அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

வெள்ளி, 5 ஜூலை, 2013

தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக அஸ்லம் பாஷா எம்.எல்.ஏ தேர்வு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக அஸ்லம் பாஷா எம்.எல்.ஏ தேர்வு!





சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு பேரை தேர்வு செய்ய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இதில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததால் மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. அஸ்லம் பாஷா போட்டியின்றி தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கான சான்றிதழை 28.06.2013 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கப்பட்டது இந்நிகழ்வின் போது தமுமுக துணைத் தலைவர் குணங்குடி அனீபா, வடசென்னை மாவட்ட தலைவர் எப்.உஸ்மான் அலி, காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் யாகூப் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
T M M K AL-KHOBAR. K.S.A I visit : www.tmmk.info
www.tmmk-ksa.com I Join: facebook.com/tmmk.khobar
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::






வியாழன், 4 ஜூலை, 2013

மறைக்க முற்படும் இஸ்லாமிய வரலாற்றின் பக்கங்கள் !?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  • மறைக்க முற்படும் இஸ்லாமிய வரலாற்றின் பக்கங்கள் !?
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சிறைக்கு சென்றவர்களிலும் உயிர்களை தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அவர்களின் மக்கள் தொகையின் விகிதாச்சாரத்தோடு ஒப்பிடும்போது மிக அதிகமாகவே இருந்தார்கள் என்று பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் இல்லஸ்ட்ரேடட் வீக்லி பத்திரிகையில் எழுதி அது 20/12/1975 அன்று வெளிவந்தது. 

இதைப் படிக்க நேர்ந்த பிறகு, முஸ்லிம்கள் நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு என்னவெல்லாம் செய்தார்கள் என்று பல இணையதளங்களை தேடிப்பார்த்து படித்த போது பல வரலாற்று உண்மைகள் புலப்பட்டன. அவற்றை பகிர்ந்து கொள்ள விரும்பியே இந்தப் பதிவு.

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் தியாகம் . வரலாற்றைப் படிங்கள் தெரியாதவர்களுக்கு தெரியப் படுத்துங்கள் பெருமையோடு! இதில் பல கண்ணீர் காவியங்கள் இருக்கின்றன. ஆனால் முஸ்லிம்கள் ஏதோ ஒரு தலைச்சுமை போல ஆட்சியாளர்களும் அவர்களின் அடிவருடிகளும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்நியனுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சிக் கட்டிலும், அதிகார இடங்களிலும் அமர்ந்து கொண்டு சுதந்திரத்திற்கு தங்கள் எதிர்கால சந்ததியினரின் நலன்களை அர்ப்பணித்த சமுதாயத்தை அடக்கியாள்கின்ற அவலம் ஒருபுறம் ; சுதத்திரத்திற்கு வாளேந்திய சமுதாயம் வாழ்வுரிமை கேட்டு வீதியில் நிற்கும் அவலம் மறுபுறம்.

கிழக்கிந்திய கம்பெனிக்கு கிஸ்தி வசூ­த்து தந்தவர்கள் ஆதவனை கரங் கொண்டு மறைத்து விடலாம் என்று நினைக்கலாம், ஆனால் ஆயிரம் கரம் கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. இந்திய மண்ணின் கடைசி இஸ்லாமியர் இருக்கும் வரை இந்தியாவின் விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய அரும்பணிகள் மறையாது.

(நன்றி) மறந்தவர்களுக்கு நம் சமுதாயத்தின் தியாகங்களை சற்றே நினைவூட்டுவோம்.

  • பேரரசர் பகதூர் ஷா:
சூரியனே எங்களின் ஆட்சிக்குட்பட்ட பரப்பில் மறைவதில்லை என்ற இறுமாப்பு கொண்ட ஏகாதிபத்திய ஆங்கில ஆட்சியை அகற்ற நடைபெற்ற முதல் சுதந்திரப் போர் 1857 –ள் மொகலாய அரசின் கடைசிப் பேரரசர் பகதூர்ஷா தலைமையில் நடைபெற்ற போர்தான். இந்தப் போர் ஆங்கிலேயரின் குரல்வளையை நெறித்த நேரம் மன்னர் பகதூர்ஷாவுக்கு வயது எண்பத்தி இரண்டு. மன்னர் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டு ஜீனத் மஹால் மாளிகையில் சிறைவைக்கப் பட்டார்.

