அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

ஞாயிறு, 27 ஜூலை, 2014

நோன்பு பெருநாள் சிந்தனை !!! (( நோன்புப் பெருநாள் தொழுகை )) உலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய ஈகைப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பு உறவுகளுக்கு..! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

உலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் 
இனிய ஈகைப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்!!



நோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்கு புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர் புரைதா (ரலி) நூல்கள்: திர்மிதிதாரகுத்னீ.

நபி(ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகைக்கு செல்லுமுன் ஒற்றைப்படையாக பேரீத்தப்பழத்தை உண்ணுவார்கள். அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி,அஹ்மத்.
தொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் வெவ்வேறான வழியை நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்: அபூதாவூத்.

நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளை (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்கு சென்று தொழுவார்கள். அறிவிப்பாளர் அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரிமுஸ்லிம்.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளையும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். (அன்றைய தினம்) முதலில் தொழுகையைத் துவங்குவார்கள். அறிவிப்பாளர் அபூஸயீத் (ரலி) நூல்: புகாரி.

இரு பெருநாள் தொழுகைகளை நபி(ஸல்) அவர்களுடன் பல முறை தொழுதிருக்கிறேன் அவற்றில் பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை. அறிவிப்பாளர் ஜாபிர் பின் சமூரா(ரலி) நூல்கள்: புகாரிமுஸ்லிம்,திர்மிதி.

நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை தொழுதால் அதற்கு முன்னும் பின்னும் எந்தத் தொழுகையையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி.
நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகையில்) முதல் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 7தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் தக்பீர்களும் கூறுவார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத்.

நபி (ஸல்) ஏழு - ஐந்து என்று பெருநாள் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் தக்பீர் சொல்வார்கள் அதன் முன்னும் பின்னும் எதையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

இரண்டு பெருநாள்களிலும் ஜூம்ஆவிலும் நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில்'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா...என்ற (87வது) அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில்'ஹல் அதாக்க ஹதீஸூல் காஷியா..என்ற (88வது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள். அறிவிப்பாளர் நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்கள்: முஸ்லிம்திர்மிதி.

இரு பெருநாள் தொழுகைகளில் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்என்ற (50வது) அத்தியாயத்தையும் 'இக்தரபதிஸ்ஸாஅத்என்ற (54வது) அத்தியாயத்தையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள். அறிவிப்பாளர் உமர் (ரலி) நூல்: திர்மிதி.

நபி(ஸல்) அவர்களும் அபூபக்கர் - உமர் போன்ற நபித் தோழர்களும் (மக்களுக்கு) பிரச்சாரம் செய்யும் முன்பு பெருநாள் தொழுகைகளைத் தொழுவார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரிமுஸ்லிம்திர்மிதிநஸயீ.

உரை நிகழ்த்துவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்தவாறு அல்லாஹ்வுக்கு அஞ்சுமாறும் அவனுக்கு கட்டுப்படுமாறும் கட்டளையிட்டார்கள். தர்மத்தை வலியுறுத்திப் பேசினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்.

பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும்திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து தக்பீர் கூறுவார்கள். அறிவிப்பாளர் உம்மு அத்தியா (ரலி) நூல்: புகாரிமுஸ்லிம்.

புஆஸ் (எனும் போர்) பற்றி அன்ஸாரிகள் இயற்றிய கவிதைகளை இரண்டு சிறுமிகள் பாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அபூபக்கர்(ரலி) அவர்கள் இறைத்தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா... என்று கேட்டார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அபூபக்கரே! அந்தச் சிறுமிகளை விட்டுவிடும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நமக்குரிய பெருநாளாகும் என்றார்கள் இது பெருநாள் தினத்தில் நடந்தது. அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

தப்ஸ் அடித்து பாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்து அபூபக்கர்(ரலி) அதட்டினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அந்த சிறுமிகள் பாடுவதை விட்டு விடுங்கள். இது பெருநாளைக்குரிய தினமாகும் என்றார்கள். அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.



நோன்புப் பெருநாள் தொழுகை

1நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: திர்மிதி)

2) 
ஈத்தம் பழங்களை ஒற்றைப்படையாக சாப்பிடாமல் நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

3) 
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: அஹ்மத்இப்னுமாஜா)

4) 
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் சென்றார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)
 
விளக்கம்: நோன்புப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன் ஈத்தம் பழங்களை ஒற்றைப்படையாக உன்றுவிட்டுச் செல்வதும்ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை தொழுதுவிட்டு உணவை உண்பதும் சுன்னத்தாகும். பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்தாகும். முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும்இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூற வேண்டும். ஒவ்வொரு தக்பீர்களுக்குமிடையில் குறிப்பிட்டுச் சொல்லும் எந்த திக்ரும் இல்லை. அல்லாஹ்வை புகழக்கூடியபெருமைப்படுத்தக்கூடியதுதிக்கக்கூடிய வார்த்தைகளை கூற வேண்டும். 

உதாரணமாக:-

 سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ ، وَلاَ إِلَهَ إِلاَّ الله ُ، وَالله ُأَكْبَرُ
  • பெருநாள் தொழுகைக்கு அதானோஇகாமத்தோ இல்லை. 
  • பெருநாள் தொழுகைக்கு முன்பின் சுன்னத்தும் இல்லை. 
 மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ


இறைவனின் உதவியால் 19 வது வருடமாக ஃபித்ராக்களை ஒருங்கினைத்து வசூல் செய்து அவற்றை முறையாக தமிழகம் எங்கும் தமுமுக வினியோகம் செய்துவருகின்றது.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

உங்களது ஃபித்ராக்களை வழங்கி விட்டீர்களா?



இறைவனின் உதவியால் 19 வது வருடமாக ஃபித்ராக்களை ஒருங்கினைத்து வசூல் செய்து அவற்றை முறையாக தமிழகம் எங்கும் தமுமுக வினியோகம் செய்துவருகின்றது.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹு!

நோன்புப் பெருநாள் தர்மம் (ஸதக்க‌துல் ஃபித்ர்)

நம்மிடையே ஏழைகள், செல்வந்தர்கள், நடுத்தர வர்க்கத்தினர் எனும் ஏற்றத்தாழ்வு வாழ்க்கை அமைப்பில் இருந்தாலும், இஸ்லாம் இந்த வேறுபாடான மக்களை ஒன்று சேர்க்கும் விதமாக சில வணக்கங்களை விஷேசமான முறையில் ஏற்படுத்தித் தந்துள்ளது. அதில் ஒன்றுதான்'ஸதக்க‌துல் ஃபித்ர்' அல்லது 'ஜகாத்துல் ஃபித்ர்' என்று சொல்லப்படும் தர்மமாகும். இஸ்லாம் கூறும் இந்த ஃபித்ரா தர்மத்தின் முக்கியத்துவத்தையும் அதன் சட்டங்களையும் இப்போது பார்ப்போம்.

