவரான ஜே.எஸ். ரிபாயி வெளிப்படையாக அதைக் கண்டித்திருக்கிறார். அதே மாதிரி, இந்தியாவுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டதாகச் சொல்லப்படும் எந்தத் தீவிரவாதக் கருத்தையும் நாங்கள் ஏற்கவில்லை. எங்கள் அமைப்பில் ஏராளமான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களை நாங்கள் எந்த விதத்தில் வழிநடத்திச் செல்கிறோம் என்பதுதான் முக்கியமானது. எங்கோ-எந்த நாட்டிலோ - ஒரு சில அமைப்பினர் செய்கிற தவறுகளுக்காக அல்லது வெளிப்படுத்துகிற தீவிரவாதக் கருத்துகளுக்காக, ஒட்டுமொத்த சமூகத்தையே குற்றம் சாட்வது எந்த விதத்திலும் நியாயமல்ல. எல்லா சமூகத்திலும் விதிவிலக்காக இயங்குகிறவர்கள் இருப்பார்கள். அதை வைத்து அந்தச் சமூகத்தைப் பொதுமைப்படுத்திக் குற்றம் சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா?

வெங்கடேஷ்வரன்: கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக தமிழகத்தில் விஸ்வரூபம், துப்பாக்கி-என்ற இரண்டு சினிமாக்களையும் முஸ்லிம்கள் எதிர்த்தார்கள். விஸ்வரூபத்திற்கு அதிகப்படியான எதிர்ப்பைக் காட்டினார்கள். இப்படி பல சினிமாக்களுக்கு எதிர்ப்பைத் தொடர்ந்து தெரிவிப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு சிக்கலை ஏற்படுத்திவிடாதா? இப்படி ஒவ்வொரு சமுதாயமும் எதிர்ப்பைத் தெரிவித்தால், சினிமா என்கிற ஊடகமே வலுவிழந்து போய்விடாதா?

ஜவாஹிருல்லா: இதற்கு நான் பதில் சொல்வதைவிட, முன்பு வெளிவந்து சர்ச்சைக்குள்ளான ஒரே ஒரு கிராமத்திலே, என்ற படம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சினிமா ஒரு இருட்டரங்கில் மிக வெளிச்சமான திரையில் நிகழும்போது அந்தக் காட்சிகள் பார்வையாளர்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட ஜாதிக்காகச் சொல்லப்பட்ட இந்த வாதம் மதத்திற்கும் பொருந்தும். இதை வைத்துப் பார்த்தால் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிற மீடியாவுக்குப் பின்னிருக்கிறவர்களுக்கு, வியாபாரம் என்பதை தாண்டி மிகப் பெரிய பொறுப்புணர்வும், கடமையும் இருக்கிறது அந்தளவுக்கு அதன் தாக்கம் பலமாக இருக்கிறது. விஸ்வரூபம், துப்பாக்கி போன்ற படங்களுக்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏன் உருவானது என்பதையும் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வெங்கடேஷ்வரன்: அர்ஜூன், விஜயகாந்த் போன்ற பல நடிகர்கள் நடித்த பல படங்களில் குறிப்பாக ரோஜா படத்தில் தீவிரவாதம் என்றால் முஸ்லிம் சமூகத்தைக் குறிப்பிட்டிருக்கிற மாதிரிக் கட்டமைக்கப்படுவது நீண்ட காலமாகவே நடந்து கொண்டிருக்கிறதே? அப்போதெல்லாம் நீங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையே?

ஜவாஹிருல்லா: தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. நாங்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். சகித்துக் கொண்டுதானிந்தோம். ஆனால் இப்போது வெளிவரும் படங்களில், அந்த நிலை உச்ச கட்டத்திற்குப் போன நிலையில்தான் நாங்கள் தலையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால்தான் நாங்கள் எதிர்பைத் தெரிவித்தோம். வரம்பு மீறி ஒரு சமூகத்தைப் பற்றிய காழ்ப்புணர்ச்சியைத் திரைப்படங்கள் வழியாகத் தொடர்ந்து திணிப்பதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். அதன் மூலம் சிறு குழந்தைகளிடம் கூட சிறுபான்மையினரைப் பற்றிய அச்ச உணர்வை விதைக்கிறோம் என்கிற ஆபத்தை, ஊடகம் தொடர்பானவர்கள் உணர வேண்டும். அவர்களுக்கு அது வெறும் வியாபாரம். எங்களுக்கு அப்படியல்ல வாழ்க்கை. இப்படி ஒரு ஜாதியைப் பற்றிய படத்தை இவர்கள் தொடர்ந்து இத்தகைய சித்தரிப்பைச் செய்வார்களா? செய்ய மாட்டார்கள். செய்யவும் கூடாது. திரைப்படத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மட்டுமல்ல. எந்தச் சமூகத்திற்கு எதிராகவும் துவேஷத்தைப் பரப்புகிற விஷ விதைகள் தூவப்படக் கூடாது என்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். ஏன் திரைப்படங்களில் ஒரு சமூகத்தை நீங்கள் தனிமைப்படுத்துகிறீர்கள்? திரைப்படத்தின் வியாபாரத்திற்காக ஒரு சமூகத்தைப் பலிகடாவாக்க நினைப்பது எந்த விதத்திலும் நல்லதல்ல. இந்தப் புரிந்துணர்வு திரைப்படத்துறை சார்ந்த கலைஞர்களுக்கு வர வேண்டும் என்றும் நாங்கள் நினைக்கிறோம்.

