அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

வெள்ளி, 10 அக்டோபர், 2014

முனைவர் ஜெ. ஹாஜாகனி நோயைக் கொடுக்கும் மருந்துகள்!`மருந்துகளுக்கே நோய் என்றால்…”

அன்பு உறவுகளுக்கு..! அஸ்ஸலாமு அலைக்கும் 


முனைவர் ஜெ. ஹாஜாகனி நோயைக் கொடுக்கும் மருந்துகள்!`மருந்துகளுக்கே நோய் என்றால்…”



 
புதுப்புது ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால், மிகப் பழைய அமைதியோ தொலைந்து விட்டது. அதுபோலவே, புதுப்புது நோய்கள் பூவுலகிற்கு அடிக்கடி அறிமுகமாகின்றன. ஆனால், மருத்துவத் துறையின் விழுமியங்களோ மரணக் கட்டிலில் கிடக்கின்றன.மருந்து நிறுவனங்களும், மருத்துவர்களும் அமைக்கின்ற கூட்டணி, நோயாளிக்குக் குணத்தை கொடுக்கும் போர்வையில், பணத்தைப் பறிக்கும் கொடுமையை முதன்மையாகக் கொண்டிருக்கிறது.

மகத்துவ மிக்க மருத்துவத் துறையில் மனிதநேயத்தையும், சேவையுணர்வையும் தனது முகவரியாய்க் கொண்ட முன்மாதிரி மருத்துவர்கள் பலரும் உண்டு. ஆனால், விழுமியங்களைத் தொலைத்தவர்களின் விளைச்சல் மிக வேகமாக அதிகரித்து வருவதையும் மறுக்க முடியாது.கல்வியும், மருத்துவமும் வணிகமயமாகிவிட்டால் மிகப் பெரிய பண்பாட்டு வீழ்ச்சி ஏற்படும். மிருக உணர்வுகளும் வளர்ந்து விடும். எனவேதான், அறஞ் சார்ந்த அரசுகள் கல்வியையும், மருத்துவத்தையும் குடிமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்ற கொள்கையை ஏற்றிருந்தன.

இன்று அரசாங்க மருத்துவமனை, ஏதுமற்ற ஏழைகள் மட்டும் உயிருக்குத் துணிந்து போகும் இடமாக்கப்பட்டுள்ளது (சில விதிவிலக்குகள் உண்டு).ஆனால், தனியார் மருத்துவமனைகளோ, வீதிகள் தோறும் புற்றீசல்போலப் பெருகியுள்ளன.

ஊடகங்களில், பெரு நிறுவனங்கள் தயாரிக்கும் நுகர்வுப் பொருள்களின் விளம்பரங்களோடு, மருத்துவமனை விளம்பரங்களும் போட்டி போடுகின்றன. மருத்துவமனைகள் ஆடித் தள்ளுபடி அறிவிக்காததுதான் பாக்கி.ஒரு நோயாளியிடம் பிரபல மருத்துவர், குறிப்பிட்ட இடத்தில் ஸ்கேன் எடுத்து வருமாறு கூறுகிறார். அந்த நோயாளி, கட்டணம் குறைவான இடத்தில் ஸ்கேன் எடுத்துக் கொண்டு, அதை மருத்துவரிடம் காட்டுகிறார்.

மருத்துவர் முகத்தில் எரிமலை வெடிக்கிறது. “நான் சொன்ன இடத்தை விட்டுவிட்டு எங்கோ போய் எடுத்துள்ளீர்கள். இது உயிர் விஷயம், இதிலா கணக்குப் பார்ப்பது? பாருங்கள் தெளிவாக இல்லை. நான் சொன்ன இடத்தில் போய் எடுத்து வாருங்கள்’ என்று விரட்டுகிறார்.நோயாளியோ, தான் ஸ்கேன் எடுத்த இடத்திற்குக் கோபமாகச் சென்றபோது, அவர் வரவை ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்த அங்கிருந்த பொறுப்பாளி, “டாக்டர் ஸ்கேன் தெளிவாக இல்லை எனத் திட்டியிருப்பாரே’ என்று கேட்க, ஆச்சர்யமான அந்த நோயாளி “ஆமாம்’ என்கிறார்.

