அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

செவ்வாய், 14 மே, 2013

இஸ்லாத்தைப் பெரியார் ஏற்றாரா? எதிர்த்தாரா? ஆவணப்படத் திரையீட்டு விழா!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இஸ்லாத்தைப் பெரியார் ஏற்றாரா? எதிர்த்தாரா?
ஆவணப்படத் திரையீட்டு விழாவில் .. .. .. .. .. ..
தமுமுக தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ மற்றும் மாநில நிர்வாகிகள், சமுதாயப் பிரமுகர்கள், கலைத் துறையினர், லேனா தமிழ்வாணன் உள்ளிட்ட முன்னணி பத்திரிகையாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர். அழைப்புப் பணியின் இந்த முயற்சி ஒரு புதிய திசை.

இஸ்லாத்தைப் பெரியார் ஏற்றாரா? எதிர்த்தாரா?
ஆவணப்படத் திரையீட்டு விழாவில் பகிரங்க சவால்
-ஹாஜாகனி 

தெற்காசியாவின் சாக்ரடீஸ் என யுனெஸ்கோ அமைப்பால் பாராட்டப்பட்டவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். அவர் பெயரைச் சொல்லாமல் தமிழகத்தில் அரசியலே இல்லை என்ற அளவுக்கு ஆழமான சமூகத் தாக்கத்தை அவரது பேச்சும், எழுத்தும் செய்துள்ளன. பார்ப்பனரல்லாதோரின் எழுச்சி, தென்னிந்திய நல உரிமைச் சங்கமாகி, நீதிக்கட்சியாகி,பின்னாளில் திராவிடர் கழகமாக உருவெடுத்து, அதிலிருந்து திமுக, அதிமுக, மதிமுக என கிளைத்து செழித்த இயக்கங்கள் ஏராளம்.

பெரியாரின் சிலைகள் ஏறத்தாழ தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் உண்டு. அந்த சிலைகளுக்குக் கீழே ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை’ ‘கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்’ ‘கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்’ ‘கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி’ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கும்.

இதனால், பெரியாரின் சமூக, சீர்திருத்தப் பணிகள் யாவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, நாத்திகப் பிரச்சாரத்தையே முதன்மைப் பணியாகச் செய்தவர் என்ற புரிதலே பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

விடுதலை ராசேந்திரன், கொளத்தூர் மணி ஆகியோர் முயற்சியில் பெரியாரின் குடியரசு இதழ் தலையங்கங்கள் மற்றும் கட்டுரைகள் 33 பாகங்களாக வெளியிடப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன் ‘கீற்று’ இணைய தளத்தின் சார்பில் அந்நூற்களின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற போது, ‘பெரியாருடன் ஒரு பயணம்’ என்ற சமத்துவ சமுதாயம் மலரவும், இன இழிவு நீங்கவும் இஸ்லாம் மட்டுமே ஒரே தீர்வு என தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை ஆதாரங்களோடு குறிப்பிட்டார். You Tube இணைய தளத்தில் ‘பெரியாருடன் ஒரு பயணம்’ என்ற தலைப்பில் தேடினால் இவ்வுரை முழுமையாகக் கிடைக்கும்.

தந்தை பெரியாரின் தத்துவ வாரிசாகவும், தமிழகம் அறிந்த பேச்சாளராகவும், ஆரிய வாதிகளின் வீரிய விரோதியாகவும், பெண் சிசுக் கொலைக்கு எதிரான கருத்தம்மா என்ற திரைப்படத்தில் நடித்து, முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கியவருமான பேராசிரியர் பெரியார்தாசன், சவூதி அரேபியாவிற்குச் சென்று, இஸ்லாத்தைத் தழுவி, அப்துல்லாவாக மாறி, புனித உம்ராவையும் சொந்தச் செலவில் முடித்து வந்தது, தமிழகத்தின் கருத்துலகில் பேரதிர்வுகளைப் பரப்பியது.

நாம் அவரது முடிவை, அவருக்கு நெருக்கமான கலையுலக, கவியுலக, கருத்துலகப் பிரபலங்களிடம் கூறியபோது, சிலர் நெளிந்தார்கள், சிலர் குமைந்தார்கள், சிலர் சிலிர்த்தார்கள், சிலர் சிரித்தார்கள். ‘பொறுத்திருந்து பாருங்கள்’ என்று சிலர் புத்தி சொன்னார்கள்.

பெரியார் திடலிலிருந்து வெளிவரும் ‘உண்மை’ என்ற ஏடு, ‘அவர் விலை போய்விட்டார்’ என்று வெளிப்படையாகவே எழுதியது. மக்கள் உரிமையில் அதற்கு நாம் பதிலடி கொடுத்தோம்.