த. சத்திய நாராயணன்: மோடி ஆட்சிக்கு வரும் முன்பே பொது சிவில் சட்டத்தைப் பற்றிப் பேசினார்கள். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்குவது பற்றிய பேசினார்கள். ஆட்சிக்கு வந்த பின் இதுகுறித்து கவனம் அதிகப்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

ஜவாஹிருல்லா: நீங்கள் சொன்ன இரண்டு பிரச்சனைகளை நரேந்திர மோடி பிரதமராக வந்த பிறகு இதுவரை பேசவில்லை என்பதை முதலில் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். அவருடைய சகாக்களில் சிலர் இது குறித்துப் பேசியிருக்கிறார்கள். காஷ்மீருக்கு இருக்கிற சிறப்பு அந்தஸ்து அங்கு மட்டுமல்ல, நாகாலாந்துக்கு இருக்கிறது, அருணாச்சலப் பிரதேசத்திற்கும் இருக்கிறது. அவற்றிற்கு இந்த தகுதி வழங்கப்பட்டதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணி இருக்கிறது. அதனால் காஷ்மீரை மட்டும் தனித்துப் பார்க்க முடியாது.

திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை&இந்த மூன்றும் ஒருங்கிணைந்த ஒன்றைத்தான் நாம் பெர்சனல் லா என்று சொல்கிறோம். பொதுச் சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள் இதுவரை அதற்கான ஒரு மாதிரி வரைவுத் திட்டத்தை மக்களின் முன் வைத்திருக்கிறார்களா? இல்லையே, நிறைய மதங்களும், ஜாதிகளும், இருக்கின்றன. சப்தபதி என்கிற மாதிரியான திருமணச் சடங்குகள் இருக்கின்றன. இப்படி ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி திருமணச் சடங்குகள், விதிமுறைகள் இருக்கின்றன. அதில் சட்டம் தலையிட்டு அனைத்தையும் பொதுமைப்படுத்திவிட முடியாது. அரசியல் சட்டத்திலேயே அனைவரும் விரும்பும் வரை என்று தான் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதானே நமது கலாச்சரம் இந்தச் சிறப்பை நாம் அழிக்க முற்பட்டு விடக் கூடாது.

பி. சுந்தரம்: தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கு வேலைகளுக்காக போய் பலர் நன்றாகப் பணிபுரிந்தாலும், அங்கு ஏமாற்றப்பட்டுக் கஷ்டப்படுகிறவர்களும், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். இப்படிப் பாதிக்கப்படுகிறவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். இந்த நிலை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதைத் தடுக்க என்ன செய்ய முடியும்?

ஜவாஹிருல்லா: வளைகுடா நாடுகளில் மட்டுமல்ல, மலேசியா போன்ற நாடுகளிலும் இதே விதமான பிரச்சனை இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே வேலை மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறோம். இதையும் மீறி அங்கு நீங்கள் சொல்கிற மாதிரி ஏமாற்றப்படும் நிகழ்வுகள் நடக்கின்றன. அதற்கு ஒரு விதத்தில் அந்த நாடுகளில் உள்ள தூதரக அதிகாரிகளின் மெத்தனப் போக்கும் ஒரு காரணம். வெளிநாட்டில் வேலைக்கு வருகிறவர்களைக் காப்பது தங்களுடைய கடமை என்று அவர்கள் நினைப்பதில்லை.

அப்துல் ரஹீம்: வட இந்தியாவில் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிரான உணர்வு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இப்படியே போய்க் கொண்டிருந்தால் சிறுபான்மையினரின் நிலைமை என்ன ஆகும்?

ஜவாஹிருல்லா வட இந்தியாவில் பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால் அலார்மிங் என்கிற அளவுக்கு ஒரு சூழ்நிலை இருப்பதாகச் சொல்ல மாட்டேன். ஆனால், அங்கு சிறுபான்மையினருக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் எதிர்க்கட்சிகள் பலமாகக் குரல் கொடுக்கின்றன. மஹாராஷ்ரா பவனில் ரமலான் மாதத்தில் நோன்பு இருந்த ரயில்வே கேட்டரிங் ஊழியர் சுபேர் என்பவரின் வாயில், வலுக்கட்டாயமாக சிவசேனை எம்.பி.க்கள் சப்பாத்தியைத் திணித்த சம்பவம் நடந்தபோது, பல எதிர்க்கட்சிகள் கண்டித்ததெல்லாம் ஆதரவான விஷயம். இதைப் போன்ற ஜனநாயக சக்திகள் இருக்கும்போது, நாம் அஞ்சத் தேவையில்லை. மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு, தங்களுக்கு தனிச் சுதந்திரம் வந்து விட்டத்தைப் போன்று சிவசேனா உள்ளிட்ட சில அமைப்புகளின் நடவடிக்கைகள் அதிகரிப்பதையும் பார்க்கிறோம். துக்ளக் இதழில் கூட அதைப் பற்றிய எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, மத்திய அரசு ஒரு நடுநிலையான ஆட்சியை நடத்த வேண்டும் இல்லை என்றால் அவர்கள் விரைவில் ஆட்சியை இழக்கக்கூடிய தருணம் வந்து விடும் முஸ்லிம்கள் பல்வேறு மொழிகளை, கலாசாரத்தைப் பின்பற்றக் கூடிய மக்களிடையே வாழும்போது, அவர்களுடனும் நேசத்துடனும், பாசத்துடனும் வாழ்வதற்கு இஸ்லாம் நமக்கு உணர்த்தியிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

நபிகள் நாயகம் யூதச் சிறுவன் மீது காட்டிய நேசத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அண்டை வீட்டுக்காரன் பசித்திருக்க, நாம் மட்டும் புசிக்கக் கூடாது என்பது நபிகள்நாயகம் நமக்குக் கற்றுத் தந்த பாடமாக இருக்கிறது. சிறுபான்மையினரை அடிமைப்படுத்த வேண்டும், தாக்க வேண்டும், அவர்களுடைய உரிமைகளைப் பறிக்க வேண்டும் என்று நினைப்பதெல்லாம் மிக மிகச் சிறிய எண்ணிக்கையில் இருப்பவர்கள்தான். பெரும்பான்மையான மக்கள் அப்படி நினைக்கவில்லை. அதனால் நாம் அஞ்சத் தேவையில்லை.

