அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

சனி, 31 ஆகஸ்ட், 2013

தமுமுகவை கண்டு அரளும் சங்பரிவார கும்பல்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


  • தமுமுகவை கண்டு அரளும் சங்பரிவார கும்பல்!


சங்பரிவார்களின் சதி செயல்களை தமிழகத்தில் அரங்கேற்ற முடியவில்லை காரணம் தமிழகத்திலே மனிதநேயம் போற்றும் பண்பாளர்கள் இருப்பதால் என்ற உண்மையை யாவரும் அறிவோம். காவி கும்பல் தன் சதிகார செயலை எங்கேனும் செய்தால் இஸ்லாமியர்கள் துணிவோடு கண்டிப்பதோடு பல மாற்றுமத சகோதரர்களும் நடுநிலையோடு கண்டிப்பதோடும் இஸ்லாமியர்களோடு அரணாக நின்று போராடியும் வருகின்றனர்.

காவியர்களின் முஸ்லிம் விரோத போக்குகளை தமுமுக ஆங்காங்கே தடுத்து நிறுத்தி வருகிறது. சதிகாரர்களின் சதி செயலை முறியடிக்கும் வண்ணம் உடனுக்குடன் சமூக மக்களை அமைதிபடுத்தி சட்டத்தின் முன் ஜனநாயக வடிவில் எதிர்கொண்டு எதிரிகளின் சூழ்ச்சியை தவிடுபொடியாக்கி வருகிறது தமுமுக. தன்னுடைய எந்த திள்ளுமுள்ளு வேலைகளையும் தமிழகத்தில் அரங்கேற்ற முடியவில்லையே என்ற நிலைக்கு காவிகள் தள்ளப்பட்டவுடன் தற்போது தனது நிர்வாகிகளின் கொலை சம்பவங்களை முஸ்லிம்கள் மீது திருப்பிவிட்டு ஆதாயம் தேடவும் முற்பட்டு மூக்கறுபட்டு நின்றனர் காவிகும்பல்கள்.

இந்நிலையில் மீடியாக்களிடமும், பத்திரிக்கைகளிடமும் தமுமுக தீவிரவாத இயக்கம் இவர்களை தடைசெய்ய வேண்டும் என்றும் கொக்கரித்து வரும் காவிகளுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் தமுமுகவே சவாலாக நிற்கிறது. ஆகவே தமுமுகவினர் மீது கொலைவெறி தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் நேற்றயை தினம் திண்டுக்கல் 34 வது வார்டு தமுமுக தலைவர் வீட்டின் மீது கொலை வெறியோடு இந்து மக்கள் கட்சியின் பயங்கரவாதிகளால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. 

எப்படியாவது தமுமுகவினரை ஒழித்துவிட்டால் நமது வேலைகள் செவ்வனே நடத்தலாம் என்ற கணவில் வளம் வரும் காவி கும்பல்கள் தமுமுகவினரின் மீது கொலைவெறியோடு அழைந்துவருகின்றனர் என்பதை இதன் மூலம் நாம் அறியமுடிகிறது.

அட காவி பயங்கரவாதிகளா நாங்கள் அற்ப இவ்வுலக வாழ்க்கைக்காக இயங்கவில்லை. எங்களுக்கான நற்கூலி இறைவனிடம் உண்டு. நாளை இறைவனின் திருப்பொருத்தத்தை அடையவேண்டும் என்பதற்காகவும், எங்கள் சமூக மக்களை மதி கொண்டு பாதுகாக்கவேண்டும் என்பதற்காகவும் ஜனாநாயக வழியில் களம் அமைத்துள்ளோம்.

எங்களை மீண்டும் மீண்டும் சீண்டினால் சின்னா பின்னமாகிவிடுவீர்கள்...!!!

தமுமுக தமிழக முஸ்லிம்களின் வேற்கள் எங்களை அழித்துவிடலாம் என்று கணவு கண்டால் அது உங்களை நாசமாக்கிவிடும் எச்சரிக்கை....!!
- முத்துப்பேட்டை முகைதீன்
 

Inline image 1

--

رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து
எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில்
நேர்வழியை எமக்கு எளிதாக்கி
தந்தருள்வாயாக!  அல்குர்ஆன்:18:10
____________________________________________

________________________
T M M K  AL-KHOBAR. K.S.A   visit : www.tmmk.info

இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்! 
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!


சிறப்புடன் நடைபெற்ற சமூக நல்லிணக்க விழா மற்றும் ஈத் மிலன் நிகழ்ச்சி.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சிறப்புடன் நடைபெற்ற சமூக நல்லிணக்க விழா மற்றும் ஈத் மிலன் நிகழ்ச்சி.

ஆம்பூர்,ஆக.30: தமுமுக சார்பில் சமூக நல்லிணக்க விழா மற்றும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் அ.அஸ்லம் பாஷாMLA தலைமை தாங்கினார், நகர உலமா அணி செயலாளர் பயாஸ் அஹ்மத் கிராத் ஓதினார், 

நகர செயலாளர் தப்ரேஸ் அனைவரையும் வரவேற்றார், ஆம்பூர் அஹ்லே சுன்னத் வல் ஜமாத் தலைவர் மணேக்கார் கலீலுர்ரஹ்மான் முன்னிலை வகித்தார், 

இஸ்லாமிய அழைப்பாளர் மவ்லவி அப்துல்லா பிர்தவ்சி துவக்க உரையாற்றினார், எழுத்தாளர் யாழன் ஆதி வாழ்த்துரை வழங்கினார், அவர் தமது உரையில் விஞ்ஞானபூர்வமான மார்க்கம் இஸ்லாம் என்பதை குறிப்பிட்டு பேசினார், அவரை தொடர்ந்து புலவர் குணசீலன் வாழ்த்துரை வழங்கினார், 

மூத்த தலைவர் Dr.பேரா.M.H.ஜவாஹிருல்லா MLA சிறப்புரையாற்றினார், 

அவர் தமது உரையில், தமுமுக செய்து வரும் மனிதநேய பணிகளை நினைவு படுத்தியதோடு, சமூக நல்லிணக்கத்தின் அவசியத்தை நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை ஆதாரமாக காட்டி பேசியது அனைவரையும் கவர்ந்தது, இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பிறமத சகோதரர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர், 

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது, கலந்துகொண்ட பலரும் இந்த நிகழ்ச்சியை பாராட்டியதோடு, அவ்வப்போது இத்தகைய நல்லிணக்க விழாக்கள் நடத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டனர், 

இறுதியில் அனைவருக்கும் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு இஸ்லாமிய கொள்கைகளை விளக்கும் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன, முடிவில் மமக நகர செயலாளர் ஹமீத் நன்றி கூறினார், இந்நிகழ்ச்சியை வெற்றி பெற செய்ய ஆம்பூர் நகர, கிளை நிர்வாகிகள் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தனர்.

