அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

புதன், 4 டிசம்பர், 2013

உறவுகளே எழுவீர்...டிசம்பர் 6 களம் அழைக்கிறது...{{-தலைவர், தமுமுக - Js Rifayee }}

டிசம்பர் களம் அழைக்கிறது...

உறவுகளே எழுவீர்...

பேரன்புக்குரிய சகோதரர்களே...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

இக்கடிதம் உங்கள் அனைவரையும் பூரண சுகத்தோடும்கொள்கை சிந்தனையோடும் சந்திக்கட்டுமாக!

நீங்கள் யாவரும் டிசம்பர் போராட்டக் களத்தை வலிமைப்படுத்துவதற்காககளத்தில் தீவிரமாய் பணியாற்றிக் கொண்டிருப்பீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.



1995ல் இப்பேரியக்கம் தொடங்கப்பட்ட போது இடஒதுக்கீடும்பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் நீதி பெறுவதும் அதன் இருபெரும் கொள்கைகளாக அறிவிக்கப்பட்டது.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகுஎதிர்ப்பை எவ்வாறு வெளிப்படுத்துவதுதொடர்ச்சியாக மக்களை எப்படி திரட்டுவது & என்றெல்லாம் இச்சமூகத்திற்கு யாரும் வகுப்பெடுக்கவில்லை. போராட்டக் களங்கள் முறைப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில், 1995ல் சமுதாய அக்கறைக் கொண்ட தமுமுக உருவானது. சமுதாய ஆர்வலர்களால் புனரமைப்பு செய்யப்பட்ட தமுமுகபாப்ரி மஸ்ஜித் மீட்பு போராட்டத்தைக் கையிலெடுத்தது.

சகோதரர்களே... டிசம்பர் 6க்கான போராட்டக் களங்களை 19 வருடங்களாக நாம் முன்னெடுத்து வருகிறோம்.பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டு 22 வருடங்கள் ஆகும் நிலையில், 1995 தொடங்கி 19வருடங்களாக இப்போராட்டத்தை உயிர்துடிப்போடு வைத்திருக்கிறோம் எனில் இதை சாதனையாக சொல்வது என்பதைவிடசமுதாயக் கடமையாகக் கருதி சொல்கிறோம் என்பதுதான் உண்மை! என்பதுதான் உண்மை!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இப்போராட்டம் மறக்கப்பட்டிருக்கிறது. முன்னெடுத்து நடத்துவதற்கு இயக்கங்கள் இல்லை. ஆற்றல்மிகு தலைவர்கள் இல்லை.

முஸ்லிம்களின் மேம்பாட்டில் முன்னோடி மாநிலமாக கருதப்படும் கேரளாவிலும் இதே நிலைதான் எனும்போதுதமுமுகவின் மகத்தான தியாகங்களைடிசம்பர் போராட்டக் களங்களை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது. இன்னும் தெளிவாகச் சொல்வதெனில்இந்திய முஸ்லிம்களுக்கே வழிகாட்டும் பேரியக்கமாக தமுமுக செயல்படுகிறது என்பதுதான் யதார்த்தமாகும். அல்ஹம்துலில்லாஹ்..

• 1995ல் கடையடைப்பு மற்றும் சாலை மறியல்
• 1996ல் கவர்னர் மாளிகை முற்றுகை
• 1997ல் சென்னையில் தடையை மீறி பேரணி
• 1998ல் முதல்வர் வீடு முற்றுகை

என முதல் நான்காண்டு காலங்களில் நாம் நடத்திய டிசம்பர் போராட்டக் களங்கள் யாவும் நெருப்பில் நடைப்பயணம் நடத்திய நாட்களாகும்.
அப்போது நாம் இதுபோன்ற வலுவான & விரிவான & உள்கட்டமைப்பையும்மக்கள் செல்வாக்கையும்,அரசியல் & அதிகார முக்கியத்துவத்தையும் பெற்றிருக்கவில்லை.

ஈமானிய உறுதியும்ஏற்றுக்கொண்ட கொள்கை உணர்வும்தான் எல்லோரையும் இயக்கியது.

1995ல் நாம் நடத்திய கடை அடைப்புக்கு பரவலாக ஆதரவு கிடைத்தது முதல் வெற்றியாக அமைந்தது.அப்போது சென்னையில் சாலை மறியல் செய்து சில நூறு பேர்கள் மட்டுமே கைதானோம்.

1996ல் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்ட போது அது சில ஆயிரமாக உயர்ந்தது.

1997ல் சென்னையில் பேரணியை அறிவித்த போது அது பல்லாயிரமாக மாறியது.

1998ல் மதுரையில் பேரணி என அறிவிக்கப்பட்டுஅதற்கும் தடை விழுந்தபோது அப்போராட்டக் களம் சென்னையில் முதல்வர் வீடு முற்றுகையாக மாற்றப்பட்ட போதுஅது அதிவீரியமாக அமைந்தது.