“
அதே ஸ்கேனை இதோ இந்த கவரில் போட்டுத் தருகிறேன். எடுத்துப் போங்கள்’ என்று கூறி மருத்துவர் பரிந்துரைத்த நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட உறையில் அதை இட்டுத் தருகிறார்.

மீண்டும் மருத்துவரிடம் போன நோயாளியிடம் மருத்துவர் சொல்கிறார்:

“
பார்த்தீர்களா. இது எவ்வளவு தெளிவா இருக்குன்னு. முன்னாடியே இங்கே போயிருந்தா உங்களுக்கு வீண் செலவு ஏற்பட்டிருக்காதல்லவா?’

எல்லா மருத்துவர்களுமே இப்படியா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால், கணிசமான தொகையினர், இப்படித்தான் இயங்குகிறார்கள் என்பது உண்மை.

மருந்து நிறுவனங்கள், மருத்துவர்கள் நடத்தும் மருத்துவமனைக்குத் தேவையான உபகரணங்களை, மேசை, நாற்காலி, படுக்கை உள்பட வாங்கித் தருகின்றன.கருத்தரங்குகளுக்கோ, பணியை முன்னிட்டோ, அல்லது இன்பச் சுற்றுலாவாகவோ, மருத்துவர் வெளியூர்கள் அல்லது வெளிநாடுகள் செல்லும்போது, விமானப் பயணம், நட்சத்திர விடுதிகளில் தங்குதல் உள்ளிட்ட ஏற்பாடுகளை மருந்து நிறுவனங்கள் மனமுவந்து செய்து தருகின்றன.

நூற்றுக்கு நூறு தொடங்கி நூற்றுக்கு ஐநூறு தாண்டி, சலுகை மருந்துகளைத் தருகின்றன. மருத்துவர் தனது மருத்துவமனை யிலேயே மருந்தகமும் வைத்திருந்தால் நோயாளிகள் சுரண்டப்படும் விதம் சொல்லி மாளாது.மருந்து நிறுவனங்கள் சில மாத(ா)ந்திர கையூட்டுகளை மருத்துவர்களுக்கு அளிக்கின்றன. இப்படி ஏராளமான சலுகைகளும், லஞ்சங்களும், தாராளமாகத் தரப்படுகின்றன.

இதற்கு மருத்துவர்கள் செய்ய வேண்டிய ஒரே கைம்மாறு அந்நிறுவனத்தின் மருந்துகளை, அதிகமாக எழுதி, நோயாளிகளை வாங்கச் செய்ய வேண்டும்.சில மருத்துவர்கள் சிறிய நோய்க்கும் பெரிய பட்டியலே எழுதுவார்கள். காரணம், அவர் பல நிறுவனங்களுக்கும் கடமைப்பட்டவர். அதிக மருந்துகள் உட்கொள்வதால், குடலில் அமிலப் பாதிப்பு வருமல்லவா அதற்கும் சேர்த்து ஒரு மருந்தை எழுதி விடுவார்.

மருத்துவர் தந்த அதீத மருந்துகளின் பக்க விளைவு மெதுவாகத் தெரியும். ஒரே வகையான மருந்துகள், தயாரிப்பு நிறுவனங்களுக்கேற்ப, பெரும் விலை வேறுபாட்டுடன் சந்தையில் உள்ளன.நான்காம் தலைமுறை எதிர் உயிரி மருந்துகளில் 4th Generation Anti-biotic) Cefxime என்ற மருந்தை ஒரு நிறுவனம் 11 ரூபாய்க்கும் (Cipla-omnix) இன்னொரு நிறுவனம் 6 ரூபாய்க்கும் (Mankind-Mancet) விற்பனை செய்கிறது.

மருந்துகளின் விலையைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் சில வகையான மருந்துகளுக்கு அரசு அனுமதியளித்துள்ளது. “ஜெனரிக் மெடிசன்ஸ்’ (மூலப்பொருள் பெயரிலான மருந்துகள்) அதிகம் பிரபலமாகாத நிறுவனங்களால் தயாரிக்கப்படுபவை. ஆனால், முறையான அனுமதியே பெறாமல் இந்தியா முழுவதும் ஏராளமான மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருவதாக ஒரு மருத்துவர் நம்மிடம் தெரிவித்ததோடு, மேலும் பல அதிர்ச்சியூட்டும் செய்திகளையும் கூறினார்.