ஒருநாள் காலை உணவு என்ற பெயரில் தினியால் மூடப்பட்ட ஒரு பெரிய தட்டு மன்னர் பகதூர்ஷாவின் முன்னாள் கொண்டு வரப்பட்டது. அதைக் கொண்டுவந்த மேஜர் ஹட்சன் உடைய முகத்தில் ஒரு விஷச்சிரிப்பு. துணியை அகற்றிப் பார்க்கிறார் பகதூர்ஷா. அவரது இரண்டு மகன்களான மிர்ஜாமொஹல் மற்றும் சிலுறு சுல்தான் ஆகிய இருவரின் தலைகள் அந்தத் தட்டில் இருந்தன. இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தன அந்த வாரிசுப் பிள்ளைகளின் தலைகள். இதைப் பார்த்த மன்னர் கலங்காமல் தைமூர் வம்சத்தின் தோன்றல்கள் தங்களின் புனிதத்தை இறந்து காட்டி உயிர் துறந்தும் நிரூபிப்பார்கள் என்று சொன்னார். அரசர்கள் அழுவதில்லை.

தாய்மண்ணில் சமாதியாகும் பாக்கியம் தனக்கு கிடைக்காது என்று எண்ணிய மன்னர் பகதூர்ஷா இறந்தபின் தனது தாய்மண்ணில் அடக்கம் ஆகும் பாக்கியம் கிடைக்காது என்று நினைத்த பகதூர்ஷா இறந்த பின் தனது சமாதியில் தூவுவதற்கு ஒரு பிடி இந்திய மண்ணை கையில் அள்ளிக் கொண்ட பின் ரங்கூனுக்கு நாடு கடத்தப் பட்டார். அங்கேயே பத்து வருடங்களுக்குப் பிறகு இறைவனடி சேர்ந்தார்.

  • மாவீரன் திப்பு சுல்தான்:
''ஆயிரம் ஆண்டுகள் அடிமையாய் வாழ்வதை விட சமருக்கு நின்று சாய்வதே சிறந்தது!'' என்று அந்த மாவீரன் திப்புசுல்தான் தென்னகத்தில் 5 பெரும் போர்களில் வெள்ளையர்களை படுதோல்வி அடையச் செய்து ஓட ஓட விரட்டினார். மே.4ம் தேதி 1799ல் ஸ்ரீரங்கப் பட்டிணத்தில் சூழ்ந்து கொண்டு துரோகிகளை விலை கொடுத்து வாங்கி மாவீரன் திப்புவை வெள்ளையர்கள் கொன்றார்கள். அந்த மாவீரன் இந்த நாட்டில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இன்று மிஞ்சமிருக்க அவனது வாழ்க்கை வரலாற்றைக் கூட இந்தப் பாவிகள் 'இது ஒரு கற்பனைக் கதை' என்று தொலைக்காட்சியில் வெளியிட்டார்கள். எத்தனை பெரிய துரோகம்?அப்படியானால் ஸ்ரீரங்கப் பட்டினத்தில் திப்பு சுல்தான் உடைய அரண்மனையின் திடலில் திப்பு சுல்தானின் உடல் கண்டெடுக்கப் பட்ட இடம் என்று எழுதிவைத்திருப்பது வரலாற்று அயோக்கியத்தனத்தின் அடையாளம் அல்லவா ?

பேகம் ஹஜ்ரத் மஹல்:

டெல்லியை ஆண்ட ஹஜ்ரத் பேகம் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய முஸ்லிம் பெண்மணியாவார். அவருக்கு அன்றைய ஆட்சியிலிருந்த எந்த ஒரு இந்து மன்னனும் உதவவாததால், தன் நாட்டை இழந்து இமயத்தின் அடிவாரக் காடுகளில் தன் பத்து வயது மகனுடன் அநாதையாய் அலைந்து, வீர மரணம் அடைந்தாள் அந்த வீரத்தாய் ! இதை எப்படி மறந்தார்கள் ? இல்லை மறைத்து விட்டனர்.

