அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

புதன், 29 மே, 2013

“நி(த்)தாகாத்” نطاقات Nithaaquath.“Program By Indian Embassy with TMMK Al-Khobar at:Al-Rafa Clinic Khobar

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

Nithaaquath.“Program By Indian Embassy with 
TMMK Al-Khobar at:Al-Rafa Clinic Khobar

செவ்வாய், 28 மே, 2013

அல்-கோபர் மாநகரில் புதன் கிழமை “நி(த்)தாகாத்” نطاقات Nithaaquath. “விழிப்புணர்வு விளக்கக் கூட்டம்”

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அல்-கோபர் மாநகரில் புதன் கிழமை “நி(த்)தாகாத்” نطاقات Nithaaquath. “விழிப்புணர்வு விளக்கக் கூட்டம்”

தமிழ் நெஞ்சங்களே! தமிழ்ச் சொந்தங்களே! பாஸ்போர்ட் இல்லையா? இகாமா இல்லையா? கபீல் இல்லையா? ஓடிப்போய் வேலைப் பார்க்கிறீர்களா? வேறு என்னதான் பிரச்சினை? இதோ இங்கே நிறைவான தீர்வு.. “நி(த்)தாகாத்” نطاقات Nithaaquath

இடம்: Rafa Medical Centre Al-Khobar K.S. A 

தேதி: 29 – 05 – 2013 

நாள்: புதன் கிழமை 

நேரம்: மாலை 7:00 முதல் 9:00 வரை

இந்தியச் சமுதாயம் குறிப்பாக தமிழ்ச் சமுதாயம் பயனடைவதற்காக, 

சவூதி அரசினால் அறிவிக்கப்பட்ட சலுகைகளை முழுமையான அளவில் 

பெற்றுக்கொள்ள சவூதியில் குறிப்பாக கிழக்கு மாகாணம் முழுவதும் விழிப்புணர்வு விளக்கக் கூட்டங்கள் நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

அல்-கோபர் மாநகரிலும் இவ்வகையில் கூட்டம் தன்னார்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழர்களும் இந்தியர்களும் தனிப்பட்ட முறையிலும் பொதுவாகவும் விளக்கங்கள் பெற்று பயனடைய அனைவரும் அன்புடன் அழைக்கபடுகிறார்கள். விளக்கங்களை சிறப்பான முறையில் விளக்குவதற்காக தம்மாமிலிருந்து வருகை தரும் விபரமறிந்த தன்னார்வலர்கள் நம்முடன் காத்திருக்கிறார்கள்.

விரைவீர்! கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடைவீர்!! வெற்றி பெறுவீர்!!!

பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவுக்கு (EXIT) செல்ல விரும்பும் நபர்களுக்குரிய விண்ணப்பப் படிவம் இங்கு பெற்றுக் கொள்ளப்படும். 

(2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் பாஸ்போர்ட் காப்பி அல்லது ரேசன் கார்டு காப்பி அல்லது வாக்காளர் அடையாள அட்டை காப்பி கொண்டு வரவேண்டும்

சலுகைக் காலம் முடியும் தேதி: 03-07-2013.

சவூதி வாழ் சொந்தங்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தங்கள் கம்பெனி சிகப்பு மற்றும்
மஞ்சலில் உள்ளதா?
வேலை தேடிக்கொண்டிருக்கிறீர்களா?
இதோ அரியதோர் வாய்ப்பு உடனே
பதிவு செய்து கொள்ளுங்கள் உங்களின்
தேவையை தேடிக் கொள்ளுங்கள்...
தொழிலாளர் நல அமைச்சகத்திலிருந்து 
வெளியிடப்பட்டுள்ள இணையத்தளம். 