- Ambur Nazeer Ahmed









ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

புனித ரமலான் 1434 (2013) தமுமுக சார்பாக ஒரு கோடியே 43 லட்சம் ருபாய் மதிப்பிலான ஃபித்ரா வினியோகம்.

அன்பு உறவுகளுக்கு..! அஸ்ஸலாமு அலைக்கும் 

புனித ரமலான் 1434 (2013) தமுமுக சார்பாக ஒரு கோடியே 43 லட்சம் ருபாய் மதிப்பிலான ஃபித்ரா வினியோகம்.


2013ஆம் ஆண்டில் தமுமுக சார்பில் தமிழகம் முழுவதும் 1 கோடியே 43 லட்சம் ரூபாய்க்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழை முஸ்லிம்கள் பயன் அடைந்துள்ளனர்.

வளைகுடா நாடுகளில் வாழும் தமிழக சகோதரர்கள் சிறப்பாகப் பணியாற்றி சுமார் 13 லட்சம் ரூபாய் வசூலித்து அளித்த தொகையையும், தமிழகத்தில் மாவட்டம் முதல் கிளைகள் வரை உள்ள கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மிகச்சிறப்பாகப் பணியாற்றி வசூலித்த 1 கோடியே 30 லட்சம் ரூபாயையும் கொண்டு 1 கோடியே 43 லட்சம் ரூபாய்க்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளை விட அதிகப்படியான தொகையாகும்.

ஏழைகள் பயனடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் ரமலான் மாதத்தில் குறிப்பாக ரமலானின் கடைசி நாட்களில் சிறப்பாகப் பணியாற்றி, உரியவர்களுக்கு ஒன்றுக்கு பலமுறை நினைவூட்டி அவர்களிடமிருந்து ஃபித்ரா தொகையைப் பெற்று பெருநாளுக்கு முன்னதாக தலைமையகத்திற்கு தகவல் தந்து வழங்கிய வளைகுடா வாழ் தமுமுக நிர்வாகிகளுக்கும்,

அவர்களுக்கு உறுதுணையாக இருந்த தமிழக சகோதரர்களுக்கும், உள்ளூரில் சரியான முறையில் திட்டமிட்டு ஃபித்ரா தொகையை வசூலித்து, தலைமையகத்தின் அறிவுறுத்தலின்படி பணியாற்றிய மாவட்ட, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகளுக்கும், உறுதுணையாக இருந்த உறுப்பினர்களுக்கும் தலைமையகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வல்ல இறைவன், நமது பணிகளை அங்கீகரித்து, அதற்குரிய கூலியை வழங்கிட பிரார்த்தனை செய்வோம்.

அன்புடன்
(ஜே.எஸ்.ரிபாயீ)
தலைவர்



  • இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்! 
  • இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
  • நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!
"சவூதி கிழக்கு மண்டல
 தமுமுக" அல்-கோபர் கிளை 


வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

தாயகத்திலிருந்து சவூதி வரும் சகோதரர்களின் கவனததிற்கு!


அன்பு உறவுகளுக்கு..! அஸ்ஸலாமு அலைக்கும் 




தாயகத்திலிருந்து சவூதி வரும் சகோதரர்களின் கவனததிற்கு! 

வளைகுடாவில் எதவாது குற்றப்பிண்ணனியில் ஈடுபட்டு காவல்துறை மூலம் கைது செய்து (deportation Center) தர்ஹீல் மூலம் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டவர்கள், மீண்டும் வளைகுடா நாட்டிற்கு குறிப்பாக சவூதி அரேபியா வந்தால், விமான நிலையத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள் ஆகவே வளைகுடா நாடுகளில் ஏதேனும் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன் குற்றச் செயல் காரணமாக நாடு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மீண்டும் வர முயற்ச்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

கடந்த சில மாதம் முன்பு இந்த தகவலை தூதரக மீட்டிங்கில் அதிகாரிகள் அறிவுருத்தியதை கேட்டுள்ளேன். 

தற்போதைய நிலவரப்படி இந்த மாதிரியான குற்றப்பிண்ணனியில் உள்ளவர்கள் ரியாத் வந்ததில் சிலர் சிறையில் இருக்கிறார்கள். உதவி கேட்டு என்னிடம் அந்த சகோதரர்கள் தொலைபேசியில் பேசி உள்ளார்கள். (உறுதி செய்யப்பட்டதகவல்கள் இவை)

நேற்றைய தினம் ரியாத் வந்த ஏர்லங்கா விமானத்தில் 6 பேர் இந்த குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை கைது செய்யப்பட்டவரின் உறவினர் எனக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கைக்கு உதவி கோரி உள்ளார்.

நேற்று கைது செய்யப்பட்ட ஒருவரின் குற்றம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் நிளப்படம் (ஆபசப்படம்) பார்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர். 

குற்றத்தின் தன்மை, எத்தனை ஆண்டுகளுக்கு முன் என்பதை கவத்தில் கொள்ளுங்கள். 

ஆகவே சவூதி அரேபியா வரும் சகோதரர்கள் கவனத்தில் கொள்ளவும். 

ஹூஸைன்கனி, தமுமுக, ரியாத்
Hussain Ghani

"சவூதி கிழக்கு மண்டல
 தமுமுக" அல்-கோபர் கிளை 


இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்! 

இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!

நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!



வியாழன், 22 ஆகஸ்ட், 2013

Nothing radical about this Muslim movement

Nothing radical about this Muslim movement


M. H. Jawahirullah



Kalanthai Peer Mohamed’s depiction of the Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) as a radical organisation and his narration of contemporary politics in Tamil Nadu (“The changing face of Tamil Nadu’s Muslim politics”, Aug. 5) exposes his prejudiced mindset.

The TMMK, a mass-based social advocacy outfit, is neither radical nor a sectarian organisation. Its office bearers and members are drawn from various schools of thoughts in the Muslim society. The ideology of the TMMK is not imported as alleged in the interview. The TMMK’s constitution declares that all its activities will be in consonance with the Indian Constitution.

