அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

சனி, 12 ஏப்ரல், 2014

"தன்னை உருக்கி மற்றவர்களுக்கு ஒளி வழங்குவது மெழுகுவர்த்தி. அதேபோல், நமது வேட்பாளர் ஐதர்அலியும் உங்களுக்காக உழைப்பார்."

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


 
தி.மு.க., கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது : மயிலாடுதுறையில் கருணாநிதி 'சவால்'

மயிலாடுதுறை : ''தி.மு.க., தலைமையிலான ஐனநாயக முற்போக்கு கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

தி.மு.க., தலையிைலான, ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள, மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் ஐதர்அலியை ஆதரித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார்.

கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள சின்னங்கள் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

சூரியன் இல்லை என்றாலும், ஒன்றிற்கு இரண்டாக வெளிச்சம் தரக்கூடிய மெழுகுவர்த்தி சின்னம் மனிதநேய மக்கள் கட்சிக்கு கிடைத்துள்ளது.

"
தன்னை உருக்கி மற்றவர்களுக்கு ஒளி வழங்குவது மெழுகுவர்த்தி. அதேபோல், நமது வேட்பாளர் ஐதர்அலியும் உங்களுக்காக உழைப்பார்."

தி.மு.க., இஸ்லாமியர்கள் இடையிலான நட்பு தேர்தலுக்காக ஏற்பட்டது என நினைக்கக்கூடாது. பாலில் கலந்த நீரை எப்படி பிரிக்க முடியாதோ அதேபோல் தி.மு.க., இஸ்லாமியர் உறவை யாராலும் பிரிக்க முடியாது. இது கூடா நட்பு அல்ல, கூடும் நட்பு.இந்த கூட்டணியை உடைக்க ஜெயலலிதா முயற்சிக்கக் கூடும். ஆனால், தி.மு.க., வினரின் உறுதியையும், உடன்பாட்டையும் யாராலும் உடைக்க முடியாது.


தி.மு.க., தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது.'தனியாக சாதிப்பவன் நான்' என நான் மார்தட்டிக் கொள்ளவும் இல்லை, அரைகூவலிடவும் இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.

 
தமிழ் சமுதாயத்தை வாழவைக்க உருவான இயக்கம் தி.மு.க., :திருவாரூரில், நாகை தொகுதி தி.மு.க., வேட்பாளர் விஜயனை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: 'காவிரி பிரச்னையில் துரும்பைக்கூட கிள்ளிப்போட வில்லை' என தஞ்சை மண்ணில், என்னை பற்றி ஜெயலலிதா பேசியுள்ளார்.

துரும்பை கிள்ளிப்போட்டால் பிரச்னை தீர்ந்து விடுமா. கர்நாடக அரசு பிடிவாத்தில் உள்ளது. நான் பிறந்த ஆண்டில் இருந்து இந்த பிரச்னை பேசப்படுகிறது. காவிரி பிரிச்னை பொதுவானது. இதை யார் தீர்த்தால் என்ன. தி.மு.க, அ.தி.மு.க., இருவரும் சேர்ந்து கூட பிரச்னையை தீர்க்கலாம். வீடு தீப்பற்றினால் அணைக்க தான் வேண்டும். யார் அணைப்பது என்ற போட்டி கூடாது. இதில், கருணாநிதி ஜெயிப்பதா அல்லது ஜெயலலிதா ஜெயிப்பதா என்ற போட்டி அவசியமில்லை. நீங்கள் ஜெயித்தாகவே இருக்கட்டும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, தான் மட்டுமே தமிழர்களுக்காக கவலைப்படுவது போலவும், தமிழக மக்களைப் பற்றி எனக்கு கவலையில்லை என்பது போலவும் பேசிவருகிறார். தமிழ் சமுதாயத்தை வாழ வைக்க வேண்டும் என, உருவான இயக்கம்தான் தி.மு.க 'இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, சட்டசபையில் தீர்மானம் கொண்டு வராதது ஏன்?' என, ஜெயலலிதா கேட்கிறார். 1956ம் ஆண்டில், இலங்கை தமிழர் விடுதலைக்காக போராடி, அவர்களுக்காக தீர்மானம் கொண்டு வந்தது இந்த கருணாநிதி தான்.

