அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

வெள்ளி, 13 ஜூலை, 2012

பேரா. ஜவாஹிருல்லாஹ் பங்கு பெற்ற சிறப்புக்கூட்டம்.13.7.12.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பேரா. ஜவாஹிருல்லாஹ் பங்கு பெற்ற சிறப்புக்கூட்டம்.13.7.12.

  










































அஸ்ஸலாமு அலைக்கும்..
த.மு.மு.க.-ம.ம.க. வின் சவுதி அரேபியா கிழக்கு மண்டல சிறப்பு செயற்குழு(பொதுக்கூட்டம்) 13-07-2012 வெள்ளிக்கிழமை தம்மாம் 91 -ல் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் மூத்த தலைவர் முனைவர் ஜவாஹிருல்லாஹ் (ராமநாதபுரம் சட்டமன்டற உறுப்பினர்) அவர்களின் வருகையை ஒட்டி கிழக்கு மண்டலம்சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில் கிழக்கு மண்டலத் தலைவர் பொறியாளர் அபிராமம் அப்துல் காதர் அவர்கள் தலைமையில் கூட்டம் சரியாக காலை 10 :15 மணி அளவில் தொடங்கியது. கிழக்கு மண்டல ம.ம.க. வின் செயலாளர் சகோ. திருவாரூர் அப்துல் அலீம் அவர்கள் வரேவேற்புரை நிகழ்த்த கூட்டம் தொடர்ந்தது.

அடுத்து தலைமை உரை நிகழ்த்திய பொறியாளர் அபிராமம் அப்துல் காதர் அவர்கள் தனது உரையில் கடந்த 16 வருடங்களாக த.மு.மு.க. கடந்துவந்த பாதைகளையும், இங்கு நாம் செயலாற்றுகின்ற விபரத்தையும், அனைத்து கிளைகளின் ஒத்துழைப்போடு நடத்திவரும் விபரத்தையும், நமது ம.ம.க. வின் இரண்டு சட்டமன்டற உறுப்பினர்களின் செயல்பாடுகளையும் எடுத்துரைத்தார்.

அதை தொடர்ந்து நமது மண்டலத்தின் ஒவ்வொரு கிளைகளின் 16 வருட அனுபவங்களையும், செயல்பாடுகளையும் கூட்டத்தில் பகிர்ந்துகொள்ள அந்த அந்த கிளை நிர்வாகிகள் அழைக்கப்பட்டனர் அதில் அல்கோபர் கிளை சார்பாக சகோ. காஜா பஷீர், தம்மாம் கிளை சார்பாக சகோ. அஜ்மல் கான், அப்கைக் கிளை சார்பாகசகோ. அப்துல் முமீன், ரஹீமா கிளைசார்பாக சகோ. இஜாவுதீன், அல்ஹசா கிளை சார்பாக சகோ. சிஹாபுதீன்,அல்ஜுபைல் கிளை சார்பாக சகோ. அப்துல்லாஹ் மற்றும் சிஹாத் கிளைசார்பாக சகோ. சாகுல் ஹமீது அவர்களும் தங்களது கிளை செயல்பாடுகளையும், தாங்கள் வசூல் செய்து வழங்கிய நிதிகளையும் எடுத்துரைத்தனர்.

பின்னர் மண்டல செயல்பாடுகளை மண்டலச் செயலாளர் சகோ. காயல் இம்தியாஸ் அவர்கள் 16 வருட அனுபவங்களையும், செயல்பாடுகளையும் எடுத்துரைக்க கூட்டம் ஜும்ஆ தொழுகைக்காக முதல் அமர்வு முடித்துக்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து ஜும்ஆ உரையை ஆத்தங்கரை அலாதீன் பாக்கவி நிகழ்த்தினார் அதில் த.மு.மு.க. செய்யக்கூடிய பணி என்பது சமுதாயத்திற்கு செய்யும் மகத்தான பணி என்பதையும் இதுதான் உண்மையான தாவா பணி என்பதையும் கோடிட்டு காட்டினார்.

ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து இரண்டாவது அமர்வு தொடங்கியது. அதில் தொடக்கமாக கழகத்தின் கொள்கைப்பாடலை சிறுவன் அன்சாரியின் மழலைக்குரலில் கணீரென பாடியது வந்திருந்த அனைவரையும் சுண்டியிழுத்தது.

தொடர்ந்து சிறப்புரையாக தாயகத்திலிருந்து வந்திருந்த மூத்த தலைவர் முனைவர் ஜவாஹிருல்லாஹ் (ராமநாதபுரம் சட்டமன்டற உறுப்பினர்) அவர்கள் தனது உரையில் அல்லாஹுத்தாலா தனது திருமறையில் மனித சமுதாயத்தைமேன்மையான சமுதாயமாக படைத்திருப்பது ஏனென்றால் மனிதர்களுக்கு நன்மையை ஏவி தீமையை தடுக்கும் செயல்களை செய்வதனால் என குறிப்பிட்டு அந்த மகத்தான பணியை நமது இயக்கம் செவ்வனே செய்துவருவதையும், 

1995 ல் அநீதிக்கு எதிராக தொடங்கப்பட்ட இந்த இயக்கம் பன்முகத் தன்மைக்கொண்ட இந்தியாவில் நாம் செய்யும் சேவைகள் பலதரப்பட்ட முஸ்லிம் அல்லாதவர்களிடமும் சென்றடைந்திருப்பதையும், மனித நேயத்திற்கு எடுத்துக்காட்டாக ராமநாதபுரம் சனவெளியில் ஏற்பட்ட காட்டாற்றுவெள்ளத்தில் இறந்த மயிலாடுதுறை மாற்றுமத சகோதரரின் உடலை நமது இயக்கத்தின் அவசர ஊர்தி மூலம் எடுத்து சென்று ஒப்படைத்ததை தாம் 2009 நாடாளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் பிரச்சாரத்தின் போது அந்த குடும்பத்தினர் நன்றியுடன் நினைவுகூர்ந்து தெரிவித்ததை எடுத்துரைத்தார். 

