அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

சனி, 22 ஜூன், 2013

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 150-வது ஆண்டு நிறைவு விழா மாநாடு நடைபெற்றது.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 150-வது ஆண்டு நிறைவு விழா மாநாடு நடைபெற்றது. 

இதில் சமுதாய தலைவர்களான 

தமுமுக மூத்த தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ். MBA.,MPhil.,PhD.,MLA., 

மற்றும் தமுமுக தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிஃபாயி ரஷாதி, ம.ம.க 

அமைப்புச்செயலாளர் மவ்லவி நாசர் உமரி அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

இதில் அனைத்து இயக்கத்தினரின் தலைவர்களும் பங்குகொண்டார்கள்.

தமுமுக வின் லால்பேட்டை நகர 
ஆம்புலனஸூம் தயார் நிலையில் மாநாட்டு வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.. .. 






அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது.!!!



ஒன்று பட்ட சமுதாயமாக வாழ நம் அனைவருக்கும் 
அந்த வல்ல இறைவன் அருள் புரியட்டுமாக....ஆமீன்!

 

வெள்ளி, 21 ஜூன், 2013

மமகவின் இந்த நிலைபாடு முதிர்சியான முடிவே....

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மமகவின் இந்த நிலைபாடு முதிர்சியான முடிவே....

BY--செங்கிஸ் கான் இஸ்லாமிய அழைப்பாளர்



தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகின்ற 27 ம் தேதி நடைபெற உள்ளதால் இதற்காக தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதாலும் 6 உறுப்பினர்களுக்கான தேர்தலில் 7 பேர் போட்டியிடும் சூழலில் அதிமுக     சார்பில் போட்டியிடும் 4 பேரும் அதிமுக மார்க்சிஸ்ட் ஆதரவுடன் போட்டியிடும் இந்திய கம்யுனிஸ்டு  வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெறுவது நிச்சயம் எனும் நிலையில் மீதியுள்ள ஒரு இடத்துக்கு திமுகவும் தேமுதிகவும் போட்டியிடுகின்ற சூழலில் மமக சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரின் வாக்குகள் முக்கியத்துவம் பெறுகின்றன!  அதிமுக  கூட்டணியில் வெற்றி பெற்ற மமக தற்போது திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழிக்கு    ஆத்ரவளித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

ஏன் இந்த நிலைப்பாடு சற்று ஆய்வு செய்து பார்த்தோமானால் மமகவின் இந்த முடிவு எதனால் என்பது விளங்கும்!

கடந்த தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பதற்காக மமக உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளால் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதை ஏற்று ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஆட்சி அமைந்தால் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் அறிவித்தார் !

தேர்தல் முடிந்து முஸ்லிம்களின் பெருவாரியான வாக்குகளைப் பெற்று மிருகபலத்துடன் ஆட்சியைப் பிடித்தார்.

ஆட்சியில் அமர்ந்ததும் கூட்டணிக் கட்சிகளை மதியாமல் ஆணவப் போக்குடன் நடந்து கொண்டார். முஸ்லிம் அமைப்புகளை மதியாமல் நடந்ததுடன் முஸ்லிம்களின் வெறுப்புக்கும் ஆளானார்.

முதலாவதாக முஸ்லிம்களின் வாக்குக்களைப் பெற்று ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மோடியை தன பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்தது முகம் சுளிக்க வைத்தது ! கூட்டணி வெற்றிபெறப் பாடுபட்ட மமக உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் புறக்கணித்தாலும் மோடி வரவேண்டும் என வரவேற்று மகிழ்ந்தார்.

அது மட்டுமல்லாமல் வேதம் ஓதும் சாத்தனுக்கு வெண்சாமரம் வீசுவது போல் மோடியின் அமைதி [?!} யாத்திரைக்கு அமைச்சர்களை அனுப்பி வைத்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்.இருப்பினும் மமக பொறுமையுடன் கூட்டணியில் நீடித்தது!

இரண்டாவதாக வந்த உள்ளாட்சி  தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என ஆணவப் போக்குடன் அறிவித்து   அராஜக வழியில் பெரும்பாலான  உள்ளாட்சி அமைப்புகளைக் கைப்பற்றினர்.இப்போதும் மமக இன்னும் காலமிருக்கிறது என பொறுமையுடன் கூட்டணியில் நீடித்தது!