The interview fails to mention that the formation of the Hindu Munnani in the early 1980s, signalled through the Mandaikadu riots, was the turning point for communal harmony in Tamil Nadu. The post-Babri Masjid demolition period saw the Muslim community being at the receiving end in several aspects. The Indian Union Muslim League (IUML) and the Indian National League (INL) turned a blind eye to the sufferings of the Muslim community. It was at this juncture that certain Muslim social activists decided to struggle for the rights in a constitutional and democratic manner. This led to the formation of the TMMK in 1995.

Bridge builder

TMMK made sincere efforts to build bridges across communities. Through its wide network, the TMMK is the largest donor of blood in the State. The majority of the recipients of our blood are our non-Muslim brethren. The 100-odd ambulances of the TMMK have saved the life of several Indians irrespective of religion or caste in places inaccessible to commercial ambulances. Former Chief Minister M. Karunanidhi was so impressed by our ambulance service that he donated two ambulances from his own funds. When the tsunami reduced coastal Tamil Nadu to a graveyard, the relief measures of the TMMK where appreciated by one and all, including the Prime Minister.

The core point of the interview is the defective assessment that the Muslim community has no representatives to articulate the moderate viewpoint. The TMMK has stood at the forefront for all issues concerning the people of Tamil Nadu in general and Muslims in particular. The TMMK also initiated, agitated and achieved the 3.5 per cent exclusive reservation for the community.

The interview misrepresents few instances of protest to bring disrepute to the TMMK. Innocence of Muslims was a hate film deliberately produced to denigrate Islam and the TMMK’s justifiable constitutional protest against such an insensitive act has been misrepresented in the interview. In its opposition to the film Vishwaroopam, the TMMK used constitutional instruments, the executive and the judiciary, to get its grievances redressed.

Regarding the Amina Wadud episode, the TMMK had never issued any threats to anyone. However, I would also like to point out that an overwhelming majority of Muslims consider her views outside the teachings of Islam. That the Islamic studies department created by the endowment of the JBSA Trust chose to invite her is highly regrettable. It is akin to the Periyar study chair at a university inviting an RSS ideologue to speak on Periyarism.

While describing the murder of Selvaraj at Coimbatore in 1997 and the subsequent bomb blasts, the interview conveniently forgets to mention the murder of 19 Muslim youths in the aftermath of the murder and the looting of Muslim establishments and houses. Then it mentions that this incident was a turning point in the communalisation of Muslim politics in Tamil Nadu, which is not true. When the DMK allied with the BJP in 1999, the massive conference on July 4 that year, entitled Muslims Right to Livelihood conference, conducted by the TMMK at the Marina provided the platform for the AIADMK to form a secular front against the DMK-BJP alliance.
Wide support

Yes, the face of Muslim politics has changed but not in a radical manner. Today, the Manithaneya Makkal Katchi (MMK), the political party founded by members of the TMMK is a secular party committed to weeding out corruption. The MMK enjoys the support of not only the Muslim community but also all other communities, which is far wider and stronger than what the IUML and the INL enjoyed in their heydays. This is proved by the fact that the IUML and the INL contested elections in the symbol of either the DMK or the AIADMK whereas the MMK fought the Assembly elections in its own symbol and earned popular support to win two seats. Is a predominantly Muslim party fighting the elections on its own symbol extreme politics? To subjectively brand anything radical may bring fame to a writer but history bears evidence to truth always.

(The writer is Legislative Party Leader, Manithaneya Makkal Katchi, and senior leader, Tamilnadu Muslim Munnetra Kazhagam.)

Kalanthai Peer Mohamed responds:

My interview was aimed at not only presenting a critical perspective on Muslim organisations but also to express anguish at how their activities have impacted upon a plural society and created fault lines within the community. The fall of the IUML and the rise of Wahhabism have become testing times for Muslims in Tamil Nadu. I reiterate that Muslim fundamentalism is to an extent a response to Hindutva. But should this blind us to the fact that Wahhabists have seized this opportunity to pose as the sole spokesmen of Muslims? TMMK needs to work on more constructive methods to bring together Muslims. TMMK has the potential to do so but the fact that the silencing of Amina Wadud gives such comfort to its senior leader shows that it has some distance to go. Is there any Prophetic tradition that prohibits expression of different viewpoints? Will not the silencing of Dr. Wadud give our fraternal communities the impression that Islamic scholars have no answers to her questions? The end result of protesting against Vishwaroopam was to make a blockbuster of a sure flop. Muslim organisations need to work toward ridding the unfair slurs cast on the community and build a fresh understanding among communities in a plural society.

(Kalanthai Peer Mohamed is a Tamil writer, commentator and observer of Muslim politics and culture.) 

Thanks to: #TheHInduNewspaper

த மு மு க வின் தொடக்கமும்... கோவையில் அதன் செயல்பாடுகளும்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இறைவனின் திருப்பெயரால்

த மு மு க வின் தொடக்கமும்... கோவையில் அதன் செயல்பாடுகளும்.


இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு சிறை கொட்டகையில் வதை அனுபவித்து கொண்டு இருக்கும் இந்த கால கட்டத்தில் த மு மு க என்னும் ஒரு அமைப்பு இருந்து கொண்டு இருக்கிறது. பலர் கேட்கலாம் இவுங்கெல்லாம் அமைப்பை வைத்து கொண்டு என்ன கிழித்தார்கள் என்று .

அத்தகைய வாதிகளின் நினைவிற்காக இந்த பதிவு :

அது ஒரு கால கட்டம் . ஆம்.... இஸ்லாமியர் இந்தியாவின் சுதந்திரத்துக்காக வெள்ளையர்களை கடுமையாக எதிர்த்து போராடி கொண்டு இருந்தனர். போராட்டம் என்றால் காலையில் தொடங்கி மாலையில் முடிவது போல் அல்ல...... காலையில் தொடங்கும் போராட்டம் எப்போது முடியும் என்று கூட யாருக்கும் தெரியாது.... காந்தி சொன்னார் “ஆங்கிலேயரின் தயாரிப்புகளை வாங்காதீர் என்று ஆனால் அதற்க்கு முன்னரே இந்திய முஸ்லிம்கள் யாரும் எந்த தலைவர்களும் சொல்லாமலே எதிரி பேசும் ஆங்கில மொழியை நாம் கற்க வேண்டாம் என்று அந்த மொழியை கூட நாம் புறக்கணித்தோம். பிரிட்டிஸ்க்காரன் ஒரு விசியத்தில் தெளிவாக இருந்தான் யாரை வேண்டும் என்றாலும் விலைக்கு வாங்கி விடலாம் . 