யார் யாரெல்லாம் நோன்புப் பெருநாள் தர்மம் கொடுக்கவேண்டும்?

பொருளாதாரக் கடமையான 'ஜகாத்' எவ்வாறு பொருள் வளத்தைத் தூய்மைப்படுத்தி இஸ்லாமிய சமூகத்தின் பொருளாதாரத் தேவையில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்கின்றதோ, அதேபான்று இந்த 'ஜகாத்துல் ஃபித்ரு'ம் ஏழைகளின் சந்தோஷத்தில் பெரும் பங்காற்றுகிறது. பொருள்கள் மீதான கட்டாயக் கடமையான 'ஜகாத்' குறிப்பிட்ட செல்வ வளமுள்ள‌ முஸ்லிம்களில் யார் அதற்குரிய 'நிஸாப்' எனும் எல்லை அளவையை எட்டுகின்றனரோ அவர்கள் மீது மட்டுமே கடமையாகின்றது. ஆனால் இந்த ஜகாத்துல் ஃபித்ர் அவ்வாறல்ல! நோன்பாளிகள், நோன்பு நோற்க இயலாமல் இருந்தவர்கள், வசதியில் குறைந்தவர்கள் யாராக இருந்தாலும், தன் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேர் சார்பாகவும் கட்டாயம் கொடுக்க‌ப்பட வேண்டிய ஒன்றாகிவிடுகின்றது. எனவே த‌ன் குடும்பத்தின் பெருநாள் செலவு போக இதைக் கொடுக்கச் சக்தியுள்ள அனைத்து முஸ்லிம்களும் இந்த தர்மத்தை கொடுக்க வேண்டும். பெரும் செல்வந்தர்கள் தான் கொடுக்க வேண்டும் என்பது இதில் கிடையாது.

-:பெருநாள் தர்மம் கொடுப்பதின் நோக்கம்:-

ரமலானைத் தொடர்ந்து வரும் ஈகைத் திருநாள் எனும் இஸ்லாமிய பண்டிகையின்போது எந்தவொரு முஸ்லிமும் அப்பண்டிகை நாளின் மகிழ்ச்சியிலிருந்து தூரமாகி நிற்கக்கூடாது எனும் பரந்த நோக்கமும் இந்த தர்மத்தின் மூலம் வியாபித்து நிற்கின்றது! இதனால் நோன்பு நோற்றவர்களில் பணக்காரர்கள் ஏழைகளுடனும், ஏழைகள் அவர்களைவிட வறிய‌ ஏழைகளுடனும் நேரடியாக தொடர்புகொண்டு பெருநாளின் சந்தோஷத்தை பகிர்ந்துக்கொள்ள முடிகிறது. இதனால் அவர்களிடையே மகிழ்ச்சியின் தாத்பர்ய அம்சம் சகோதரத்துவ வாஞ்சையுடன் மிளிர்கின்றது.

இந்த நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கிய நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள், ஏழை மக்கள் பெருநாள் பொழுதை மகிழ்வுடன் கழிப்பதற்காகவும், நோன்பு வைத்திருக்கும்போது நோன்பாளி ஏதாவது வீணான காரியங்களில் ஈடுபட்டிருந்தால் அதற்கு பரிகாரமாகவும் இந்த தர்மம் அமைவதாக‌ கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி,"இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்"என்றும் கூறினார்கள்.அறிவிப்பாளர்:இப்னு உமர்(ரலி); நூல்கள்:பைஹகீ,தாரகுத்னீ

ஸதக்க‌துல் ஃபித்ர் என்பது நோன்பு வைத்திருக்கும்போது நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளின் (அன்றைய உணவுக்கு வழியாக இருப்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி); நூல்கள்:அபூதாவூத்,இப்னுமாஜா,தாரகுத்னீ,பைஹகீ

பெருநாள் தர்மம்(ஸதக்க‌துல் ஃபித்ர்) எப்போது வழங்க வேண்டும்...?

இந்த தர்மமானது புனித ரமலானின் முடிவில், ஈகைத் திருநாள் தொழுகைக்கு முன்பே வழங்கப்படுவதாகும். ஒவ்வொரு முஸ்லிமான ஆண்-பெண்கள், அன்று பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவரின் சார்பாகவும் வழங்கப்படவேண்டும்.

ஃபித்ர் ஜகாத்தை பெருநாள் தொழுகைக்கு மக்கள் புறப்படும் முன்பே வழங்கிவிடவேண்டுமென நபி(ஸல்)அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பாளர்:இப்னு உமர்(ரலி); நூல்கள்:புகாரி,முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ

நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஒருநாள் முன்பாக அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பாக பெருநாள் தர்மத்தை வழங்குபவர்களாக இருந்தனர்.அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி); நூல்:புகாரி

எனவே பெருநாள் தர்மத்தினைப் பெறக்கூடிய மக்கள் பெருநாளைக்கான‌ உணவுகளை தயார்படுத்திக்கொள்ள‌ வசதியாக ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் முன்னதாக கொடுத்துவிடவேண்டும்.

-:பெருநாள் தர்மத்தின் அளவு:-

முஸ்லிமான ஆண்கள் பெண்கள், பெரியவர் சிறியவர், அடிமை, சுதந்திரமானவர் ஆகிய அனைவருக்கும் பேரீத்தம்பழம் அல்லது கோதுமை ஆகியவற்றிலிருந்து பெருநாள் தர்மம் தலா ஒரு 'ஸாவு' என்று நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தனர். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி); நூல்கள்:புகாரி,முஸ்லிம்,அஹ்மத்,நஸயீ,அபூதாவுத்,திர்மிதீ,இப்னுமாஜா

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் உணவுப் பொருட்களில் ஒரு 'ஸாவு' ஃபித்ர் தர்மம் வழங்குவோம். அன்றையதினம் எங்களின் உணவாக கோதுமையும் உலர்ந்த திராட்சையும் இருந்தது. அறிவிப்பாளர்: அபூஸயீத்(ரலி); நூல்:புகாரி

குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்காகவும் ஒரு "ஸாவு" அளவுக்கு கொடுக்கவேண்டும் என்று இந்த ஹதீஸ்க‌ள் கூறுகின்றன.

(குறிப்பு:- இரு கை கொள்ளளவின் நான்கு மடங்கே ஒரு "ஸாவு" என்பதாகும். அதாவது இருகைகளையும் ஒன்று சேர்த்து ஒரு பொருளிலிருந்து நான்கு முறை அள்ளி அளந்து போடுவதே ஒரு 'ஸாவு' என்பதன் அளவாகும். கிராம் கணக்கில் சொல்வதாக இருந்தால் சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.)

ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும். உதாரணமாக, நமது பராமரிப்பில் 3 நபர்கள் இருந்தால் தன்னையும் சேர்த்து தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் (4 x 2.5 கிலோ) 10 கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா தர்மத்தின் அளவாகும்.

