அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

திங்கள், 30 ஜூன், 2014

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம் ..

அன்பு உறவுகளுக்கு..! 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
​
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் 
தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம் ..




உலகில் அதிக இடங்களில் சமுதாயச் சேவை செய்துவருகிறது தமுமுக. அதன் மையில் கல்லாக விளங்கும் சவூதிஅரேபியா கிழக்கு மகாணத்தின் அல்கோபர் கிளை 

வருடாவருடம் ஹஜ் மாதத்தில் ஹாஜிகளுக்காக சிறப்பான முறையில் இரத்தானம் செய்துவருகிறது. அதை பாராட்டும் விதமாக அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம் வழங்கியது. அதை அல்போகர் கிளைச் செயலாளர் சகோ.ஹாஜாபஷிர் பெற்றுக் கொண்டார்.

​அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது.!!!
​

வெள்ளி, 16 மே, 2014

தமுமுகவிற்கு நினைவு சான்றிதழ்

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தமுமுகவிற்கு நினைவு சான்றிதழ்

சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் தம்மாம் மாநகரில் தமிழ் சங்கத்தின் சார்பில் கடந்த 13-05-2014 அன்று சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பளைப்பாளராக இயக்குனர் அமீர் மற்றும் கவிஞர் சினேகன் கலந்து கொண்டனர்.

தமிழ் சங்கத்தின் அழைப்பிற்கு இணங்க சமுதாயப் பேரியக்கமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேறக் கழகமும் கலந்து கொண்டது.

மார்க்க அழைப்புப் பணியை பிரதானமாகச் செய்துவரும் தமுமுக கவிஞர் சினேகனுக்கு இறைமறை வழங்கி மார்க்க அழைப்பு பணியை வளமைபோல் செய்தது.

மேலும் சவூதிஅரேபியாவின் நிதாகத் சட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பாக பணி செய்த இயக்கங்களுக்கு நினைவு சான்றிதழ் வழங்கப்பட்டது.


இந்த நெருக்கடியான சூழ்நிலையில் சிறப்பாக பணியாற்றிய தமுமுகவிற்கு வழங்கப்பட்ட சான்றிதழை அதன் விவகாரத்துரைச் செயலாளர் சகோ.சீனிமுஹம்மது பெற்றுக்கொண்டார்.


இக்கூட்டத்தில் தமுமுக சார்பாக அல்கோபர் கிளைச் செயலாளர் சகோ.ஹாஜாஷிர் மற்றும் மக்கள் தொடர்பாளர் சகோ.ஹாசிம் சேட் கலந்து கொண்டனர்.



திங்கள், 5 மே, 2014

வாகனம் ஓட்டிகொண்டே மொபைலில் பேசுவது ஹராம் !!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பரபரப்பான மார்க்க தீர்ப்பு

***********************
வாகனம் ஓட்டிகொண்டே 
மொபைலில் பேசுவது ஹராம் !!
******************************


இன்று மொபைல்போன்கள் அனைத்து மனிதர்களின் வாழ்விலும் தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது 


சாலைகளில் நடந்து செல்வோரும் வாகனம் ஓட்டி செல்வோரும் சில சந்தர்பங்களில் மொபைலில் கவனத்தை பறி கொடுத்து விபத்துகளில் சிக்கும் நிகழ்வுகள் பரவலாக நடந்து வருவதை நாம் செய்திகளில் பார்கிறோம் 


குறிப்பாக வாகனம் ஓட்டகுடியவர்கள் வாகனத்தை ஓட்டி கொண்டிருக்கும் நேரத்தில் மொபைலில் சிந்தனைகளை சிதறவிடுவதால் பல் வேறு வாகன விபத்துக்கள் நடந்துள்ளன


மனித உயிருக்கும் உயிர் பாது காப்பிர்கும் இஸ்லாம் மிகுந்த முக்கியத்துவம் தருகிறது


வாகனம் ஓட்டும் போது மொபைலில் பேசுவது மனித உயிருக்கு அச்சுறுத்தல் தரும் அம்சமாக இருப்பதால் அந்த செயலை செய்யவது மார்கத்தின் அடிப்படையில் ஹராமாகும் 


இவ்வாறு சவுதி அரபியாவை சார்ந்த பிரபல மார்க்க அறிஞர் கலப் பின் முத்தலக் தனது மார்க்க தீர்ப்பில் கூறியுள்ளார்





வியாழன், 24 ஏப்ரல், 2014

நெஞ்சார்ந்த நன்றிகள்

அன்பு உறவுகளுக்கு..!  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நெஞ்சார்ந்த நன்றிகள்

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. தொகுதியில் சராசரியாக 75 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகக்கடுமையாக களத்தில் போராடிய திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், புதிய தமிழகம், திராவிடர் கழகம் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைத்துப் பணிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய ஜமாத்தார்கள், உலமாக்கள், ஐ.என்.டி.ஜே., எஸ்.டி.பி.ஐ., தமிழ் மாநில தேசிய லீக் (அல்தாப்), சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவை, பி.எப்.ஐ. மற்றும் சமுதாய அமைப்புகளுக்கும், மனசாட்சியுடன் பல இடங்களில் நடந்துகொண்ட ஏகத்துவ சொந்தங்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது பணிகளுக்காக எல்லா நிலையிலும் ஒத்துழைத்த நல்லுள்ளங்களுக்கும், பிரார்த்தனைகள் புரிந்த உள்நாடு மற்றும் வெளிநாடு வாழ் சகோதர, சகோதரிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 40 தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சியினருக்காகப் பாடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியின் சொந்தங்களுக்கும், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மயிலாடுதுறை தொகுதியில் ஓய்வின்றி உழைத்த மனிதநேய மக்கள் கட்சியின் சொந்தங்களுக்கும் தேன்சிந்தும் வார்த்தைகளால் உளமாற நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இறைவன் நம் அனைவரையும் உழைப்பையும் பொருந்திக் கொள்வானாக... எல்லாப் புகழும் இறைவனுக்கே...

- எம். தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி


வெளிநாடு வாழ் சகோதரர்களுக்கு ஓர் வேண்டுகோள்!

அன்பு உறவுகளுக்கு..! அஸ்ஸலாமு அலைக்கும்

வெளிநாடு வாழ் சகோதரர்களுக்கு ஓர் வேண்டுகோள்

இறைவனுடைய அருளால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களாக அதிமுகவினர் வினியோகிக்கும் ரூபாய் நோட்டுகளை மீறி மக்கள் நமக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.

வெளிநாடு வாழ் சகோதரர்கள் மயிலாடுதுறை தொகுதியில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு ‘மெழுவர்த்திகள்’ சின்னத்தில் வாக்களிக்குமாறும், காலையிலேயே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்குகளைப் பதிவு செய்யுமாறும் வேண்டுகிறோம்.

வேலூர் தொகுதியில் ‘ஏணி’ சின்னத்திற்கும், சிதம்பரம் மற்றும் திருவள்ளூர் தொகுதிகளில் ‘மோதிரம்’ சின்னத்திற்கும்,

தென்காசி தொகுதியில் ‘டிவி’ சின்னத்திலும், இதர தொகுதிகளில் ‘உதயசூரியன்’ சின்னத்திலும்

வாக்களிக்குமாறு தொலைபேசி வாயிலாக உடனடியாக 
அறிவுறுத்த வேண்டுகிறோம்.


- எம். தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி