அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

தமுமுக வின் சுதந்திர தின கொடியேற்று மற்றும் மருத்துவ சேவைகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தமுமுக வின் சுதந்திர தின கொடியேற்று மற்றும் மருத்துவ சேவைகள்
















  • ஏனங்குடி கிளை தமுமுக சார்பில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
  • கோவை செல்வபுரம் தமுமுகவின் சார்பாக 67 வது சுதந்திர தின விழா 
நடைபெற்றது இதில் தமுமுகவின் மாநில செயளாலர் கோவை செய்யது அவர்கள் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார் அருகில்.கோவை சதாம்

  • திருப்பூர் மாவட்டம் சேரன்காடு TMMK கிளை சார்பில் சதந்திர தின விழா
திருப்பூர் மாவட்டம் சேரன்காடு கிளை சார்பில் தேசிய கொடியை ம.ம.க மாவட்ட செயலாளர் எம்.ஜே.அபுசாலிஹ் அவர்கள் ஏற்றிவைத்தார், தமுமுக மாவட்ட செயலாளர் ஜே.முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட துணைசெயலாளர் ஏ.செய்யது, ம.ம.க மாவட்ட துணை செயலாளர் ஏ.ஷாஜஹான் மற்றும் கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
  • கடலூர் மாவட்ட தமுமுக செயலாளர் V.M.ஷேக் தாவுத் அவர்கள் டொமினிக் பள்ளியிலும், நகராட்சி அலுவலகத்திலும் நடைப்பெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டார்
  • தோப்புத்துறை ஆறுமுச்சந்தியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தோப்புத்துறை (கிளை) சார்பில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது...
  • நெல்லை மேற்கு மாவட்டம் தென்காசி கிளையில் சார்பாக இன்று 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்காசியில் 3 இடங்களில் த.மு.மு.க சார்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இராயபுரத்தில்.....


இன்று 67 வது (15/08/2013) சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை இராயபுரத்தில் தமுமுக தலைவர் ஜே எஸ் ஆர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்
  • மதுரை புறநகர் மாவட்ட தமுமுக சார்பில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
  • புளியங்குடி த.மு.மு.க கீழப்பள்ளிவாசல் கிளை சார்பாக நடந்த ரத்ததான முகாமில் 20 கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் செய்தனர் ..30 கும் மேற்பட்டவர்கள் ரத்தவகை கண்டறிந்துள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமுமுக சார்பில் ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு உணவு பொருட்கள் வினியோகம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் உள்ள உள்நோயாளிகள் அனைவருக்கும் தமுமுக மருத்துவ சேவை அணி சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. பொருட்களை மமகவின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினரும், வக்பு வாரிய உறுப்பினருமான அ.அஸ்லம் பாஷா வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் Dr.நூர்சய்யித், மமக மாவட்ட செயலாளர் நசீர் அஹ்மத், தமுமுக நகர செயலாளர் தப்ரேஸ், Dr.முஸ்தாக் அஹ்மத், Dr.பரத், து.தலைவர் சாதிக், து.செயலாளர்கள் அப்ரோஸ், அஷ்ரப் அலி, மருத்துவ சேவை அணி து.செயலாளர் நபீல் அஹ்மத், பொருளாளர் பாருக். இளைஞரணி செயலாளர் அன்வர் மற்றும் நகர கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்,
  • வாணியம்பாடியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு தமுமுக சார்பில் அரசு மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு உணவு பொருட்கள் வினியோகம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு வாணியம்பாடி அரசு மருத்துவ மனையில் உள்ள உள்நோயாளிகள் அனைவருக்கும் தமுமுக மருத்துவ சேவை அணி சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. பொருட்களை நகர கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு வழங்கினர்.



தென் சென்னை மாவட்ட மனிதநேய ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர் சங்கம் சார்பில் சென்னை ஆசாத் நகர் கிளை கலெக்டர் காலனியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா MLA கலந்துக்கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வின் போது தென் சென்னை மாவட்ட தமுமுக, மமக, மனிதநேய ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டர்


ஆம்பூர், 15- ஆகஸ்ட்: 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் தேசிய கொடியை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினரும், வக்பு வாரிய உறுப்பினருமான அ.அஸ்லம் பாஷா ஏற்றிவைத்தார், நிகழ்ச்சியில் மமக மாவட்ட செயலாளர் நசீர் அஹ்மத், தமுமுக நகர செயலாளர் தப்ரேஸ், மமக நகர செயலாளர் ஹமீத், து.தலைவர் சாதிக், து.செயலாளர்கள் அப்ரோஸ், அஷ்ரப் அலி மற்றும் நகர கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.




டெல்டா மாவட்டங்களில் தமுமுக சார்பாக சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி..

  • மதுக்கூர் தமுமுக அலுவலகத்தில்
மதுக்கூர் தமுமுக அலுவலகத்தில் சுகந்திர தினத்தையொட்டி தேசியக்கொடி ஏற்றப்பட்டது.நகர தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில்,மமக செயலாளர் E.S.M.ராசிக்,தமுமுக செயலாளர் E.S.M.ராசிக்,பொருளாளர் இலியாஸ்,மாவட்ட பேச்சாளர் பவாஸ்,பொருப்பாளர்கள் ராசிக்,ரியாஸ்,அமீரக பொருப்பாளர் பைசல் அகமது ஆகியோர் முன்னிலையில் அமீரக பொருப்பாளர் என்.சர்புதீன் அவர்கள் கொடியேற்றி சிறப்பு செய்தார்.
  • கட்டிமேடு தமுமுக கிளை சார்பில் சுதந்திர தினக்கொடி யேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. கொடியினை மருத்துவர் ஹனீபா அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
  • கொடிக்கால்பாளையம், திருவாரூர் நகர தமுமுக


கொடிக்கால்பாளையம், திருவாரூர் நகர தமுமுக சார்பில் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி காலை 9 மணி அளவில் கொடிக்கால்பாளையம் தமுமுக அலுவலகம் முன்பு நடைபெற்றது. கொடியை தமுமுக அபுதாபி மண்டல பொருப்பாளர் அப்துல் காதர் அவர்கள் கொடியை ஏற்றி வைத்தார். உடன் தமுமுக நகர செயலாளர் ஹலிலூர் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி நகர மன்ற உறுப்பினர் கலிபுல்லா, மனிதநேய ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர் சங்கம் தலைவர் ஆபிதின், முன்னால் மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் செய்யது அப்துல் பத்தாஹ் அகியோர் உடன் இருந்தனர். கொடி ஏற்றி முடிந்தவுடன் தமுமுக அபுதாபி மண்டல பொருப்பாளர் அப்துல் காதர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினர் பின்னர் இனிப்பு வழங்கப்பட்டது. 
  • நாகப்பட்டினம் நகர தமுமுக சார்பாக தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின கொண்டாட்டம்.




  • குவைத் இந்தியதூதரகத்தில் இந்தியசுதந்திரதின நிகழ்ச்சி தமுமுக பங்கேற்பு
இறைவன் துணையோடு இன்று காலை குவைத் இந்தியதூதரகத்தில்
இந்தியசுதந்திரதின நிகழ்ச்சியில் தமுமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சகோதரர் கொள்ளுமேடு சலீம் ரப்பானி, சகோதரர் நெல்லை தாழையூத்து பீர் மரைக்காயர் 
சகோதரர் எருமைப்பட்டி கமருத்தீன் சகோதரர் திருமங்கலம் இலாஹி ஆகியோர் படத்தில் உள்ளனர்.




இந்தியா எங்கள் தாய்நாடு! இஸ்லாம் எங்கள் வழிபாடு!


சுதந்திர தின சிந்தனைகள்!

என் தாய்நாடு 67 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. வற்றாத ஜீவா நதிகள், அழகான மலை தொடர்கள், எழில்மிகு கடற்கரைகள், கொஞ்சும் வயல்வெளிகள், பசும் காடுகள், பள்ளத்தாக்குகள் என இயற்கையின் எல்லா பகுதிகளையும் உள்ளடக்கிய தேசம் இது.

பல்வேறு மொழிகள், மதங்கள் இனங்கள் பல்வேறு தோற்றங்களை உடைய மனிதர்கள் என வேற்றுமையில் ஒற்றுமையை பின்பற்றி நடக்கும் தேசம் இது! இங்கே நரேந்திர மோடி, பிரவின் தொகாடியா, போன்ற மதவெறியர்களும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அது சார்ந்த பயங்கரவாத அமைப்புகளும் என் தேசத்தின் கரும்புள்ளிகள். ஆனால் அவர்கள் மிகவும் சிறுபான்மையினர். ஆறுதல் அளிக்கும் வகையில் எமது பெரும்பான்மை இந்து சொந்தங்கள் மனிதநேயத்தை மதிப்பவர்கள். நாங்கள் எல்லோரும் இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதில் பூரிப்படைகிறோம்.