எதைக் கொடுக்கலாம்......? 



நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் காலத்தில் பெருநாளின் ஃபித்ரா தர்மமாக உணவுப் பொருள்கள்தான் திரட்டி விநியோகிக்கப்பட்டது. அவர்கள் காலத்தில் தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள் புழக்கத்தில் இருந்தாலும் நோன்புப் பெருநாள் தர்மமாக காசுகள் கொடுக்கப்பட்டதில்லை. உணவுப் பொருட்கள் தான் கொடுக்கப்பட்டன. நபித்தோழர்களின் அன்றைய உணவாக இருந்த பேரீத்தம்பழம், தீட்டப்படாத கோதுமை (தோல் நீக்கப்படாதது) ஆகியவற்றைத் தான் கொடுத்து வந்தனர். ஆனால் நபி(ஸல்) காலத்தில் கோதுமை, பேரீத்தம்பழங்கள் பெருநாள் தர்மமாக கொடுக்கப்பட்டதால் நாமும் அதையே கொடுக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. இன்றைக்கு நம்முடைய உணவு முறை எதுவாக இருக்கிறதோ அதைதான் தர்மமாக கொடுக்க வேண்டும். ஏழைகளுக்குப் பயன்படும் விதத்தில் எந்த ஒரு உணவுப் பொருளையும் கொடுக்கலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் உணவில் தீட்டப்படாத கோதுமையில் ஒரு "ஸாவு', பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவு, பாலாடைக் கட்டியில் ஒரு 'ஸாவு', உலர்ந்த திராட்சை(கிஸ்மிஸ்)யில் ஒரு 'ஸாவு' என்று நாங்கள் நோன்புப் பெருநாள் ஸகாத்தை வழங்கி வந்தோம். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி(ரலி); நூல்: புகாரி 1506

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஒரு "ஸாவு' உணவை நோன்புப் பெருநாளில் வழங்கி வந்தோம். எங்களின் அன்றைய உணவு, தீட்டப்படாத கோதுமை, உலர்ந்த திராட்சை, பாலாடைக் கட்டி, பேரீச்சம் பழம் ஆகியவை தான். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி (ரலி); நூல்: புகாரி 1510

ஆக, மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களிலிருந்தும் பொதுவாக உணவுப் பொருட்கள் வழங்குவதுதான் முக்கியம் என்றும் அன்றைக்கு எது உணவாக இருந்ததோ அதைதான் வழங்கினார்கள் என்றும் புரிந்து கொள்ளலாம். எனவே நமது உணவாக எது இருக்கின்றதோ அதை பெருநாள் தர்மமாக கொடுக்க வேண்டும். ஏழைகளுக்கு உணவாக இருப்பதை நபியவர்கள் காரணம் காட்டியுள்ளதால் அந்தந்தப் பகுதிகளில் எது மக்களுக்கு உணவாக அமைந்துள்ளதோ அவற்றைக் கொடுக்கலாம். அப்போது தான் இந்த நோக்கம் நிறைவேறும். நமது உணவுப் பழக்கத்தில் முதன்மையானதாக‌ அரிசி இருப்ப‌தால் அதை ஒரு 'ஸாவு' அளவு கொடுக்கவேண்டும். இதர உணவுப் பொருள்களுக்கும் இது பொருந்தும்.

ஆனால், வெறும் அரிசியைப் பெற்றுக் கொள்பவர்களின் தேவைப் பூர்த்தியாகிவிட்டது என்று நம்மால் சொல்ல முடியாது. ஏனெனில் அரிசி சோறு சாப்பிட வேண்டுமானால் குழம்பு போன்றவை தேவைப்படுகிறது. அப்போதுதான் உணவு என்ற அந்தத் தேவைப் பூர்த்தியாகும். அன்றைய மக்கள் பேரீத்த‌ம் பழத்தை மட்டுமே உணவாக உட்கொண்டார்கள். ஆனால் வெறும் அரிசியை மட்டும் உணவாகச் சாப்பிட முடியாது. அதனால் அரிசியையும், உணவிற்கு தேவையான இதர பொருட்களையும் அதனுடன் சேர்த்து கொடுக்கலாம். அதே சமயம்,

அரிசிக்குப் பதிலாக அதற்கான பணத்தைக் கொடுக்கலாமா? என்றால்,

தாராளமாக கொடுக்கலாம். அன்றைக்குப் பண்டமாற்று முறை நடைமுறையில் இருந்ததால் உபரியாக உள்ள பேரீத்த‌ம் பழத்தைக் கொடுத்துவிட்டு கோதுமையை வாங்கிக்கொள்ள முடிந்தது. அதுபோல் உபரியாக கிடைக்கும் எந்த பொருளையும் கொடுத்து தேவையான மற்ற எந்த பொருட்களையும் வாங்கிக்கொள்ள முடியும். இன்றைக்கு நம்மிடம் உள்ள அரிசியைக் கொடுத்து விட்டு தேவையானதை எந்தக் கடையிலும் வாங்க முடியாது.

'அன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்' என்பது நபிமொழி. எல்லோரும் அரிசியை தர்மமாக வழங்கும்போது அன்றைய தினம் ஏழைகள் வீட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடில்லாமலிருக்கும். அன்றைக்கு துணைத் தேவையே அதிகரித்து நிற்கும் என்பதால் பணமாக கொடுப்பது ஹதீஸுக்கு மாற்றமானதல்ல என்பதை நாம் புரிந்துக் கொள்ளலாம். எனவே தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்வதற்குரிய‌ மொத்த‌ பணமாக கொடுக்கலாம். பணமாகக் கொடுத்தால்தான், தன் குடும்பத்திற்கு தேவையான அளவுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கிக் கொள்ளவும் மக்களுக்கு வசதியாக இருக்கும். எனவே ஏழைகள் மகிழ்வோடு அந்த நாளைக் கொண்டாட அரிசியைவிடப் பணமே சிறந்ததாகும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆக, பணமாகக் கொடுத்தாலும் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் என்பதால் ரூபாயாகக் கொடுப்பதைத் தடுக்க எந்த நியாயமும் இல்லை. அப்படி பணமாகக் கொடுக்கும்போது நாம் எதைப் பிரதான‌ உணவாக உட்கொள்கிறோமோ அந்த அரிசியின் விலையைதான் அளவுகோலாகக் கொண்டு, மேலே சொன்ன அளவில் கொடுக்கவேண்டும். அல்லது அரிசியும் அதனுடன் சேர்த்து தேவையான மற்ற பொருட்களையும் கொடுக்கலாம்.