முஹம்மது சமீம்: அந்திய முதலீட்டைப் பற்றி இப்போதிருக்கிற ஆட்சிக்கு என்ன நிலைப்பாடு இருக்கிறது? முன்பு எதிர்க் கட்சியாக இருந்தபோது, அந்நிய முதலீட்டை எதிர்த்த பா.ஜ.க. அரசு இப்போது பல விதங்களில் அந்திய முதலீட்டை ராணுவத்தில் கூட அனுமதிப்பது எதைக் காட்டுகிறது? ஆட்சிக்கு வரும் முன்பு ஒரு நிலை ஆட்சிக்கு வந்த பின் ஒரு நிலை என்று ஏன் இந்த முரண்பாடு?

ஜவாஹிருல்லா: நான் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க. சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விவாதிக்கும்போது உங்களுக்கான பொருளாதார கொள்கை என்ன? என்று கேட்டிருக்கிறேன். அவர்களால் அதற்குத் தெளிவான பதிலைச் சொல்ல முடியவில்லை, ஏனென்றால் காங்கிரஸின் பொருளாதாரக் கொள்கைதான் பா.ஜ.கவின் பொருளதாரக் கொள்கை நான் சொல்வது நரசிம்மராவுக்கு பின்னிருக்கிற காங்கிரஸ். இடதுசாரிகள் இப்போது இதை விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்திய முதலீட்டு விஷயத்தில் காங்கிரஸ் அரசு செய்யாததை எல்லாம் கூட பாஜக அரசு துணிந்து செய்து கொண்டிருக்கிறது.

வெளிநாட்டு முதலீட்டிற்கும், பெரு முதலாளிகளுக்கும் ஆதரவான கொள்கையைத்தான் இந்த அரசு அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. இது தான் பட்ஜெட்டிலும் எதிரொலித்திருக்கிறது. சில்லரை வர்த்தகத்திலும் அந்திய தலையீடு நுழைந்திருக்கிறது. காலப் போக்கில் மன்மோகன்சிங் அரசு எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்லக் கூடிய அளவுக்கு பா.ஜ.க வின் அணுகுமுறை வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. பா.ஜ.கவுக்கு என்று தனி பொருளாதார அடையாளம் சார்ந்த முகம் இல்லை. இது சாமானிய மக்களுக்கான அரசாகவும் இல்லை. இந்த அரசைத் தேர்ந்தெடுத்தற்காக வெகுவிரைவில் மக்கள் வருத்தப்படுவார்கள்.

வெங்கடேஷ்வன்: முன்பு இதே துக்ளக்கில் வெளிவந்த விவிஐபி மீட் பகுதியில் தொல் திருமாவளவன் சொல்லும்போது பா.ஜ.கவின் தமிழக முகம் அதிமுக என்று சொல்லியிருந்தார் அதிமுகவிலும் அப்படிப்பட்ட மதவாதம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

ஜவாஹிருல்லா: நான் அப்படி நினைக்கவில்லை பா.ஜ.கவின் தமிழக முகம் அதிமுக என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. இவர்களுக்கு என்று சில தனிக் கொள்ளைகள் இருக்கின்றன. வேண்டும் என்றால் பா.ஜ.கவின் தனிப்பட்ட சில கொள்கைகளுக்கு முதல்வர் ஜெயலலிதா ஆதரவாளராக இருந்திருக்கலாம். பகிரங்கமாக அவர் அதைச் சொல்லவில்லை பொது சிவில் சட்டம் போன்ற பலவற்றில் அவர் தன்னுடைய கருத்தைச் சொல்லவில்லை இன்னும் சொல்லப் போனால், ஜெயலலிதா ஆண்டுதோறும் இஃப்தார் விருந்தை நல்லிணக்கத்தை ஆதரிக்கிற விதத்திலும் நடத்திக் கொண்டிருக்கிறார்.

அப்துல் ரஸாக்: ஒருபுறம் இஃப்தார் விருந்திலும் கலந்து கொண்டு, இன்னொருபுறம் ராமர் கோவில் கட்ட கரசேவைக்கு முன்பு அவர் ஆதரவு அளித்து ஆட்களை அனுப்பவில்லையா?

ஜவாஹிருல்லா: பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது கரசேவைக்கு அதிமுக ஆட்களை அனுப்பியது உண்மைதான். 2006ல் ஆந்திராவில் முதல்வரான ராஜசேகர ரெட்டி முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அளித்தபோது இதே ஜெயலலிதா, முஸ்லிகள் மட்டுமா சிறுபான்மையினர்? என்ற கேள்வி எல்லாம் கூடக் கேட்டார். பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட விஷயங்களை அவர் விமர்சனம் செய்யவில்லை. கடந்த காலத்தில் இதெல்லாம் நடந்தது உண்மைதான். நான் அதை மறுக்கவில்லை. ஆனால் அதற்குப் பிறகு அவருடைய நிலைபாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

பி.சுந்தரம்: சர்வதேச அளவில் பார்த்தால் பாலஸ்தீனப் பிரச்சனை இப்போது பெரிதாகியிருக்கிறது. ரமலான் மாதத்தில் கூட அங்கு தாக்குதல் நடக்கிறது இந்த பிரச்சனையில் உலக நாடுகள் பொறுப்புடன் தலையிடாத நிலையும் நீடிக்கிறது. இது ஏன்?

ஜவாஹிருல்லா: மிக விரிவாகப் பதில் சொல்ல வேண்டிய கேள்வி இது. ஆனால் நேரம் கருதி இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும்மான புரிதலைப் பற்றி மட்டும் இங்கே மிகச் சுருக்கமாகச் சொல்கிறேன். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு நேரடியான காலனி ஆதிக்கம் முடிந்து புதுவகையான காலனி ஆதிக்கம் தொடங்கிவிட்டது அதன் காரணமாகத் தான் உலகின் பல பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு இடம் கொடுக்கும் விதத்தில் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலைத் திணித்தார்கள். மகாத்மா காந்தி அப்போதே தன்னுடைய ஹரிஜன் பத்திரிக்கையில் இதைக் கண்டித்து எழுதியிருக்கிறார். அவர் மட்டுமல்ல, பலர் கண்டித்தார்கள். அதனுடைய தொடர்ச்சியாகத் தான் இப்போதும் அங்கு நடக்கும் கலவரத்தையும், தாக்குதல்களையும் பார்க்க வேண்டும், இஸ்ரேல் மூலம் ஆதிக்கம் செலுத்த நினைக்கின்றன சில நாடுகள். இந்திரா காந்தி இருந்தவரை இஸ்ரேலை ஒரு நாடாகவே அங்கீகரிக்கவில்லை. நரசிம்ம ராவ் காலத்தில் இஸ்ரேலை அங்கீகரித்து சிறு கதவு திறக்கப்பட்டது. அதன் பிறகு அந்த நாட்டில் ஒரு தூதரகத்தையே ஏற்படுத்தும் அளவுக்கு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் உறவு வளர்ந்தது எல்லாம் வருத்தத்திற்குரிய விஷயம்.