ஆனால் இந்த முஸ்லிம்களை மட்டும் விலை பேச முடியாது. ஆகவே அவர்களுக்கு சலுகை என்ற அளவில் இடஒதுக்கிட்டை கொடுப்போம். அப்பொழுதாவது அவர்களின் போராட்டம் குறையுமா என்று பார்ப்போம் என்று நினைத்து அப்போது பிரிட்டிஷ் அரசாங்கம் இடஒதுக்கிடு அளித்தது. ஆனால் முஸ்லிம் சமூகம் அதை பற்றி ஏதும் கவலை படாமல் உறுதியாக போராடியது. என்ன காரணம்..... இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் . நம்முடைய அரசை நாமே தீர்மானிக்க வேண்டும். இந்தியர்களே ஆளும் நிலை வர வேண்டும். என்று நினைத்து .....

காலங்கள் சென்ற போராட்டங்கள் வென்றன.. அரசியல் சதி ஆரம்பித்தது. நம்பி இருந்தவர்களை இந்துத்துவாதிகள் கழுத்தருப்பு செய்தனர். பாகிஸ்தான் உருவாகியது. ஆனாலும் நாங்கள் இந்த மண்ணுக்கு சொந்தமானவர்கள் நாங்கள் இங்கேயே இருப்போம் என்று நாம் இங்கேயே இருந்தோம். இருந்தும் வருகிறோம்.

காலங்கள் செல்ல செல்ல துரோகங்கள் அதிகமாக நடந்தது. ஆம்... நமக்கான சலுகையை கூட பறித்துக்கொண்டனர். இரண்டாம் தர குடிமக்களாக நம்மை நினைக்க ஆரம்பித்தனர். நடுநிலை வாதிகள் கூட நமக்கு ஆதரவு தரக்கூடாது என்று தீவிரவாத முத்திரையை நம் மீது குத்தினர். கலங்க வில்லை நாம்... ஓய்ந்து போக வில்லை நாம்...... போராடியே பழகிய நமக்கு போராட தடை விதித்தனர். தடைகளை உடைக்க முடியாமல் திணறினோம். அந்த காலகட்டங்களில் நாம் 1000 கணக்கான முஸ்லிம்களை இழந்தோம். நம்மை வழிநடத்த யாரும் இல்லாத நிலை..... நிலை குலைந்து நின்றோம்.

தமிழ்நாட்டில் மண்டைக்காடு கலவரத்தில் நம்மை நோக்கிய அந்த பாசிச அம்புகள் வந்து விழுந்தன. என்ன செய்வது என்று தெரியாமல் எந்த எந்த அரசியல் வாதிகளியோ நாம் நம்பினோம். அவர்கள் நம்மை ஓட்டாக பார்த்தனர். மனிதராக பார்க்க மறந்தனர்.

வரலாற்றின் கருப்பு நாளாக 1992 டிசம்பர் 6 அன்று அயோத்தியில் இறை இல்லத்தை பாசிச வெறி பிடித்த மிருகங்களால் இழந்தோம். நீதியை கேட்டோம் . அதனாலே சிறைக்கு சென்றோம். இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். காவல் துறையோ நம்மீது வழக்குகளால் மென்று தின்றனர்.

கேட்பதற்கு நாதி இல்லை..... நர வேட்டை மனிதர்களுக்கு கொளுத்த வேட்டை......

வருடங்கள் சென்றது..... இந்திய முஸ்லிம்களின் இந்த நிலையை நினைத்து இஸ்லாமியகளுக்காக குரல் கொடுக்க சமரசம் இல்லாத ஒரு அமைப்பு நமக்கு தேவை என்ற நோக்கில் தமிழ்நாட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் 1995 ஆகஸ்ட் மாதம் அன்று ஏக இறைவனின் திருநாமத்தை சொல்லி துவங்கினோம்.......

முதலில் முஸ்லிம்களிடையே நம்முடைய வரலாற்றை கொண்டு சென்றோம். நம்முடைய அவல நிலையை எடுத்து சொன்னோம் . நமக்கான உரிமைகளை பற்றி அரசியல் பாடம் நடத்தினோம். வீட்டில் இருந்தவர்களை வெளியே கொண்டு வந்தோம். முடங்கி கிடந்தவர்களை முழக்கம் எழுப்ப வைத்தோம்.

முதல் போராட்டமாக 1995 பாபர் மசூதி இடிப்பை கண்டித்து முழு கடையடைப்பு போராட்டம் நடத்தினோம்.

இக்பால் திடலில் மாபெரும் பொது கூட்டம் நடத்தினோம்
இட ஓதுக்கிடு தேவையை வலியுறுத்தி வின்சென்ட் ரோட்டில் பொதுக்கூட்டம் நடத்தினோம்.

இஸ்லாமியர்கள் மீது தடா என்ற கொடிய சட்டத்தை எதிர்த்து போராட துணிந்தோம். அதற்காக

1996 கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தை நடத்தினோம். யார் வருவார்கள் என்று நினைத்து ஓய்வாக இருந்த கவர்னர் மாளிகையை நாம் முற்றுகை இட்டோம். அரசுகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். எப்படி இவ்வளவு பேர் வந்தார்கள் என்று வியந்தனர்.

1997 சஹீத் பழனி பாபா படுகொலையை கண்டித்து அமைதி பேரணி

1997 நவம்பர் கோவையில் முஸ்லிம்கள் மீது கடுமையான வன்முறை தாக்குதல். துப்பாக்கி சூடு..... கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2.75 கோடி ரூபாய் வரை நிதி உதவி செய்தோம்.

பள்ளி செல்லும் ஏழை மாணவர்களுக்காக கல்வி உதவி தொகை, நோட்டு புத்தகம் விநியோகம் இன்று வரை கொடுத்து கொண்டு இருக்கிறோம்.

1999 சென்னையில் முஸ்லிம்கள் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தி அனைத்து அரசியல் கட்சிகளையும் மிரள வைத்தோம்.

2001 ரத்த தான முகாம்களை நடத்தி இந்திய அளவில் சேவை விருதுகளை வாங்கினோம். இன்று வரை தமிழகத்தில் அதிகமான ரத்த தானம் செய்வது த மு மு க சகோதர்களே....

தொடர்ந்து இலவச மருத்துவ முகாம் நடத்தி கொண்டு வருகிறோம்.
2 ௦0 0 2 தஞ்சையில் மாபெரும் கோரிக்கை பேரணி நடத்தினோம்.
2004 டிசம்பர் 6 பாபர்மசூதி மீட்க கோரி டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியது த மு மு க.

