அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

சனி, 31 ஆகஸ்ட், 2013

சிறப்புடன் நடைபெற்ற சமூக நல்லிணக்க விழா மற்றும் ஈத் மிலன் நிகழ்ச்சி.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சிறப்புடன் நடைபெற்ற சமூக நல்லிணக்க விழா மற்றும் ஈத் மிலன் நிகழ்ச்சி.

ஆம்பூர்,ஆக.30: தமுமுக சார்பில் சமூக நல்லிணக்க விழா மற்றும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் அ.அஸ்லம் பாஷாMLA தலைமை தாங்கினார், நகர உலமா அணி செயலாளர் பயாஸ் அஹ்மத் கிராத் ஓதினார், 

நகர செயலாளர் தப்ரேஸ் அனைவரையும் வரவேற்றார், ஆம்பூர் அஹ்லே சுன்னத் வல் ஜமாத் தலைவர் மணேக்கார் கலீலுர்ரஹ்மான் முன்னிலை வகித்தார், 

இஸ்லாமிய அழைப்பாளர் மவ்லவி அப்துல்லா பிர்தவ்சி துவக்க உரையாற்றினார், எழுத்தாளர் யாழன் ஆதி வாழ்த்துரை வழங்கினார், அவர் தமது உரையில் விஞ்ஞானபூர்வமான மார்க்கம் இஸ்லாம் என்பதை குறிப்பிட்டு பேசினார், அவரை தொடர்ந்து புலவர் குணசீலன் வாழ்த்துரை வழங்கினார், 

மூத்த தலைவர் Dr.பேரா.M.H.ஜவாஹிருல்லா MLA சிறப்புரையாற்றினார், 

அவர் தமது உரையில், தமுமுக செய்து வரும் மனிதநேய பணிகளை நினைவு படுத்தியதோடு, சமூக நல்லிணக்கத்தின் அவசியத்தை நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை ஆதாரமாக காட்டி பேசியது அனைவரையும் கவர்ந்தது, இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பிறமத சகோதரர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர், 

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது, கலந்துகொண்ட பலரும் இந்த நிகழ்ச்சியை பாராட்டியதோடு, அவ்வப்போது இத்தகைய நல்லிணக்க விழாக்கள் நடத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டனர், 

இறுதியில் அனைவருக்கும் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு இஸ்லாமிய கொள்கைகளை விளக்கும் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன, முடிவில் மமக நகர செயலாளர் ஹமீத் நன்றி கூறினார், இந்நிகழ்ச்சியை வெற்றி பெற செய்ய ஆம்பூர் நகர, கிளை நிர்வாகிகள் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தனர்.

- Ambur Nazeer Ahmed