  • அஸ்வ குல்லா கான்:
பகத்சிங்கை அறிந்துள்ள இன்றைய சமுதாயம் அன்று அவனுடன் சேர்த்து தூக்கி­டப்பட்ட மற்றொரு மாவீரன் அஸ்வ குல்லா கானை ஏன் மறந்து விட்டார்கள் இல்லை மறைத்தது விட்டார்கள்
  • வேலூர் சிப்பாய்க் கலகம்:
ஒரு சுதந்திரத்துக்கான முதல் போராட்டத்தைக் கூட முஸ்லிம்கள் தொடர்புடையதால் செய்தால் கலகம் என்று வரலாற்றுப் புரட்டு செய்கிறார்கள். இந்தப் பாவிகள் 1857 சிப்பாய்க் கலகப் புரட்சிக்கு வித்திட்ட மௌலவி அஹமது ஷாவின் தலைமையில் போராடிய சிப்பாய்களை பீரங்கி வாயில் வைத்து பிளந்து, அகழியில் வீசியவர்களாவார்கள். இந்த தியாகத்தைக் கூட மறந்துவிட்டு வரலாற்றுப் பாடங்களில் இரண்டு மார்க் கேள்விக்கு பதிலாகவே இந்த சம்பவம் சித்தரிக்கப் படுகிறது.
  • மாவீரன் கான் சாஹிப்:
மதுரையைச் சேர்ந்த மருதநாயகம் பிள்ளையாய் இருந்தும், பின்னர் யூசுப் கான் சாஹிபாக மாறிய வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பணமாகத் திகழ்ந்த யூசுப் கான் சாஹிப் தூக்கிலிடப்பட்ட பிறகும் நிம்மதியாய் உறங்க முடியாத வெள்ளையர்கள், அவனது உடலை தோண்டி எடுத்து தலைவேறு, உடல் வேறாக பிரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று அடக்கினார்கள் என்றால் எந்த அளவுக்கு வெள்ளையர்களை எதிர்த்து அந்த மாவீரன் அன்று போராடி இருப்பான் என்று சிந்தித்துப் பாருங்கள்! மதுரை சம்மட்டிபுரத்தில் அந்த மாவீரன் வாழ்ந்ததற்கான அடையாளமாக அவனது அடக்கஸ்தலம் இருக்க, இந்த மாவீரனை நினைவூட்ட ஒரு நடிகன் தேவைப்படுகிறான் என்றால் எத்தனை வேதனைக்குரிய விஷயம் ! அப்படியாவது அந்த படம் வெளியே வந்ததா ? இல்லை . வரவே வராது. விலை போகும் நடிகர்கள் மருதனாயகத்தை மூட்டை கட்டி இராமேஸ்வரம் கடலில் வீசிவிட்டு வினை அறுக்க விஸ்வரூபம் எடுக்கும் நிலைக்கு மாறிவிட்டார்கள். பிரிட்டிஷ் ராணியைக் கொண்டு வந்து போட்ட பூஜை சில கோடிகளை சுருட்டவே பயன்பட்டது.
  • மாப்பிள்ளைமார்கள் போராட்டம்:
1921ல் வெள்ளையனுக்கு எதிராக கிலாபத் இயக்கம் கண்ட 100க்கும் அதிகமான மாப்பிளாமார்கள் கேரளாவின் திரலிருந்து ஏற்றி கோயம்புத்தூருக்கு கூட்ஸ் வண்டியில் அடைக்கப்பட்டு அனுப்பி கொல்லப்பட்டார்களே! அவர்கள் அடக்கஸ்தலங்கள் இன்று கோவை ரயில் நிலையில் அருகில் அவர்களின் வரலாற்றைச் சொல்லும் விதமாக உள்ளதே இதை எப்படி மறக்க முடியும்?

காந்திஜி அழைப்பு விடுத்த கள்ளுக்கடை போராட்டத்திற்கு மதுரையில் கைதான 19 பேரில் 10 முஸ்லிம்கள் தங்களின் 13 சதவிகிதத்தையும் தாண்டி, 50 சதவிகிதத்திற்கு அதிகமாகப் பங்கு கொண்டுள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது.