2004 சுனாமியில் தமிழகம் பாதிக்கப்பட்ட போது நிவாரண பணிகளையும் மீட்பு பணிகளையும் த மு மு க சகோதர்கள் பணியாற்றிய விதத்தை யாரும் மறுக்க முடியாது.

2006 பிப்ரவரி 28 சிறைவாசிகள் விடுதலை செய்ய கோரி மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் செய்தோம். கோவையில் மட்டும் சுமார் 10000 மேல் கைதாகினோம்.

2 0 0 7 மார்ச் 7 இட ஓதுக்கிடு கோரி டெல்லியில் பேரணி மட்டும் பொதுக்கூட்டம் . பிரதமரை சந்தித்து மனு கொடுத்தோம்.

த மு மு கவின் தொடர் போராட்டங்களினால் தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கிடு 3.5 சதவீதம் அப்போதைய முதல் கருணாநிதியால் வழங்கப்பட்டது. அதற்காக அவருக்கு முதல்வருக்கு முஸ்லிம் மக்கள் சார்பில் நன்றி அறிவிப்பு மாநாடு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்தினோம்.

அரசியல் உரிமையை நாமே பெரும் வண்ணம் முஸ்லிம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக 2 0 0 9 சென்னை தாம்பரத்தில் மக்கள் வெள்ளத்தில் மனிதநேய மக்கள் கட்சி என்று பெயரில் புதிய அரசியல் கட்சியை துவங்கினோம்.

அதை தொடர்ந்து தனித்தே தேர்தலை சந்தித்து கணிசமான வாக்குகளை வாங்கி ஆளும் கட்சிகளின் கவனத்தை ஈர்த்தோம்.

2 0 1 0 திருப்பூரில்இடஒதுக்கிடு, மது விலக்கு , விலைவாசி உயர்வு போன்ற மூன்று கோரிக்கையை முன்வைத்து மாபெரும் மாநாட்டை நடத்தினோம்.

சட்டமன்ற தேர்தலை எதிர் கொண்டு மூன்று இடங்களில் போட்டி இட்டு ஆம்பூர், ராமநாதபுரம் ஆகிய இரண்டு இடங்களை வென்றோம்.
சட்ட சபையில் ஒடுக்கப்பட்ட மக்களின் ம்குரலாய் ம ம க ஒலித்து கொண்டு இருக்கிறது.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கிடு கேட்டு பல முறை நம்முடைய மூத்த தலைவர் பேராசிரியர் ஜவாகிருல்லா அவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

பின்பு நடந்த உள்ளாட்சி தேர்தலை தனியே எதிர்கொண்டு தமிழ்நாடு முழுவதும் 600 க்கும் மேற்ப்பட்ட இடங்களை பெற்றோம். அதில் கோவை மாநகராட்சி 8 6 வது வார்டில் ம ம க வின் சாதிக் அலி அவர்கள் வெற்றி பெற்றார்.

அவருடைய சேவை பணிகளை இந்து நாளிதழ் முதற்கொண்டு பாராட்டி வருகிறது. அவருடைய வார்டில் இன்றுவரை சுமார் 3 கோடிக்கும் மேல் வளர்ச்சி பணிகளை கொண்டு வந்துள்ளார்.

கோவை த மு மு க சார்பில் குனியமுத்தூர் அப்துர் ரஹீம் மருத்துவமனை சாரமேடு ரோட்டில் சம்சுகனி மருத்துவமனை கஸ்துரி கார்டன் பகுதியில் ஒரு மருத்துவமனை என மாநிலத்திலே மூன்று இலவச மருத்துவ மனைகளை பொது மக்களுக்காக அர்பணித்து சேவை புரிந்தோம்

முல்லைபெரியறு பிரச்சனையை முன்னிறுத்தி விவசாய மக்களை ஒன்றிணைத்து முண்டாசு கட்டி போராட்டம் நடத்தினோம்.
அசாம் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

பூரண மதுவிலக்கை வலிறுத்தி ஒரு கோடி மக்களை சந்தித்து பரப்புரை.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை கண்டித்து பல போராட்டங்கள். அதன் தீமைகளை மக்களுக்கு விளக்கி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் பிரச்சாரம்..

கூடங்குளம் அணு உலையை மூட கோரி கண்டன ஆர்ப்பாட்டங்கள். போராட்டங்கள்....

கூடங்குளம் மக்களை தாக்கிய காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

இறைத்தூதரை இழிவு படுத்தி எடுக்கப்பட்ட திரைபடத்தை தடை செய்ய கூறி உலகே வியக்கும் வண்ணம் போராட்டம்.

மதுக்கடைகளை மூட கோரி பூட்டு போடும் போராட்டம்.

ஈழத்தில் தமிழர்களை கொண்டு குவித்த ராஜபக்சே வை தண்டிக்க கோரி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்.

கோவையில் நிலவிய மின்வெட்டை கண்டித்தும் ஊழலை எதிர்த்தும் , மது விலக்கை வலியுறித்தியும், அந்நிய முதலிட்டை எதிர்த்தும், மிக முக்கியமாக இட ஒதுக்கிட்டை வலியுறித்தியும் கோவை மாநகர் மாவட்டம் சார்பில் வ.உ.சி மைதானத்தில் பிரம்மாண்ட மாநாட்டை ம ம க சார்பில் மக்கள் வாழ்வுரிமை மாநாடு நடத்தினோம். தடைகளை தாண்டி மாபெரும் பேரணியை நடத்தினோம். ஆட்சியாளர்களுக்கு நம்முடைய பலத்தை நிருபிதோம்.

தீவிரவாதி முத்திரை குத்தி அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து தமிழ்நாடு ஹோட்டல் முன்பு தடைகளை மீறி போராட்டம் நடத்தினோம்.

கோவையில் கலவர அபாயம் உருவாக்கி நர வேட்டை ஆட நினைத்தவர்களின் சதி செயலை முறியடித்தோம்.

இரண்டு சிறுநிரகமும் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் கோவை சிறைவாசி அபுதாகிரை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம் செய்தோம்

அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யும் காவல்துறை போக்கை கண்டித்து லாரிப்பேட்டை பகுதியில் அனைத்து அமைப்புகளின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தி உண்மைகளை மக்கள் முன்னே கொண்டு சென்றோம்.

2 0 1 3 ஜூலை 6 அன்று பல தடைகளை எதிர்கொண்டு முப்பெரும் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை கோட்டையை நோக்கி கோரிக்கை பேரணியை நடத்தினோம்......