நான் ஒரு இந்திய முஸ்லிம் என்பதில் பெருமைப்படுகிறேன். துரதிர்ஷ்டவசமாக மோடி போன்றவர்கள் பிரதமராக வந்தாலும், அவரை போன்றவர்களை ஜனநாயக வழியில் எதிர்த்து போராடும் உரிமையும், துணிச்சலும் எனக்கு உண்டு. என் கருத்துக்கு ஆதரவாக திரண்டு எழு, பெரும்பான்மை இந்திய மக்கள் தயாராக உள்ளனர். காரணம் சமய நல்லிணக்கமும், மனிதநேயமும் பெரும்பான்மை இந்தியர்களின் உணர்வுகளாகும்.

பல அரபு நாடுகளில் கோலைகளாக வாழும் அரபு மன்னர்களை எதிர்த்து அங்குள்ள குடிமக்களால் ஒரு கேள்வி கூட கேட்க முடியவில்லை. ஆனால் என் தாய் நாட்டில் நான் யாரை எதிர்த்தும் கேள்வி கேட்க முடியும். பல முஸ்லிம் நாடுகளில் பள்ளிவாசல்களில் சுதந்திரமாக வெள்ளிக்கிழமைகளில் சொற்பொழிவாற்ற முடியவில்லை. ஆனால் எனது நாட்டில் அதற்கு முழு சுதந்திரம் உண்டு. வழிபாட்டு தளங்களின் அருகில் ஒரு மதுக்கடையோ, விபசார விடுதியோ இருந்தால் அதை மக்கள் சக்தியோடு அப்புறப்படுத்த முடியும். இந்த நிலை மற்ற நாடுகளில் இல்லை. என்னால் இங்கு எந்த சர்வாதிகாரத்தையும், ஏகாதிபத்தியத்தையும், அரச வன்முறைகளையும் எதிர்த்து போராட முடியும்.

என்னோடு கரம் கோர்க்க சமூக நீதி போராளிகள், மனித உரிமை ஆர்வலர்கள், மனசாட்சி உள்ள அரசியல்வாதிகள், நேர்மையான அதிகாரிகள், பண்பு மிக்க பொதுமக்கள் என பலரும் உண்டு.

அதனால்தான் சொல்கிறேன். நான் ஒரு இந்திய முஸ்லிம் என்பதில் பெருமைப்படுகிறேன்.

இந்த தருணத்தில் நாட்டு விடுதலைக்காக போராடிய குஞ்சாலி குட்டி, மருதநாயகம், பூலித்தேவன், ஹைதர் அலி, திப்பு சுல்தான், கட்டபொம்மன். சின்ன மருது - பெரிய மருது, தீரன் சின்னமலை, சிராஜித் தௌலா, இரண்டாம் பகதூர்ஷா, ஜான்சி ராணி லட்சுமிபாய், ஹஜரத் பேகம், பகத் சிங், அபுல் கலாம் ஆசாத், நேரு, நேதாஜி, காந்திஜி உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான தியாகிகளை நினைவில் ஏந்துவோம்.

ஊழல், மத பயங்கரவாதம், சாதி பயங்கரவாதம், வன்முறை போன்றவற்றை எதிர்காலத்தில் ஒழிக்க சபதம் ஏற்போம்.

நமது நாட்டில் ஏத்தனையோ குளறுபடிகள் இருந்தாலும் இது ஒரு சிறப்பான தேசம் என்பதில் ஐய்யமில்லை. எனவே போலி தேச பக்த வெறியை தூண்டும் திருடர்களை இனம் கண்டு நல்ல அரசியல் தலைவர்களை உருவாக்கி தேசத்தை வழிநடத்த தயாராவோம்.

இந்தியா எங்கள் தாய்நாடு! இஸ்லாம் எங்கள் வழிபாடு!

வாழ்த்துக்களுடன்,
எம். தமிமுன் அன்சாரி


புதன், 14 ஆகஸ்ட், 2013

புதிய தரிசனம்-ரமலான் சிறப்பிதழ்-ஜவாஹிருல்லா சிறப்பு பேட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

புதிய தரிசனம்-ரமலான் சிறப்பிதழ்-ஜவாஹிருல்லா சிறப்பு பேட்டி




தமிழகத்தில் தொடர்ந்து பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் சூழலில், தமிழக அரசு பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்புகளும், தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக நடைபெறும் கொலைகளுக்குக் கூட இசுலாமிய அமைப்புகளைக் குற்றம் சாட்டுவது ஏற்புடையதல்ல என்று இசுலாமிய அமைப்புகளும் பரஸ்பரம் அறிக்கைப் போர் நடத்தி வரும் சூழலில், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாவைச் சந்தித்தோம். ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு கேள்விகளைத் தொடங்கினோம்.

இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறுவது குறித்த உங்கள் பார்வை என்ன?

இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. சக மனிதனின் உயிரைப் பறிப்பது என்பது மனித நேயமற்ற செயல். ஒரு ஜனநாயக நாட்டில் மாற்றுக் கருத்துகளுக்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. அது மதிக்கப்படவும் வேண்டும். அந்த அடிப்படையில் இந்தக் கொலைகளை நாங் கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். உண்மையான குற்ற வாளிகளைக் கைது செய்ய வேண்டிய கடமை காவல் துறைக்கு இருக்கிறது. ஆனால், இந்து அமைப்பினர் யார் கொலை செய்யப் பட்டாலும் இசுலாமியர்கள்தான் காரணம் என்பது போன்ற சித்திரம் வரையப்படுவது கண்டிக்கத்தக்கது. ஒருவேளை அந்தக் கொலைகளை இசுலாமியர் யாராவது செய்திருந்தாலும் கூட, அதை ஒட்டுமொத்த இசுலாமியச் சமூகமும் நிச்சயம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. எனவே இதற்கு மதச்சாயம் பூசுவது தேவையற்றது. பல தனிப்பட்ட விரோதங்களுக்காகக் கொலைகள் நடக்கின்றன. உதாரணமாக வேலூரில் பா.ஜ.க.வின் மருத்துவர் அணியைச் சேர்ந்த டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை செய்யப்பட்டது ஒரு பெண் விவகாரத்தில்தான் என்பது வேலூர் மக்கள் அனைவருக்குமே தெரியும். இதற்கும் இசுலாமியர்களுக்கும் என்ன தொடர்பு? ஆனால் அதற்கும் மதச்சாயம் பூச நினைப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் தீவிரவாதப் போக்கு அதிகரித்து விட்டதாகவும், காவல்துறை மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனவே.?

அப்படி ஒரு தீவிரவாதப் போக்கு தமிழகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த ஆட்சியில் தென்காசி இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வெடிக்கிறது. அதை இசுலாமியர்கள்தான் செய்தனர் என்று கூறி தமிழகம் முழுவதும் பெரிய ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் அரங்கேறின. ஆனால் அதன் பின் அதில் கைது செய்யப்பட்ட 6 பேரும் இந்துக்கள்தான். அதே போல் அத்வானி மதுரைக்கு வந்தபொழுது பைப் வெடிகுண்டு வைத்து அவரைக் கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாகவும் அதில் தொடர்புடையதாகவும் சில இசுலாமிய இளைஞர்களின் படங்களை வெளியிட்டனர். அப்படி நடந்திருந்தால் அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆனால் அதே வழக்கில் சில நாட்களுக்கு முன்னால் பாண்டிச்சேரியைச் சேர்ந்த இரண்டு இளைஞர் களைக் கைது செய்திருக்கிறார்கள். அவர்கள் இசுலாமியர்கள் அல்லர். ஆனால் இது போன்ற செய்திகளை ஊடகங்களும் பெரிதாக எடுத்துச் சொல்வதில்லை. வேண்டுமென்றே இதுபோன்ற சில செய்திகள் இருட்டடிப்புச் செய்யப்படு கின்றன. ஆக பொத்தாம் பொதுவாகக் குற்றம் சுமத்துவது என்பது ஏற்புடையதல்ல.

சமீப காலங்களாக இசுலாமியர்களின் மீதோ அல்லது இசுலாத்தின் மீதோ விமர்சனங்கள் வைக்கப்பட்டால், விமர்சித்தவர்களின் மீது கடுமையான எதிர்த்தாக்குதல் தொடுக்கப்படுகிறது. இது இசுலாமியர்களை மேலும் தனிமைப்படுத்திவிடும் என்று இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் மத்தியில் ஒரு கருத்து எழுந்துள்ளதே ?

இது மிகவும் தவறான விமர்சனம். தமிழகத்தில் எந்தச் சமூகத்தின் மனது புண்படும்படியான நிகழ்வுகள் நடைபெற்றாலும் அதற்கு எதிர்க்கருத்து வைக்கப்படுவது என்பது வாடிக்கையான ஒன்றுதான். நீங்கள் சொன்ன இலக்கியவாதிகள் உட்பட பலரும் கூட தங்கள் மீது விமர்சனம் வைக்கப்படுகின்றபோது அதை எதிர்த்துத் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யத்தான் செய்கிறார்கள். எதிர்க்கருத்துக்கள் என்பது வரவேற்கக் கூடியவைதான். ஆனால் அதைத் தாண்டி மிரட்டுவது போன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் அதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சமீபத்தில் 3 கோரிக்கைகளோடு கோட்டையை நோக்கிப் பேரணி ஒன்று நடத்தினீர்கள். அதில் முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு, 10 ஆண்டுகளைக் கடந்த சிறைக் கைதிகள் விடுதலை போன்ற கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் இடது சாரிச் சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்கள் கூட திருமணப் பதிவுச் சட்டத்தில் இருந்து இசுலாமியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கையோடு உடன்படவில்லையே ?