 மேலும்சட்டமன்றத்தில், ஓங்கி உரைத்துதவ்ஹீதை நிலைநாட்டும் முகமாக அமைந்த சந்தர்ப்பத்தை எடுத்துரைத்த போது, அங்கே குழுமியிருந்த அனைவரும் ஒருமித்த குரலில் " அல்லாஹு அக்பர்" என தக்பீர் முழக்கமிட்டனர்.

கடந்த 20/4/2012 அன்று நடைபெற்ற சட்டமன்ற பொதுபணித்துறை மானியக் கோரிக்கை நடவடிக்கையின் போது அமைச்சர் கே.வி. ராமலிங்கம் அவர்கள் நிகழ்த்திய உரையில் இந்துக்கள் ராமரை வணங்குவது போல், கிருஸ்தவர்கள் ஏசுவை வணங்குவது போல் முஸ்லிம்கள் முகம்மதை (ஸல்) வணங்குவது போல் என கூறியபோது சட்டசபை மரபை மீறிநமது ஆம்பூர் சட்ட மன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் குறுக்கிட்டு அமைச்சர் கூறுவதுபோல் முஸ்லிம்கள் முகம்மதை (ஸல்) அவர்களை வணங்குவது இல்லை அல்லாஹ்வை மட்டும் தான் வணங்குகிறார்கள் என ஆணித்தரமாக தவ்ஹீதை எடுத்துவைத்தார்கள். 

முதலமைச்சர் சபாநாயகரிடம் அமைச்சர் கூறிய கருத்தை சட்ட சபை பதிவிலிருந்து திருத்துமாறு அறிவுருத்தியதையும் எடுத்துரைத்தார்கள். மேலும் தாங்கள் இருவரும் தங்களது தொகுதி மேம்பாட்டிற்கான நிதியை முழுமையாக பயன்படுத்துவதையும், நாம் கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருப்பதையும் எடுத்துரைத்தார்,

 மேலும் நாம் வழமையாக ரமலானில் வசூல் செய்து அனுப்பும் பித்ராவை இவ்வருடமும் வசூல்செய்து அனுப்பவேண்டுமாய் கேட்டு கொண்டார். மேலும் அத்துடன் நமது இயக்கத்தின் வளர்ச்சிக்காக சதக்காக்களையும் அதிகமாக வசூல் செய்து அனுப்ப வேண்டும் என கேட்டுகொண்டார்.

தலைவர் பேச்சுடன் கூட்டம் மதிய உணவுஇடைவேளைக்காக நிறுத்தி வைக்கப்பட்டது.

பின்னர் தொடங்கிய கூட்டம் அல்கோபர்கிளைசார்பாக நினைவுபரிசாக வீர வாள்வழங்கப்பட்டது.

பின்னர் வந்திருந்தவர்களின் பலதரப்பட்ட கேள்விகளுக்கு எடுத்துகாட்டாக ஜனாதிபதி தேர்தலில் பிரனாபை ஆதரிப்பது ஏன்?வரும் பாரளுமன்றத்திற்க்கான கூட்டணி முன்னோட்டமா? சென்னை சாந்தோமில் நடைபெற்ற தூக்கு தண்டனை ரத்துசெய்ய வேண்டி நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டது ஏன்? சட்ட சபையில் முதல்வரை அதிகமாக புகழ்வது போல் தோன்றுகிறதே ஏன்? ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளை இணைத்துக்கொண்டு செயலாற்றும் திட்டம் உண்டா?பாராளுமன்ற தேர்தலில் வட மாநில முஸ்லிம் இயக்கங்களுடன் இணைந்து செயல்படுவீர்களா? அதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றனவா? வெளிநாட்டில் வசூலித்து அனுப்பப்படும் பித்ரா தொகை சம்பந்தப்பட்டவர்களுக்கு குறித்த நேரத்தில் கிடைக்கின்றனவா? 

மாமல்லபுரத்தில் பி.ஜெ.பி. தலைவர் இல. கணேசனுடன் கைகோர்த்து ஏன்? ம.ம.க. வின் சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட வேளைகளில் நீங்கள் கட்டிங் வாங்காவிட்டாலும் அது மற்றவர்களுக்கு சென்றடையத்தானே செய்யும் அதை எவ்வாறு தடுப்பீர்கள்? தங்கள் மீதும்,தலைவர் ஜெ.எஸ். ரிபாயீ மீதும் உள்ள வழக்குகளின் நிலை என்ன? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு மூத்த தலைவர் தக்க பதில்களை வழங்கி கேள்விகேட்டே சகோதர்களையும், வந்திருந்த அனைவரிடமும் மனதிருப்தியை ஏற்படுத்தினார் என்றால் மிகை ஆகாது.

இறுதியாக மண்டலத் துணைச் செயலாளர் சகோ. இராஜகிரி அப்துல் குத்தூஸ் அவர்கள் நன்றியுரை கூற துஆ வுடன் கூட்டம் இனிதே முடிவுற்றது.
எல்லா புகழும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே.

-செய்தி தொகுப்பு இராஜகிரி அப்துல் குத்தூஸ்

  

அல்லாஹ். ஒருவனுக்கே புகழ் அனைத்தும்

"Peace Be Upon You"

__