-ஒருங்கிணைப்பும், தொகுப்பும் மணா தொடர்புக்கு thuglak45@gmail.com
படங்கள்: பேஜர் கிருஷ்ணமூர்த்தி  (4 photos)







வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

முஸ்லிம் தியாகிகளை நினைவு கூறாத முதலமைச்சர்– எம்ஹெச்.ஜவாஹிருல்லாஹ்

அன்பு உறவுகளுக்கு..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

முஸ்லிம் தியாகிகளை நினைவு கூறாத முதலமைச்சர்
– எம்ஹெச்.ஜவாஹிருல்லாஹ்
இன்று (15.08.2014) விடுதலைத் திருநாளில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையில் மூவண்ண இந்திய கொடியை ஏற்றி வைத்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஆற்றிய உரையை தொலைக்காட்சி வழியாக கோவையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தனது உரையில் இந்திய விடுதலைக்காக பாடுபட்டு அருந்தியாகங்கள் புரிந்த பல விடுதலைப் போராட்ட மாவீரர்களை நினைவு கூர்ந்தார். பாராட்ட வேண்டிய செயல் தான். ஆனால் இவர்களில் இந்திய விடுதலைக்காக வெள்ளைக்கார ஆக்கிரமிப்பாளர்களை விரட்ட முடியும் என்று துணிச்சலை முதன்முதலாக வெளிப்படுத்தி தமது இன்னுயிரையும் நீத்த ஒரு முஸ்லிம் விடுதலைப் போராட்ட வீரரையும் கூட தமிழக முதலமைச்சர் தனது உரையில் நினைவுக் கொள்ளவில்லை என்பது எனக்கு மிகுந்த வேதனையை தந்தது.


அவரது தற்போதைய ஆட்சியில் சென்ற ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் வீர மங்கை வேலு நாச்சியாருக்கு சிவகெங்கையில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தப் போது நான் நான் அந்த வீரமங்கைக்கு புகலிடம் கொடுத்து ஆயுதங்கள் கொடுத்து படை வீரர்களை கொடுத்த மாவீரர்கள் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானுக்கு திண்டுக்கல்லில் அவர்கள் நினைவாக நூலகம் அமைக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நான் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை ஏற்று திண்டுக்கல்லில் முன்னோடி விடுதலைப் போராட்ட வீரர்கள் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் நினைவு அரங்கம் கட்டப்படும் என்று அறிவித்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் குறைந்த பட்சம் மாவீரர்கள் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானை கூட தனது உரையில் நினைவுக் கொள்ளவில்லை.
  • தமிழக  முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஆற்றிய உரையை தொலைக்காட்சி வழியாக கோவையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். 

ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் விடுதலைப் போர் தமிழக மண்ணில் வேலூர் கோட்டையில் 1806ல் நடைபெற்றது. அதில் முன்னணி பங்கு வகித்த முஸ்லிம் தளபதிகளை கூட தமிழக முதலமைச்சர் நினைவு கூற வில்லை.

வெள்ளைக்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி அவர்களை குலை நடுங்க வைத்த மாவீரன் மருதநாயகம் என்ற முஹம்மது யூசுப் கான் ஆங்கிலேயர்களால் படுகொலைச் செய்யப்பட்டு அவர் இறந்த பிறகும் மீண்டும் உயிர் பெற்று எழுந்துவிடுவாரோ என்ற அச்சத்தில் அவரது உடலின் பாகங்கள் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் தனித் தனியாக அடக்கம் செய்யப்பட்டது. மருதநாயகம் மரணித்த 250வது ஆண்டு இது. அவரையும் முதலமைச்சர் நினைவுக் கொண்டிருக்க வேண்டும். இப்படியே பட்டியல் நீள்கிறது. எதிர்காலத்திலாவது தமிழக முதலமைச்சர் தனது உரைகளில் விடுதலைப் போராட்டத்தின் இந்த முன்னோடிகளை நினைவு கூற வேண்டும்.

இங்கே தமிழக முதலமைச்சருக்காக சில மேற்கொள்கள்:

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் ரங்கூன் யார்க் சாலையில் உள்ள பகதுர்ஷாவின் சமாதியில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து தமக்கு மக்கள் அன்புடன் அளித்த தங்க வாளின் பிடியில் அடைத்து அவ்வாளினை ஓங்கிப் பிடித்தவராக நம்வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும் இம்மஹானிடம் இருந்தது போல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில், இந்துஸ்தான் வாள் மிகக் கூர்மையாக இருப்பதுடன், ஒரு நாள் லண்டனின் வாசற்படியையும் தட்டும்! – என்று சபதமேற்றார்.
- (ஆதாரம் தினமணி சுதந்திர பொன்விழா மலர் பக்கம். 69.)

