அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

சனி, 11 மே, 2013

தாம்பரம் நகர தமுமுக மாணவரணி சார்பாக கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


11.05.2013 காலை 10.30மணிக்கு தாம்பரம் நகர தமுமுக மாணவரணி சார்பாக கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி தாம்பரம் எஸ்ஜி.எஸ் மஹாலில் நடைபெற்றது. 












நகர மாணவர் அணி துணைசெயலாளர் தமீம் அன்ஸாரி வரவேற்புரை நிகழ்த்தினார். நகர மாணவரணி செயலாளர் தொகுப்புரை ஆற்றினார். மாநில செயலாளர் ஏ.எஸ்.எம்.ஜுனைது அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் பேரா.டாக்டர் ஆபிதீன் அவர்கள் உயர் கல்விக்கான வழிகாட்டுதல்களை விரிவாக எடுத்துரைத்தார். 


மேலும் தாம்பரம் நகர மாணவர் அணி சார்பாக வழங்கப்படும் சிறந்த ஆசிரியருக்கான 

"இந்தியாவின் கல்வி தந்தை மௌலானா அபுல் கலாம் ஆசாத் விருது -2013" என்ற விருதினை 

தாம்பரத்தை சார்ந்த ஆசிரியர் திரு. ஸ்ரீகுமார் அவர்களுக்கு மாநில செயலாளரர் ஏ.எஸ்.எம்.ஜுனைது அவர்கள் வழங்கினார். 

இப்பகுதியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி ஆஷிக்கா பேகத்திற்கு(1161 மதிப்பெண்) நகர பொருளாளர் ஆசாத் காமில் கல்விக்கான விருதையும் சான்றிதழையும் வழங்கினார். 

1000க்கும் அதிகமாக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களை அபுபக்கர், தமீம் அன்ஸாரி, அமீனுதீன், முபாரக் ஆகியோர் வழங்கினார்கள். பேராசிரியர் ஆபிதீனுக்கு நினைவு பரிசை மாணவரணி செயலாளர் கௌஸ் பாஷா வழங்கினார். மாணவ, மாணவியரும் பெற்றோரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

விருது பெற்ற ஆசிரியர் ஸ்ரீகுமார் இப்பகுதியில் தமுமுக ஆற்றிவரும் சமூக பணிகளையும், அரசியல் எழுச்சியையும் சிலாகித்து கூறினார். 

முடிவில் நகர மாணவரணி பொருளாளர் அமீனுதீன் நன்றியுரை ஆற்றினார்

~~~~~~~~~~~~~~~~~
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!
     
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~