~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒன்று பட்ட சமுதாயமாக வாழ நம் அனைவருக்கும்
அந்த வல்ல இறைவன் அருள் புரியட்டும்.ஆமீன்!
~~~~~~~~~~~~~~~~~~~~~ 
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து 
எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் 
நேர்வழியை எமக்கு எளிதாக்கி 
தந்தருள்வாயாக! அல்குர்ஆன்:18:10
~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~
"T M M K" AL-KHOBAR. K.S.A
~~~~~~~~~~~~~~~~~
visit : www.tmmk.info
~~~~~~~~~~~~~~~~~
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!

இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

திங்கள், 27 மே, 2013

திருச்சியில்... தமுமுக சார்பாக இந்தியாவில் முஸ்லிம்களுக்கு மறுக்கப்படும் நீதி மாபெரும் கண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

திருச்சியில்... தமுமுக சார்பாக இந்தியாவில் முஸ்லிம்களுக்கு மறுக்கப்படும் நீதி மாபெரும் கண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் 50வது வார்டு குத்பிஷா நகர் கிளையின் சார்பாக 26.05.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணியளவில் திருச்சி தென்னூர் குத்பிஷா நகர் நுழைவாயில் அருகில் மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா அவர்களின் தலைமையில் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு மறுக்கப்படும் நீதி என்ற தலைப்பிலும்,

வருகின்ற ஜீலை 6 சென்னையில் முஸ்லிம்களுக்கு தற்போது உள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்தில் 7 சதவீதமாக உயர்த்தி தரக்கோரியும்,10 ஆண்டுகளுக்கு மேல் தமிழக சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம் சிறை கைதிகளை பொதுமன்னிப்பில் விடுதலைசெய்யக்கோரியும்,கட்டாய திருமண பதிவு சட்டத்தில் திருத்தம் செய்யக்கோரியும் நடைபெற இருக்கும் கோட்டையை நோக்கி கோரிக்கை பேரணி நடைபெற உள்ளது.

இப்பேரணி ஏன் என்ற தலைப்பிலும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்க்கு மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம்,மாவட்ட பொருளாளர் இம்தியாஸ் அஹமது,

மாவட்ட துணைத்தலைவர்கள் முஹம்மது ரபீக் மற்றும்

சாகுல் ஹமீது அவர்களும் கிளை நிர்வாகிகள் ரஜாக்,சதக்கத்துல்லாஹ்,நூர் முஹம்மது ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.ஷாநவாஸ் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

கூட்டத்தில் தமுமுக மூத்த தலைவரும்,மமக சட்டமன்ற குழு தலைவரும்மான M.H. ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களும்,தமுமுக மாநில துணைதலைவர் குணங்குடி அனீபா மற்றும் மாவட்ட வழக்றிஞரணிச்செயலாளர் காஜா மொய்தீன்,மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் அப்துல் ஹக் ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

கூட்டதில் இப்பகுதியல் உள்ள மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்கப்பட்டது.

இப்பொதுக்கூட்டத்தில் மமக மாநில துணைத்தலைவர் பொறியாளர்.சபியுல்லாஹ் மாவட்ட துணைச்செயலாளர்கள் பாபு,சிராஜீதீன்,முபாரக்,அப்துல் சமது மாவட்ட மாணவரணிச்செயலாளர் நசீர்,மாவட்ட மருத்துவசேவை அணிச்செயலாளர் அப்துல்லாஹ் துணைச்செயலாளர் உமர் பாரூக் அவர்களும் கிளை நிர்வாகிகள் உதுமான் அலி,ஜாபர் அலி மற்றும் அனைத்து கிளை நிர்வாகிளும்,பொதுமக்களும்,ஜமாத் நிர்வாகிகளும்,சமுகநல ஆர்வலர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.

Inline image 1

Inline image 2

Inline image 3--

~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒன்று பட்ட சமுதாயமாக வாழ நம் அனைவருக்கும்
அந்த வல்ல இறைவன் அருள் புரியட்டும்.ஆமீன்!
~~~~~~~~~~~~~~~~~~~~~ 
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து 
எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் 
நேர்வழியை எமக்கு எளிதாக்கி 
தந்தருள்வாயாக!  அல்குர்ஆன்:18:10
~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~
"T M M K" AL-KHOBAR. K.S.A
~~~~~~~~~~~~~~~~~
visit : www.tmmk.info
~~~~~~~~~~~~~~~~~
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!
     
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
  
ஞாயிறு, 26 மே, 2013

நிதாகத் விளக்கப் பொதுக்கூட்டம்-- தம்மாம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நிதாகத் விளக்கப் பொதுக்கூட்டம்-- தம்மாம்

தம்மாம் மாநகர தமுமுக/மமக வின் நித்தாகத் (NITAQATH) விளக்க பொதுக்கூட்டம் மண்டல தலைவர் பொறியாளர் அப்துல் காதர் அவர்கள் 
தலைமையிலும் மாநகர பொருளாளர் பொறியாளார் பிலால் பீர் மிஹம்மது 
அவர்கள் முன்னிலையிலும் சஃபா மெடிக்கல் ஹாலில் கடந்த வெள்ளிகிழமை 
(25-04-2013) அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு 7 மணி முதல் 10.30
மணி வரை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக இந்திய பண்பாட்டு பள்ளியின் தலைவர் திரு.திருநாவுகரசர் அவர்கள் வருகை புரிந்தார்கள்.
 
தொடக்கமாக சகோ. பிலால் பீர் முஹம்மது அவர்கள்  வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். 
 