அப்படி கொடுக்கும்போது அன்றாடம் நாம் எந்த வகையான தரத்தில் உணவைப் பயன்படுத்துகிறோமோ, அந்த தரத்திலிருந்து குறைந்துவிடாமல் தரமானதாக கொடுக்கவேண்டும். சிலர், தான் மட்டும் உயர்தர அரிசியை பயன்படுத்திவிட்டு இதுபோன்ற ஸதகாவுக்காக விலை மலிவான, தரம் குறைந்த அரிசியை வாங்கி விநியோகிப்பார்கள். இது கண்டிப்பாக தவிர்க்கப்படவேண்டியதாகும். இஸ்லாம் இதுபோன்ற தர்மங்களை அங்கீகரிக்கவில்லை, சிறந்தவற்றையே கொடுக்கச் சொல்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

எனவே பரிவுடன் ஏழைகளுக்கு உதவுவது, குறைந்த பட்சம் அவர்களைப் பெருநாளன்று பிறரிடம் கையேந்திக் கேட்காதிருக்கச் செய்வது போன்ற உன்னத மனிதம் கலந்திருக்கும் இந்த உயரிய நோன்புப் பெருநாள் தர்மத்தின் தத்துவத்தை உணர்ந்து, 

உரிய நேரத்தில் அலட்சியமின்றி அனைவரும் இந்த பெருநாள் தர்மத்தை ஈந்து, நாம் நோற்ற‌ நோன்பைத் தூய்மைப்படுத்திக் கொள்வோம்! அதன்மூலம் நாம் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் இந்த‌ பண்டிகை நாளில், வறண்ட பாலையிலிருந்து ஏழை எளிய மக்களை வெளியேற்றி சோலைவன சுகந்தத்தை ந‌ம்முடன் பகிர்ந்திடச் செய்வோம்!

இறைவனின் முழு திருப்பொருத்தத்தையும் நாம் அடைவோம், இன்ஷா அல்லாஹ்!

சனி, 26 ஜூலை, 2014

"யூதர்கள் குறைஷிகளுடன் தந்திரமாகக் கைகோர்த்துக் கொண்டு செய்த சூழ்ச்சிகளைத் தகர்தேரிந்தார்கள் அண்ணலார்."

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

"யூதர்கள் குறைஷிகளுடன் தந்திரமாகக் கைகோர்த்துக் கொண்டு செய்த 
சூழ்ச்சிகளைத் தகர்தேரிந்தார்கள் அண்ணலார்."


முக்கியமான கட்டத்தில் யூதர்கள் அண்ணலாருக்குத் துரோகம் செய்தார்கள். முஸ்லிம்களுடன் நல்ல உறவுடன் இருக்கும் பொழுதே அவர்கள் எதிரிகளுடன் கைகோர்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு ஆதரவு தருவதாக வாக்களித்தார்கள்.


மதீனாவுக்கெதிராக எதிரிகள் தாக்குதல் தொடுத்தால் முஸ்லிம்களோடு ஒன்றிணைந்து போராடுவோம் என்று ஒப்பந்தம் செய்திருந்தார்கள் யூதர்கள். இந்த ஒப்பந்தம் நிலவில் இருக்கவே எதிரிகளுடன் சேர்ந்து கொண்டார்கள் பனூகுறைழாக்கள்.

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் யாரெல்லாம் பகைமை கொண்டிருந்தார்களோ அத்தனை கூட்டத்தாரையும் ஒன்றிணைத்து முஸ்லிம்களுக்கெதிராக ஒரு பெரும் படையை குறைஷிகள் திரட்டிக்கொண்டு மதீனா நோக்கி வந்து கொண்டிருந்த சமயத்தில் தான் பனூகுறைழாக்கள் இந்தத் துரோகத்தைத் செய்தார்கள்.

மனம் தளரவில்லை மார்க்கத்தை இதயத்தில் ஏந்தியவர்கள். மதீனாவைச் சுற்றிலும் அகழ் தோண்டினார்கள். முடியாத இடங்களில் காவலுக்கு நின்றார்கள் இப்படி மதீனாவுக்குப் பார் போற்றுமளவுக்குப் பாதுகாப்பு அரணைக் காட்டி எழுப்பினார்கள் முஸ்லிம்கள்.

யூதர்கள் குறைஷிகளுடன் தந்திரமாகக் கைகோர்த்துக் கொண்டு செய்த சூழ்ச்சிகளைத் தகர்தேரிந்தார்கள் அண்ணலார். மதீனாவை ஆக்கிரமிக்க முடியாமல் தோல்விமுகத்தோடு எதிரிகள் திரும்பிப் போய் விட்டார்கள். ஆனால், தங்களுக்குத் துரோகமிலைத்தவர்களை அண்ணலார் சும்மா விட்டுவிடவில்லை.

நெஞ்சில் வஞ்சத்தை வைத்து வலம் வரும் யூதர்கள் மதீனாவில் குடியிருப்பது முஸ்லிம்களுக்கு எப்பொழுதும் ஆபத்து தான் என்று அண்ணலார் உணர்ந்தார்கள்.

எதிர்கள் திரும்பிப் போனவுடன் அண்ணலார் அடுத்த கட்ட நடவடிக்கையை யூதர்கள் மேல் திருப்பினார்கள். முஸ்லிம்கள் யூதர்களின் கோட்டையை முற்றுகையிட்டார்கள் பனூகுறைழாக்கள் வெளியே வரவில்லை.

மிக நீண்ட நாட்கள் முற்றுகை நீடித்தது. இருதியில் வழிக்கு வந்தார்கள் யூதர்கள். தங்களுடைய விவகாரத்திற்கு தீர்ப்பு சொல்ல முஸ்லிம்களிலிருந்தே ஒரு நடுவரை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அவர்தான் ஸஃத் இப்னு முஆத் (ரலி) மதீனாவில் வாழும் அவ்ஸ் கோத்திரத்தாரின் தலைவர் தான் ஸஃது இப்னு முஆத் (ரலி), பனூ குறைழா கோத்திரம் அவ்ஸ் கோத்திரதொடு நல்ல உறவுடன் இருந்ததும் எனவே ஸஃதிடமிருந்து தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பே வரும் என்று யூதர்கள் நம்பினார்கள். ஸஃதின் குடும்பமும் செய்ய வேண்டும் என்று ஸஃதை வலியுறுத்தினர்.

"அல்லாஹ்வின் விஷயத்தில் அநீதி இழைத்து விடக் கூடாது" என்பதுதான் ஸஃதின் சிந்தனையாக இருந்தது. தன்முன் கொண்டுவரப்பட்ட இந்த விவகாரத்தில் அவர் தீர்மானம் எடுத்து தீர்ப்பு கூறினார். அது தன் கோத்திரத்தாரின் நண்பர்களான பனூகுறைழாவுக்கு எதிராக இருந்தது. அவர்களின் படையினருக்கு ஸஃத் இப்னு மூஅத் (ரலி) அவர்கள் மரணதண்டனை அளித்து தீர்ப்பு கூறினார்.

எல்லோருக்கும் பொதுவான விவகாரங்களில் சகோதர உறவுகளைப் புறந்தள்ளிவிட்டு நடுநிலையான முடிவெடுப்பது என்பது நன்மையின் பாற்ப்பட்டதாகும். இந்தத் தத்துவத்தை ஸஃதும் கடைபிடித்தார்.