உலக நாடுகள் பலவற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள Analgin, Cisapride, Properido, Furazolidone, Nimesulid, Nitrofurazone, Phenol Phthalein உள்ளிட்ட பல மருந்துகள் நம் நாட்டில் தங்கு தடையின்றி சந்தையில் விற்கப்படுவதைக் கவலையோடு பகிர்ந்து கொண்டார்.இந்த மருந்துகள் பிற நாடுகளில் தடை செய்யப்படுவதற்கு எலும்புகளை பலவீனப்படுத்துதல், மன அழுத்தம் ஏற்படுத்தல், நாடித் துடிப்பை சீர்குலைத்தல், புற்றுநோய் உருவாக்குதல், கல்லீரலைப் பாதித்தல் உள்ளிட்ட மிக மோசமான காரணங்கள் கூறப்பட்டுள்ளன. உலகில் அதிக மனித வளம் கொண்ட நம் தாய்த்திருநாட்டுக்கு குடிமக்களின் உடல்நலம் குறித்த அரசின் அக்கறையை மேற்கண்ட மருந்துகளின் அமோக விற்பனை காட்டுகின்றது.

காலாவதியான மருந்துகளையும் காசாக்கும் தகவல்கள் நம்மைப் பதற வைக்கின்றன. காலாவதியான மருந்துகள் நோய் தீர்க்காது என்பதைவிட, சில நேரம், எதிர்விளைவுகளை ஏற்படுத்தி உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயமும் உள்ளது.

மருந்துக் கடைகளில், காலாவதியாகித் தேங்கிவிட்ட மருந்துகளை ஒரு கொடுங் கும்பல் சேகரித்துச் சென்று காலாவதி தேதியை மாற்றி, புது லேபிள் ஒட்டி, மறுசுழற்சி செய்கின்றனவாம். மருந்தை வாங்கியதும், காலாவதி தேதியை முதலில் பார்ப்போம். தேதியே போலியான தென்றால்?

நோயாளி நுகர்வோர் என்னதான் செய்வது?

எந்த மருந்து வாங்கினாலும், அதற்கு பில் வாங்க வேண்டும். மருந்து குறித்து சந்தேகம் இருந்தால், மருந்தின் மேற்புறம் அச்சிடப்பட்டுள்ள Batch எண்ணை, மருந்து நிறுவனத்தின் இணையதளத்திற்குள் சென்று பதிவு செய்தால், உண்மையான காலாவதி தேதி தெரிந்துவிடும்.ஒருசமயம், Batch எண்ணே போலியாக இருந்தால், எந்தத் தகவலும் வராது. அந்த விவரங்களை நகல் எடுத்து, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.

எல்லா நோயாளிகளுக்கும் இயல்கிற செயலா இது?

நோயாளிகள் பெற வேண்டிய விழிப்புணர்வு குறித்து சமூக அக்கறையுள்ள ஒரு மருத்துவர் கூறியதாவது:

மருத்துவர்கள் எழுதும் மருந்துகள், அவற்றின் பயன்கள் குறித்து மருத்துவரிடம் நோயாளிகள் கேட்க வேண்டும்.

மருத்துவர் தரும் மருந்துச் சீட்டில் (Prescribtion) நோயின் தன்மை (அ) பெயர் எழுதப்பட்டுள்ளதா என கவனிக்க வேண்டும். இவ்வாறு நோய் குறித்த விவரங்களைக் குறிப்பிடுவது கட்டாயம்.

வெளியூரில் அந்த மருந்து கிடைக்குமா என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். சில மருந்து நிறுவனங்கள் மருத்துவர் குறிப்பிடும் பெயர்களிலேயே மருந்து தயாரித்துத் தருகின்றனவாம். அவர் மருந்து சீட்டில் உள்ள கடை தவிர பிற கடைகளில் அந்த மருந்து கிடைக்காது.

மருத்துவர்களின் சேவை மகத்தானது. அர்ப்பணிப்புணர்வும், தொழில் அறமும், சேவை உள்ளமும் கொண்ட ஏராளமான மருத்துவர்கள், மக்களின் மனங்களை ஆள்கிறார்கள் என்பது உண்மை.

குணமாக்கும் மருத்துவத்தைப் பணமாக்க மட்டுமே பயன்படுத்துவது, பஞ்சமா பாதகத்தினும் கொடிய பாதகம்.