You give me blood and I will give you
 Freedom என்று நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தேசவிடுதலைக்காக ரத்தம் சிந்த அழைப்பு விடுத்தபோது அவரது இந்திய தேசிய ராணுவத்தில் (Indian National Army) நூற்றுக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்தனர். பர்மா, மலேசியா, சிங்கப்பூரில் வியாபாரங்களிலும் தொழில்களிலும் ஈடுபட்டிருந்த பல இளைஞர்கள் அவரது ராணுவத்தில் இணைவதில் முந்திக்கொண்டனர். நேதாஜி 1943 ஜுலை 2 இல் சிங்கப்பூரில் ஆரம்பித்த ஆசாத் ஹிந்த் சர்க்கார் என்ற தற்காலிக சுதந்திர இந்திய அரசாங்கத்தின் மந்திரி சபையில் ராணுவ பிரதிநிதிகளாக லெப் கர்னல்ஸ் அஸீஸ் அஹமது, எம்.இஸட்கியானி, இஷான் காதிர், ஷாநாஸ்கான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். மேலும் (தமிழகத்தைச் சேர்ந்த இளையாங்குடியை அடுத்துள்ள கோதுக்குடியைச் சேர்ந்த) கரீம்கனி, டி.எம்.கான், ஹபிபுர்ரஹ்மான் ஆகியோரும் லெப்.கர்னல்ஸ் ஆகப் பணியாற்றியுள்ளனர்.
-(ஆதாரம் கே. அருணாசலம், ஜெய்ஹிந்த், பககம்67 மேற்படி அணிந்துரையில் INA லெப்.கர்னல்.லட்சுமி மேற்படி பக்கம் 91.)

1943 ஜுலை 2 – ஆம் தேதி சிங்கப்பூரில் இந்திய தேசிய தற்காலிக சுதந்திர அரசை நிறுவிய நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவ்வரசின் நிர்வாக செலவிற்காக ரிஸர்வ் பேங்க் ஒன்றை நிறுவினார். அவ்வங்கிக்கான நிதியை சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற கீழை நாடுகளில் திரட்டினார். அவ்வாறு நிதி திரட்டும் கூட்டம் ஒன்றை பர்மாவின் தலைநகரான இரங்கூனில் கூட்டினார்.

வருகை தந்த வியாபாரப் பெருமக்கள் எங்கள் வருமாணத்தில் பத்து சதவிகிதத்தை இந்திய தேசிய ராணுவத்திற்கு தொடர்ந்து வழங்குகிறோம் என்று அறிவித்தனர். இவ்வறிவிப்பைக் கேட்ட நேதாஜி அவர்கள் சற்று கோபத்துடன் தாய்நாட்டின் விடுதலைக்காக ரத்தம் சிந்தும் எங்கள் வீரர்கள் ஐந்து சதவிகிதம் பத்து சதவிகிதம் என்று கணக்குப் பார்த்தா ரத்தம் சிந்துகின்றனர்? நீங்கள் கணக்குப் பார்க்கின்றிரீர்களே ! என்று பேச ! கூட்டத்தில தொப்பி தாடியுடன் இருந்த முதியவர் ஒருவர் மேடையை நோக்கி வந்து நேதாஜியின் கையில் ஒரு காகிதத்தைக் கொடுக்கிறார். அதை வாங்கிப் படித்த நேதாஜியின் கண்களில் நீர் திரண்டு இமை வரப்புகளுக்குள் முட்டி மோதி நிற்கிறது. நேதாஜி உணர்ச்சி வசப்படும் வகையில் அக்காகிதத்தில் அப்படி என்ன தான் எழுதப்பட்டிருந்தது?

ரங்கூன் மாநகரில் எனக்குச் சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வியாபார நிறுவனங்களை இந்திய தேசிய ராணுவத்திற்காக நான் எழுதி வைக்கிறேன்– என்ற கொடை வாசகங்கள் அக்காகிதத்தில் இடம் பெற்றருந்தன. அவ்வாசகங்களை எழுதிய கரங்களுக்குச் சொந்தக்காரரான முகம்மது ஹபீப் என்ற அந்த தமிழரான முதியவரை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆரத்தழுவியவராக
இவர் தான் ஸேவக் கி ஹிந்த் (இந்தியாவின் சேவகர்) என்ற பெருமிதத்துடன் அறிவித்தார்.
-(ஆதாரம் ஜெயமணி சுப்பிரமணியம், நேதாஜியின் வீரப்போர் இரண்டாம் பாகம், பக்கம் 181 கே. அருணாசலம், ஜெய்ஹிந்த், பக்கம் 86.)

இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது.

– மறைந்த பத்திரிகையாளர் குஷ்வந்த்சிங், இல்லஸ்டிரேட் வீக்லி, 29-12-1975.
இப்பட்டியல் இன்னும் நீளமாகவே இருக்கின்றது…----Idealvision

http://www.tmmk-ksa.com/iyakkam1/i-india/tmilagam/1993-2014-08-15-16-20-07.html

புதன், 13 ஆகஸ்ட், 2014

யாரும் பேசாத சமஸ்கிருத மொழிக்கு ஏன் இந்திய அரசு இவ்வளவு முக்கியத்துவம்! {{ செத்த மொழிக்கு கருமாதி கொண்டாடமல் காது குத்து விழா ஏனோ? }}


செத்த மொழிக்கு கருமாதி கொண்டாடமல் காது குத்து விழா ஏனோ?

யாரும் பேசாத சமஸ்கிருத மொழிக்கு ஏன் இந்திய அரசு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.


அட்டவணை மொழிகளில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளில் சமஸ்கிருத மொழி மட்டுமே வெறும் 10,000 பேர் பேசுவதாக உள்ளது. மற்ற மொழிகள் அனைத்தும் லட்சக் கணக்கான மக்களால் பேசப்படுபவை. இந்த 10,000 கூட எந்தளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. கருநாடகத்தில் மத்தூரில் சமஸ்கிருத பேச்சு மொழி இயக்கம் தோல்வி கண்டதாக செய்தி தாள்களில் வாசித்தறிந்தேன்.

சமஸ்கிருதம் என்பது இந்தோ _ ஆரியக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆரியக் கலாச்சாரத்தின் சின்னம்! இது குறித்து பார்ப்பனரான சூரிய நாராயண சாஸ்திரியே (பரிதிமாற்கலைஞர்) தெளிவுபடுத்திவிட்டார்.