  • கப்பல் ஓட்டிய தமிழன் வா.உ.சி. லி கப்பல் வாங்கியதற்கு உதவிய தமிழன் ?
அன்றைய வெள்ளையனின் கடல் ஆளுகையை எதிர்த்து சுதேசிக் கப்பல் விடுவதற்கு ஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டது. கப்பல் வாங்குவதற்கு அன்றைய இந்திய நாளிதழில் பாராதியார் விளம்பரம் போட்டதற்கு வந்ததோ சில நூறு ரூபாய்களும், சில அணாக்களும்தான். ஆனால் கப்பலை வாங்குவதற்கு அன்றைய மதிப்பில் ரூ. 10 லட்சம் வழங்கிய ஹாஜி பக்கீர் முஹம்மதுவை மறந்து விட்டார்கள் ; வேண்டும் என்றே மறைத்துவிட்டார்கள் .
  • காந்திஜியின் பட்டங்கள், பதவிகள் புறக்கணிப்பு போராட்டம்
அன்றைய வெள்ளையன் ஆட்சியில் 13% இடஒதுக்கீட்டில் இருந்த முஸ்லிம் சமுதாயம் காந்திஜியின் பட்டங்கள், பதவிகள் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. கான் சாஹிபிலிருந்து, காயிதே மில்லத் வரை 90% அதிகமானோர் தங்கள் பட்டங்கள் பதவிகளைத் துறந்தனர். அன்று பட்டங்கள் பதவிகளைத் துறக்காமல் இருந்திருந்தால், இன்று இடஒதுக்கீடு கேட்டுப் போராடும் அவல நிலை இருந்திருக்காதே !
  • இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு
இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய விடுதலைப் போரில் தங்கள் வழிபாட்டுத் தலங்களைக் கூட வெள்ளையனுக்கு எதிராகப் பயன்படுத்திய ஒரு சமுதாயம் உண்டென்றால், அது இஸ்லாமிய சமுதாயம்தான்.

வெள்ளிக் கிழமை ஜூம்மா மேடைகள் எல்லாம் வெள்ளையனுக்கு எதிராக போர்ப் பரணி பாடின. ஜூம்மா மேடைகளில் உரமேற்றியதன் விளைவு வீரத்துடன் இந்த சமுதாயம் வெள்ளையனை எதிர்த்துப் போராடியது. வெள்ளையனின் உடை கலாச்சாரம், மொழி போன்றவை ஹராம் என பத்வாக்கள் அளித்தனர். வெள்ளையனின் அதிகார வரம்புக்கு உட்பட்ட நிலப்பரப்புகள் யுத்த பூமி என்பது போன்ற பத்வாக்கள் வழங்கப்பட்டன.

19 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய இஸ்லாமிய அறிஞராகத் திகழ்ந்த மௌலவி காசிம் அஹ்மத் நாளோத்வி 1885ல் இந்திய தேசிய காங்கிரஸில் முஸ்லிம் உறுப்பினராகச் சேர வேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். வெள்ளையனை நாட்டை விட்டு விரட்டுவது மார்க்கக் கடமை என்ற அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட பத்வாக்களை (மார்க்கத் தீர்ப்புக்களை) திரட்டி நுஸ்ரத்தூல் அஹ்ரார் (விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான உதவி) என்ற பெயரில் நூல் ஒன்றையும் வெளியிட்டார்.

காந்திஜி நடத்திய அஹிம்சைப் போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் பட்டியலில் ஒரு பகுதி:

1. காதிர் முஹைத்தீன் மரைக்காயர் (பர்மா, கிலாபாத், ஒத்துழையாமை)

2. மி.இ. முஹம்மது அப்துல் காதர் சாஹிபு ி தென்காசி (கிலாபத், அந்நியத் துணி எரிப்பு, ஒத்துழையாமை இயக்கம்)

3. அப்துல் ஹமீதுகான் 1932ல் சென்னை மேயராக பணியாற்றியவர் (சுதந்திரப் போராட்டத்திற்காக சென்னை சட்டசபையில் குரல் கொடுத்தார்.)

4.முகமதலி சேலம் (கள்ளுக்கடை மறியல்)

5. பி.என். அப்துல் கபீர் தாராபுரம் (வில்லுப்பாட்டு மூலம் தேசப் பற்றை
வளர்த்தார், கிலாபத்திலும் கலந்து கொண்டார்)

6. பண்டிட் அப்துல் மஜீத் பளைக்குளம் (கிலாபத்)

7. கலிபுல்லாஹ் திருச்சி (கிலாபத்)

8. நூர்மல் சென்னை (பகத்சிங் படத்தை அடையில் வைத்து விற்றதாக கைது செய்யப்பட்டு, 18-1 அச்சு சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டது.)