மருந்து நிறுவனங்களின் நடவடிக்கைகளை அரசு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

தனியார் பள்ளி கல்விக் கட்டணங்களை அரசே நிர்ணயித்தது போல, மருந்துகளுக்கும் அதற்குரிய நியாயமான விலையை அரசே மக்கள் நலச் சிந்தை கொண்ட நிபுணர் குழுவை நியமித்துத் தீர்மானிக்க வேண்டும்.

நோய் வந்தால் மருந்துகள் எடுக்கலாம்; மருந்துகளுக்கே நோய் என்றால்…

முனைவர். ஜெ. ஹாஜாகனி

http://labbaikudikadutmmk.blogspot.com/2014/10/blog-post_58.html



ஞாயிறு, 5 அக்டோபர், 2014

தலைவர் ஜே.எஸ். ரிபாயீ வெளியிடும் பெருநாள் வாழ்த்துச் செய்தி:

​​​தலைவர் ஜே.எஸ். ரிபாயீ வெளியிடும் பெருநாள் வாழ்த்துச் செய்தி:
சமூக நல்லிணக்கத்திற்காக தியாகம் செய்ய சபதமேற்போம்!மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ். ரிபாயீ வெளியிடும் பெருநாள் வாழ்த்துச் செய்தி:
இப்ராஹீம் நபி(ஸல்) அவர்களும், அவரது குடும்பத்தாரும் இறைச் செய்தியை கொண்டு சென்று மக்களை நேர்வழிப்படுத்த எடுத்த முயற்சிகளில், பாலைவனப் பெருவழியாம் அரபுப் பகுதிகளில் அவர்கள் செய்த பணிகள் இன்று ஹஜ்ஜின் கடமைகளாக மக்காவிலும், ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுத்துப் பலியிட்டு பெருநாள் நிகழ்வாக உலகின் இதர பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இறைவனின் பெயரால் செய்யப்படும், அனைத்து இஸ்லாமியக் கடமைகளும், கூர்ந்து நோக்கப்பட்டால் அதில் மனிதர்களுக்கிடையே இருக்கவேண்டிய ஒற்றுமை பண்புகளை, சகோதரத்துவத்தை, மனிதநேயத்தைப் பற்றி பயிற்சிகள் இருப்பதையே காணலாம். அதன் உச்சக்கட்ட பயிற்சிதான் ஹஜ் நிகழ்வுகள்.
பல மொழிகள், பல நாடுகள், பல கலாச்சாரங்கள் என்ற வேறுபாடுகளை மறந்து, உடையாலும், தோற்றத்தாலும் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட்டு, ஒரே கோஷம், ஒரே ஆடை என்ற நிலையில் ‘நம்மை இயக்குவது இறைக் கோட்பாடு; நமக்குள் ஏன் பாகுபாடு’? என்ற புரிந்துணர்வும் பயிற்சியும் ஹஜ்ஜில் தரப்படுகிறது.
இப்பயிற்சியை நாம் வாழும் பகுதிகளிலும் மேற்கொண்டு கொள்கையால், வழிபாட்டு முறைகளால் வேறுபட்டாலும், நாம் அனைவரும் ஒன்றாய், நன்றாய் வாழவேண்டியவர்கள் என்ற நிலையை அடைய முயற்சிப்போம்.
நாம் வாழும் நாட்டில் அமைதியும், சுபிட்சமும், சமூக நல்லிணக்கம் நிலவிடவும், சகோதரத்துவம் மேலோங்கிடவும் நாம் இத்திருநாளில் சபதமேற்போம்.
இவண்ஜே.எஸ்.ரிபாயீதலைவர், மமக





முதல் ஆலயம் "காஃபா"

அன்பு உறவுகளுக்கு..!