இஸ்லாத்தைத் தனது வாழ்க்கை முறையாய் ஏற்றுக்கொண்ட பெரியார் அப்துல்லா, ஒரு மாபெரும் கருத்துப் புரட்சிக்குத் தமிழகத்தில் விதை போட்டுள்ளார்.

அதுதான் ‘பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? எதிர்த்தாரா?’ என்ற ஆவணப்படம்.
அய்யா ஆனைமுத்து அவர்கள் தொகுத்தளித்துள்ள பெரியாரின் சிந்தனைகள், பேச்சுகள், எழுத்துக்கள் ஆகியவற்றிலிருந்து அரிய மேற்கோள்களை ஆதாரமாகக் காட்டி, தந்தை பெரியார், இஸ்லாத்தையே சமூக விடுதலைக்கும், சமூக சமத்துவத்துக்குமான ஒற்றைத் தீர்வாக தொடர்ந்து முழங்கி வந்ததை தனது ஆவணப் படத்தில் வெளிச்சப்படுத்தியுள்ளார் பெரியார் அப்துல்லா.
அய்யா வே.ஆனைமுத்து வெளியிட்ட பெரியார் சிந்தனைகள் அனைத்தும், எழுத்துவடிவமாக்கப்பட்டு, தந்தை பெரியாரிடம் ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்து பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

வடபழநி ஆர்.கே.வி. அரங்கில் 14.05.2013 அன்று மாலை ‘இஸ்லாத்தைப் பெரியார் ஏற்றாரா? எதிர்த்தாரா?’ ஆவணப்படத் திரையீடு நிகழ்ந்தது. சகோ. செங்கிஸ்கான் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க, புரபஷனல் கூரியர் நிர்வாக இயக்குநர் அஹமது மீரான் தலைமை ஏற்றார். திரைப்பட இயக்குநர் அமீர் வெளியிட்டார். ஆவணப்பட இயக்குநர் சிபி சந்தரின் உணர்ச்சிகரமான உரை, அனைவரையும் நெகிழ வைத்தது. “நம் வகுப்புப் படித்த போது, சாதி வெறியை எதிர்த்ததற்காக, மரத்தில் கட்டிவைத்து, என் மீது ஆதிக்க சாதி சிறுவர்களை விட்டு சிறுநீர் கழித்தார்கள்... உலக நாடுகளுக்கெல்லாம் படப்பிடிப்புக்காகப் பறந்து சென்று விலை உயர்ந்த வாசனைத் திரவியங்களையெல்லாம், நான் பூசிக்கொண்ட போதும், அந்த சிறுநீரின் துர்நாற்றம் என் மேனியை விட்டு அகலவில்லை. நான் முஸ்லிமாக இருந்திருந்தால் இந்தக் கொடுமை எனக்கு நிகழ்ந்திருக்குமா...?” என்று சிபி சந்தர் பேசியபோது, அரங்கமே சிந்தனையில் உறைந்தது.

பெரியார் அப்துல்லா தனது உரையில், “இந்த ஆவணப் படம் சர்ச்சையைக் கிளப்பும் என்று தெரியும். பெரியார் இஸ்லாமியக் கொள்கையை ஏற்குமாறு தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தியதை நான் ஆதாரங்களோடு பதிவு செய்துள்ளேன். இல்லை, பெரியார் இஸ்லாத்தையும் கடுமையாக எதிர்க்கவே செய்தார் என்று யாரேனும் நிரூபிக்கத் தயாராக இருந்தால் முன்வரட்டும், என் சொந்தச் செலவில் அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறேன். நான் முன்வைத்த கருத்துக்களை ஆதாரங்களோடு மறுக்கட்டும்” என பகிரங்க சவால் விடுத்தார்.

இரவு சுமார் பதினோரு மணியை நெருங்கினாலும், முக்கியப் பிரமுகர்களால் நிறைந்திருந்த அரங்கம், இறுதிவரை நிரம்பியே இருந்தது. இறுதியாக இந்த ஆவணப் படத்திற்காக பெருமுயற்சியை மேற்கொண்ட இப்ராஹிம் காசிம் நன்றி கூறினார்.

தமுமுக தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ மற்றும் மாநில நிர்வாகிகள், சமுதாயப் பிரமுகர்கள், கலைத் துறையினர், லேனா தமிழ்வாணன் உள்ளிட்ட முன்னணி பத்திரிகையாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர். அழைப்புப் பணியின் இந்த முயற்சி ஒரு புதிய திசை...

இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!
     
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~