9. அப்துல் ஹமீது

10. மௌலானா அப்துல் காதர்

1973 ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலி­ம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களின் விபரம் வருமாறு:

  • பள்ளப்பட்டி மனிமொழி மவ்லானா
  • இராஜகிரி அப்துல்லா
  • இளையான்குடி கரீம் கனி
  • திருப்பத்தூர் அபூபக்கர்
  • திருப்பத்தூர் தாஜிதீன்
  • அத்தியூத்து அபூபக்கர்
  • பக்கரி பாளையம் அனுமன் கான்
  • சென்னை அமீர் ஹம்சா
  • சென்னை ஹமீது
  • செங்குன்றம் கனி
  • வண்ணாரப்பேட்டை ஹயாத்கான்
  • புதுவலசை இபுராஹிம்
  • பார்த்திபனூர் இபுராஹிம்
  • வனரங்குடி இபுராஹிம்
  • இளையான்குடி அப்துல் கபூர்
  • மேலூர் அப்துல் ஹமீது
  • சோழசக்கர நல்லூரி அப்துல் ஜப்பார்
  • தத்தனனூர் அப்துல் காதர்
  • பட்டுக்கோட்டை அப்துல் காதர்
  • திருப்பூர் அப்துர் ரஜாக்
  • காரிவிப்பட்டினம் அப்துல் மஜித்
  • குருவம் பள்ளி அப்துல் மஜீத்
  • கண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபு
  • லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம்
  • ராம்நாடு அப்துல் வஹாப்
  • மானாமதுரை அப்துல் பாசித்
  • திரிவிடைச் சேரி அப்துல் வஹிப்
  • அத்தியூத்து இபுராஹிம்
  • சென்னை ஜாபர் ஹக்கிமி
  • சிங்கம் மங்களம் ஜெய்னுல் ஆபிதீன்
  • திருப்பத்தூர் காதர் பாட்ஷா
  • புதுவலசை முஹம்மது லால் கான்
  • பார்த்திபனூர் கச்சி மைதீன்
  • தஞ்சை முஹம்மது தாவூது
  • அறந்தாங்கி முஹம்மதுசெரிபு
  • திருச்சி வரகனேரி முஹம்மது சுல்தான்
  • வடபழனி சென்னை முஹம்மது யூசுப்
  • தூத்துக்குடி முஹம்மது கல்லுரிஜனி
  • சிவகங்கை முஹம்மது இபுராஹிம்
  • சென்னை முஹம்மது உமர்
  • மதுரை மொய்தீன் பிச்சை
  • அம்மன்சத்திரம் முஹம்மது மீராசா
  • திருப்பத்தூர் பீர் முஹம்மது
  • கும்பகோணம் ரஹ்மத்துல்லா
  • குடியத்தம் நஜீமுல்லாஹ்
  • கிருஷ்ணகிரி தாவூத் ஷாயிபு
  • இராமநாதபுரம் சையது கனி
  • பரகப்பேட்டை தாஜிதீன்
  • மன்னர்குடி சிக்கந்தர்
  • கம்பம் சிக்கந்தர்
  • முதுகுளத்தூர் சுல்தான்
  • கும்பகோணம் சுல்தான்
  • இராமநாதபுரம் தாஜிதீன்
மௌலானா ஹஜ்ரத் மொஹானி மற்றும் அபித் அலி மற்றும் இன்னும்

எவ்வளவு முஸ்லிம் போராளிகள் சஹித் ஆகினார்கள்

  • மறந்து விட்டார்கள்... மறைத்து விட்டார்கள்...
உண்மையே சொல்லுவோம் உறக்க ! இதை எவராலும் மறுக்க முடியாது !

'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி
-- 

செவ்வாய், 2 ஜூலை, 2013

போதும்! போதும்! வெளிநாட்டு விமானங்கள்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...





















போதும்! போதும்! வெளிநாட்டு விமானங்கள்..நம்மோடு நம் வறுமையையும்! கவலைகளையும்! 


தாங்கிக்கொண்டு! பறந்த காலங்கள் போதும்! 
போதும் போதும் தாயின் முகம் பார்க்காமலும் 

தந்தை சொல் அறியாமலும்! தாரத்தின் அன்பரியாமலும்!