மூன்றாவதாக வக்பு சொத்துக்களை மீட்போம் என தேர்தல் வாக்குறுதி அளித்த ஜெயலலிதா அதற்கென ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை!  திமுகவினரிடம் இருந்து சொத்தை மீட்க நில அபகரிப்பு வழக்குகள் தொடுத்து எடுத்த நடவடிக்கையிலும், சசிகலா வகையறாக்களிடம் உள்ள தன சொத்துக்களை மீட்பதிலும் காட்டிய   அக்கறையில் ஆயிரத்தில் ஒரு பங்கு வக்பு சொத்துக்களை மீட்பதில் காட்டி இருந்தால் பலநூறு கோடி சமுதாய சொத்துக்கள் மீட்கபட்டிருக்கும்! ஆனால்  வக்பு வாரிய உறுப்பினர்களை நியமிப்பதிலும் உரியமுறையைக்  கடைப்பிடிக்காமல்  ,சுட்டிக்காட்டியும் திருத்திக் கொள்ளாததால்

மமக நீதிமன்றம் சென்று உரிமையை மீட்டு வந்தது!    

நான்காவதாக கட்டாயத் திருமணப் பதிவு சட்டத்திலே உள்ள  முஸ்லிம் ஷரியத் சட்டத்திற்கு முரணான  பிரிவுகளை நீக்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த ஜெயலலிதா அதை நீக்காததோடு மட்டுமல்லாமல், எதற்காக இந்தத் சட்டத்தை இஸ்லாமிய சமுதாயம் எதிர்த்ததோ அதை சமாக நலத்துறை மூலம் நடத்தி குழந்தைத் திருமணம் எனக் கூறி

இஸ்லாமியத் திருமணங்களை  தடுத்து நிறுத்தி முஸ்லிம்களைக் கைது செய்தார் !

இதற்கு எதிராக கூட்டமைப்பு களமிறங்கி பெரம்பலூரில் பிரம்மாண்டமான ஆர்பாட்டம் நடத்தியும் இன்று வரை இது தொடர்கிறது !

ஐந்தாவதாக கடந்த கலைஞர் ஆட்சியில் முஸ்லிம்கள் போராடிப் பெற்ற 3.5% இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதோடு அதில் உள்ள குளறுபடிகளை சரி செய்வேன் எனும் வாக்குறுதி பலமுறை மமக  உறுப்பினர்களால் சட்டமன்றத்தில்  சுட்டிக் காட்டப்பட்டும் பலனில்லை என்றதால்

ஜூலை 6 கோட்டை நோக்கி கோரிக்கைப் பேரணி எனும் மக்கள் மன்றத்திற்கு செல்லும் நிலைக்கு  மமக தள்ளப்பட்டது!

ஆறாவதாக  பல்லாண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு அண்ணா பிறந்த நாளில் விடுதலை வழங்க வேண்டும் குறைந்த பட்சம் ஜாமினாவது வழங்க வேண்டும் என சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும்   பலமுறை குரல் எழுப்பியும் பல முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தியும் கண்டுகொள்ளாத ஜெயலலிதா அரசு

'குதிரை குப்புறத் தள்ளி குழியும் பறித்தது' என்பது போல் சிறைவாசிகளின் வழக்குகளை கவனித்து வந்த கிச்சான் புஹாரி உள்ளிட்ட சகோதரர்களையும் கர்னாடக அரசுடன்  சேர்ந்து கைது செய்து சித்தரவதை செய்து கொடுமைக்கு உள்ளாக்க துணை புரிந்திருக்கிறது!

மேலும் தொகுதிப் பிரச்சனைகளுக்க்காகவோ, சமுதாயப் பிரச்சனைகளுக்க்காகவோ மமக உறுப்பினர்கள் சந்திக்க முடியாத முதல்வரால் தேமுதிக அதிருதி உறுப்பினர்களை மட்டும் உடனடியாக சந்திக்க முடிகிறது என்றால

முஸ்லிம்கள் கருவேப்பிலைகளா?    

இவ்வளவுக்கும் பிறகு இன்னும் காலம் இருக்கிறது பொறுமையுடன் இருந்து கோரிக்கைகளை வென்றெடுக்கலாம் என்று இருந்தால்  சமிபத்தில்  டெல்லிக்கு சென்றவர் 

நரேந்திரமோடி எனது நண்பர் அவர் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தேர்ந்தேடுக்கப்பட்ட்டிருபது எனக்கு மகிழ்ச்சி !