இன்னும் இன்னும் விழித்திருக்கும் நேரமெல்லாம் சமுதயதிற்காக உழைக்கும் த மு மு க – ம ம க வளர்ச்சி என்பது எங்களுடைய தியகங்ககள் மட்டும் அல்ல உங்களின் ஆதரவும் தான் . கேட்க ஆளில்லாமல் இருந்த இந்த சமுதாயத்தை இன்று பாதுகாப்பாக வைத்திருக்கும் நிலைக்கு கொண்டு வந்தது த மு மு க வும் அதன் போராட்டங்களும்.....

இஸ்லாமிய அமைப்பெல்லாம் இஸ்லாமியர்களுக்காக என்ன செய்கிறது என்று கேள்வி கேட்பவர்கள் இதெல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டும். நாம் கேள்வி கேட்க கூட உரிமை இல்லாமல் இருந்த சமூகம். இன்று அனைத்து துறைகளிலும் இஸ்லாமியர்களை புறகணிக்க முடியாத சக்தியாக மாற்றி இருக்கிறது த மு மு க........

நீங்களும் உணர்ந்து இருப்பீர்கள்..... உங்களின் பங்களிப்பும் எங்களுக்கு இன்னும் தேவை.... ஆம் நிதியாகவோ.... அல்லது உடல் உழைப்பாகவோ..... தாருங்கள்... தாருங்கள்....

நாம் வாழும் வாழ்கையை எதிர்காலத்திற்கு கொடுத்து செல்லாமல் புதிய எதிர்காலத்தை நம்முடைய பிள்ளைகளுக்காக உருவாக்குவோம்.........

இன்னும் நாம் செல்ல வேண்டிய தொலைவு அதிகமாக இருக்கிறது. அதை ஒற்றுமை என்னும் கயிறை பற்றி ஒருங்கிணைந்து செல்வோம். வாய்ப்புள்ளவர்கள் வந்து இணையுங்கள். வாய்ப்பற்றவர்கள் நிதி அளித்து உதவுங்கள் .......

வஸ்ஸலாம்.....

அக்சயா நிசார்
ம ம க துணை செயலாளர்,
பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தி தொடர்பாளர்
கோவை மாநகர் மாவட்டம்...

புதன், 21 ஆகஸ்ட், 2013

பிற மதத்தவர்களைவிட முஸ்லிம்கள் தான் மிகவும் ஏழ்மையானவர்கள்: கணக்கெடுப்பு

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
பிற மதத்தவர்களைவிட முஸ்லிம்கள் தான் மிகவும் ஏழ்மையானவர்கள்: கணக்கெடுப்பு

டெல்லி: இந்தியாவில் உள்ள பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களில் முஸ்லிம்கள் தான் மிகவும் ஏழையாக இருப்பதாக அரசு கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் உள்ள பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்து அரசு கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. அதில் யார்யார் ஏழ்மையில் கஷ்டப்படுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

கணக்கெடுப்பு முடிவு வருமாறு,

முஸ்லிம்கள்

இருப்பதிலேயே முஸ்லிம்கள் தான் மிகவும் ஏழையாக உள்ளார்களாம். அவர்களில் தனிநபர் மீதான ஒரு நாள் சராசரி செலவு ரூ.32.66 ஆகும்.
 

சீக்கியர்கள்

சீக்கியர்கள் பிற மதத்தவரை விட நன்றாக வாழ்கிறார்களாம். அவர்களில் தனிநபர் மீதான ஒரு நாள் சராசரி செலவு ரூ.55.30 ஆகும்.
 

இந்துக்கள்கிறிஸ்தவர்கள்

இந்துக்களில் தனிநபர் மீதான ஒரு நாள் சராசரி செலவு ரூ.37.50 ஆகவும்கிறிஸ்தவர்களின் செலவு ரூ. 51.43 ஆகவும் இருந்துள்ளது.
 

மாதச் செலவு

2009-2010ல் சீக்கியர்களில் தனிநபர் மீதான சராசரி மாதச் செலவு ரூ.1, 659, அதே சமயம் முஸ்லிம்களின் செலவு ரூ.980 ஆக இருந்துள்ளது.
 

கிராமங்கள்

கிராமப்புறங்களில் முஸ்லிம்களில் தனிநபர் மீதான சராசரி மாதச் செலவு ரூ.833, இந்துக்களுக்கு ரூ.888, கிறிஸ்தவர்களுக்கு ரூ.1, 296 மற்றும் சீக்கியர்களுக்கு ரூ.1, 498 ஆகும்.

நகர்ப்புறம்

நகர்ப்புறங்களில் வாழும் முஸ்லிம்களில் தனிநபர் மீதான சராசரி மாதச் செலவு ரூ.1, 272,இந்துக்களுக்கு ரூ.1, 797, கிறிஸ்தவர்களுக்கு ரூ.2,053 மற்றும் சீக்கியர்களுக்கு ரூ.2,180 ஆகும்.

"மாணவர் இந்தியா" வைச் சேர்ந்தவருக்கு சமூக சேவகர் விருது!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...



"மாணவர் இந்தியா" வைச் சேர்ந்தவருக்கு சமூக சேவகர் விருது!

சென்னை புதுக்கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றிய "மாணவர் இந்தியா"வைச் சேர்ந்த மாணவர் அதிரை ஷேக் அப்துல் காதருக்கு இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் சிறந்த சமூக சேவகருக்கான விருது வழங்கப்பட்டது.

சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களில் இவருக்கு மட்டுமே மாநில அளவிலான இந்த விருது கிடைத்துள்ளது. இதை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. வி. ராமசுப்ரமணியன் வழங்கினார்.


ஜெனிவா மாநாட்டில் 64வது ஆண்டு விழாவையொட்டி இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது பெற்ற எஸ். ஷேக் அப்துல் காதர் மமக தலைமையகம் வந்து பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி மற்றும் பொருளாளர் ஒ.யு.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.
Thamimun Ansari




இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்! 
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!


திங்கள், 19 ஆகஸ்ட், 2013

பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) மறைந்தார்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) மறைந்தார்.

إنا لله وإنا إليه راجعون.........

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். 

அவரின் மறுமைக்காக இறைவனிடம் பிராத்தனை செய்யவும்


குடும்பம் தினர் அனவைருக்கும் ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய 

பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!' 


அன்னாரின் பாவங்கள் அனைத்தும் மன்னித்து ..சுவர்க்கம் 

தருவானாக ! மர்ஹூம் ஹக்கில் உன்னிடமே இருகரம் எந்த வைப்பாயாக !

இறைவா ! இம்மையிலும் மறுமையிலும் உனது அடியார்களுக்கு 

உனது பேரருளையும் கருணையையும் பொழிவாயாக !

