அன்பு உறவுகளுக்கு..!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
ஊடக பயங்கரவாதம்
ஆகஸ்ட் 30 தேதியிட்ட THE HINDU தளத்தில் Husband deserts Muslim woman for attending I-Day function எனும் தலைப்பில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.
என்ன அநியாயம் எனப் பொங்கி செய்தியைப் படித்துப் பார்த்தால் உள்ளே
“My husband has been threatening me to leave my school teacher job or he will desert me. He forced me to leave my house after I attended the Independence Day function,” she said.
She told the police that her husband was torturing her for more dowry and was married in 2003. என்று விளக்கமாக வருகிறது.
"ஆசிரியப் பணியை விட வேண்டும்; இல்லை எனில், நான் உன்னை என்னிடமிருந்து பிரித்துவிடுவேன் என்று என் கணவர் என்னை அச்சுறுத்தி வந்தார். நான் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் கலந்து கொண்டு வந்தவுடன், அவர் என்னை வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டார்".
"2003ஆம் ஆண்டு எங்கள் திருமணம் நடைபெற்றதிலிருந்து அதிக வரதட்சனை கேட்டு என் கணவர் என்னைக் கொடுமைப்படுத்தி வந்தார்."
இது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஆசிரியை ஒருவர், ஜார்கண்ட் மாநிலம் மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் அளித்த புகார் .
இந்தச் செய்தியை வாசித்தாலே, இந்தியாவில் சாதாரணமாக நடக்கும் வரதட்சணைக் கொடுமைகளில் ஒன்று என அறிந்து கொள்ளலாம்.
இது IANS என்ற செய்தி நிறுவனம் தந்துள்ள செய்தியில் இடம் பெற்ற கரு. ஆனால் செய்தியின் தொடக்கத்தில் இவர்கள் தந்திருக்கும் முறையைப் பாருங்கள்.
A Muslim school teacher in Bihar was forced to leave her house by her husband who felt she had violated the Shariat law by participating in an Independence Day function, police said on Saturday.
சுதந்திர நாள் விழாவைக் கலந்து கொண்டதால், ஷரீஅத் சட்டத்தை மீறிவிட்டதாகக் கூறி, பீகாரைச் சேர்ந்த முஸ்லிம் ஆசிரியை அவரது கணவனால் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டதாகக் காவல் துறை சனிக்கிழமையன்று கூறியது.
கணவன் மீது புகார் அளித்த பெண், தன்னுடைய புகாரில் இந்தக் காரணத்தைக் கூறியிருந்தால், அதுதான் அச்செய்தியின் கரு. ஆனால், கருச் செய்தியில் அப்படி இல்லை. எனவே, இது செய்தியை எழுதியவர் சுயமாகச் செய்த கற்பனை என்பது புலணாகிறது.
உண்மையிலேயே அந்தப் பெண் தன்னுடைய புகாரில் இதைக் கூறியிருந்தாலும் தன்னை வேலையைத் துறக்கும்படி நீண்ட காலமாகவே கணவன் நிர்பந்தித்து வந்ததாகத் தன்னுடைய புகாரில் கூறியுள்ள ஆசிரியை, சுதந்திர நாள் கொண்டாட்டத்திற்காகத் தன்னை வீட்டைவிட்டு வெளியேற்றியதாகக் கூறியது முரண்பாடாகும். இது சுயபச்சாதாபம் தேடும் முயற்சியாகவே இருக்க வேண்டும்.
இது ஒரு புறம் இருக்க, செய்தியின் தலைப்பைப் பாருங்கள்.
Husband deserts Muslim woman for attending I-Day function
சுதந்திரநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதால் முஸ்லிம் ஆசிரியையைக் கணவர் பிரித்தார். இதை வெறுமனே Husband deserts Teacher for attending I-Day function என்று கொடுத்தால் என்ன?
முஸ்லிம் என்று தலைப்பில் சேர்த்திருப்பதன் மூலம் அந்தச் செய்தியைப் படிக்கப் பிறரைத் தூண்டி, சுதந்திர நாள் கொண்டாடுவதே இஸ்லாத்துக்கு எதிரான செயல் என்பது போல் வாசகர் மனதில் விசத்தைத் தூண்டுவதைத் தவிர வேறு என்னவாக இருக்கும்?
ஒவ்வொரு விசயத்தில் இந்த நாட்டின் சிறுபான்மையினரைத் தனிமைப்படுத்த சங் பரிவாரங்கள் முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ள நிலையில், ஊடகங்கள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், அதன் விளைவு சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல; இந்த நாட்டுக்கே பெரும் கேடாக அமையும்.
எந்தவொரு நாட்டிலும் சிறுபான்மையினர் ஓரங்கட்டப்பட்டால், அந்த நாடு உருப்படியாக இருந்ததாக வரலாறு இல்லை. அந்த நிலைக்கு இந்தியாவைத் தள்ளிவிட வேண்டாம்.
அழகப்பன்--