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

முதல் ஆலயம் "காஃபா"



✔ (இவ்வுலகில், அல்லாஹ்வை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு வைக்கப்பட்ட முதல் வீடு நிச்சயமாக பக்கா (மக்கா)வில் இருப்பது தான்; பரக்கத்துச் செய்யப்பட்டதாக (அதில் நன்மைகள் பன்மடங்காக்கப்பட்டதாக)வும்,அகிலத்தார்க்கு நேர் வழியாகவும் இருக்கின்றது. அதில் தெளிவான அத்தாட்சிகளும், இப்றாஹீம் (தொழுகைக்காக) நின்ற இட(மான 'மகாம இப்றாஹீ')மும் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகின்றாரோ அவர், (அபயம் பெற்று) அச்சமற்றவராகி விடுகின்றார்; (ஆகவே) எவர்கள் அங்கு யாத்திரை செல்ல சக்தியுடையவர்களாக இருக்கின்றார்களோ,அத்த கைய மனிதர்கள் மீது, அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று அவ்)வீட்டை ஹஜ்ஜு செய்வது கடமையாகும்; எவரேனும் (இதை) நிராகரித்தால் அப்போது, (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தா(ர் அனைவ)ரை விட்டும் தேவையற்றவன்.  அல்குர்ஆன் 3:96,97

✔ இப்றாஹீம் ''என் இரட்சகனே! (மக்காவாகிய) இதை,அபயமளிக்கும் நகரமாக ஆக்கிவைப்பாயாக! இன்னும், இதில் வசிப்பவர்களுக்கு லி அவர்களில் எவர், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசிக்கிறாரோ அவருக்கு பலவகைக் கனிவர்க்கங்களிலிருந்தும் உணவளிப்பாயாக!'' என்று கூறியதை நினைவு கூறுவீராக!  அல்குர்ஆன் 2:126


✔ இன்னும், இப்றாஹீமும், இஸ்மாயீலும் அவ்வீட்டின் அடித்தளங்களை உயர்த்தியபொழுது ''எங்களுடைய இரட்சகனே! (உனக்காக நாங்கள் செய்த இப்பணியை) எங்களிலிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே (யாவற்றையும்) செவியேற்கிறவன்; நன்கறிகின்றவன்'' (என்றும்), ''எங்கள் இரட்சகனே! எங்களிருவரையும் உனக்கு (முற்றிலும்) கீழ்ப்படிகிற (முஸ்லிமான)வர்களாகவும்,எங்களுடைய சந்ததியிலிருந்தும் ஒரு கூட்டத்தினரை உனக்குக் கீழ்ப்படிகிறவர்களாகவும் ஆக்கிவைப்பாயாக! ('ஹஜ்ஜு'க்குரிய) எங்களுடைய கிரியை (செய்ய வேண்டிய இடங்)களையும் எங்களுக்குக் காண்பிப்பாயாக! (எங்கள் பிழைகளை மன்னித்து) எங்களின் தவ்பாவையும் அங்கீகரித்துக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே தவ்பாக்களை மிக்க ஏற்பவன்; மிகக் கிருபையுடையவன்! (என்றும் பிரார்த்தித்தார்கள்)  அல்குர்ஆன் 2:127,128


✔ தன்னைத்தானே மடையனாக்கிக் கொண்டவனைத் தவிர இப்றாஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? நாம் நிச்சயமாக அவரை இவ்வுலகிலும் தெரிவுசெய்தோம்;நிச்சயமாக அவர் மறுமையிலும் நல்லவர்களில் உள்ளவராவார். அவருக்கு அவருடைய இரட்சகன், ''நீர் (எனக்குக்) கீழ்ப்படியும்!'' எனக் கூறிய போது அவர்''அகிலத்தாரின் இரட்சகனுக்கு நான் கீழ்ப்படிந்து விட்டேன்''எனக் கூறினார்.  அல்குர்ஆன் 2:130,131


✔ நிச்சயமாக ''ஸஃபா'' மற்றும் ''மர்வா'' (எனும் இரு மலைகள்) அல்லாஹ்வின் மார்க்க அடையாளங்களில் உள்ளவையாகும். ஆகவே, எவர் (கஅபா என்னும்) அவ்வீட்டை ஹஜ்ஜு அல்லது உம்ரா செய்தாரோ அவர் மீது, அவ்விரண்டையும் சுற்றிவருவது (அவ்விரண்டிற்குமிடையில் ஸயீ செய்வது) குற்றமல்ல;இன்னும் எவர் தாமாக உபரியான நன்மையைச் செய்தால் நிச்சயமாக அல்லாஹ் நன்றி பாராட்டுபவன், (அவர்களின் செயல்களை) நன்கறிகிறவன்.   அல்குர்ஆன் 2:158

