அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

வியாழன், 21 நவம்பர், 2013

கல்லணை மக்கா பள்ளி வாசல் பொதுப்பணித்துறையால் ஆக்கிரமிப்பு என்று இடிக்க முற்சித்தை தடுத்த மனிதநேய மக்கள் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு ஜமாத்துல் உலமா நிர்வாகிகள் நன்றி தெரிவித்தார்கள்.

அன்பு உறவுகளுக்கு..! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

கல்லணை மக்கா பள்ளி வாசல் பொதுப்பணித்துறையால் ஆக்கிரமிப்பு என்று இடிக்க முற்சித்தை தடுத்த மனிதநேய மக்கள் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு ஜமாத்துல் உலமா நிர்வாகிகள் நன்றி தெரிவித்தார்கள்.





தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதிக்கு உட்பட்ட கல்லணையில் 112 ஆண்டுகால வரலாற்று சிறப்பு வாய்ந்த மக்கா பள்ளிவாசலை கல்லணையை கட்டிய கரிகால் சோழனுக்கு மணிமணடபம் கட்டுவதை காரணம் காட்டி பொதுப்பணித்துறை அதிகாரிகள் பள்ளி வாசலை ஆக்கிரமிப்பு என கூறி இடிக்க முயற்சித்தார்கள்.


இதனிடையில் மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவரும்,சட்ட மன்ற குழு தலைவருமான முனைவர்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம்24 ம் தேதி பள்ளி வாசலை பார்வையிட்டு பள்ளிவாசல் சம்மந்தமாக சட்ட மன்றத்தில் பேசுவதாக கூறினார்.

பதினான்காவது சட்ட மன்றப் பேரவையின் ஏழாவது கூட்டத்தொடரின் போது இரமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர்.ஜவாஹிருல்லாஹ் அவர்களும்,ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்களும் கல்லணை மக்கா பள்ளிவாசலை இடிக்க முற்சிப்பதாக கவன ஈர்ப்பு தீர்மாணம் கொண்டுவந்தார்கள்.


இதற்கு பதிள் அளித்த அப்போததைய பொதுப்பணித்துறை அமைச்சர் இராமலிங்கம் அவர்கள் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான மணிமண்டபம் கட்டும் இடத்தில் எந்தவித ஆக்கிரமிப்பும் இல்லை என்றும்,மக்கா மஸ்ஜித் என்னும் பள்ளிவாசலை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இவ்வரசு பாதுகாக்கும் என உறுதி அளித்தார்.


திருச்சி மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் போராட்டம் மற்றும் பேச்சு வார்த்தையாலும் மனிதநேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ களின் சட்டமன்ற கவன ஈர்ப்பு விவாதத்தாலும் கல்லணை மக்கா பள்ளிவாசல் மீட்கப்பட்து (எல்லா புகழும் இறைவனுக்கே..!)

 இதற்கு திருச்சி மாவட்ட ஜமாத்துல் உமா மாவட்ட செயலாளர்,மீரான் மிஸ்பாஹி அவர்களின் தலைமையில் ஜமாத்துல் உலமா நிர்வாகிகள் இமாம்கள் அப்துல் சலாம்,ஜாக்கீர்,லுத்புல்லா,சையது முஸ்தபா,அன்சாரி ஆகியோர்கள் பல்வேறு நிகழ்ச்சிக்காக திருச்சி வருகை தந்த ஆம்பூர் சட்ட மன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சிக்கும் நன்றியினை தெரிவித்தார்கள்.


பள்ளியை மீட்க ஒத்துழைத்த அனைத்து இஸ்லாமிய இயக்கங்களுக்கும் நன்றி....

ஜமாத்துல் உலமா நிர்வாகிகள் நமது சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்களிடம் இஸ்லாமியர்களுக்கான திருமண பதிவு சட்டம் பற்றியும், உலமாக்கலுக்கு பென்சன் தொகையை அரசு உயர்த்தி தர வேண்டுமென்றும் பல்வேறு சமுதாய விசயங்களையும் சட்ட மன்றத்திலும்,வக்பு வாரியத்திலும் பேச வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.


இந்நிழ்வின் போது மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம்,மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா,மாவட்ட பொருளாளர் இம்தியாஸ் அஹமது மற்றும் மாவட்ட துணைச்செயலாளர்கள் சிராஜ்,அப்துல் சமது,முபாரக் ஆகியோர்கள் உடனிருந்தார்கள்

இவண் :
ஃபெரோஸ் கான், தமுமுக & மமக
 திருச்சி மாநகர் மாவட்ட மக்கள் தொடர்பாளர்.

  ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது)உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. (திருக்குர்ஆன்.1:5-7)
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::