எங்களுடையை அந்தக் கோரிக்கையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் விமர்சிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. நாட்டில் நடைபெறும் அனைத்துத் திருமணமும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டம் 2009ஐ கொண்டு வருகிறது. இசுலாமியர்களின் திருமணங்களைப் பொறுத்தவரை ஜமாத்தில் நடைபெறும் திருமணங்கள் காலம் காலமாக முறையாக எழுத்துப் பூர்வமாகப் பதிவு செய்யப்படுகின்றன. அது ஒரு ஆவணம். இதில் எங்களுடைய கோரிக்கை ஒன்று மட்டும்தான். “தமிழக அரசு தலைமை ஹாஜி அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட இமாம் அளிக்கும் சான்றிதழை ஏற்றுக் கொண்டு, பதிவாளர் திருமணச் சான்று கொடுக்க வேண்டும்” என்பதுதான் எங்கள் கோரிக்கை. இந்துக் கோவில் களில் நடைபெறும் திருமணங்களுக்கு அந்தக் கோவில்களின் செயல் அலுவலர் அளிக்கும் சான்றிதழ்களை ஏற்றுக் கொண்டு சான்றளிக்க சில விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. நாங்களும் அதில் சில திருத்தங்களைத்தான் கேட்கிறோம்.

முத்தலாக் முறை குறித்து ஏற்கனவே பல முறை பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் சமீபகாலமாக மீண்டும் அது விவாதப்பொருளாக மாறியுள்ளதே ?

கட்சியைப் பொறுத்தவரை இது போன்ற மத ரீதியிலான விவகாரங்களுக்குப் பதில் சொல்வதில்லை. என்னுடைய தனிப்பட்ட கருத்து இதில், “முத்தலாக் என்பது ஒரே அமர்வில் ஒருவர் மூன்று முறை நான் என் மனைவியை விவாகரத்துச் செய்கிறேன் என்று சொல்லிவிட்டால் அந்தத் திருமண உறவு முறிந்து விடுவதாகக் கூறுவது ஏற்புடையது அல்ல. 3 மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டு அந்த இடைவெளியில் 3 முறை சொல்லப்பட வேண்டும் என்பதுதான் முறை. “காரணம் அந்த மூன்று மாதத்திற்குள் அந்தத் தம்பதிக்குள் மனமாற்றம் ஏற்பட்டு அவர்கள் இணைந்து வாழ வழி பிறக்கலாம் என்பதற்காகத்தான். யாருமே உடனடியாக ஒரு தம்பதியினர் பிரிவதை விரும்புவதில்லை. எங்களுடைய த.மு.மு.க.விலேயே இதற்காகக் குழுக்கள் வைத்து இதுபோன்ற பிரச்சனைகளுக்காக வரும் தம்பதியினரிடம் பேசுகின்றோம். 75 விழுக்காட்டினர் மீண்டும் நாங்கள் சேர்ந்து வாழுகின்றோம் என்று முடிவெடுத்து விடுகின்றனர். 25 விழுக்காட்டினர் பிரிந்து சென்றுவிடுவதுண்டு. ஆனால் அதற்காக விவாகரத்து வழக்குகளுக்காக நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. காரணம் நீதிமன்றத்தில் நடைபெறும் விவாகரத்து வழக்குகளின் நிலைமை நமக்கு நன்கு தெரியும்.

இசுலாமியச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் கல்வியறிவில் இன்னும் பின்தங்கி இருப்பதாகத் தோன்றுகிறதே ?

இதுவும் சரியான கருத்து அல்ல. இந்த நிலை 10 ஆண்டுகளுக்கு முன் இருந்தது என்பது உண்மைதான். சமீபத்தில் கூட நம்முடைய நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் படித்த உத்தமபாளையம் கருத்த ராவுத்தர் கல்லூரிக்கு சமீபத்தில் சென்றிருந்தபோது அங்கு முன்பை விட தற்போது ஏராளமான இசுலாமியப் பெண்கள் படிப்பதாகத் தெரிவித்தார். இது போல் பொறியியல் , மருத்துவப் படிப்புகளிலும் கூட ஏராளமான முஸ்லீம் பெண்கள் இசுலாமிய மார்க்க நெறிகளுக்குட்பட்டு படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பல்வேறு உயர் பதவிகளுக்கும் கூட முஸ்லீம் பெண்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அ.தி.மு.க.விற்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஜவாஹிருல்லா திடீரென்று கனிமொழியை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன ?