✔ இப்றாஹீம் ''என் இரட்சகனே! (மக்காவாகிய) இதை,அபயமளிக்கும் நகரமாக ஆக்கிவைப்பாயாக! இன்னும், இதில் வசிப்பவர்களுக்கு லி அவர்களில் எவர், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசிக்கிறாரோ அவருக்கு பலவகைக் கனிவர்க்கங்களிலிருந்தும் உணவளிப்பாயாக!'' என்று கூறியதை நினைவு கூறுவீராக!   அல்குர்ஆன் 2:126

✔ இன்னும், இப்றாஹீமும், இஸ்மாயீலும் அவ்வீட்டின் அடித்தளங்களை உயர்த்தியபொழுது ''எங்களுடைய இரட்சகனே! (உனக்காக நாங்கள் செய்த இப்பணியை) எங்களிலிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே (யாவற்றையும்) செவியேற்கிறவன்; நன்கறிகின்றவன்'' (என்றும்), ''எங்கள் இரட்சகனே! எங்களிருவரையும் உனக்கு (முற்றிலும்) கீழ்ப்படிகிற (முஸ்லிமான)வர்களாகவும்,எங்களுடைய சந்ததியிலிருந்தும் ஒரு கூட்டத்தினரை உனக்குக் கீழ்ப்படிகிறவர்களாகவும் ஆக்கிவைப்பாயாக! ('ஹஜ்ஜு'க்குரிய) எங்களுடைய கிரியை (செய்ய வேண்டிய இடங்)களையும் எங்களுக்குக் காண்பிப்பாயாக! (எங்கள் பிழைகளை மன்னித்து) எங்களின் தவ்பாவையும் அங்கீகரித்துக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே தவ்பாக்களை மிக்க ஏற்பவன்; மிகக் கிருபையுடையவன்! (என்றும் பிரார்த்தித்தார்கள்)  அல்குர்ஆன் 2:127,128

✔ தன்னைத்தானே மடையனாக்கிக் கொண்டவனைத் தவிர இப்றாஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? நாம் நிச்சயமாக அவரை இவ்வுலகிலும் தெரிவுசெய்தோம்;நிச்சயமாக அவர் மறுமையிலும் நல்லவர்களில் உள்ளவராவார். அவருக்கு அவருடைய இரட்சகன், ''நீர் (எனக்குக்) கீழ்ப்படியும்!'' எனக் கூறிய போது அவர்''அகிலத்தாரின் இரட்சகனுக்கு நான் கீழ்ப்படிந்து விட்டேன்''எனக் கூறினார்.  அல்குர்ஆன் 2:130,131

✔ நிச்சயமாக ''ஸஃபா'' மற்றும் ''மர்வா'' (எனும் இரு மலைகள்) அல்லாஹ்வின் மார்க்க அடையாளங்களில் உள்ளவையாகும். ஆகவே, எவர் (கஅபா என்னும்) அவ்வீட்டை ஹஜ்ஜு அல்லது உம்ரா செய்தாரோ அவர் மீது, அவ்விரண்டையும் சுற்றிவருவது (அவ்விரண்டிற்குமிடையில் ஸயீ செய்வது) குற்றமல்ல;இன்னும் எவர் தாமாக உபரியான நன்மையைச் செய்தால் நிச்சயமாக அல்லாஹ் நன்றி பாராட்டுபவன், (அவர்களின் செயல்களை) நன்கறிகிறவன்.   அல்குர்ஆன் 2:158


வியாழன், 2 அக்டோபர், 2014

இறை மொழியும்... தூதர் வழியும்...(சோதனை)

அன்பு உறவுகளுக்கு..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

இறை மொழியும்... தூதர் வழியும்...(சோதனை)



✔“நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு” என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.

இறைவேதம் குர்ஆன் 8:28


✔உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)
இறைவேதம் குர்ஆன் 2:214



✔மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் - அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் -இதுதான் தெளிவான நஷ்டமாகும்.
இறைவேதம் குர்ஆன் 22:11



✔மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான்; பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால்; அவன்: “இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்!” என்று கூறுகின்றான். அப்படியல்ல! இது ஒரு சோதனையே - ஆனால் அவர்களில் பெரும் பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
இறைவேதம் குர்ஆன் 39:49



✔“எங்கள் இறைவா! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்” (என்றும் வேண்டினார்).
இறைவேதம் குர்ஆன் 60:5


✔உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்; ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது.