வடமேற்கே பல்லாயிரங் காலத்திற்கு அப்புறமுள்ளது, அய்ரோப்பாக் கண்டத்தினொரு பகுதியாகிய ஸ்காந்திநேவியம் என்ற இடத்தினின்றும், ஆரியர் என்ற சாதியார் புறப்பட்டு, நாலா பக்கங்களிலும் சென்று சேர்ந்தனர். அவ்வாரியருள் ஒரு பிரிவினர் மத்திய ஆசியாவின் மேற்குப் பாகத்திலுள்ள துருக்கிஸ்தானம் என்ற இடத்திற்றிறங்கினர். இவ்விடம் தங்கிய ஆரியர்களே, கைபர் கணவாய் வழியாக இந்தியாவிலும் புகுந்தனர். அவர்கள் அவ்வாறு புகுந்தமை தமிழர்களது நன்மைக்கோ, அன்றித் தீமைக்கோ? இதனை யறிவுடையோர் எளிதிற் உணர்ந்து கொள்வார்கள். (தமிழ் மொழியின் வரலாறு _ பக்கம் 22, 23)

அத்தோடு நிற்கவில்லை பரிதிமாற் கலைஞர். தமிழர்க்கு ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்னரே, எழுதப் படிக்கத் தெரியும். எழுத்து சுவடி யென்பன தனித்தமிழ்ச் சொற்களாதலுங் காண்க. இதனால் அகத்திய முனிவர் தமிழ்ப் பாஷைக்கு நெடுங்கணக்கு வகுத்தனரென்பதும் ஆரியரோடு கலந்த பிறகே தமிழர் தங்கள் பாஷைக்கு நெடுங்கணக்கு வகுத்தனரென்பதும், பொருந்தாமை யறிக (தமிழ் மொழியின் வரலாறு _ பக்கம் 24) என்று கூறுகிறார் ஆய்வாளரான பரிதிமாற் கலைஞர்.

இந்தியாவின் பாரம்பரிய பெருமை மிக்க மொழி என்பதால் இந்த முக்கியத்துவம் எனக் கூற வருபவர்களிடம் ஒரு கேள்வி, ஏன் இந்தியாவின் பிற பாரம்பரிய மொழிகளுக்கு இந்திய அரசு முக்கியத்துவம் தருவதில்லை.

பிராகிருதம், பாளி, மகதி, செந்தமிழ் ஆகிய மொழிகளையும் மத்திய அரசு ஆதரிக்கலாமே. இவற்றில் தமிழை தவிர மற்ற மொழிகள் பேச்சு வழக்கில் இல்லாமல் போய்விட்டது என்ற போதும் சமஸ்கிருதத்துக்கு வழங்கப்படும் சிறப்புக்களை பிராகிருதம், பாளி ஆகிய மொழிக்கும் வழங்கி இருக்க வேண்டாமா? அட்டவணையில் சேர்த்து கொண்டு, அவற்றுக்கும் வாரா வாரம் ஆரவாரித்திருக்க வேண்டாமா?

ஏனெனில் அவை யாவும் பௌத்த, சமண மொழிகள் இவற்றை இந்த இந்து மத பார்ப்பன மத்திய அரசு கொண்டாட முன்வராது என்பதே.

சமஸ்கிருதத்தைப் பற்றி விவேகானந்தர் கூறியிருப்பதை தமிழ்க்கடல் மறைமலை அடிகள் சுட்டிக் காட்டுகிறார்: மதச் சண்டைகளும்; சாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குவதற்கு ஒரு பெருங் கருவியாய் இருந்ததும் _ இருப்பதும் சமஸ்கிருத மொழியே யாகும் என்றும், சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால் இப்போராட்டங்களும் தொலைந்து போகுமென்று வருந்திக் கூறினார் விவேகானந்தர். (மறைமலை அடிகளின் தமிழர் மதம் _ பக்கம் 24)

சமஸ்கிருதம் செத்துச் சுண்ணாம்பாகிப் போனதற்குக் காரணமே இந்தப் பார்ப்பனர்கள்தான். பார்ப்பனர்களைத் தவிர, மற்றவர்கள் வேதங்களைப் படிக்கக் கூடாது, படித்தால் நாக்கை அறுக்க வேண்டும்; காதால் கேட்கக் கூடாது; கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று எழுதி வைத்திருந்தால் _ பெரும்பான்மை மக்களுக்குத் தடை விதித்திருந்தால் அந்த மொழி செத்து ஒழிவதைத் தவிர வேறு வழியில்லையே! சமஸ்கிருதத்தைப் பொறுத்தவரை அதுதான் நடந்தது.

சமஸ் = எல்லாம்; கிருதி = தொகுக்கப்பட்டது என்று பொருள். டர்கிஸ் மொழி, ஈரானிய மொழி, பர்மீயன் மொழி, கிரேக்க மொழி ஆகிய மொழிகளின் கூட்டுக் கலவையே இது. கி.மு.53இல் குசான வம்சத்தைச் சேர்ந்த கனிஷ்கர்தான் சமஸ்கிருத மொழியை உருவுக்குக் கொண்டு வந்தவர். இந்த லட்சணத்தில் சி.பி.எஸ்.இ. இயக்குநர் சுற்றறிக்கையில் எல்லா மொழிகளுக்கும் சமஸ்கிருதம்தான் தாய்மொழி என்று தம்பட்டம் அடிக்கிறார்.இன்றைய நிலையில் சமஸ்கிருதத்தையும் இந்தியையும் வட நாட்டில் உள்ள கிராமபுற மக்களிடம் திணித்து வாழ வைக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளது மத்திய அரசு, அதன் ஓரங்கமாகவே இந்த கொண்டாட்டங்கள், பிரச்சாரங்கள் எல்லாமுமே.

1956இல் சமஸ்கிருத கமிஷன் ஒன்றை மத்திய அரசு அமைத்தது. பல்கலைக் கழகங்களிலும் வெளியிலும் சமஸ்கிருத மொழிக்குப் புத்துயிர் ஊட்டுவதுதான் அதன் நோக்கம். அந்தக் காவிகளின் கருத்துரைப்படியே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி தலைமையில் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட மத்திய சமஸ்கிருத போர்டு ஒன்று உருவாக்கப்பட்டது. அதற்காக அந்தக்கால மதிப்பில் பல லட்ச ரூபாய்க்குக் கொட்டி அழப்பட்டது.

