அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

புதன், 10 ஜூலை, 2013

இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

.S.ரிஃபாயி ரஷாதி ,, மாநில தலைவர் தமுமுக அவர்கள் சிறப்பு பேட்டி !

இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

அன்பிற்கினிய கழகச் சகோதரர்கள் அனைவரும் நலம். நலம் பல விளைக...

முப்பெரும் கோரிக்கைகளை முன்னிறுத்தி, தலைமை அறிவித்த, கோட்டை நோக்கி கோரிக்கைப் பேரணி வெற்றியடைய கடந்த இரண்டு மாதங்களாக, இரவு பகலாக உழைத்து, ஆயிரக்கணக்கில் மக்களைத் திரட்டிவர கடும் முயற்சி மேற்கொண்டீர்கள். தமிழகமெங்கும் நமது பேரணி பற்றிய பேச்சாகவே இருந்தது என்றால் மிகையாகாது.

இந்நிலையில், அரசின் வஞ்சகத்தால், முதலில் அனுமதியளித்து, கடைசி தினங்களில் அனுமதி மறுக்கப்பட்டது. நாம் நீதிமன்றப் படியேறினாலும், அரசின் சூழ்ச்சியும், காவல்துறையின் அநீதியுமே வென்றதால், பேரணிக்கு தடை விதிக்கப்பட்டது.

எனினும் தலைமையின் நீண்ட ஆலோசனைக்குப் பின் தடையை மீறுவது என்று முடிவெடுத்து, உங்களுக்கு அறிவிப்பு தந்தோம்.

இறையருளால், தடை உடைத்த பேரணியில் பல்லாயிரக்கணக்கில் கலந்துகொண்டு கைதானாலும், வரும் வழியிலேயே ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு, சென்னையில் மட்டும் 34 மண்டபங்களில் அடைக்கப்பட்டாலும், சென்னை மாநகரே ஒரு முஸ்லிமும் நுழைந்துவிட முடியாத அளவுக்கு கெடுபிடிகள் செய்யப்பட்டாலும், தமுமுக தொண்டன் என்றைக்கும் போராளிதான் என்றும், சமுதாயப் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் தமுமுகதான் முதல் இயக்கம் மட்டுமல்ல, முதன்மை இயக்கம் என்பதையும் நிரூபித்து விட்டீர்கள்.

எந்த கமிஷனர் அலுவலகத்திலிருந்து தடையாணை பிறப்பிக்கப்பட்டதோ, அதே அலுவலகம் முன்னால் மக்கள் திரண்டதும், கமிஷனர் அலுவலக வாயில் பூட்டப்பட்டதும், நூற்றுக்கணக்கான காவலர்கள் நிறுத்தப்பட்டதும் விந்தையிலும் விந்தை. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

மீடியாக்களில் புறக்கணிக்கப்படும் நமது இயக்க நிகழ்ச்சிகள், போராட்டங்கள், உங்களது அயராத முயற்சியால், தொண்டர்களின் உணர்ச்சிப் பெருக்கால் பேரணி முழுவதும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது மாறிவிட்ட சூழலையே காட்டுகிறது.

பேரணித் தடையால் மக்களிடம் ஏற்பட்ட எழுச்சியை கவனித்த திமுக தலைவர் கலைஞர் அவர்கள் கூட தடையைக் கண்டித்து அறிக்கை விட்டதும் நாம் கவனிக்கத்தக்கது.

தலைமையின் கட்டளைக்கிணங்க நீங்கள் செயல்பட்டதும், கைது நடவடிக்கைக்கும் கலங்காமல் பேரணியில் பங்கேற்றதும், மிகுந்த பாராட்டுக்கும், நன்றிக்கும் உரியதாகும்.

தலைமையின் சார்பாக உங்கள் மாவட்ட நிர்வாகிகள், கிளைக்கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றிகள் ஆயிரம் உரித்தாகட்டும்.

ஜஸாக்குமுல்லாஹு ஹைரா

இறைவனுக்கும் நன்றி செலுத்துங்கள்.

அன்புக்குரிய சகோதரர்களே... பேரணியில் வெற்றிபெற்றுவிட்ட நாம், நம் ஒவ்வொருவரின் ஆன்மீக பலத்தையும் அதிகரிக்க இதோ ரமழான் வந்துவிட்டது. இதன் முழுப்பலனையும் அடைவதுதான் மாபெரும் வெற்றியாகும்.

ரமழானில் 1) பகலில் நோன்பு, 2) இரவில் சிறப்புத் தொழுகை (ஜமாத்துடன்), 3) நோன்பாளிகளுக்கு நோன்பு துறக்க முயற்சிப்பது, 4) குர்ஆன் ஓதுதல், 5) தவறானவற்றைப் பேசுவது, பார்ப்பது, கேட்பது அனைத்தையும் தவிர்த்தல், 6) பிந்திய 10 இரவுகளில் பள்ளிவாசலில் (இஃதிகாப்) தங்குவது, லைலத்துல் கத்ர் இரவைத் தேடுவது, 7) தான தர்மங்கள் செய்வது பெருநாளை முன்னிட்டு ஃபித்ரா ஸதகா கொடுப்பது, அதை சேகரித்துக் கொடுக்க முயல்வது அதிகமான பிரார்த்தனைகளில் ஈடுபடுவது போன்ற நற்பணிகளில் ஈடுபட வேண்டுமென உங்களை அன்போடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

நமது தனித்தனி பணிகளும், சமுதாயப் பணிகளும் மறுமை வெற்றியை முன்னிறுத்தியே செய்யப்பட வேண்டும் என்பதை மறந்துவிட மாட்டீர்கள் என நம்புகிறோம்.

வல்ல இறைவன் நம் அனைவரின் நற்செயல்களையும் அங்கீகரிப்பானாக!

பாவங்கள், குற்றங்களை விட்டும் பாதுகாப்பானாக!

ரமழானின் முழுப்பலனையும் அடையச் செய்வானாக!

அன்புடன்

ஜே.எஸ்.ரிபாயீ

தலைவர், தமுமுக

======

குறிப்பு: இதை நகலெடுத்து ஒவ்வொருவரிடம் கொடுக்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

திங்கள், 8 ஜூலை, 2013

ரமலான் மாதம் புதன்கிழமை, 10 ஜூலை முதல் தொடக்கம்:"First day of Ramadan fasting be on Wednesday 10-July-2013. InshaAllah"

ஏகஇறைவனின் திருப்பெயரால்... 

அஸ்ஸலாமு அலைக்கும்.

10 - July-2013 புதன் கிழமை ரமலான் - நோன்பு பிறை ஒன்று 
என அறிவிக்கப் பட்டுள்ளது.... இன்ஷா அலலாஹ்!

ரமலான் மாதம் புதன்கிழமை, 10 ஜூலை முதல் தொடக்கம்:

சவூதி அரேபியாவில் கடுமையான மணல் காற்று வீசுவதால் இன்று பிறை தென்படவில்லை ஆகவே நாளை [செவ்வாய் கிழமை] சஃபான் மாதத்தின் முப்பது நாட்கள் பூர்த்தியாகிறது. செவ்வாய் இரவு [09 ஜூலை] முதல் ரமலான் மாதம் தொடங்குகிறது. புதன் கிழமை ரமலான் மாதத்தின் முதல் நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் படி சவூதி அரேபியா, குவைத், கத்தார், UAE, ஓமன், மற்றும் பஹ்ரைன் போன்ற வளைகுடா நாடுகளில் இன்ஷா அல்லாஹ் புதன் கிழமை ரமலான் முதல் நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"First day of Ramadan fasting be on Wednesday 10-July-2013. InshaAllah"

Ramadan in Saudi to start on Wednesday, 10 July

It is confirmed that Muslims in Saudi Arabia will welcome the Holy month of Ramadan on Wednesday. In an announcement made by the Supreme court of Saudi Arabia, it is sure now that the holy fasting month will not start tomorrow.

The Ramadan crescent was not sighted this evening. In parts of the kingdom, the chances to sight the moon were low because of a sandstorm that obscured the skies. Tuesday is the thirtieth day for the month of Sha’aban.

This year, Ramadan will begin on the evening of Tuesday, 9 July. Wednesday will be the first day of Ramandan in Saudi Arabia, Kuwait, Qatar, the UAE, Oman, and Bahrain.