இறைவேதம் குர்ஆன் 64:15



✔உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது; இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்; இதற்குக் காரணம், ஈமான் கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்; இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.
இறைவேதம் குர்ஆன் 3:140



✔(அதற்கு) அவர்கள்: “நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம் (என்று கூறி) எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!” என்று பிரார்த்தித்தார்கள்.
இறைவேதம் குர்ஆன் 10:85--



إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّي
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது)உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. (திருக்குர்ஆன்.1:5-7)

 

குர்ஆன் ஓதுவதன் சிறப்பு

அன்பு உறவுகளுக்கு..!

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

குர்ஆன் ஓதுவதன் சிறப்பு






✔(இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப்படுத்துகிறது.
இறைவேதம் குர்ஆன் 36:70

✔நிச்சயமாக இந்தக் குர்ஆன் பரிந்துரை செய்யக்கூடியதாகும். அது ஏற்கப்படக்கூடியதுமாகும். அதனைப் பின்பற்றினால் அவரை அது சுவனத்தில் சேர்க்கும். அதனைப் பின்பற்றாமல் விட்டுவிட்டால் அல்லது நிராகரித்தால் அவன் நரகின் அடித்தளத்தில் தள்ளப்படுவான். அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத்(ரலி), நூல் : முஸ்லிம்

✔குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர்.அறிவிப்பாளர்: உஸ்மான்(ரலி), நூல் : புகாரி


✔குர்ஆனின் சிறு பகுதியேனும் யார் உள்ளத்தில் மனனம் இல்லையோ அவர் உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றது. அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல் : திர்மிதி குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை ஓதினால் நன்மை இருக்கிறது. ஒரு நன்மை அதுபோன்று பத்து மடங்காக்கப்படும். “அலீஃப்,லாம், மீம்“ ஒரு எழுத்து என்று சொல்லமாட்டேன். மாறாக அலீஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்துமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூத்(ரலி), நூல் : திர்மிதி, தாரமி

✔குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள் மேலும் அதை ஓதுங்கள். குர்ஆனைக் கற்று அதனை ஓதி அதன் அடிப்படையில் நடப்போருக்கு உவமையானது கஸ்தூரியால் நிரப்பப்பட்ட பையைப் போன்றது. அது அனைத்து இடங்களிலும் மணம் வீசிக்கொண்டிருக்கும். குர்ஆனைக் கற்று அது அவருடைய உள்ளத்தில் பசுமையாய் பதிந்தும் அதனடிப்படையில் நடக்கவில்லையோ அவரின் உவமை கஸ்தூரியால் நிரப்பப்பட்ட பையை அது பரவாமல் கட்டிக்கொண்டவரைப் போல என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி), நூல் : திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா

✔குர்ஆனை ஓதுவதில் தேர்ச்சி பெற்றவர் கண்ணியமிக்க வானவர்களுடன் இருப்பார். குர்ஆனை ஓதுவது சிரமமாக இருப்பினும் அதைத் திருப்பித்திருப்பி சிரமத்துடன் ஓதுவாரானால் அவருக்கு இரண்டு கூலி இருக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி),நூல் : புகாரி, முஸ்லிம்

✔குர்ஆனை ஓதிய தோழர் மறுமையில் வருவார். அப்போது குர்ஆன் ‘இறைவா இவருக்கு ஆடையை அணிவி’ என்று சொல்லும். அப்போது அவருக்கு உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்படும். ‘இறைவா இவருக்கு உன் அருளை வழங்குவாயாக!’ என்று கூறும். அப்போது அவருக்கு உயர்ந்த சீருடை அணிவிக்கப்படும். பிறகு குர்ஆன் இவரை பொருந்திக் கொள்ளுமாறு சொல்லும் அவரை இறைவன் பொருந்திக் கொள்வான்.அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி), நூல் : திர்மிதி,இப்னு குஸைமா

✔நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்;எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? இறைவேதம் குர்ஆன் 54:32

✔மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?
​  
இறைவேதம் குர்ஆன் 47:24

-- 
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّي
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது)உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. (திருக்குர்ஆன்.1:5-7)