 

தி.மு.க., பொய் பேச வேண்டிய அவசியம் இல்லை. பொய் பேசுபவர் யார் என மக்களுக்கு தெரியும். முதல்வர் பதவிக்கு மாத சம்பளம் ஒரு ரூபாய் வாங்கினார். மகிழ்ச்சி, பிறகு எப்படி வந்தது பல கோடி ரூபாய்.நாம் எப்படி பட்ட முதல்வரை பெற்றுள்ளோம் என்பதை தெரிந்து கொள்ள பெங்களுரு தனி கோர்ட்டில் நடந்து வரும் சொத்து குவிப்பு ஒன்றே போதும். தமிழர்கள் ஏமார்ந்தவர்கள் அல்ல,


ஆளும் கட்சி என்ற பெயரில் அம்மையார் ஏமாற்றுகிறார். இந்தியாவில் அமைய உள்ள அரசியல் அங்கமாக இருக்க விரும்புகிறேன் என்கிறார். ஆனால், தமிழர்களை பங்கம் செய்ய வேண்டாம் என, எச்சரிக்கிறேன். இந்த தேர்தலில் அ.தி.மு.க., விற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



புதன், 26 மார்ச், 2014

அன்பான சகோதரர்களே... சமுதாய சிந்தனையாளர்களே உங்களின் நன்கொடைகளை தேர்தல்பணிகளுக்கு அனுப்பி தாருங்கள்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இம் மடல் தங்களை பூரண உடல் ஆரோக்கியத்துடனும் தூயஇஸ்லாமிய சிந்தனையுடனும்சந்திக்கட்டுமாக!

மயிலாடுதுறையில் இருந்து முத்துப்பேட்டை முகைதீன்-- 

களப்பணிக்கு ஆயிரகணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள்....தொகுதி முழுவதும் பரவலாக அண்ணன் ஹைதர் அலிக்கே ஆதரவலைவீசி வருகிறது....அதிகாலை முதல் இரவு வரை உணவை கூட நேரம் கடந்து உண்டு
(
சில நேரங்களின் உணவும் உண்ணவும் நேரம் கிடையாது) தீவிரமானகளப்பணியில் மாநில நிர்வாகி முதல் மாவட்ட நிர்வாகிகள் தொட்டுதொண்டர்கள் வரை ஓடி ஓடி உழைக்கிறார்கள்....வேட்பாளரோடு நான் உள்ளடக்கிய தலைமை மீடியா குழு எந்த நேரமும்சுத்திக்கொண்டு இருக்கிறது.உடனுக்குடன் செய்திகளை தொகுத்து மீடியாக்களுக்கும்பத்திரிகைகளுக்கும் வழங்கி வருகிறோம்...இன்னும் வீரியமாக களப்பணியாற்ற துடிப்போடு செயல்படுகிறோம்... 
மூத்த தலைவர் பேராசிரியர் MHJ அவர்கள் தலைமையில்மயிலாடுதுறை,சீர்காழி,பூம்புகார் ஆகிய மூன்று தொகுதிகளைஉள்ளடக்கி மயிலாடுதுறையை மைய்யமாக வைத்து ஒரு பெரிய டீமும்,மமக பொதுசெயலாளர் அண்ணன் மு.தமிமுன் அன்சாரி அவர்களின்தலைமையில் கும்பகோனம்,பாபநாசம், திருவிடைமருதூர் ஆகியமூன்று தொகுதிகளை உள்ளடக்கி கும்பகோணத்தை மைய்யமாககொண்டு ஒரு பெரிய டீமும் மிகப்பெரிய தேர்தல் பணிகளைஆற்றிவருகிறார்கள்...இதற்கிடையில் கூட்டணி கட்சியினரின் மகத்தான பணிகளும் அதிகம்அதிகம்.....ஆனால்.... ஆனால்.... மிகப்பெரிய பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுஇப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே 
அன்பான சகோதரர்களே... 
சமுதாய சிந்தனையாளர்களே உங்களின் நன்கொடைகளை தேர்தல்பணிகளுக்கு அனுப்பி தாருங்கள்...எங்கள் சகோதரர்கள் நிதி கேட்டு வருகிறார்கள் அவர்களிடம் தாராளமாகதேர்தல் நிதிகளை அள்ளி தாருங்கள்....அதிகார அவையில் சமுதாய பணியாற்ற உதவிடுங்கள்....புகழ் அனைத்து அல்லாஹ்வுக்கே.... வெற்றி நமது அணிக்கே.....
அன்புடன் மயிலாடுதுறையில் இருந்து முத்துப்பேட்டை முகைதீன்-- 