அதனை தொடர்ந்து பொறியாளர் அப்துல்காதர் அவர்கள் சவுதி அரசாங்கம் கொண்டு வந்துள்ள நிதாகத் சட்டத்தினால் எவ்வாறு  பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதையும் இச்சட்டத்தின் வரையறுக்குள் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் ஆழமாக எடுத்துரைதார்கள்.மேலும் தொழிலாளார் அமைச்சகம் கொடுத்துள்ள கால அவகாசம் ஜீலை 3 க்குள் நித்தாகத் சட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறினார்கள்.
 
தொடர்ச்சியாக மண்டலப் பொது செயலாளர் காயல் சகோ.இம்தியாஸ் புஹாரி அவர்கள் சவுதி தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள நிதாகத் சட்டத்தின் பிரிவுகளை புரஜக்டர் மூலம் திரையில் வெளியிட,  மண்டல துணைத்தலைவரும் விவாகாரத்துறை பொறுப்பாளருமாகிய காயல் சகோ.செயது இஸ்மாயில் அவர்கள் ஒவ்வொன்றுக்கும் தெளிவான விளக்கத்தை அளித்தார்கள்.
 
இஸ்மாயீல் அவர்களின் விளக்கத்தைத் தொடர்ந்து,சுமார் 30 சகோதரர்களின் சந்தேகங்களுக்கு விரிவான பதிலளித்தார். முதல் கேள்வி கேட்ட ஒரு மாற்றுமத நண்பர் தெளிவான விளக்கத்தை அளித்த மண்டல துணைத்தலைவருக்கும் இதனை ஏற்பாடு செய்த தமுமுக விற்கு தனது வாழ் முழுவதும் நன்றிகடன் பட்டுள்ளதாக கூறினார்.
 
மேலும் இந்திய தூதரகத்தில் ஏற்கனவே EC (Emergency Certificate) Apply செய்தவர்களுக்கு EC வந்துள்ளதா என்பதை உடனடியாக வலைதளத்தில் பார்த்து தகவல் சொல்லபட்டது. 
இவ்விளக்க கூட்டத்தை நல்லவிதமாக பயன்படுத்தி கொள்ளும் பொருட்டும் தமது சந்தேகங்களுக்கு விளக்கத்தை பெற்று கொள்ளும் பொருட்டும் சுமார் 200 பேர் இதில் கலந்து கொண்டனர்.
 
 EC Apply  செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு, அதே இடத்தில் உடனடியாக மாநகர தமுமுக துணைச்செயலாளர்களால் EC படிவம் வினியோகிக்கப்பட்டு பூர்த்தி செய்து பெறப்பட்டது. இவ்முகாமில் 13 நபர்களின் விண்ணப்பம் பெற பட்டன.
 
அதனை தொடந்து வேலை வாய்ப்பினை அளிக்க Star Of Kingdom Service , Naser Al Hajri மற்றும் Gammatechஆகிய மூன்று நிறுவனங்களின் பிரதிநிதிகள் தங்கள் நிறுவனத்திற்கு வேலைகளின் அடிப்படையில் தேவையான தொழிலாளர்கள் பற்றி கூறினார்கள். அப்பிரதிநிதிகளின் அலைபேசி எண்கள் புரஜக்டர் மூலம் திரையில் காண்பிக்கபபட்டது .பலரும் அவர்களின் நிறுவனத்தில் சேர விருப்பம் தெறிவித்து இவ்விளக்க பொதுக்கூட்டத்தை பயன்படுத்தி கொண்டன்ர்.
 
இறுதியாக மாநகர து.செயலாளர் சிங்கை ஜாகிர் ஹுசேன் அவர்கள் நன்றியுறை நிகழ்த்தியபின் விளக்க கூட்டம் துவா ஓதி இனிதே நடைபெற்று முடிந்தது.
 
தொகுப்பு
சேகைமைந்தன்

~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒன்று பட்ட சமுதாயமாக வாழ நம் அனைவருக்கும்
அந்த வல்ல இறைவன் அருள் புரியட்டும்.ஆமீன்!
~~~~~~~~~~~~~~~~~~~~~ 
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து 
எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் 
நேர்வழியை எமக்கு எளிதாக்கி 
தந்தருள்வாயாக!  அல்குர்ஆன்:18:10
~~~~~~~~~~~~~~~~~~~~~~

~~~~~~~~~~~~~~~~~
"T M M K" AL-KHOBAR. K.S.A~~~~~~~~~~~~~~~~~
visit : www.tmmk.info
www.tmmk-ksa.com
Join: facebook.com/tmmk.khobar
~~~~~~~~~~~~~~~~~
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!
     
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
  
புதன், 22 மே, 2013

நித்தாகத் விளக்கப் பொது கூட்டம்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நித்தாகத் விளக்கப் பொது கூட்டம்...

நித்தாகத் அழைப்பிதழ்.
-- 