-- 

رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து 
எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் 
நேர்வழியை எமக்கு எளிதாக்கி 
தந்தருள்வாயாக!  அல்குர்ஆன்:18:10

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்! 
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

த.மு.மு.க போராட்டம் : தடை செய்து மூக்குடைபட்ட தமிழக அரசு - பேராசிரியர் மார்க்ஸ் அந்தோணிசாமி

த.மு.மு.க போராட்டம் : தடை செய்து மூக்குடைபட்ட தமிழக அரசு - பேராசிரியர் மார்க்ஸ் அந்தோணிசாமி

பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்தல் {அண்ணா பிறந்த நாளில் இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட போதெல்லாம்முஸ்லிம் கைதிகள் மட்டும் விடுதலை செய்யப்படவில்லை},முஸ்லிம்களுக்குத் தமிழக அரசு வழங்கியுள்ள இட ஒதுக்கீட்டு அளவைஅதிகரித்தல், தமிழக அரசின் திருமணப்பதிவுச் சட்டத்தில் திருத்தங்கள்செய்தல் என்கிற 3 கோரிக்கைகளை வைத்து (ஜூலை 6, 2013) பேரணி நடத்தக்கோரிய அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு.

த.மு.மு.க நீதிமன்றத்திற்குச் சென்ற போது அங்கும் நீதி கிடைக்கவில்லை.
தடையை மீறிப் பேரணி செல்வதென அவர்கள் முடிவு செய்தனர். காவல்துறைகெடுபிடி தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்தவேன்கள், லாரிகள் எல்லாம் திண்டிவனம் தொடங்கி ஆங்காங்குநிறுத்தப்பட்டன, நகரத்திற்குள்ளும் அடையாறு, பூந்தமல்லி எனப் பல்வேறுநுழை வாயில்களில் பஸ்கள் நிறுத்திச் சோதனைகள் இடப்பட்டன.

அப்படியும் தடையை மீறி ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கூடஇருந்தவர்கள் மீது அடக்குமுறை மேற்கொண்டு கலைக்கப்படுவார்கள்என்பதுபோலச் செய்திகள் பரவியதை ஒட்டி மனித உரிமை அமைப்புகள்சார்பாகச் சிலர் பார்வையாளர்களாக வந்தால் நல்லது எனச் சிலர் கருத்துத்தெரிவித்தனர்.

சுமார் 11 மணி வாக்கில்தான் நண்பர்களைத் தொடர்பு கொள்ள முடிந்தது. பேரா.மு.திருமாவளவன், தோழர் நட்ராஜ், சுற்றுச் சூழல் ஆர்வலர் வி.சீனிவாசன்,வழக்குரைஞர் கி. நடராசன் ஆகியோர் உடன் வரச் சம்மதித்தனர்.

சுமார் 2.30 மணி வாக்கில் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு எதிரில்அண்ணாமலைப் பல்கலைக் கழக தூரக் கல்வி அலுவலகத்திற்கு வேளியேகூடினோம். கடுமையான போலிஸ் குவிப்பு. கைது செய்துஅகற்றப்படுவோர்களைக் கொண்டு செல்ல ஏராளனமான MTC பஸ்கள்குவிக்கப்பட்டிருந்தன. பத்திரிக்கையாளர்கள் சிலர் காமராக்களுடன்நின்றிருந்தனர்.

பேரணிக்கு அனுமதி இல்லை எனவும், நீதிமன்றமும் அனுமதி மறுத்துவிட்டதுஎனவும், எனவே இங்கு கூடுவது சட்ட விரோதம் எனவும் மைக்கில் போலீசார்அறிவித்துக் கலைந்து செல்லுமாறு எச்சரித்துக் கொண்டிருந்தனர்.

சுமார் 200 த.மு.முகவினர் அங்கு நின்றிருந்தனர். திடீரென அவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு பஸ்களில் ஏற்றப்பட்டனர். அதே நேரத்தில்பெருந்திரளில்மக்கள் எழும்பூர் ஆதித்தனார் சிலை அருகில் உள்ள ரவுண்டானவைச் சுற்றித்திரண்டிருப்பதாக யாரோ சொன்னார்கள்.