கழுத்து முறிந்து கிடக்கும் தற்போதைய சமூக, அரசியல் விவகாரங்களில் இந்தத் தத்துவம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

நன்றி: தேஜஸ் - நாளிதழ்.--

சனி, 19 ஜூலை, 2014

சவூதி அரேபியா நோன்பு திறக்கும் இடத்தில்.....நெகிழ வைத்த ஒரு நிகழ்வு !

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சவூதி அரேபியா நோன்பு திறக்கும் இடத்தில்.....நெகிழ வைத்த ஒரு நிகழ்வு !

சவுதியைப் பொருத்தவரை ரமலான் வந்து விட்டாலே இரவு பகலாகி விடும், பகல் இரவாகி விடும். எனக்கும் அலுவலகத்தில் இரவு நேர வேலைதான். இரவுத் தொழுகை முடிந்தவுடன் வேலை ஆரம்பம். பிறகு நடு நிசி 2 மணிக்கு வேலை முடியும். இது போலவே பெரும்பாலானோருக்கு வேலை அமைவதால் நோன்பு சிரமமின்றி சென்று விடும். 


அடுத்து நோன்பு திறப்பு. பெரும்பாலான பள்ளிகளில் நோன்பு திறக்க ஏற்பாடு செய்திருப்பர். நோன்பு திறந்தவுடன் தொழுகையும் உடன் கிடைத்து விடுவதால் பெரும்பாலானவர்கள் பள்ளியிலேயே நோன்பு திறக்க வந்து விடுவர். தேவைக்கு மீறி அதிக உணவுகள் பள்ளிகளில் குவிந்தவண்ணம் இருக்கும். மீதப் படுவதை தேவையுடையவருக்கு கொடுத்து விட்டு மீதியை குப்பை தொட்டிகளில் கொட்டுவதை சர்வ சாதாரணமாக காணலாம். ஒரு பக்கம் ஆப்ரிக்கா, ஆசிய நாடுகளில் ஒரு வேளை உணவிற்கு அல்லாடும் பெரும் கூட்டம். மற்றொரு புறமான அரபு நாடுகளில் மித மிஞ்சிய செல்வம். இஸ்லாம் காட்டித் தரும் பொருளாதார சட்டங்களை நடை முறை படுத்தாததாலேயே இந்த ஏற்றத் தாழ்வுகள்.

எனது அலுவலகத்துக்குப் பக்கத்தில் உள்ள பள்ளியில் நோன்பு திறக்க சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அங்கு முஸ்லிம் அல்லாத இரண்டு மலையாள இந்து சகோதரர்களும் பள்ளிக்கு நோன்பு திறக்க சென்றுள்ளனர். கணிணி சம்பத்தப்பட்ட பணியை செய்து வருபவர்கள். ஆனால் இந்த இருவரும் பள்ளிக்கு வருவதை நமது சகோதரர்கள் விரும்பவில்லை.

"இது நோன்பாளிகளுக்காக கொடுக்கப்படும் உணவு. இவர்கள் எப்படி சாப்பிட வரலாம்?" என்று என்னிடமும் முறையிட்டனர். 

"
யாருக்கும் உணவு கிடைக்காமல் திரும்பவில்லை. எல்லோருக்கும் போதுமான உணவு இருப்பில் உள்ளது. மித மிஞ்சிப் போய் சில நேரங்களில் குப்பை தொட்டியிலும் கொட்டுகின்றனர். அப்படி இருக்க அந்த இரண்டு சகோதரர்களும் சாப்பிடுவதில் என்ன குறை வந்து விடப் போகிறது. உணவு பற்றாக் குறையாக இருந்தால் நீங்கள் சொல்வது சரி." என்றேன்.

"இல்ல பாய்........ அதில் ஒருவன் இந்துத்வ சிந்தனை உள்ளவன். தனது தெய்வங்களை உயர்வாக பேசக் கூடியவன். அரபுகளின் கலாசாரத்தை இழிவாகப் பார்க்கக் கூடியவன்."

"அது அந்த நபரின் உரிமை. இந்து மதத்தில் பிறந்ததால் அவருக்கு அப்படி ஒரு எண்ணம் இருப்பதில் தவறில்லையே! ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி போன்ற இயக்கங்களோடு தொடர்பு கொண்டு முஸ்லிம்களை அழித்தொழிப்பதில் ஈடுபட்டிருந்தால் தான் அவரிடம் நாம் குறை காண முடியும். தினமும் இவர்கள் பள்ளிக்கு வந்து இங்கு நடத்தப்படும் உரைகளை கேட்பதன் மூலம் உள்ளங்களில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதல்லவா?"

இப்படியாக அந்த இருவரைப் பற்றியும் எங்களிடையே விவாதங்கள் சென்று கொண்டிருக்கும். அந்த இந்து நண்பர்களும் தினமும் பள்ளிக்கு வந்து கொண்டே இருந்தனர். திடீரென்று சென்ற வியாழக்கிழமை அந்த இருவரும் சேர்ந்து "நாங்களும் நோன்பு பிடிக்கிறோம்" என்று சொல்ல ஆரம்பித்தனர்.. எல்லோருக்கும் ஆச்சரியம். சில நேரங்களில் நாத்திகமும் பேசிக் கொண்டு திரிந்த இந்த அன்பர்களின் மனதில் இப்படி ஒரு மாற்றம். சந்தோஷத்தோடு இரவு நேர சாப்பாட்டுக்கு எங்கள் இடத்துக்கு அழைத்திருந்தோம். அருமையான மீன் குழம்பு வைத்து அன்றைய சஹர் உணவு எங்களோடு கழிந்தது அவர்களுக்கு. ஒரு நாள் முழுக்க நோன்பையும் முழுவதுமாக பூர்த்தியாக்கினர்.

தாஃவா சென்டரில் வேலை பார்க்கும் மலையாள நண்பரிடம் "இவர்களுக்கு தேவையான புத்தகங்களை கொடுத்து, இஸ்லாத்தைப் பற்றிய அறிமுகமும் பண்ணுங்கள்" என்றேன். செய்வதாக அவரும் சொன்னார். இந்த இருவரும் இஸ்லாத்தை ஏற்கிறார்களோ இல்லையோ கேரளாவுக்கு சென்று இந்துத்வ நடவடிக்கைகளில் கண்டிப்பாக ஈடுபட மாட்டார்கள் என்று உறுதியாக சொல்ல முடியும். ஏனெனில் தினமும் பள்ளியில் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இது மிகப் பெரிய மாற்றத்தை அந்த இந்து சகோதரர்கள் மத்தியில் ஏற்படுத்தலாம். நாம் இந்து என்று தெரிந்தும் நம்மிடம் முகம் கோணாமல் இந்த முஸ்லிம் சகோதரர்கள் இன்முகத்துடன் நடந்து கொண்டனரே என்ற எண்ணம் அவர்களின் வாழ்நாள் முழுக்க இருந்து வரும்.