ஆமீன் ,அமீன், யாரப்பல் ஆலமீன். . ....


--"ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், 
பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே)
மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)'

Dr.Abdullah(P-Dasan) in Khobar & Dammam Saudi Arabia Dawa Prog.



  



வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

தமுமுக வின் சுதந்திர தின கொடியேற்று மற்றும் மருத்துவ சேவைகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தமுமுக வின் சுதந்திர தின கொடியேற்று மற்றும் மருத்துவ சேவைகள்
















  • ஏனங்குடி கிளை தமுமுக சார்பில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
  • கோவை செல்வபுரம் தமுமுகவின் சார்பாக 67 வது சுதந்திர தின விழா 
நடைபெற்றது இதில் தமுமுகவின் மாநில செயளாலர் கோவை செய்யது அவர்கள் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார் அருகில்.கோவை சதாம்

  • திருப்பூர் மாவட்டம் சேரன்காடு TMMK கிளை சார்பில் சதந்திர தின விழா
திருப்பூர் மாவட்டம் சேரன்காடு கிளை சார்பில் தேசிய கொடியை ம.ம.க மாவட்ட செயலாளர் எம்.ஜே.அபுசாலிஹ் அவர்கள் ஏற்றிவைத்தார், தமுமுக மாவட்ட செயலாளர் ஜே.முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட துணைசெயலாளர் ஏ.செய்யது, ம.ம.க மாவட்ட துணை செயலாளர் ஏ.ஷாஜஹான் மற்றும் கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
  • கடலூர் மாவட்ட தமுமுக செயலாளர் V.M.ஷேக் தாவுத் அவர்கள் டொமினிக் பள்ளியிலும், நகராட்சி அலுவலகத்திலும் நடைப்பெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டார்
  • தோப்புத்துறை ஆறுமுச்சந்தியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தோப்புத்துறை (கிளை) சார்பில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது...
  • நெல்லை மேற்கு மாவட்டம் தென்காசி கிளையில் சார்பாக இன்று 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்காசியில் 3 இடங்களில் த.மு.மு.க சார்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இராயபுரத்தில்.....


இன்று 67 வது (15/08/2013) சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை இராயபுரத்தில் தமுமுக தலைவர் ஜே எஸ் ஆர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்
  • மதுரை புறநகர் மாவட்ட தமுமுக சார்பில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
  • புளியங்குடி த.மு.மு.க கீழப்பள்ளிவாசல் கிளை சார்பாக நடந்த ரத்ததான முகாமில் 20 கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் செய்தனர் ..30 கும் மேற்பட்டவர்கள் ரத்தவகை கண்டறிந்துள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமுமுக சார்பில் ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு உணவு பொருட்கள் வினியோகம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் உள்ள உள்நோயாளிகள் அனைவருக்கும் தமுமுக மருத்துவ சேவை அணி சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. பொருட்களை மமகவின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினரும், வக்பு வாரிய உறுப்பினருமான அ.அஸ்லம் பாஷா வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் Dr.நூர்சய்யித், மமக மாவட்ட செயலாளர் நசீர் அஹ்மத், தமுமுக நகர செயலாளர் தப்ரேஸ், Dr.முஸ்தாக் அஹ்மத், Dr.பரத், து.தலைவர் சாதிக், து.செயலாளர்கள் அப்ரோஸ், அஷ்ரப் அலி, மருத்துவ சேவை அணி து.செயலாளர் நபீல் அஹ்மத், பொருளாளர் பாருக். இளைஞரணி செயலாளர் அன்வர் மற்றும் நகர கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்,
  • வாணியம்பாடியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு தமுமுக சார்பில் அரசு மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு உணவு பொருட்கள் வினியோகம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு வாணியம்பாடி அரசு மருத்துவ மனையில் உள்ள உள்நோயாளிகள் அனைவருக்கும் தமுமுக மருத்துவ சேவை அணி சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. பொருட்களை நகர கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு வழங்கினர்.



தென் சென்னை மாவட்ட மனிதநேய ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர் சங்கம் சார்பில் சென்னை ஆசாத் நகர் கிளை கலெக்டர் காலனியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா MLA கலந்துக்கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வின் போது தென் சென்னை மாவட்ட தமுமுக, மமக, மனிதநேய ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டர்


ஆம்பூர், 15- ஆகஸ்ட்: 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் தேசிய கொடியை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினரும், வக்பு வாரிய உறுப்பினருமான அ.அஸ்லம் பாஷா ஏற்றிவைத்தார், நிகழ்ச்சியில் மமக மாவட்ட செயலாளர் நசீர் அஹ்மத், தமுமுக நகர செயலாளர் தப்ரேஸ், மமக நகர செயலாளர் ஹமீத், து.தலைவர் சாதிக், து.செயலாளர்கள் அப்ரோஸ், அஷ்ரப் அலி மற்றும் நகர கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.




டெல்டா மாவட்டங்களில் தமுமுக சார்பாக சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி..

  • மதுக்கூர் தமுமுக அலுவலகத்தில்
மதுக்கூர் தமுமுக அலுவலகத்தில் சுகந்திர தினத்தையொட்டி தேசியக்கொடி ஏற்றப்பட்டது.நகர தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில்,மமக செயலாளர் E.S.M.ராசிக்,தமுமுக செயலாளர் E.S.M.ராசிக்,பொருளாளர் இலியாஸ்,மாவட்ட பேச்சாளர் பவாஸ்,பொருப்பாளர்கள் ராசிக்,ரியாஸ்,அமீரக பொருப்பாளர் பைசல் அகமது ஆகியோர் முன்னிலையில் அமீரக பொருப்பாளர் என்.சர்புதீன் அவர்கள் கொடியேற்றி சிறப்பு செய்தார்.
  • கட்டிமேடு தமுமுக கிளை சார்பில் சுதந்திர தினக்கொடி யேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. கொடியினை மருத்துவர் ஹனீபா அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
  • கொடிக்கால்பாளையம், திருவாரூர் நகர தமுமுக


கொடிக்கால்பாளையம், திருவாரூர் நகர தமுமுக சார்பில் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி காலை 9 மணி அளவில் கொடிக்கால்பாளையம் தமுமுக அலுவலகம் முன்பு நடைபெற்றது. கொடியை தமுமுக அபுதாபி மண்டல பொருப்பாளர் அப்துல் காதர் அவர்கள் கொடியை ஏற்றி வைத்தார். உடன் தமுமுக நகர செயலாளர் ஹலிலூர் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி நகர மன்ற உறுப்பினர் கலிபுல்லா, மனிதநேய ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர் சங்கம் தலைவர் ஆபிதின், முன்னால் மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் செய்யது அப்துல் பத்தாஹ் அகியோர் உடன் இருந்தனர். கொடி ஏற்றி முடிந்தவுடன் தமுமுக அபுதாபி மண்டல பொருப்பாளர் அப்துல் காதர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினர் பின்னர் இனிப்பு வழங்கப்பட்டது. 
  • நாகப்பட்டினம் நகர தமுமுக சார்பாக தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின கொண்டாட்டம்.