போலீஸ் காவல் இருந்ததை ஒட்டி ராஜரத்தினம் ஸ்டேடியத்தைப் பின்புறமாகச்சுற்றி வந்து ம.தி.மு.க அலுவலகம் முன்பு போலீஸ் வாகனங்களுக்கு மத்தியில்எங்கள் டூ வீலர்களை நிறுத்திவிட்டு அப்படியே நகர்ந்து ரவுன்டானாவை ஒட்டிப்பல்லாயிரக் கணக்கில் கூடியிருந்த த.மு.மு.க தொண்டர்கள் மத்தியில்கலந்துகொண்டோம்.

ஏகப்பட்ட போலீஸ் கொண்டு வந்து குவிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் ஒன்றும்தீவிரம் காட்டாமல் அமைதியாகவே தடிகளுடன் நின்றிருந்தனர். கருப்புவெள்ளைக் கொடிகள் அப்பகுதியை நிறைத்திருந்தன. "நாரே தக்பீர் !அல்லாஹூ அக்பர்" என்கிற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.

சுமார் 3.30 மணிவாக்கில் த.மு.மு.க தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ்வந்தார். வேன் ஒன்றில் ஏறி நின்று முழக்கங்களை இட்டார். தொண்டர்கள்அவ்வழியே செல்லும் பொது மக்கள், குறிப்பாகப் பெண்களுக்குப் பாதுகாப்புஅளித்தனர்.

எனக்குச் சரியாக மதிப்பிட இயலவில்லை. சுமார் 5,000 பேர்கள் இருக்கலாம்.ஆங்காங்கு நிறுத்தப்பட்டுள்ள காலி பஸ்களில் ஏறி அமைதியாகக் கைதாகுமாறுதலைவர்கள் கேட்டுக் கொண்டனர். கைதானவர்களை ஏற்றிக் கொண்டு பஸ்கள்ஊர்ந்தன.

சுமார் 5 மணி வாக்கில் பேராசிரியர் மைக்கில் மீண்டும் பேசினார். மேலும் அங்குகூடி இருந்தவர்களைக் கைது செய்து கொண்டு போகத் தம்மிடம் வாகனங்கள்இல்லை எனப் போலீசார் கைவிரிப்பதாகவும் எனவே மற்றவர்கள்அமைதியாகக் கலையுமாறும் வேண்டிக்கொண்ட பின் கூடியிருந்தோர்கலைந்தனர்.

த.மு.மு.க 1995ம் ஆண்டு தொடங்கப்பட்டது என நினைக்கிறேன். அதிலிருந்துஅவர்களின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்களில் நானும்ஒருவன். 

அமைதியான வழியில் தமது கோரிக்கைகளுக்காக உறுதியாகப்போராடுபவர்கள் அவர்கள். எந்தக் காலத்திலும் சட்ட ஒழுங்குப் பிரச்சினைஏதும் அவர்களால் ஏற்பட்டதாக நான் அறிந்ததில்லை. சிறைக் கைதிகள்தொடார்பான கோரிக்கை எல்லாம் மிக நியாயமானவை. 

பேசாமல் பேரணியை நடத்தி விட்டுப் போக அனுமதி அளித்திருந்தால்ஊர்வலமாகச் சென்று மனு அளித்துவிட்டுச் சென்றிருப்பார்கள்.

இப்படித் தடை செய்து தமிழக அரசு மூக்கை உடைத்துக் கொண்டிருக்கவேண்டியதில்லை.
எப்படியோ த.மு.மு.க தொண்டர்கள் உற்சாகமாக வீடு திரும்பினர்.

ம.தி.மு.க அலுவலகம் முன்பிருந்த கடையில் ஒரு சூடான டீயையும்போண்டாவையும் 

சாப்பிட்டுவிட்டு நாங்களும் கலைந்தோம்.-- 

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்! இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

ஞாயிறு, 7 ஜூலை, 2013

அன்பார்ந்த தமுமுக சகோதரர்களே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள் !

ஏகஇறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்..அல்லாஹ்.

அன்பார்ந்த தமுமுக சகோதரர்களே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள் !