முதல் நான்கு ஆண்டுகளில் கடும் அடக்குமுறைகளை முறியடித்துநமது சகோதரர்கள் சிறைகளுக்கு அஞ்சாமல் களமாடிசொந்தப் பணத்தை செலவு செய்துசொல்ல முடியாத சோதனைகளை சந்தித்து;டிசம்பர் போராட்டக் களங்கள் வெற்றிகொள்ளப்பட்டன.

சிறைவாசம் என்றால் காலையில் கைதாகி மாலையில் விடுதலையாகும்திருமண மண்டபத்தில் வைக்கப்படும் ஒருநாள் கைதல்ல! டிசம்பர் 6க்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை கைதுகள் தொடங்கிவிடும்.அலைஅலையாய் நமது மக்கள் கைது செய்யப்பட்டு சென்னைவேலூர்,கடலூர்திருச்சிமதுரைகோவைசேலம்நெல்லை போன்ற மத்திய சிறைச்சாலைகளில் பூட்டப்பட்டார்கள்.

குடும்பத்தினர் பதறகுழந்தைகள் அழுகவருவார்களா?மாட்டார்களாஎன ஊரார் கேட்கநமது சகோதரர்கள் களங்களில் பங்கேற்க முடியவில்லையே என வருத்தத்தில்அதேநேரம் சிறைகளில் செயற்குழுவை நடத்திய திருப்தியில்சிறை மீண்டு வருவார்கள்! அது தமுமுகவின் பொற்காலம்!

அன்று நமது உறவுகள் செய்த தியாகங்கள்தான் இன்றும் டிசம்பர் களத்தை உயிர்துடிப்போடு வைத்திருக்கின்றன.இந்தியாவே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நாம் நடத்தும் போராட்டங்களை திரும்பிப் பார்க்கிறது.
ஆம்! தியாகங்கள் வீண்போகாது! உழைக்காமல் எதுவும் கிடைக்காது!
நாம் உளத்தூய்மையோடு செயல்படும் போது இறைவன் அதற்கு அங்கீகாரம் வழங்குகிறான்.

அன்றைய நமது தியாகங்கள் இன்றைய வரலாறுகளாகும்! சகோதரர்களே... நாம் புதிய தியாகங்களுக்கும் தயாரானால்தான்புதிய வரலாறுகளைப் படைக்க முடியும்!

எதிர்வரும் டிசம்பர் 6, 2013ல் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை’ நடத்துகிறோம்.

• பாபரி மஸ்ஜித் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் விரைந்து முடிக்க வேண்டும்.
• பாபரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• பாபர் மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆகிய முப்பெரும் கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்திட உங்கள் அனைவருடன் ஒத்துழைப்பும் & உழைப்பும் மேலும்மேலும் தீவிரமாக்கப்பட வேண்டும்.

இது வருடாந்திர சடங்கல்லநீதியைப் பெறுவதற்கான நீண்ட ஆயத்தப் பணிகள் என்பதை மறவாதீர்!

ஜனநாயகத்தில் மக்களைத் திரட்டினால்தான் உரிமைகளைப் பெற முடியும்!
டிசம்பர் போராட்டக் களத்தில்பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்குப் பின்னால் பிறந்த இளைஞர்களும்,மாணவர்களும் அதிகமாகப் பங்கேற்கத் தொடங்கியிருப்பது போராட்டக் களம் அடுத்த தலைமுறையின் கைகளுக்கு மாறிவிட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது!

இவ்வருடமும் பெண்கள்குழந்தைகளோடு களத்துக்கு வர ஏற்பாடு செய்யுங்கள்!
இவ்வருடமும் நீதிக்கு வலுசேர்க்கநம் குரலுக்கு பலம் சேர்க்கபல்வேறு சமுதாயத் தலைவர்களுடன்,தோழமை இயக்க முன்னோடிகள்அறிவுஜீவிகள் என பலரும் மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் நடைபெறும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க உள்ளார்கள்!

சகோதரர்களே... மக்களை வீடுவீடாகச் சென்று சந்தித்து அவர்களை களத்துக்கு அழைத்துவர உழையுங்கள். நமது ரணம் ஆறவில்லை

போராட்டக் குணம் மாறவில்லை என்பதை மீண்டும் இவ்வருட டிசம்பர் போராட்டத்திலும் நிரூபிப்போம்!

மீண்டும் சந்திப்போம். 

இன்ஷாஅல்லாஹ்!
அன்புடன்

சமுதாய ஊழியன் ஜே.எஸ்.ரிபாயீ,
தலைவர்தமுமுக

Js Rifayee-- 



இடித்தோர் எண்ணம் கருக...!

இடிகளே திரண்டு வருக....!!

கத்தியின்றி, ரத்தமின்றி 

ஓர் யுத்தக்களம் !

புறப்படு சகோதரா!  

புறப்படு உன் இறை 

இல்லத்தை மீட்கும் வரை ஓயாதே....!!