அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சவூதி வாழ் இந்திய சகோதரகளுக்கு..... அவசரம். கவனம்..
தவறினால் 2 ஆண்டு சிறை..... 1 லட்சம் ரியால்கள் அபராதம்.....!
சவூதி அரசு வழங்கியுள்ள 3 மாத கால அவகாசம் எதிர்வரும் ஜூலை 3ம் தேதியுடன் முடிவடைகிறது.
ஹஜ்,உம்ரா மற்றும் ஹவுஸ் டிரைவர் விஷா பணி மாற்றம் செய்து கொள்ளலாம்.
அதற்கு முன்பு உங்களது தகுதிகளை மாற்றிக் கொள்ளுங்கள்.
1) ஹூரூப், இக்காமா முடிந்தவர்கள், ஹவுஸ் டிரைவர் போன்றவர்கள் நல்ல தகுதியான பச்சை வண்ண நிறுவனத்தில் மாறிக் கொள்ள அரசு அனுதிததுள்ளது. இந்த அனுமதியை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.
2) இந்த சலுகை காலத்தில் அவுட் பாஸ் மூலம் தாயகம் செல்பவர்கள் உடனே அடுத்த விஷாவில் சவூதி வரலாம் என்று அரசு அனுமதித்துள்ளது. மீண்டும் சவூதி அரேபியா வர எந்தத் தடையுமில்லை.
3) முந்தைய ஸ்பான்சர்களால் இக்காமா புதுப்பிக்காமல் காலாவதி ஆனவர்களும் புதிய வேலையை தேடிக்கொள்ளலாம் முந்தைய ஸ்பான்சர் அனுமதியில்லாமல்.
சகோதரர்களே மேலும் அதிகமான சலுகைகளை அரசு வழங்கி உள்ளது தயவு செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
3 மாத காலம் சலுகை தவனை ஜூலை 3ம் தேதியுடன் முடிவடைகிறது அதன் பின் கெடுபிடிகள் கடுமையாக இருக்கும் என்றும் தண்டனைகளும் உண்டு என்று தொழிலாளர் அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சலுகை காலம் முடிந்து இருப்பவர்கள் மீது 2 ஆண்டு சிறைதண்டனை 1 லட்சம் ரியால்கள் வரை அபராதம் வரை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் உள்துறை, மற்றும் தொழிலாளர் நலத்துறை இணையத்தில் காணலாம். அல்லது இந்த 920001173 எண்ணில் சேவை மையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
More details are available on the Labor Ministry’s websitewww.mol.gov.sa or the Interior Ministry’s sitewww.moi.gov.sa or the customer service center at 920001173.
பாதிக்கப்பட்டுள்ள சகோதரர்களுக்கு தீர்வு கிடைக்க இறைவனை பிரார்த்திக்கின்றோம்....
More details are available on the Labor Ministry’s websitewww.mol.gov.sa or the Interior Ministry’s sitewww.moi.gov.sa or the customer service center at 920001173.
பாதிக்கப்பட்டுள்ள சகோதரர்களுக்கு தீர்வு கிடைக்க இறைவனை பிரார்த்திக்கின்றோம்....