ஏன் என்றால் அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள் அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான் அல்லாஹ் சூழ்ச்சி செய்வோரில் மிகைத்தவன் ! [அல் குர் ஆன்]

மூன்று மாதங்களாக தமிழகம் எங்கும் பதாகைகள் சுவர் விளம்பரங்கள் தட்டிகள் வைத்த போதெல்லாம் தடுக்காத காவல் துறை கடைசி நேரத்தில் தடை செய்தது ! உயர் நீதி மன்றத்தின் கதவைத் தட்டிய போது அது உயர் நீதி மன்றம் அல்ல உயர் சாதி மன்றம் என மீண்டும் நிருபித்தது!

அரசு தன முழு பலத்தையும் கொண்டு ஆங்காங்கே முஸ்லிம்களைக் கைது செய்தது!

சென்னை வரும் வழிகளை எல்லாம் சீலிட்டது!

ஆனால் அரை மணி நேரத்தில் எங்கிருந்து வந்தனர்?

எப்படி வந்தனர்?

இத்தனை ஆயிரம் பேர் என காவல் துறை திகைத்தது!

ஊடகங்கள் காவல்துறையின் கையறு நிலையைக் கண்டு இது காவல் துறையின் தோல்வி என்றனர்! முஸ்லிம்கள் ஒன்று கூடினால் எந்தக் காவல் துறையும் எதுவும் செய்ய முடியாது என்பதை அனைத்து முஸ்லிம்களின் அண்ணாசாலை முற்றுகைக்குப் பின் இரண்டாம் முறையாக உலகிற்கு பதிவு செய்தது தமுமுக !

இவர்கள் அமெரிக்க தூதரகத்தையே அடித்து நொறுக்கியவர்கள் அதனால் தான் அனுமதி மறுக்கிறோம் என காரணம் சொன்னவர்களின் வாயடைக்கும் வண்ணம் நாங்கள் அமெரிக்க தூதரகத்தைதான் அடிப்போமே தவிர அப்பாவி மக்களுக்கோ அரசு உடமைகளுக்கோ எந்த சேதமும் விளைவிக்காத கட்டுப்பாடான கூட்டம் என்பதையும் உலகிற்கு உணர்த்தியது !

அம்மையாரின் அரசு அனுமதித்து இருந்தால் கூட இவ்வளவு எழுச்சியும், ஊடகங்களின் வெளிச்சமும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே ! அனால் சூழ்ச்சியாளருக்கெல்லாம் சூழ்ச்சியாளன் அல்லாஹ் தன படைகளைக் கொண்டு மீண்டும் எதிரிகளின் இதயத்தில் அச்சத்தை போட்டான்! முஸ்லிம்களின் உள்ளத்தில் வீரத்தை விதைத்தான். அன்பார்ந்த தமுமுக சகோதரர்களே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள் !

இந்த பேரணி மூலம் முஸ்லிம்களின் கண்ணியத்தை உயர்த்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

110:1 إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ

110:1. அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,

110:2 وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا

110:2. மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,

110:3 فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا

110:3. உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.

அரசு தன முழு பலத்தையும் கொண்டு ஆங்காங்கே முஸ்லிம்களைக் கைது செய்தது! சென்னை வரும் வழிகளை எல்லாம் சீலிட்டது! ஆனால் அரை மணி நேரத்தில் எங்கிருந்து வந்தனர்? எப்படி வந்தனர்?

இத்தனை ஆயிரம் பேர் என காவல் துறை திகைத்தது! ஊடகங்கள் காவல்துறையின் கையறு நிலையைக் கண்டு இது காவல் துறையின் தோல்வி என்றனர்!

முஸ்லிம்கள் ஒன்று கூடினால் எந்தக் காவல் துறையும் எதுவும் செய்ய முடியாது என்பதை அனைத்து முஸ்லிம்களின் அண்ணாசாலை முற்றுகைக்குப் பின் இரண்டாம் முறையாக உலகிற்கு பதிவு செய்தது தமுமுக !

இவர்கள் அமெரிக்க தூதரகத்தையே அடித்து நொறுக்கியவர்கள் அதனால் தான் அனுமதி மறுக்கிறோம் என காரணம் சொன்னவர்களின் வாயடைக்கும் வண்ணம் நாங்கள் அமெரிக்க தூதரகத்தைதான் அடிப்போமே தவிர அப்பாவி மக்களுக்கோ அரசு உடமைகளுக்கோ எந்த சேதமும் விளைவிக்காத கட்டுப்பாடான கூட்டம் என்பதையும் உலகிற்கு உணர்த்தியது !