1959ஆம் ஆண்டில் சமஸ்கிருத விஸ்வ பரிஷத்தின் கூட்டம் புதுடில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அதன் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையில் நடந்தது. அதில் போடப்பட்ட தீர்மானம் என்ன தெரியுமா? அரசிடம் சொல்லி _ சமஸ்கிருதப் படிப்புக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள தொகையைச் செலவழிக்காவிட்டாலும்கூட, அதை சமஸ்கிருதம் அல்லாதவற்றிற்குச் செலவு செய்யக் கூடாது; அது சம்பந்தமாக சட்டங்கள் இயற்றுவதோ உத்தரவு பிறப்பிப்பதோ தடுக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்து அதற்காக நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அனந்தசயனம் அய்யங்கார், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.பி.சின்ஹா, உட்பட பலரையும் நியமித்துக் கொண்டனர். (பவன்ஸ் ஜர்னல் _23.3.1959) என்றால் அந்தப் பெரிய மனிதர்களின் தாராள உள்ளத்தைத் தாராளமாகவே தெரிந்து கொள்ளலாமே!

சமஸ்கிருதம் பேசுவோர் நாட்டில் 0_01 சதவிகிதமாக இருந்தாலும்கூட இந்தியாவில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் அந்தத் துறையை வைத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

தங்களுக்கு அதிகாரம் கிடைக்கும் பொழுதெல்லாம் செத்த மொழியைச் சிங்காரிக்கும் வேலையில்தானே இறங்குகிறார்கள். வாஜ்பேயி தலைமையிலான ஆட்சியில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி என்ன செய்தார் என்பதை நினைவுப்படுத்திக் கொள்ளலாமே!

ஆனால் இத்தனை கோடிக் கணக்கான ரூபாய்கள் செலவு செய்தும் செத்த மொழி செத்தே தான் கிடக்கின்றது கடைசி வரை பிழைக்கவே இல்லை. எதார்த்ததில் என்ன நடந்தது என்றால் கல்வி கற்ற, வசதியான பார்ப்பனர் முதற்கொண்டு நகர் புரத்து மக்கள் எல்லோரும் வடக்கில் ஆங்கிலமும், இந்தியும், வங்காளமும், பஞ்சாபியும், உருதும் கலப்படைந்த HINGLISH மொழியையே பேசி வருகின்றார்கள். பாலிவுட் தொடக்கம் ஊடகங்கள், பணியிடங்கள், கல்விச் சாலைகள் என நகர் புறத்து மக்களிடம் HINGLISH தான் தவழ்கின்றது.

இந்த HINGLISH என்பதே நாளைய வட இந்தியாவின் பிரதான பேச்சு மொழியாகவும், ஏன் இலக்கிய மொழியாகவும் வளரும் வாய்ப்புள்ளது. இதனால் தான் ஆங்கிலத்தை வெளியேற்றவும், சமஸ்கிருத மயமான இந்தியை பிரச்சாரம் செய்யவும் இந்த புதிய அரசு இறங்கியுள்ளது.

ஆனால் சடுதியில் பொருளாதார வளர்ச்சியும், வேலை வாய்ப்புகளும் ஆங்கிலத்துக்கு சாதகமாக இருப்பதால், நாளைய இந்தியாவின் பிரதான மொழியாக ஆங்கிலமே திகழப் போகின்றது. அடுதடுத்த தலைமுறையினருக்கு வசதி வாய்ப்பு பெருகும் போது அவர்களும் ஆங்கிலத்துக்கு செல்கின்றனர்.

செம்மொழிகளாக இல்லாமல் இருக்கும் பிரதேசங்களில், குறிப்பாக மொழி ஆழமற்ற இந்தி மொழி மாநிலங்களில் வெகு விரைவில் கல்வி மொழியாக ஆங்கிலமும், பேச்சு மொழியாக Hinglish-ம் திகழப் போகின்றது.

ஏனைய பகுதிகளில் கூட ஆங்கிலத்தின் தாக்கம் நிறைந்த வருகின்றது. தமிழகம் உட்பட அனைத்து பகுதிகளிலும் ஆங்கில மொழி தாக்கு நிறைந்திருக்கின்றது. இதன் விளைவாக ஒரு காலத்தில் வேத ஆரிய மொழி எவ்வாறு திராவிட மொழிகளை தாக்கி மொழிகள் பலவற்றை உருவாக்கினவோ.

பின்னர் பிராகிருத மொழி அனைத்து மொழிகள் மீது ஆளுமை செலுத்தி மொழிகளை திரித்தனவோ.

அதே போல இன்று ஆங்கிலமும் மொழிகள் மீது தாக்குதல் செய்து மொழிகளை திரிக்கும்.

இந்த தாக்கத்தை ஒவ்வொரு மொழியும் அதன் அரசியல், பொருளாதார, ஊடக மற்றும் மொழியின் பலத்தினை பொருத்து எதிர்கொண்டு வெவ்வேறு சதவீதத்தில் மொழிகளை தக்க வைக்கவோ, இழக்கவோ போகின்றது.

பலமற்ற இலகுத் தன்மை மிகுந்த மொழியான இந்தி இந்த மொழிப் போரில் முதல் பலியாகி Hinglish ஆகி வருவதை பல மொழியியலாளர்கள் கவனித்து எழுதி உள்ளனர்.

ஆகையால் இன்று இந்தியை கற்றாலும் ஒரு பத்தாண்டுகளில் அந்த இந்தி எந்தளவுக்கு பயன் தரும் என சொல்ல முடியாது.

ஏனெனில் கணனிகளில் உள்ள Java, C# மொழிகளைப் போலவே இந்தி உட்பட பல மொழிகள் விரைவாக மாறும் தன்மையது. அவ்வாறு எனில் அவற்றை தினமும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும், அல்லது பயன்படுத்திக் கொண்டே நம்மை update செய்ய வேண்டும். இது தமிழகத்தில் உட்கார்ந்து கொண்டு நம்மால் செய்வது இயலாது காரியம். ஏனெனில் தமிழக பேச்சு வழக்கிலோ, சமூக தளத்திலோ இந்தி அறவே கிடையாது.