அவர் ஒரு சிறந்த நிர்வாகி என ஏற்கனவே எரிகின்ற முஸ்லிம்களின் கொதிப்பில் எண்ணெய் வார்த்து விட்டு வந்துள்ளார் !

அது மட்டுமல்லாமல் தில்லி பத்திரிக்கையாளர் சந்த்ப்பில் 'பாராளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை 40 தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிடும்'

என்று கூட்டணிக்   கட்சிகளை துச்சமாக தூக்கி எறிந்து கதவை சாத்திய  பிறகு மாநிலங்களவைத் தேர்தலில் மமகவின் மதிப்பு மிக்க 2 வாக்கை பெற கருணாநிதி கதவை திறந்து அழைக்கும் நிலையில் மமகவின் இந்த முடிவில் தவறென்ன இருக்கிறது!

தன் கட்சி உறுப்பினர்களையே காக்க முடியாத தேமுதிகவுக்கு வாக்களித்து வீணாக்குவதா? மோடியின் தோழிக்கு முஸ்லிகளின் எதிர்ப்பை பதிவு செய்ய கிடைத்த இந்த அருமையான வாய்ப்பை கைவிடலாமா? ஆகையால்  மமகவின் இந்த முடிவு  சாதுர்யமான முடிவாகவே அரசியல் அரங்கில் பார்க்கப் படுகிறது! 
ஆனால் இதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் சிலர் வாய் புளித்ததோ மாங்காய்
புளித்ததோ எனப் பேசுவது வியப்பளிக்கிறது!

மமக சும்மா இருந்திருந்தால் மானத்தை இழந்து ஜெயலலிதா காலில் கிடப்பதா? நிதிஷ் குமாருக்கு உள்ள ரோஷம் உங்களுக்க வராததேன்? என இவர்கள் தான் இரண்டு நாளைக்கு முன்னால் பேசினார்கள்! இப்போ அதே வாய்கள் ஜெயலலிதாவின் ஆதரவைப் பெற்று கருணாதிக்கு வாக்களிப்பது துரோகம் என்று கூறுகின்றனர். 

அப்படியானால் முஸ்லிம்களின் வாக்கைப் பெற்று ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மமக எதிர்த்தும் மோடியை பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்தது மட்டும் துரோகம் இல்லையா  !

மமக 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது  அதிமுகவினால் தான் என்பவர்கள்  231 தொகுதிகளிலும் மமக தொண்டன் மாடாக உழைத்து கூட்டணி வெற்றிக்கு பாடு
பட்டதை எந்தக் கணக்கில் வைப்பது?

மேலும் 2G  புகழ் கனிமொழியை ஆதரித்து வாக்களிப்பது ஊழலுக்கு அளிக்கும் வாக்கில்லையா?

என்கின்றனர் ஜெயலலிதாவுக்கு அளித்த  வாக்கு மட்டும் என்னவாம் ? அவர் 2G என்றால் இவர் டான்சி இருவரும் சிறை சென்றவர்கள் ! அந்த வழக்கை  நீதிமன்றமும், மக்கள் மன்றமும்   பார்த்துக் கொள்ளட்டும்! ஊழலை  அளவுகோலாக எடுத்து எந்த முஸ்லிம் அமைப்பும் யாரையும் ஆதரிப்பதில்லை !
சமுதாயத்திர்கான கோரிக்கைகளை முன் வைத்துதான் நாம் அரசியல் ஆதரவு நிலைப்பாடு எடுக்கிறோம் !

மேலும் பணம்  கை மாறி இருக்கலாம் அதனால் தான் இவர்கள் மாறினார்கள் எனக் கூறுகிறார்கள்!  இன்றைய அரசியல் சூழலில் இப்படிக் கேள்வி எழுவது இயற்கை !

ஆனால்   யூகங்கள் பெரும்பாலும்  பொய்யாகும் அது பாவமாகும் என்று இஸ்லாம் கூறுகிறது! சொல்பவர்கள் தான் அதை நிரூபிக்க வேண்டும் !  முடியவில்லை என்றால்

' யா அல்லாஹ் சமுதாய நலனைப் புறக்கணித்து சுயநலத்திற்காக பணத்துக்காக மமக தலைமை  இந்த முடிவை எடுத்திருந்தால் அவர்களை நாசமாக்கு !
இல்லை என்றால் இது போன்ற பொய்யான அவதூறுகளை பரப்புவோரை நாசமாக்கு!