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். 2011 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்போது அ.தி.மு.க.கூட்டணியில் நாங்கள் இருந்தோம்.ஆனால் உள்ளாட்சி மன்றத் தேர்தல் வந்தபோதும், கூட்டுறவு சங்கத் தேர்தலின் போதும் அ.தி.மு.க. தனித்தே போட்டியிட்டது. மாநிலங்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜாவை முதலில் ஆதரிக்கவில்லை. தங்கள் கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்ட 5 வது வேட்பாளர் வெற்றி பெற மாட்டார் என்பது தெரிந்த பின்தான் தனது வேட்பாளரைத் திரும்பப் பெற்றுக் கொண்டு ராஜாவை ஆதரித்தது அ.தி.மு.க. ஆக, இந்த 5 வேட்பாளர்களின் வெற்றி உறுதியான நிலையில் ஆறாவது இடத்திற்கு தி.மு.க., தே.மு.தி.க. இடையே போட்டி. இதில் யாரை ஆதரிப்பது என்று பார்க்கின்றபோது தே.மு.தி.க.வைப் பொறுத்தவரை அது தனது சொந்தக் கட்சி உறுப்பினர்களையே காப்பாற்றிக் கொள்ள இயலாத நிலையில் இருக்கிறது. ஒரு வேளை அதற்கு வாக்களித்து அது வெற்றி பெற்றாலும் அந்தக் கட்சியின் சார்பாக வெற்றி பெற்ற வேட்பாளர் தொடர்ந்து தே.மு.தி.க.வில் இருப்பாரா என்பதும் சந்தேகம்தான். இதைத் தாண்டி பல கோரிக்கைகளைத் தொடர்ந்து நாங்கள் தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்தி வந்துகொண்டுதான் இருந்தோம். கூடங்குளம், மதுவிலக்கு போன்ற பல்வேறு விவகாரங்களில் எங்கள் குரலுக்கு இந்த அரசு செவிசாய்க்கவில்லை. இதையடுத்துத்தான் நாங்கள் தி.மு.க.வை ஆதரிக்க முடிவு செய்தோம்.

அப்படியே பார்த்தாலும் கூடங்குளம் விவகாரத்தில் தி.மு.க.வும் அணு உலைக்கு ஆதரவாகத்தானே இருக்கிறது.?

நான் அதை மறுக்கவில்லை. கூட்டணியில் இருக்கும் கட்சி களைத் தங்கள் எண்ணத்திற்கு ஏற்ப இழுத்துக்கொண்டே போக வேண்டும் என்ற அ.தி.மு.க.வின் எண்ணத்திற்கு எதிராகத்தான் நாங்கள் முடிவெடுத்தோம்.

பிரதமர் பதவிக்கான போட்டியில் மோடி முந்திக் கொண்டிருப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றனவே ..

மோடி ஒரு மாயை. அவர் ஒரு கார்ப்பரேட் உலகத்தின் பிரதிநிதியாக முன்னிறுத்தப்படுகிறார். மோடி போன்றவர்கள் பிரதமராக வந்தால் மிகப்பெரிய சலுகைகள் தங்களுக்குக் கிடைக் கும் என்று கார்ப்பரேட் நிறுவனங்கள் நினைக் கின்றன. கிராமப்புற மக்களுக்கு அங்கு குடிதண்ணீர் கிடையாது. ஆனால் கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு ஆற்றையே திருப்பி விட்டிருக்கிறார். அவர்கள் கூட்டணிக் கட்சிகளும் அவர்களை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். எப்படி இந்தியா ஒளிர்கிறது என்று முன்பு கதை சொன்னார்களோ அது போலத்தான் இப்போது மோடியை மையப்படுத்துகிறார்கள் . ஆனால் பா.ஜ.க. பலவீனமாய் இருக்கிறது என்பதுதான் உண்மை.

வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை மனித நேய மக்கள் கட்சி எப்படி எதிர்கொள்ளப் போகிறது. யாருடன் கூட்டணி ?

அதற்குக் காலம் இருக்கிறது. நானும் தனிப்பட்ட முறையில் இதற்குப் பதில் சொல்ல இயலாது. கட்சியின் உயர்மட்ட குழுதான் முடிவு செய்ய வேண்டும்.