இந்தியோ, சமஸ்கிருதமோ எக்கேடு கெட்டால் நமக்கு என்ன, அதனால் நமக்கு லாபமோ, நட்டமோ ஏதுமில்லை. ஆனால் அவற்றை தமிழகத்தில் திணிக்க முற்பட்டால் அதை நாம் தடுத்து நிறுத்தத் தான் வேண்டும். எங்காவது வேறு மாநிலத்தில் செம்மொழி தமிழ் வாரம் கொண்டாடுகின்றார்களே. இல்லையே, அப்படி இருக்க நாம் மட்டும் ஏன் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும். அப்படி கொண்டாட முற்படும் கூட்டம் எல்லாம் யார் என பார்த்தால் இந்துத்வா கோஷ்டியாகத் தான் இருக்கின்றது. அவர்கள் தாராளமாக கொண்டாடட்டும் வடக்கே போய் அங்கேயே செட்டில் ஆகி அங்கேயே கொண்டாடட்டும். யாரும் தடுக்கப் போவதில்லை. மத்திய அரசு செத்த மொழியான சமஸ்கிருதத்துக்கும் செலவிட்டு பணத்தில் ஒரு துளிப் பங்கை தமிழுக்கு கொடுத்திருந்தால் இன்று உலகின் முன்னணி மொழிகளில் ஒன்றாக தமிழ் உருமாறி இருக்கும். என்னவோ நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்.

நம்மை பொறுத்தவரை தமிழை தனித் தன்மையோடு எவ்வாறு வைத்துக் கொள்ளலாம் என்பதோடு, நவீன ஆங்கிலத்தை எவ்வாறு அனைத்து கல்விக் கூடங்களிலும் புதிய தலைமுறையினருக்கு கற்பிக்கலாம் என்பதையும் சிந்திக்க வேண்டும்.

நவீன ஆங்கிலம் பொருளாதார மொழியாகவும், நவீன தமிழ் என்பது கலாச்சார மொழியாகவும் திகழச் செய்வதோடு, இரண்டையும் சரி சம அளவில் balance செய்வதில் தான் தமிழகத்தின் வெற்றி அடங்கி உள்ளது.

மேலதிக மொழிகளை அவசியம் ஏற்படுமாயின் தனிப்பட்ட வகையில் கற்கலாம், ஆனால் அனைவருக்கும் கட்டாயப்படுத்தி மூன்றாவதாய் ஒரு மொழியை திணிக்கத் தேவையில்லை என்பதே எனது கருத்து.

அதே போல Hinglish போல தமிழையும் Tanglish ஆக்காமல் தடுப்பது எப்படி என்பதை பற்றி நாம் யோசிக்க வேண்டும். ஆரியம், பிராகிருதம், சமஸ்கிருதம் என பல மொழி ஆதிக்கங்களை கடந்த வந்திருக்கின்றது நமது தமிழ் மொழி. அதற்கு முக்கிய காரணம் நமது முன்னோர்களின் உழைப்பும் மொழி மீதான காதலுமே ஆகும்.

தமிழ்மொழி, எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு என்னும் இரு வழக்குகளைக் கொண்ட ஒரு இரட்டை வழக்கு மொழி. பேச்சு மொழியின் தாக்கத்தை எழுத்து மொழியில் காணமுடிகின்றது. அது மட்டு மல்லாமல் இன்றைய உலகமயமாக்கல், தாராள மயமாக்கல் ஆகியவற்றின் காரணமாக எண்ணற்ற பொருள்கள் மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அப்பொருள்களோடு மேலை நாட்டு மொழியும் இறக்குமதி செய்யப்பட்டு தமிழ் மொழியுடன் இரண்டறக் கலந்து தமிழ்மொழியின் அமைப்பிலும், 

பயன்பாட்டிலும் பல குழப்பங் களை ஏற்படுத்துகின்றன. ஊடகங்களின் மொழி பயன்பாட்டிலும் பல குழப்பங்கள் காணப்படுகின்றன. இக்காரணங்களால் இன்றைய தலைமுறையினர் எது சரியான தமிழ் என்பதைக் கண்டறிவதிலே தடுமாற்றம் கொள்கின்றார். அவர்களின் குழப்பங் களுக்குத் தீர்வு காணும் வழியாக பேராசிரியர். மா.நன்னன் அவர்கள் வரிசையாக உரைநடை நூல்களை எழுதி வருகிறார்கள். அந்த வரிசையில் பதினோராம் நூலாக வெளிவந்துள்ள நூல் ‘செந்தமிழைச் செத்தமொழி யாக்கிவிடாதீர்.’

முக்கியமாக நமது ஊடகங்களான தொலைக்காட்சி, சினிமா, வானொலி, பத்திரிக்கைகள் ஆகியவற்றில் ஏகப்பட்ட ஆங்கில கலப்பு மிக்க இலக்கண சுத்தமில்லாத தமிழை பயன்படுத்துகின்றார்கள், அவற்றை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும். அதைச் செய்தாலே தமிழ் தானாக வாழும். யாருக்குமே புரியாத செந்தமிழில் இவர்கள் எல்லாம் ஊடகம் நடத்த வேண்டும் என நான் சொல்லவில்லை, ஆனால் குறைந்தது தேவையற்ற ஆங்கிலச் சொற்களை நீக்கி அழகாக தமிழில் ஊடகங்கள் நடத்தலாம். பெயர்சொற்கள் அனைத்தையும் தமிழாக்கம் செய்யக் கூட வேண்டாம், ஆனால் வினைச் சொற்களைக் கூட ஆங்கிலத்தால் தமிழில் கலந்து பேசுவது தான் கொடுமை. அதை நிறுத்தவும், வழி நடத்தவும் அரசும், சமூக ஆர்வலர்களும் முயன்றாலே போதும்.

​நன்றி : கோடங்கி