அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

சிரியா மீதான ஆக்கிரமிப்பு போர் சர்வதேச அளவில் பேரழிவை உருவாக்கும் த மு மு க எச்சரிக்கை!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சிரியா மீதான ஆக்கிரமிப்பு போர் சர்வதேச அளவில் பேரழிவை உருவாக்கும் த மு மு க எச்சரிக்கை!

த மு மு க தலைவர் ஜே எஸ் ரிபாயி வெளியிடும் கண்டன அறிக்கை:



மத்தியக்கிழக்கில் அமேரிக்கா மீண்டும் தலையீடு செய்து தனது ஆக்கிரமிப்பு போரை தொடுக்க இருபதாக வெளியாகும் தகவல்கள் இந்த பூமிப்பந்தை அச்சுறுத்துவதாக உள்ளது.

உலகின் உயர் ஒற்றை வல்லரசாக தன்னை கருதிக்கொள்ளும் அமேரிக்கா இது போன்ற ஆக்கிரமிப்பு சிந்தனைகளை இன்னமும் விட்டு விடவில்லை என்பது மனித குலத்திற்கு வேதனை தரும் செய்தியாகும். வியட்நாம் தொடங்கி ஆப்கானிஸ்தான் தொடர்ந்து இராக் வரை இது வரை லட்சக்கணக்கான அப்பாவி மக்களையும் பல்லாயிரக்கணக்கான தனது சொந்த நாட்டு ராணுவத்தினரையும் அமேரிக்கா தனது போர் வெறியினால் பலி கொடுத்துள்ளது.

எண்ணெய் வளத்தினை அடிப்படையாகக்கொண்டு விளங்கும் சர்வதேச பொருளாதாரம் இதன் மூலம் உலக அளவில் பெரும் சிக்கலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

இராக் அதிபர் சதாம் ஹுசைன் மீது பேரழிவு ஆயுதங்கள் பதுக்கி வைத்து இருப்பதாக குற்றசாட்டுகளை சுமத்தி அவரை பதவியில் இருந்து அகற்றி ராணுவ ஆக்கிரமிப்பு போரை நடத்திய பிறகும் இறுதிவரை இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. தங்களுக்கு பிடிக்காதவர்களை ஒழித்து கட்டும் ஒரு முயற்சியாக தான் அமெரிக்க இது போன்ற குற்றசாட்டுக்களை கூறுகிறது என்பதே சர்வதேச சமூகத்தின் கருத்தாகும்

சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுத தாக்குதல் நிகழ்வில் அந்நாட்டு ராணுவத்தின் சதி இருப்பதாக அமெரிக்காவும் அமெரிக்க ஆதரவு ஊடகங்களும் கூறும் குற்றசாட்டுக்களுக்கு சிரியா மட்டும் அல்லாமல் ரஷ்யா கூட மறுப்பு தெரிவித்து வருகிறது.

விருப்பு வெறுப்பு இன்றி விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டிய இந்த கொடூர செயல் குறித்து ஒருதலை பட்சமாக முடிவெடுக்க கூடாது.

அப்பாவி மக்கள் குழந்தைகள் ராசாயன ஆயுத தாக்குதலில் கொன்றொழிக் க்கப்பட்டது எந்த வகையிலும் மன்னிக்க முடியாத செயலாகும்

அதேநேரம் குற்றவாளியை மட்டுமே தண்டிக்கவேண்டும் குற்றம் சாட்டப்படுபவர்களை எல்லாம் தண்டிக்கக் கூடாது.

சென்றவாரம் சிரியாவில் நிகழ்ந்த ரசாயன குண்டு வீச்சு தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேலிய உளவு அமைப்பின் பங்கு இருப்பதாக அரபு உலக ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் ஒருதலை பட்சமான தீர்ப்பு குற்றசாட்டு, ராணுவ நடவடிக்கை போன்றவை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் சிரியா குறித்து தங்களது போர் எண்ணத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும்.

ஆட்சியாளர்கள் மீது சொந்த நாட்டு மக்களுக்கு அதிருப்தி இருந்தாலும் கூட அதனை அந்தந்த நாட்டு மக்களே தங்களுக்குள் நீதியான முறையில் ஜனநாயக ரீதியில் தீர்த்துக்கொள்ள அமெரிக்கா உள்ளிட்ட ஜனநாயகத்தை பேணி கொள்வதாக கூறும் சக்திகள் முன்வரவேண்டும்.

ஒ ஐ சி , அரபுலீக் போன்ற ஒருங்கிணைப்பு சக்திகளை இணைத்து ஐக்கியநாடுகள் பெருமன்றம் இத்தகைய முன்முயற்சிகளை தொடங்க வேண்டும்.

மீண்டும் ஒருமுறை வளைகுடா பிராந்தியத்தில் ரத்த ஆறு ஓடுவதை எந்த வகையிலும் இந்த உலகம் அனுமதிக்காது. நாகரிக சமூகம் ஏற்றுக்கொள்ளாது.

சமாதானத்திற்காக நோபெல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா இராக்கில் இருந்தும் ஆப்கானிஸ்தானில் இருந்தும் அமெரிக்கபடைகளை
வாபஸ் பெறுவேன் என்பதை தேர்தல் வாக்குறுதியாக அமெரிக்க மக்களுக்கு வழங்கி அதனால் வெற்றியும் பெற்ற ஒபாமா சொந்த நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் துரோகம் இழைக்கவேண்டாம். போர் வெறி தனித்து சமாதான நெறி தழைக்க அமெரிக்காபாடுபடட்டும்.

சிரியாவின் அரசியல் மாற்றத்தை சிரியா நாட்டு மக்களை வைத்தே கொண்டு வர முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்

Status Update
By Moulavi JS Rifayee

--

رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து 
எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் 
நேர்வழியை எமக்கு எளிதாக்கி 
தந்தருள்வாயாக!  அல்குர்ஆன்:18:10
____________________________________________

________________________
T M M K  AL-KHOBAR. K.S.A   visit : www.tmmk.info