இந்துத்வாவுக்கு எதிராக நாம் பெரும் படை திரட்ட வேண்டிய அவசியமெல்லாம் தேவையில்லை. இன்முகத்தோடு அவர்களை அணுகி, உண்மையை அவர்களுக்கு உரத்து சொல்ல முயற்சித்தாலே அதிகமான தீவிரவாத செயல்களை கட்டுக்குள் கொண்டு வந்து விட முடியும். நாமும் நமது அக்கம் பக்கத்தில் உள்ள இந்து நண்பர்களோடு இன்முகத்தோடு பழகி நமது சத்திய மார்க்கத்தையும் எத்தி வைப்போமாக.


Thanks: http://www.vkalathur.in/2014/07/blog-post_5662.html?spref=fb#.U8oaZZSSzfJ

வெளிநாடுகளில் (வளைகுடாவில்) வேலை செய்யும் சகோதரர்களே! ஷைத்தானின் வலையில் விழுந்து விடாதீர்கள்!

அன்பு உறவுகளுக்கு..! அஸ்ஸலாமு அலைக்கும் 

 வெளிநாடுகளில் (வளைகுடாவில்) வேலை செய்யும் சகோதரர்களே! ஷைத்தானின் வலையில் விழுந்து விடாதீர்கள்!


நாம் சுவனம் செல்வோமா? இல்லை நரகம் செல்வோமா? என்று தீர்மானிக்கும் காலங்களில் பெரும் பங்கு வகின்ற காலம் இந்த பருவ காலம் தான். இந்த பருவ காலத்தில் நம்மில் பல சகோதரர்கள் வழிமாறி சென்று விடுகின்றனர். அவர்களுக்கு சரியான வழியைக்  காண்பிக்கும் நபரை அவர்களின் பெற்றோர்கள் காண்பிக்க தவறுவதுதான் இதற்கு முக்கிய காரணம்.

சிறு வயதிலிருந்தே நல்ல பழக்கங்களோடு வளர்ந்த சிலர் கூட வெளிநாடுகளுக்கு வந்ததும் தவறான நண்பர்களை தேர்ந்தெடுப்பதின் மூலம் வழி தவறி சென்று விடுகின்றனர். சொந்த தேசத்தில் திருமணம் முடித்தவராக இருப்பினும் வெளிநாடு வந்த பிறகு இவருக்கும் திருமணம் ஆகாதவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அவர் ஓரிரு குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பினும் வெளிநாட்டில் அவர் BACHELOR என்று தான் சொல்லிக் கொள்வார். இந்த வாழ்க்கை மிகவும் சிரமமான கசப்பான வாழ்க்கை என்பது அயல் நாட்டில் வாழும் அனைவரும் அறிந்ததே.

இங்கே நல்ல நண்பர்கள் கிடைக்கப் பெற்றவர்தான் பெரும் பாக்கியசாலி. ஜும்ஆ நாட்கள் மற்றும் பெருநாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் தொழாத தீனின் வாடையே நுகராத நபர்களை நண்பர்களாக தேர்ந்தெடுத்தவர் நிலை மிகவும் கவலைக்குறிய நிலையாகும்.

இது முதலில் தொழுகையின் அருமை பெருமையை மறக்ககடிக்கச் செய்யும். அதன் பின் வீணான காரியங்களில் ஈடுபட வைக்கும்.குறிப்பாக தொலைக்காட்சில் சினமா ஆடல் பாடல் என்று கேளிக்கைகளில் காலங்கள் நகரும். இதன் விளைவு காலப் போக்கில் அல்லாஹ்வின் அச்சமின்றி அன்னியப் பெண்களை காண மனம் கிடந்தது துடிக்கும்.

பொதுவாகவே மனிதனின் மனம் தீமைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கும். இதில் தனிமையில் இணையத்தில் மூழ்கும் நம் இளைஞர்கள் விஷயத்தில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இவர்கள்ஷைத்தானின் வலையில் மிகவும் எளிதில் அகப்பட்டுக் கொள்கின்றார்கள்.]

வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே! 

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்

பாசத்திற்குரிய அயல்நாட்டில் வாழும் இஸ்லாமிய சகோதரர்களே உங்களில் ஒருவனாக அரபு நாடுகளில் ஒன்றான அரபு அமீரகத்தில் ஷார்ஜாஹ், துபை, ஃபுஜைராஹ் போன்ற நகரங்களில் பத்து ஆண்டு காலங்களை கழித்தவன் என்ற அனுபவத்திலும் நம் சகோதரர்கள் மேல் உள்ள அக்கறையினாலும் ஒரு சில உண்மைகளையும் அதற்குரிய பரிகாரங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.அனைவரும் அவசியம் படியுங்கள்.

சகோதரர்களே நாம் வாழும் இந்த வாழ்க்கை அல்லாஹ் கொடுத்த மிகப் பெரிய அருட்கொடை என்பதை நாம் அறிவோம்.இங்கே எதை விளையச் செய்கிறோமோ அதைத்தான் நாளை மறுமையில் அறுவடை செய்ய இருக்கின்றோம்.இவ்வுலகம் மறுமையின் விளை நிலமாக இருக்கின்றது.

நல்ல அமல்களை அதிகமதிகம் செய்ய முடிகின்ற வயது வாலிப வயதுதான். இந்த வாலிபப் பருவத்தை நாம் உலக விஷயங்களுக்காகவும் உலக சம்பாத்தியத்திற்காகவும் செலவு செய்கின்ற அளவிற்கு மார்க்க விஷயங்களுக்காகவும் மறு உலகிற்காகவும் செலவு செய்வது மிகவும் அரிதாகி கொண்டே போகிறது. அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களைப் பற்றியது தான் என் கவலையெல்லாம்.

நாம் இளமைப் பருவத்தில் தான் சம்பாத்தியம் செய்ய முடியும் எனவே இந்த வயதில் நாம் ஓடி ஓடி உழைக்க கடமைப் பட்டுள்ளோம். அதே நேரம் ஹலாலான சம்பாத்தியமாக அது இருக்க வேண்டும். இது விஷயத்தில் எவரிடமும் எதற்காகவும் விட்டுக் கொடுக்கும் பேச்சிற்கே இடமளிக்கக் கூடாது.

மேலும் இவற்றிற்கிடையே நமக்குரிய ஐங்கால கடமைகளான தொழுகைகளையும் காலம் தவறாமல் நாம் நிறைவேற்றிட கடமைப்பட்டுள்ளோம். இரவு பகல் பாராது கடுமையாக உழைக்கும் பல சகோதரர்கள் வேலையை முடித்து விட்டு இரவு படுக்கைக்கு செல்லும் முன் அன்றைய பொழுதின் அனைத்து தொழுகைகளையும் தொழுதிருப்பார்களா? என்றால் அதற்கு பெரும்பாலும் பதில் இல்லை என்று தான் வரும்.இவ்வுலகின் உன்னத செயல்களான தொழுகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய இவ்வாலிப பருவத்தை நம் எதிரியான ஷைத்தானின் தூண்டுதளுக்கு துணையாக தியாகம் செய்து கொண்டிருக்கின்றோம். எப்படி இது சாத்தியம் என கேட்கிறீர்களா?