ரமலான் செய்தியாக நீங்கள் மக்களுக்கு கூற விரும்புவது..

ரமலான் என்பது ஒரு பயிற்சிக் காலம். காலை வைகறைக்கு முன் எழுந்து உண்ணாமல், பொய் பேசாமல் முறையாகத் தொழுகை நடத்தி பிரார்த்தனை செய்கிறார்கள். இதைத் தங்கள் வாழ்நாள் முழுவதும் அவர்கள் கடைப் பிடிக்க வேண்டும். நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக் காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து
எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில்
நேர்வழியை எமக்கு எளிதாக்கி
தந்தருள்வாயாக!  அல்குர்ஆன்:18:10


இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்! 
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!


மதசார்பற்ற இந்தியாவை வலுப்படுத்த உறுதியெடுப்போம்: எம்.எச்.ஜவாஹிருல்லா

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மதசார்பற்ற இந்தியாவை வலுப்படுத்த உறுதியெடுப்போம்: எம்.எச்.ஜவாஹிருல்லா



மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடுள்ள அறிக்கையில்,

விடுதலை திருநாள் நல்வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து மதங்களை கடந்து சாதிகளை கடந்து தோலோடு தோல் நின்று அரிய பெரும் தியாகங்களை செய்து விடுதலை பெற்றுத் தந்த விடுதலை போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவூகூறுவோம். பல மலர்களும் பூத்துக் குலுங்கும் கதம்ப மலர் தோட்டமாக அனைத்து மதங்கள், அனைத்து சாதிகள், அனைத்து பிரிவினர்களும் எல்லா உரிமைகளும் பெற்று வாழும் ஒரு இந்தியாவைத்தான் அந்த விடுதலை போரட்ட வீரர்கள் காண விரும்பினார்கள். அவர்கள் கனவு கண்ட மதசார்பற்ற, சமதர்ம ஜனநாயக இந்தியாவை வலுப்படுத்த இந்த நாளில் உறுதியெடுப்போம்.


விடுதலைப் பெற்ற 66 ஆண்டுகளுக்கு பிறகும் நமது இந்தியாவில் ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது என்று நமது பிரதமரே கவலைப்பட்டுள்ளார். சுத்தமான காற்று, ஆரோக்கியமான உணவு, மாசில்லாத குடிநீர், குறைந்த கட்டணத்தில் கல்வி Gr சாமானிய இந்தியர்களுக்கு கிடைப்பது என்பது கடினமாக உள்ளது. நாட்டின் கனிம வளங்கள், நிலவாயு வளங்கள் எல்லாம் பெரும் பண முதலைகளால் கொள்ளை அடிக்கப்படுகின்றன. கடலோரங்களில் அமைக்கப்படும் ஆலைகள் ஏற்படுத்தும் மாசுவினால் கடலோர வாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அனைத்து தளங்களிலும் ஊழல் தலைத்தோங்கி சாமானிய இந்தியர்களின் வாய்ப்புகள் பறிப்படுகிறது. இந்த இழிநிலைகளையேல்லாம் களைவதற்கு இந்த நாளில் உறுதியேடுப்போமாக! இவ்வாறு கூறியுள்ளார்.



பிணக்குகள் நீங்கி இணக்கம் மலரட்டும் 

மனிதநேய மக்கள் கட்சியின் விடுதலை நாள் வாழ்த்துச் செய்தி




மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் வாழ்த்துச் செய்தி செய்தி:

இந்திய திருநாடு தனது விடுதலை திருநாளை கொண்டாடும் வேளையில் அனைத்து மக்களுக்கும் எம் உளமார்ந்த விடுதலை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அரும்பாடுபட்டு அனைத்து தரப்பு மக்களும் ஒன்று இணைந்து பெற்ற விடுதலையை பேணிக்காக்க அனைவரும் உறுதி ஏற்போம். நாட்டின் பணவீக்கம் இந்திய நாணயத்தின் சர்வதேச மதிப்பு வீழ்ச்சி, எல்லையில் அத்து மீறும் சீனா பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளின் சூழ்ச்சி, வீழ்த்தப்படவும் மக்கள் இடையே இன, மத பிளவுகளை ஏற்படுத்தி அரசியல் லாபம் பெற முயலும் பாசிச சக்திகளின் சதிகள் முறியடிக்கப்படவும் ஒற்றுமையுடன் பாடுபடுவோம்.