அம்மையாரின் அரசு அனுமதித்து இருந்தால் கூட இவ்வளவு எழுச்சியும், ஊடகங்களின் வெளிச்சமும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே ! அனால் சூழ்ச்சியாளருக்கெல்லாம் சூழ்ச்சியாளன் அல்லாஹ் தன படைகளைக் கொண்டு மீண்டும் எதிரிகளின் இதயத்தில் அச்சத்தை போட்டான்! முஸ்லிம்களின் உள்ளத்தில் வீரத்தை விதைத்தான்.

அன்பார்ந்த தமுமுக சகோதரர்களே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள் !

இந்த பேரணி மூலம் முஸ்லிம்களின் கண்ணியத்தை உயர்த்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

110:1 إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ

110:1. அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,

110:2 وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا

110:2. மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,

110:3 فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا

110:3. உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.

Thanks: Sengis Khan
https://www.facebook.com/photo.php?fbid=547703781952710&set=a.272163346173423.64871.100001392797464&type=1&theater

ஒரு பேரணிக்குத்தானே அனுமதி கேட்டோம்...இப்படி ஏராள பேரணிகள்....இறைவன் மிகப் பெரியவன்...Haja Gani

அல்லாஹ். ஒருவனுக்கே புகழ் அனைத்தும்

رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து 
எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் 
நேர்வழியை எமக்கு எளிதாக்கி 
தந்தருள்வாயாக!  அல்குர்ஆன்:18:10

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
T M M K  AL-KHOBAR. K.S.A  I  visit : www.tmmk.info
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்! 
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

சனி, 6 ஜூலை, 2013

கோட்டையை நோக்கிய முஸ்லிம்களின் பேரணி தடுக்கப்பட்டால் கோட்டையில் இருப்போருக்கு வீழ்ச்சி நிச்சயம் இது இஸ்லாமிய வரலாறு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கோட்டையை நோக்கிய முஸ்லிம்களின் பேரணி தடுக்கப்பட்டால்
கோட்டையில் இருப்போருக்கு வீழ்ச்சி நிச்சயம் இது இஸ்லாமிய வரலாறு!

மக்காவை நோக்கி அணி திரண்ட அண்ணலம் பெருமானாரையும்
அவரின் தோழர்களையும் தடுத்து நிறுத்தி வெற்றி பெற்றதாக
குறைஷிகள் கொக்கரித்தனர்! 
ஆனால் அடுத்த ஆண்டுகளில்  மக்கமா நகரம் முஸ்லிம்களால் வெற்றிகொள்ளப்பட்டு  குறைஷிகளின் மேல் அல்லாஹ் இழிவை சுமத்தினான்.
இன்ஷா அல்லாஹ் இஸ்லாமிய சமுதாயத்தின்  நியாயமான கோரிக்கைக்காக நடைபெறும்  இந்த கோட்டையை நோக்கிய பேரணியை  தடை செய்த இந்த ஆட்சியாளர்களும் இழிவுடன் கோட்டையை இழந்து வெளியேறும் காலம் வரும்! 

சென்னை திணறுகிறது. அல்லாஹ் அக்பர். அரசுக்கும் சமுதாயத்தில் காட்டிகொடுக்கும் துரோகிகளுக்கும்அல்லாஹ் சம்பட்டி அடி கொடுத்து விட்டான்.
  
நாரே தக்பீர்..... அல்லாஹுஅக்பர்
நபி வழி எவ்வழி.... அவ்வழி நம்வழி

சென்னை திணறுகிறது ... அரசாங்கம் முழிக்கிறது

உடைந்தது நீதிமன்ற தடை...... ஜெயா அரசின் அடுக்குமுறைகளை மீறி சென்னையில் பல்லாயிரக்கணக்கானோர்...............

அல்லாஹூ அக்பர்..... அல்லாஹூ அக்பர்......... சென்னை முடங்கிவிட்டது...

சென்னை முடக்கம்... போக்குவரத்து ஸ்தம்பிப்பு...