ஆம் இன்று துபை, மலேசியா போன்ற நாடுகளில் லாட்டரிகள் அதிகம் விற்பனையாகின்றது. துபை டூட்டி ஃப்ரீ கூப்பன்,மற்றும் மில்லினியர் கூப்பன்,என்று ஏராளமான பெயர்கள் அவைகளுக்கு உண்டு.மலேசியா போன்ற நாடுகளில் இந்த லாட்டரிகளை நம் முஸ்லிம்கள் அதிகம் விரும்பி வாங்குவதாகவும் அதில் கிடைக்கும் பரிசுகளால் மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாகவும் கேள்விபடுகிறேன். இதெல்லாம் ஷைத்தானுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரக் கூடியவை.

நம் மறுமை வாழ்க்கையை வருமையாக்கி நாளை நரகிற்குள் நம்மை இழுத்து செல்லும் தீய செயல்களாகும். இப்படி இன்னும் பல தீய காரியங்களால் நம் முஸ்லிம் சகோதரர்கள் ஷைத்தானின் தூடுதளுக்கு துணை போகின்றார்கள். அவற்றையெல்லாம் பட்டியல் போடுவதற்காக நான் இதை எழுத வில்லை.மாறாக இவற்றையெல்லாம் விட என் மனதை அதிகம் பாதித்தவை ஒன்றுள்ளது. அதை பகிர்ந்து அது தொடர்புடைய நபர்களுக்கு இந்த செய்தி சென்று சேர வேண்டும் என்பதற்காகத் தான் இதை எழுதுகிறேன்.

வாலிபப் பருவனும் சோதனை

நாம் சுவனம் செல்வோமா? இல்லை நரகம் செல்வோமா? என்று தீர்மானிக்கும் காலங்களில் பெரும் பங்கு வகின்ற காலம் இந்த பருவ காலம் தான். இந்த பருவ காலத்தில் நம்மில் பல சகோதரர்கள் வழிமாறி சென்று விடுகின்றனர். அவர்களுக்கு சரியான வழியைக் காண்பிக்கும் நபரை அவர்களின் பெற்றோர்கள் காண்பிக்க தவறுவதுதான் இதற்கு முக்கிய காரணம்.சிறு வயதிலிருந்தே நல்ல பழக்கங்களோடு வளர்ந்த சிலர் கூட வெளிநாடுகளுக்கு வந்ததும் தவறான நண்பர்களை தேர்ந்தெடுப்பதின் மூலம் வழி தவறி சென்று விடுகின்றனர்.சொந்த தேசத்தில் திருமணம் முடித்தவராக இருப்பினும் வெளிநாடு வந்த பிறகு இவருக்கும் திருமணம் ஆகாதவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அவர் ஓரிரு குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பினும் வெளிநாட்டில் அவர் BACHELOR என்று தான் சொல்லிக் கொள்வார். இந்த வாழ்க்கை மிகவும் சிரமமான கசப்பான வாழ்க்கை என்பது அயல் நாட்டில் வாழும் அனைவரும் அறிந்ததே.

இங்கே நல்ல நண்பர்கள் கிடைக்கப் பெற்றவர்தான் பெரும் பாக்கியசாலி. ஜும்ஆ நாட்கள் மற்றும் பெருநாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் தொழாத தீனின் வாடையே நுகராத நபர்களை நண்பர்களாக தேர்ந்தெடுத்தவர் நிலை மிகவும் கவலைக்குறிய நிலையாகும்.இது முதலில் தொழுகையின் அருமை பெருமையை மறக்ககடிக்கச் செய்யும்.அதன் பின் வீணான காரியங்களில் ஈடுபட வைக்கும்.குறிப்பாக தொலைக்காட்சில் சினமா ஆடல் பாடல் என்று கேளிக்கைகளில் காலங்கள் நகரும். இதன் விளைவு காலப் போக்கில் அல்லாஹ்வின் அச்சமின்றி அன்னியப் பெண்களை காண மனம் கிடந்தது துடிக்கும்.

தனிமை ஓர் பெரும் சோதனை

அயல் நாட்டில் வசிக்கும் ஓர் வாலிபன் தனிமை என்னும் சோதனையை சில அல்லது பல சந்தர்பங்களில் சந்தித்தே ஆக வேண்டும். இந்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெறாதவர் பாக்கியசாளி என்றே சொல்லலாம்.ஆனால் அது கிடைத்து அதில் திறம்பட வெற்றி பெற்றவர் அல்லாஹ்வின் அருளைப் பெற்றவராவார். ஒரு இளைஞன் பாவங்களை சம்பாதித்துக் கொள்ள பெரிதும் துணை நிற்பது அவன் கையில் உள்ள கைபேசிதான்.

தற்போதைய காலச் சூழலில் இணையம் (INTERNET) உபயோகிக்காத நபர் இல்லை என்றுதான் சொல்லலாம். கணினி இல்லாதவர் கூட கைபேசியில் (Mobile Phone) இணையத்தை உபயோகிக்கின்றார். வெளிநாடுகளில் வாழும் நம் (BACHELOR) வாலிபர்கள் இப்படிப்பட்ட கைபேசிகளினால் உலகத்தையே ஒரு சுற்று சுற்றி வருகின்றனர்.அதில் ஆபாச உலகமும் அடங்கும். YOU TUBE ,FACEBOOK போன்றவை இதில் பெரும் பங்கு வகிக்கின்றது. இதில் எந்நேரமும் மூழ்கிக் கிடக்கும் பல சகோதரர்கள் தனிமை விரும்பிகளாகவே மாறி விடுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும்? இது தொடர்பாக மார்க்கம் நமக்கு என்ன சொல்கின்றது?என்பதை வெளிநாட்டில் வாழும் ஒவ்வொரு முஸ்லிம் இளைஞரும் அறிந்து வைத்திருப்பதும் அதன்படி அமல் செய்வதும் கட்டாயமாகும். 