என்று அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்வோம்! அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்! 

அடுத்ததாக அணி மாறுவது பச்சோந்தித் தனம் என்கிறார்கள் !
அரசியலை அரசியலாகப் பாருங்கள்! அணி மாறும்  இந்தப் பச்சோந்தி தனத்தை செய்யாத அமைப்பு இங்கு ஏதாவது உண்டா ?
நாங்கள் 50 ஆண்டு காலமாக ஒரே அணியில் உள்ளோம் எனும் ஒரு அமைப்பைக் காட்டுங்கள்!  

அமைப்பை விடுங்கள்  வாக்களிக்கும் பெரும்பான்மை மக்களும் மாற்றி மாற்றித தானே வாக்களிக்கிறோம்  ! அப்படியானால் மக்களும் பச்சோந்திகளா?

இத்தனை நாள் நம் முதுகில் சவாரி செய்தார்கள் கொஞ்ச காலம் நாம் சவாரி செய்வோமே !

ஆகையால் மமகவின் இந்த முடிவை சமுதாயத்தின்  பெரும்பாலான  மக்கள் வரவேற்கவே செய்கிறார்கள் !

அரசியல் நோக்கர்களும் மமகவின் இந்த முடிவை  முதிர்சியான முடிவாகவே பார்க்கிறார்கள் !

வேறு எதையும் காதில் வாங்காமல் தொடர்ந்து சமுதாய நலனைக் கருத்தில் கொண்டு செயல் பட்டால்

அல்லாஹ நிச்சயம் வெற்றியைத் தருவான் இன்ஷா அல்லாஹ் !
சமுதாய அக்கறையுடன்

-செங்கிஸ் கான்     


Inline images 1

Inline images 2

வியாழன், 20 ஜூன், 2013

-உண்மையை உரக்க சொல்வோம்....

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


அல்லாஹு அக்பர்...அல்லாஹு அக்பர்...

-உண்மையை உரக்க சொல்வோம்....

தமுமுக....வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில்

பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது... .. ..

வீரியமிகு செயல்பாடுகள் தனி முத்திரை பதிக்கும் தமுமுக....

ஆதிக்க அரசியலை முறியடிப்போம்....

அதிகாரத்தை நோக்கி முன்னேறுவோம்...

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவேனுகே

அவன் ஒருவனே துணை நமக்கு.

இறுதி வெற்றி நமது அணிக்கே!