எழுச்சியை நோக்கி மயிலாடுதுறை!

எழுச்சியை நோக்கி மயிலாடுதுறை!

மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக மயிலாடுதுறையில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அண்ணன் ஹைதர் அலி அவர்களுக்கு வாக்கு கேட்டு திமுகவின் பொருளாளர் சகோதரர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று தொகுதிக்கு வருகை தந்து பெரும் எழுச்சியை ஏற்படுத்திச் சென்றிருக்கிறார்.



மதியம் 4.30 மணிக்கு பாபநாசத்திலும், தொடர்ந்து கும்பகோணம், குத்தாலம், மயிலாடுதுறை, செம்பனார்கோயில் என மக்கள் வெள்ளத்தில் வேட்பாளருடன் பரப்புரை நிகழ்த்தினார்.

இறுதியாக, சீர்காழியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்றினார்.

அவரது உரை வீச்சு முன்பை விட மெருகேறியுள்ளது. தங்கள் ஆட்சியின் கடந்த கால சாதனைகளை, அதிமுகவின் தவறுகளை புள்ளி விவரங்களுடன் அம்பலப்படுத்தினார்.

பதட்டமின்றி, சரளமாக, ஆணித்தரமாக அவர் பேசியது அனைவரையும் ஈர்த்தது.

சமீபத்தில் திருச்சி திமுக மாநாட்டில் அவர் பேசிய உரைதான், அவரது புதிய பயணத்தின் எழுச்சியாக அமைந்தது.

அதற்கு அடுத்த ஒரு எழுச்சிமிக்க உரையாக அண்ணன் ஹைதர் அலிக்காக அவர் வாக்கு சேகரித்து பேசிய உரை அமைந்திருந்ததாகக் கருதுகிறேன்.

இந்த அரை நாள் நிகழ்ச்சி, இங்கே முகாமிட்டு பணியாற்றி வரும் எனக்கும், பேராசிரியருக்கும், அப்துல் சமது, உமர், ராவுத்தர்ஷா, அமீன், சர்வத்கான், சரவண பாண்டியன் உள்ளிட்ட அனைவருக்கும் மனதிருப்தியை தந்துள்ளது.

ஏற்கனவே 2009 நாடாளுமன்றத் தேர்தலில், மமக இத்தொகுதியில் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களை நிறுத்தி களமாடியது. அப்போது கட்சி, இத்தொகுதி முழுக்க அறிமுகமானது.

அது இப்போது களத்தில் மிகவும் உதவியாக இருக்கிறது. ஜமாத்துகள், சிறுபான்மையினரைத் தாண்டி அனைத்துத் தரப்பு மக்களும் அங்கீகரிக்கும் கட்சியாக மீண்டும் மீண்டும் மமக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமாகும்.

மதச்சார்பற்ற நம் நாட்டில், சிறுபான்மையினர் ஒரு அரசியல் கட்சியை வளர்த்தெடுக்கும் போது, அது பெரும்பான்மை மக்களின் நல்லெண்ணங்களையும் பெற்றுத்தான் வளர முடியும். வளர வேண்டும். அப்போது தான் நல்லிணக்கத்துடனும், புரிதலுடனும் கூடிய அரசியல் வெற்றியைப் பெற முடியும்.

அத்தகைய வெற்றியை மயிலாடுதுறை தொகுதியில் பெறும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. (இறைவன் நாடினால்...)