இந்தியாவை உலக அரங்கில் வல்லரசாக மட்டும் இன்றி மனிதநேயமிக்க நல்லரசாக மென்மேலும் உயர்த்திட ஒன்றுபட்டு உழைப்போம் என இந்த விடுதலை நாளில் சூளுரைப்போம்.





இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்! 
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!

சனி, 10 ஆகஸ்ட், 2013

சென்னை பிராட்வே டான் போஸ்கோ பள்ள் மைதானத்தில் பெருநாள் தொழுகை நடைபெற்றது....எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


சென்னை பிராட்வே டான் போஸ்கோ பள்ள் மைதானத்தில் பெருநாள் தொழுகை நடைபெற்றது....எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி



எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி

அருள் நிறைந்த இந்த இனிய ஈகை திருநாளில் கருணை மிக்க யா அல்லாஹ், இத்திருநாளை அனுபவிக்கும் பாக்கியம் தந்த உன்னிடம் கையேந்தி எங்கள் நன்றியை சமர்ப்பிக்கிறோம்.


அகிலத்தார் அனைவரையும் படைத்த எங்கள் இரட்சகனே! பெருமை, பொறாமை, கர்வம், பேராசை , குரோதம் முதலிய தீய குணங்களிலிருந்து எங்கள் உள்ளத்திற்கு விடுதலை வழங்கி அதற்கு பகரமாக தன்னடக்கம், மன நிறைவு, இறக்கம் மற்றும் அன்பு முதலிய நற்பண்புகளால் எங்கள் நெஞ்சம் நிரம்பி ததும்புவதற்கு உன்னிடம் கெஞ்சுகிறோம்.

உனது நிகரில்லா கருணைக்கு முன் எங்கள் சிரத்தைத் தாழ்த்தி வேண்டுகிறோம். அல்லாஹ் எங்கள் பாவங்களை மன்னித்து எங்களை அனைத்து வகையான தீமைகளில் இருந்தும் பாதுகாப்பாயாக

ரமளானில் பெற்ற பயிற்சியால் புதிய எழுச்சி பெற்றுள்ள நாங்கள் வரும் காலங்களில் பலம் மிக்க ஈமானுடன் வாழ்வதற்கு உதவிடுவாயாக.

இந்த திருநாளில் உன்னிடம் மன்றாடுகிறோம் யா அல்லாஹ்.

ரமலான் முழுவதும் உன்னை நெருங்கும் வகையில் எங்கள் செயல்பாடுகளை அமைத்து கொண்டோம். உன்னிடம் மன்றாடி இந்த திருநாளில் நாங்கள் சமர்ப்பிக்கும் பிராத்தனைகளை ஏற்றுக் கொள்வாயாக.

உங்களுக்கு என் நெஞ்சார்ந்த ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள்.

தகபல்லல்லாஹு மின்னா வ மின்கும்

--எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்

இன்று 9.8.2013 சென்னை பிராட்வே டான் போஸ்கோ பள்ள் மைதானத்தில் பெருநாள் தொழுகை நடைபெற்றது




மேலப்பாளையத்தில் இன்று IPP (TMMK) பெருநாள் தொழுகை நடைபெற்றது மாநில தலைவர் JSR உரை நிகழ்த்தினார் பெண்கள் உள்பட ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொன்டனர் மமக மாவட்ட செயலாளர் K.S.ரசூல்மைதீன் தலைமையில் மேலப்பாளையம் பகுதி நிர்வாகிகள் ஏற்பாடுகளை சிறப்பாக செய்துஇருந்தனர்



Inline image 1



رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து
எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில்
நேர்வழியை எமக்கு எளிதாக்கி
தந்தருள்வாயாக!  அல்குர்ஆன்:18:10



புதன், 7 ஆகஸ்ட், 2013

"இனிய ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!" ஈத் முபாரக்!

அன்பு உறவுகளுக்கு..! 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு



அல்லாஹ் நம் அனைவரின் நற்செயல்களை அங்கீகரிப்பானாக!






"இனிய ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!"
ஈத் முபாரக்!


குல்லு ஆமின் வ அன்(த்)தும் பி ஃகைர்
தகப்பல்லல்லாஹு மின்னா வ மின்(க்)கும் 
ஸாலிஹல்அஃமால்....
كل عام و أنتم بخير 
 "Wish you"  a  Happy"
"Eid  Mubarak"
EID-EL-FITR  AL MUBARAK
Full of Happiness & Success...
எல்லோரும் ஒன்றாக கொன்டாடுவோம்
  
  


رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து 

எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் 

நேர்வழியை எமக்கு எளிதாக்கி 
தந்தருள்வாயாக!  அல்குர்ஆன்:18:10


இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்! 
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!