~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒன்று பட்ட சமுதாயமாக வாழ நம் அனைவருக்கும்
அந்த வல்ல இறைவன் அருள் புரியட்டும்.ஆமீன்!
~~~~~~~~~~~~~~~~~~~~~ 
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து
எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில்
நேர்வழியை எமக்கு எளிதாக்கி
தந்தருள்வாயாக!  அல்குர்ஆன்:18:10
~~~~~~~~~~~~~~~~~~~~~~

~~~~~~~~~~~~~~~~~
"T M M K" AL-KHOBAR. K.S.A~~~~~~~~~~~~~~~~~
visit : www.tmmk.info
www.tmmk-ksa.com

Join: facebook.com/tmmk.khobar
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்! 
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
  

  

மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு!

மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு!


மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு அளித்துள்ளதாக அதன் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க., சார்பில் மீண்டும் போட்டியிட கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்து விட்டது.
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ ஜாவஹிருல்லா, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். அவருடன் ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ அஸ்லாமும் உடனிருந்தார்.
மாநிலங்களவைத் தேர்தல் விவகாரம் திமுக ஆதரவு கோரியுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பிறகு, மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
thanks : Puthiya thalaimurai

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

நாடாளுமன்றத் தேர்தல் வரும்போதுதான் அதுகுறித்து்ப பேச முடியும். -- ஜவாஹிருல்லா

சென்னை: சட்டசபைத் தேர்தலில் நாங்கள் அதிமுக கூட்டணியில் இருந்தோம். அதன் பிறகு நடந்த எந்த ஒரு தேர்தலிலும் நாங்கள் அவர்களுடன் இல்லை. எங்களது வாக்குகள் வீணாகி விடக் கூடாது என்பதற்காக ராஜ்யசபா தேர்தலில் திமுகவை ஆதரிக்க முடிவு செய்தோம் என்று கூறியுள்ளார் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றத் தலைவர் ஜவாஹிருல்லா. 
நேற்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து மனித நேய மக்கள் கட்சி ராஜ்யசபா தேர்தலில் தனது ஆதரவை திமுகவுக்குத் தெரிவித்தது. 
பின்னர் செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா பேசுகையில், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எங்கள் தலைவர் ரிபாய் தலைமையில் திமுக தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்தோம். வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடக் கூடிய சகோதரி கனிமொழி அவர்களுக்கு மனிதநேய மக்கள்கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று எங்களுடைய கட்சியின் ஆதரவை தெரிவிப் பதற்காக சந்தித்தோம். 
ராஜ்யசபா தேர்தலில் அதிமுகவின் நான்கு வேட்பாளர்களும் அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற டி. ராஜாவும் வெற்றி பெற அதிமுகவின் போதுமான வாக்குகள் அளிக்கப்பட இருக்கிற இந்த சந்தர்ப்பத்தில் எங்கள் வாக்குகளை வீணாக்க விரும்பவில்லை. ஆகவே திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். 
ராஜ்யசபா தேர்தலுக்கு மட்டும் இப்போது இந்த ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தல் வரும்போதுதான் அதுகுறித்து்ப பேச முடியும். 
அதிமுகவுடன் கடந்த சட்டமன்றத்தேர்தலில் கூட்டணியில் நாங்கள் இருந்தோம். அதற்குப் பிறகு நடைபெற்ற எந்த ஒரு தேர்தலிலும், அது உள்ளாட்சிமன்றத் தேர்தலாக இருந்தாலும், கூட்டுறவுத்தேர்தலாக இருந்தாலும் நாங்கள் அவர்களோடு இல்லை என்றார் அவர். 
அப்படியானால் கூட்டணி முறிந்து விட்டதா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இந்த தேர்தலுக்கு இந்த நிலைப்பாடு என்றார் அவர். 

thanks : tamil.oneindia.in
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

மனிதநேய மக்கள் கட்சி கனிமொழிக்கு ஆதரவு'

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மனிதநேய மக்கள் கட்சி கனிமொழிக்கு ஆதரவு'


மாநிலங்களவைத் தேர்தல்களில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரிக்கப்போவதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்தார்.
கடந்த சட்டமன்றத்தில் அ இஅதிமுக கூட்டணியில் இடம்பெற்று இரண்டு தொகுதிகளில் வென்று, பொதுவாகவே ஆளும் அ இஅதிமுகவிற்கு ஆதரவாகவே செயல்படும் மனிதநேய மக்கள் கட்சி இப்போது திடீரென திமுகவை ஆதரிக்க முன்வந்திருப்பது புதியதொரு திருப்பத்தினை உருவாக்கியிருக்கிறது.
ஜவாஹிருல்லா காலையில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது சிஐடி காலனி இல்லத்தில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், அ இஅதிமுகவின் நான்கு வேட்பாளர்களுக்கோ அல்லது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி இராஜாவிற்கோ தங்கள் கட்சி வாக்குக்கள் தேவைப்படாது, இந்நிலையில் தங்களது இரு வாக்குக்களை வீணாக்க விரும்பாமல் திமுகவேட்பாளரை ஆதரிக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.
'அதிமுக கூட்டணி முடிந்துவிட்டது'
நீங்கள் அ இஅதிமுக கூட்டணியில் இல்லையா எனக் கேட்டபோது, சட்டமன்றத் தேர்தல்களுடன் கூட்டணி முடிந்துவிட்டது என்றார்.
கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் அ இஅதிமுக எக்கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அண்மையில் புதுடில்லியில் முதல்வர் ஜெயலலிதா அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் தனித்தே போட்டியிடவிருப்பதாகக் கூறியிருந்தார்.
பாரதீய ஜனதாவின் தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராகவே பார்க்கப்படும் நரேந்திர மோடிக்கும் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்தப்பின்னணியிலே இஸ்லாமியர் மத்தியில் செல்வாக்கு பெற்றிருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் இன்றைய முடிவு என்கின்றனர் நோக்கர்கள்.
காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் இன்னமும் தங்கள் நிலைப்பாட்டினை அறிவிக்கவில்லை..
--Thanks : BBC tamil