ஐந்து வருவதற்குள் ஐந்தை (நல்வழியில்) அனுபவித்துக் கொள்ளுங்கள்.நோய் வரும் முன் ஆரோக்கியத்தையும்,வேலை வரும் முன் ஓய்வையும்,வறுமை வரும் முன் செல்வத்தையும்,முதுமை வரும் முன் வாலிபத்தையும்,மரணம் வரும் முன் இந்த வாழ்வையும்.(நல்வழியில்) அனுபவித்துக் கொள்ளுங்கள்.என்று கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள்.(நூல்:நஸாயீ)

நமக்கு கிடைத்த இந்த வாலிப பருவத்தை ஓய்வு நேரங்களில் எந்த நோக்கமும் இல்லாமல் வெறுமெனே எந்நேரமும் TV யிலும் INTERNET லும் காலங்களை போக்காமல் நல்ல முறையில் பயன்படுத்துவதற்காக ஒரு அட்டவணையை நமக்கு நாமே மனதிற்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தொழுகை நேரம் போக மீதமுள்ள நேரத்தில் குர்ஆன் ஓதுவது,அல்லது ஓதக் கற்பது, அல்லது கற்பிப்பது,ஹதீஸ்களை படிப்பது, உழு எப்படிச் செய்தல்? கடமையான குளிப்பு எப்படி குளித்தல்?போன்ற ஏராளமான சட்டங்களை அருகில் இருக்கும் ஆலிம்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இதை அனைவரும் அவசியம் செய்ய வேண்டும்.அப்படி அவசியம் செய்ய வேண்டிய காரணம் என்ன?

''மனிதனின் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் நிச்சயமாக ஷைத்தானும் ஓடிக் கொண்டிருக்கின்றான்''என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள். (நூல் புகாரி)

நமது அறியாமையும் பலகீனமும் தனிமையும் தான் ஷைத்தானின் மிகப் பெரும் பலம். நம்மை எப்படியும் வழிகெடுக்க வேண்டும் என்று காத்திருக்கும் ஷைத்தானின் கூட்டங்களுக்கு நாம் எளிதில் வாய்ப்புகளை வழங்கிடக் கூடாது.தவறான முறையில் நேரங்களை பயன்படுத்துவது நம் மன இச்சைகளை கட்டவிழ்த்து விட்டுவிடும்.தீய காட்சிகளை பார்ப்பதும் அன்னியப் பெண்களை ஆபாசமாக நோக்குவதுமாக நம்மை வெட்கமில்லாத ஜடமாக மாற்றிவிடும். இறையச்சமற்றவனாகவும் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்க்கையையும் சீரழித்த பாவியாக கெட்டழியச் செய்து விடும்.

பொதுவாகவே மனிதனின் மனம் தீமைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கும். இதில் தனிமையில் இணையத்தில் மூழ்கும் நம் இளைஞர்கள் விஷயத்தில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இவர்கள் ஷைத்தானின் வலையில் மிகவும் எளிதில் அகப்பட்டுக் கொள்கின்றார்கள். இதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு சில ஆலோசனைகள்.

சிரமமில்லாத வேலையில் உள்ளவர்கள் ரமலான் மாதம் மட்டுமல்லாது மற்ற மாதங்களிலும் பிறை 13,14,15,ஆகிய நாட்களில் நோன்பு நோற்பதும் மேலும் சாத்தியமென்றால் ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழன் போன்ற நாட்கள் நோன்பு நோற்பதும் சிறந்தது. சிரமமான வேலையில் இருக்கும் வாலிபர்கள் மனம் எப்போதெல்லாம் தீய எண்ணங்களில் அலை பாய்கின்றதோ அப்போதெல்லாம் நோன்பை அவசியமாக்கிக் கொள்ள வேண்டும்.

இதை கடை பிடிக்கும் காலமெல்லாம் மனம் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா? என்றொரு வினா உங்கள் உல் மனதில் எழுந்தால்.அந்த எண்ணத்தை குழி தோண்டி புதைத்திடுங்கள்.இந்தியாவில் இருந்து ஆகாய மார்க்கமாக கடல் கடந்து அந்நிய தேசத்திற்கு வந்து சம்பாத்தியம் செய்வது சாத்தியெமென்றால் அங்கே கர்ப்பொழுக்கமாக நாம் வாழ இந்த நபிவழியை கடைபிடிப்பதும் சாத்தியமே என்று எண்ணிக் கொள்ளுங்கள்.

வாலிபர்களே உங்களில் வசதியுள்ளவர் திருமணம் செய்து கொள்ளுங்கள்.நிச்சயமாக அது அவரின் பார்வையை (அன்னியப் பெண்களை விட்டும்) தாழ்த்திடும். மேலும் அவரின் மர்ம உறுப்பை (கர்ப்பை) பாதுகாத்திடும். திருமணம் செய்ய வசதியில்லாதவர் நோன்பை பற்றிப் பிடிக்கட்டும் அது அவருக்கு பாதுகாப்பாகும். என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழகிய வழி காண்பித்துள்ளார்கள்.(நூல் புகாரி,முஸ்லிம்)

நம் பெற்றோர்கள் மற்றும் நம் மனைவி மக்களுக்காக குடும்ப கஷ்டத்தை நீக்கிட அயல் நாட்டிற்கு வந்துள்ள நாம், கர்ப்பொழுக்கத்தை கடை பிடிப்பது கட்டாயமாகும்.அதை மீறினால் பெற்றோருக்கும் நமக்காக தன் இளமையை தியாகம் செய்து அடுத்த முறை கணவன் எப்போது வருவார் என்று காத்திருக்கும் நம் மனைவிக்கும் துரோகம் செய்ததோடு படைத்த ரப்புல் ஆலமீனின் கடும் சினத்திற்கும் ஆளாக நேரிடும்.விளைவு துன்யாவிலும் கைசேதம். ஆகிரத்திலும் நஷ்டம் என்ற இழி நிலைக்கு ஆளாகுவோம். அல்லாஹ் இதிலிருந்து நம்மை பாதுகாப்பானாக.

எனவே இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள சட்டம் வெளிநாட்டில் வாழும் நம் இளைஞர்களுக்கும் பொருத்தமானதாக இருப்பதனால் இது போன்ற நோன்புகளை கடைபிடித்து கர்ப்பை பாதுகாத்திட நம் வாலிபர்கள் தயாராக வேண்டும். இதற்கு தயாராவது யாருக்கெல்லாம் சிரமமோ அவர் திருமணம் ஆனவரா? மனைவியை உடன் அழைத்துக் கொள்ளுங்கள்.அதற்கு பொருளாதார வசதி இல்லையா? திருமணமானவராக இருந்தாலும் சரி, அல்லது திருமணம் ஆகாதவராக இருந்தாலும் சரி இது போன்றதோர் வாழ்க்கையை தூர தள்ளிவிட்டு தாயகம் திரும்ப முன்வாருங்கள். உண்மையாக உழைத்தால் எங்குவேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்.நிச்சயம் உணவு வழங்குபவன் அந்த ஏக இறைவனாகும்.நாம் எங்கே இருந்தாலும் நமக்கு அவன் உணவு (ரிஸ்க்) வழங்குவான்.

வஸ்ஸலாம்:

மவ்லவி N.சய்யிது ஷம்சுத்தீன் சாதிக்.ஃபாழில் மன்பயீ
ஃபுஜைராஹ். U A E .
நன்றி: நீடூர் இன்போ.