பிள்ளைகளின் பாசம் காணாமலும்! கழிந்த காலங்கள் போதும்!

போதும்! போதும்! சிறகொடிந்த பறவைகளாய்! 

கனவுலகை சுற்றிவந்த காலங்கள் போதும்!

வேண்டும்! வேண்டும்! வித விதமாய்
என் சமுதாயம் கற்றுத்தேற வேண்டும்! 

ரக ரகமாய் என் சமுதாயம் பதவிகள் அடைய வேண்டும்!

முதல் படியாய் இடஒதுக்கீடு வேண்டும்!
இடஒதுக்கீடு ஒன்றும் சலுகையல்ல! நாம் கெஞ்சிப் பெறுவதற்கு! 

இடஒதுக்கீடு நம் உரிமை! பெறவேண்டியது நம் கடமை!

மானமிகு சமுதாயமே! தாய் கழகம் அழைக்கிறது! 

குடும்பம் குடும்பமாக திறண்டுவா!
இன்ஷா அல்லா ஜூலை 6ல் சென்னை நோக்கி! 

லி.முஹம்மது அலி


 

  

4 மாத அவகாசம்!: சவுதி அரசு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

4 மாத அவகாசம்!: சவுதி அரசு



சவுதியில் புதிய சட்டத்தின் கீழ் வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேற 4 மாத அவகாசம் அளித்துள்ளது சவுதி அரசு. நவம்பர் 4ம் தேதி வரை கால அவகாசம் அளித்து சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது

4 மாத அவகாசம்!: சவுதி அரசு

சவுதியில் புதிய சட்டத்தின் கீழ் வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேற 4 மாத அவகாசம் அளித்துள்ளது சவுதி அரசு. நவம்பர் 4ம் தேதி வரை கால அவகாசம் அளித்து சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது

சவுதியில் வெளிநாட்டு தொழிலாளர் வெளியேற நாளையுடன் அவகாசம் முடிவடைய இருந்தது. சவுதியில் புதிய சட்டப்படி 10 பணியாளர்களில் ஒருவர் உள்நாட்டவராக இருக்க வேண்டும். புதிய சட்டத்தால் 75 ஆயிரம் இந்தியர்கள் சவுதியில் இருந்து நாடு திரும்ப இருந்தனர். 75 ஆயிரம் பேரில் சுமார் 3 ஆயிரம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்


King Abdullah extends amnesty period till Nov. 4


ARAB NEWS
Tuesday 2 July 2013
Last Update 2 July 2013 11:02 am

JEDDAH: King Abdullah, the Custodian of the Two Holy Mosques , has extended by four months the amnesty period for undocumented expatriates in the Kingdom to correct their status.

A royal order carried by the Saudi Press Agency on Tuesday said the original three-month grace period, which ends on July 4, will be extended to the end of the current Hijra year 1434, equivalent to Nov. 4, 2013.

Once the new deadline expires, inspections by appropriate agencies such as the Ministry of Labor and Passport Department, will resume inspections in various regions of the Kingdom and all penalties will apply on violators, the order said.

With this new deadline, the Ministries of Interior and Labor urged all undocumented expatriates who have yet to register to come forward and have their status corrected.

http://www.arabnews.com/news/456804
--


رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து 

எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் 
நேர்வழியை எமக்கு எளிதாக்கி 
தந்தருள்வாயாக!  அல்குர்ஆன்:18:10
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
T M M K  AL-KHOBAR. K.S.A  I  visit : www.tmmk.info
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்! 
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


  

  

திங்கள், 1 ஜூலை, 2013

ஜூலை 6 பேரணியை நேரடியாக பார்க்க

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...



ஜூலை 6 பேரணியை நேரடியாக பார்க்க


தமுமுக தலைமையில் சென்னையில் ஒன்றுதிரள 

இருக்கும் முஸ்லிம்சமுதாயம் தனது உரிமைக்காக 

கோட்டையை நோக்கி புறப்படுகிறது. இதனை 

நேரடியாக காண இதோ கீழே உள்ள லிங்கில் 

ஜூலை 6 அன்று பார்க்கலாம்..





TMMK LIVE TVtmmk.tv