  • குவைத் இந்தியதூதரகத்தில் இந்தியசுதந்திரதின நிகழ்ச்சி தமுமுக பங்கேற்பு
இறைவன் துணையோடு இன்று காலை குவைத் இந்தியதூதரகத்தில்
இந்தியசுதந்திரதின நிகழ்ச்சியில் தமுமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சகோதரர் கொள்ளுமேடு சலீம் ரப்பானி, சகோதரர் நெல்லை தாழையூத்து பீர் மரைக்காயர் 
சகோதரர் எருமைப்பட்டி கமருத்தீன் சகோதரர் திருமங்கலம் இலாஹி ஆகியோர் படத்தில் உள்ளனர்.




இந்தியா எங்கள் தாய்நாடு! இஸ்லாம் எங்கள் வழிபாடு!


சுதந்திர தின சிந்தனைகள்!

என் தாய்நாடு 67 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. வற்றாத ஜீவா நதிகள், அழகான மலை தொடர்கள், எழில்மிகு கடற்கரைகள், கொஞ்சும் வயல்வெளிகள், பசும் காடுகள், பள்ளத்தாக்குகள் என இயற்கையின் எல்லா பகுதிகளையும் உள்ளடக்கிய தேசம் இது.

பல்வேறு மொழிகள், மதங்கள் இனங்கள் பல்வேறு தோற்றங்களை உடைய மனிதர்கள் என வேற்றுமையில் ஒற்றுமையை பின்பற்றி நடக்கும் தேசம் இது! இங்கே நரேந்திர மோடி, பிரவின் தொகாடியா, போன்ற மதவெறியர்களும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அது சார்ந்த பயங்கரவாத அமைப்புகளும் என் தேசத்தின் கரும்புள்ளிகள். ஆனால் அவர்கள் மிகவும் சிறுபான்மையினர். ஆறுதல் அளிக்கும் வகையில் எமது பெரும்பான்மை இந்து சொந்தங்கள் மனிதநேயத்தை மதிப்பவர்கள். நாங்கள் எல்லோரும் இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதில் பூரிப்படைகிறோம்.

நான் ஒரு இந்திய முஸ்லிம் என்பதில் பெருமைப்படுகிறேன். துரதிர்ஷ்டவசமாக மோடி போன்றவர்கள் பிரதமராக வந்தாலும், அவரை போன்றவர்களை ஜனநாயக வழியில் எதிர்த்து போராடும் உரிமையும், துணிச்சலும் எனக்கு உண்டு. என் கருத்துக்கு ஆதரவாக திரண்டு எழு, பெரும்பான்மை இந்திய மக்கள் தயாராக உள்ளனர். காரணம் சமய நல்லிணக்கமும், மனிதநேயமும் பெரும்பான்மை இந்தியர்களின் உணர்வுகளாகும்.

பல அரபு நாடுகளில் கோலைகளாக வாழும் அரபு மன்னர்களை எதிர்த்து அங்குள்ள குடிமக்களால் ஒரு கேள்வி கூட கேட்க முடியவில்லை. ஆனால் என் தாய் நாட்டில் நான் யாரை எதிர்த்தும் கேள்வி கேட்க முடியும். பல முஸ்லிம் நாடுகளில் பள்ளிவாசல்களில் சுதந்திரமாக வெள்ளிக்கிழமைகளில் சொற்பொழிவாற்ற முடியவில்லை. ஆனால் எனது நாட்டில் அதற்கு முழு சுதந்திரம் உண்டு. வழிபாட்டு தளங்களின் அருகில் ஒரு மதுக்கடையோ, விபசார விடுதியோ இருந்தால் அதை மக்கள் சக்தியோடு அப்புறப்படுத்த முடியும். இந்த நிலை மற்ற நாடுகளில் இல்லை. என்னால் இங்கு எந்த சர்வாதிகாரத்தையும், ஏகாதிபத்தியத்தையும், அரச வன்முறைகளையும் எதிர்த்து போராட முடியும்.

என்னோடு கரம் கோர்க்க சமூக நீதி போராளிகள், மனித உரிமை ஆர்வலர்கள், மனசாட்சி உள்ள அரசியல்வாதிகள், நேர்மையான அதிகாரிகள், பண்பு மிக்க பொதுமக்கள் என பலரும் உண்டு.

அதனால்தான் சொல்கிறேன். நான் ஒரு இந்திய முஸ்லிம் என்பதில் பெருமைப்படுகிறேன்.

இந்த தருணத்தில் நாட்டு விடுதலைக்காக போராடிய குஞ்சாலி குட்டி, மருதநாயகம், பூலித்தேவன், ஹைதர் அலி, திப்பு சுல்தான், கட்டபொம்மன். சின்ன மருது - பெரிய மருது, தீரன் சின்னமலை, சிராஜித் தௌலா, இரண்டாம் பகதூர்ஷா, ஜான்சி ராணி லட்சுமிபாய், ஹஜரத் பேகம், பகத் சிங், அபுல் கலாம் ஆசாத், நேரு, நேதாஜி, காந்திஜி உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான தியாகிகளை நினைவில் ஏந்துவோம்.

ஊழல், மத பயங்கரவாதம், சாதி பயங்கரவாதம், வன்முறை போன்றவற்றை எதிர்காலத்தில் ஒழிக்க சபதம் ஏற்போம்.

நமது நாட்டில் ஏத்தனையோ குளறுபடிகள் இருந்தாலும் இது ஒரு சிறப்பான தேசம் என்பதில் ஐய்யமில்லை. எனவே போலி தேச பக்த வெறியை தூண்டும் திருடர்களை இனம் கண்டு நல்ல அரசியல் தலைவர்களை உருவாக்கி தேசத்தை வழிநடத்த தயாராவோம்.

இந்தியா எங்கள் தாய்நாடு! இஸ்லாம் எங்கள் வழிபாடு!

வாழ்த்துக்களுடன்,
எம். தமிமுன் அன்சாரி